search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230765"

    • கணவரை இழந்து வாழ்ந்தவர் வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ெகாடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குபதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நெடுமதுரையை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சங்கீதா(வயது23). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராமச்சந்திரன் கடந்த 2 ஆண்டிற்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சங்கீதா தனது பெற்றோ ருடன் வசித்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் கம்பி கட்டும் தொழிலாளி ஆறுமுகம் (வயது24). இவருக்கு திருமணமாகிவிட்டது. சம்பவத்தன்று சங்கீதாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஆறுமுகம், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதா சத்தம் போட்டுள் ளார்.

    அவரது சத்தத்தை கேட்டு அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்தனர். இதையடுத்து ஆறுமுகம் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இது குறித்து கூடக்கோவில் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் சங்கீதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.

    • இணையதளங்களில் ஆபாசமாக வெளியிடுவேன் என இளம்பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலை கைது செய்தனர்.

    மதுரை,

    மதுரை வில்லாபுரம் முத்துநகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது 41). டிரைவரான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்துடன் பழக்கம் ஏற்பட்டது.

    அந்த வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த குடும்பத்தை சேர்ந்த இளம் பெண்ணை வடிவேல் மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலை கைது செய்தனர்.

    ஜாமீனில் வெளியே வந்த வடிவேல் தனக்கு எதிராக புகார் கொடுத்த பெண்ணை பழி தீர்க்க நினைத்தார். அதன்படி அந்த பெண்ணிடம் எனக்கு ேதவைப்படும்போது பணம் தரவேண்டும். இல்லையென்றால் உனது படத்தை ஆபாசமாக சித்திரித்து இணையதளத்தில் வெளியிடுவேன் என கூறி வடிவேல் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

    இதுகுறித்து அந்த பெண் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, மாணிக்கம்பாளையம் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அருண் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது தாய் ஜெயா ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, மாணிக்கம்பாளையம் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி ஜெயா (வயது 38). இவர்களது மகன் அருண் (20) கூலித்தொழிலாளி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த சிறுமி பரமத்திவேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அருண் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது தாய் ஜெயா ஆகியோர் மீது புகார் செய்தார். அதன்பேரில் பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தி, அருண், ஜெயா ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • வன ஊழியர்கள் கூண்டு வைத்து பிடித்தனர்
    • குரங்குகளை வன ஊழியர்கள் களியல் காட்டுப் பகுதிக்கு கொண்டு விட்டனர்.

    நாகர்கோவில்:

    பத்நாபபுரம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது.

    இந்த குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக குரங்குகள் தொல்லை அதிகமாக இருந்தது. வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்து வந்தது. இதனால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். இதையடுத்து குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வனத்துறை ஊழியர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

    வேளிமலை வன சரக பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த இடத்தை பார்வையிட்டனர்.பின்னர் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த பகுதியில் பெரிய கூண்டு ஒன்று அமைக்கப்பட்டது.

    அந்த கூண்டில் ஒரே நேரத்தில் 45 குரங்குகள் சிக்கியது. நேற்று ஒரே நாளில் 45 குரங்குகள் சிக்கியது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது . இதையடுத்து பிடிபட்ட குரங்குகளை வன ஊழியர்கள் களியல் காட்டுப்பகுதிக்கு கொண்டு விட்டனர். 45 குரங்குகள் ஒரே இடத்தில் பிடிபட்டதையடுத்து அந்த பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.

    • உணவு தானியங்களை சேதப்படுத்தி வந்த நிலையில் தற்போது புதிதாக காட்டுப்பன்றிகளின் தொல்லையும் அதிகரித்து உள்ளது
    • காட்டு பன்றிகளை கட்டுப்படுத்தாவிட்டால் மகசூலாகியும் விளைந்த நெல்லை வீட்டுக்கு கொண்டு வர முடியாது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் 1.60 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் நடவு செய்யப்பட்டு தற்போது 35 ஆயிரம் ஏக்கரில் அறுவடை முடிந்துள்ளது.

    இருந்தாலும் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அறுவடை பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தஞ்சை அருகே உள்ள தென்னங்குடி, மனத்திடல், விழுதியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்கனவே எலி, மயில் ஆகியவை உணவு தானியங்களை சேதப்படுத்தி வந்த நிலையில் தற்போது புதிதாக காட்டுப்பன்றிகளின் தொல்லையும் அதிகரித்து உள்ளது ‌‌விவசாயிகளை வேதனை அடைய செய்து ள்ளது.

    தென்னங்குடி கிராமத்தில் வெண்ணாற்றின் கரையோ ரம் 50 ஏக்கரில் இன்னும் இரு வாரத்தில் குறுவை நெல் அறுவடை செய்யப்பட உள்ளது.

    ஆனால் தற்போது இரவு நேரங்களில் காட்டு பன்றிகள் வயலுக்குள் புகுந்து நெற்கதிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

    இதேபோல் மனத்திடல் கிராமத்தில் தினமும் 10-க்கும் மேற்பட்ட பன்றிகளால் நெல் வயல்கள் சேதுமடைந்து வருகின்றன ‌‌‌‌.

    ஏற்கனவே பல்வேறு இயற்கை இடர்பாடுகள் போன்ற சிரமங்களுக்கு இடையில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அறுவடை நேர த்தில் காட்டுப்பன்றிகள் வயல்களில் புகுந்து சேதப்ப டுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறும் போது :-

    இரவு நேரத்தில் மட்டுமே காட்டுப்பன்றிகள் வயலுக்குள் புகுந்து சேதப்படுத்துகிறது.

    பல நாட்களாக நாங்கள் வயலில் இரவு நேரத்தில் காவல் காத்தாலும் அசந்து தூங்கும் நேரத்தில் காட்டு பன்றிகள் வயலுக்குள் புகுந்து விடுகின்றனநாங்கள் பட்டாசு வெடித்தாலும் காட்டு பன்றிகள் போவ தில்லை.

    அதே நேரத்தில் தாக்கும் முயலும் போது பதிலுக்கு காட்டு பன்றிகளும் தாக்க வருகின்றன.

    காட்டு பன்றிகளை கட்டுப்படுத்தா விட்டால் மகசூலாகியும் விளைந்த நெல்லை வீட்டுக்கு கொண்டு வர முடியாது.

    எனவே போர்க்கால அடிப்படையில் காட்டுக் பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.

    • மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை
    • கடந்த 2-ந்தேதி அன்று மக்கள் பலரை வெறிநாய் கடித்து படுகாயம் ஏற்படுத்தியுள்ளது.

    கன்னியாகுமரி:

    கல்குறிச்சி புனித ஜோசப் நடுநிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் தலைவர் ராதிகா தலைமையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஆசிரியை கரோலின் கீதா வரவேற்றார். தலைமை ஆசிரியர் கனகராஜ் அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றினார்.

    பெற்றோர்கள் சார்பில் சுபா, தீபா, ஷீலாம்மா, மரிய அனிதா, மேரி சிந்தியா, நிர்மலா, ஷைலஜா உள்ளிட்டோர் மாணவர் நலன்சார் கருத்துகளை முன்வைத்து பேசினர். ஆசிரியை வேபிள் விஜிலா நன்றி கூறினார். நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் முத்தலக்குறிச்சி மற்றும் கல்குறிச்சி பகுதிகளில் கடந்த 2-ந்தேதி அன்று மக்கள் பலரை வெறிநாய் கடித்து படுகாயம் ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களும், மாணவர்களும் ஒருவித அச்ச உணர்வுடன் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் அவசரமாக தலையிட்டு இப்பகுதியில் எவ்வித கட்டுப்பாடுமின்றி நடமாடும் தெருநாய்களை அப்புறப்படுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் ரூ.1½ லட்சம் கடனுக்கு ரூ.3 லட்சம் கந்து வட்டி கேட்டு தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
    • அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் கொங்கு நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு( 40). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ஈரோடு சம்பத் நகர் நேரு வீதியை சேர்ந்த கறி கடை நடத்தி வரும் முகமது ஷெரீப் (35) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருநாவுக்கரசிடம் வட்டிக்கு ரூ.1.50 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கடன் தொகைக்கான தவணையை முறையாக செலுத்த முடியவில்லை. இதையடுத்து திருநாவுக்கரசு முகமது ஷெரீப்பிடம் வாங்கிய ரூ.1.50 லட்சத்திற்கு வட்டிக்கு வட்டி போட்டு ரூ.3 லட்சமாக கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார். பணத்தை தர மறுத்தால் கொலை செய்வதாக திருநாவுக்கரசு மிரட்டியும் உள்ளார்.

    இதுகுறித்து முகமது ஷெரீப் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி திருநாவுக்கரசு மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    தமிழக காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கந்து வட்டி தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மறுநாளே ஈரோட்டில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வந்த பைனான்ஸ் அதிபரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் கந்துவட்டி தொடர்பாக பொதுமக்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் என டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    ×