என் மலர்
நீங்கள் தேடியது "slug 231346"
- ஜவுளி, இனிப்பு, பட்டாசு கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
- ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையும், 2-வது குற்றத்திற்கு நீதிமன்றம் வாயிலாக அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது.
மதுரை
சென்னை முதன்மை செயலாளர் / தொழிலாளர் ஆனையர் அதுல் ஆனந்த் அறிவுரையின்படியும், சென்னை சட்டமுறை எடையளவுக் கட்டுப்பாட்டு அதிகாரி சாந்தி உத்தரவின்ப டியும், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோரது வழிகாட்டுதலின்படியும் மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வர்களால் சட்டமுறை எடையளவுச் சட்டம், எடையளவுகள் பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் திடீர் சோதனை நடத்தினர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைக் கடைகள், இனிப்புக் கடைகள், மற்றும் நிறுவனங்கள், பட்டாசுக் கடைகளில் இந்த சோதனை நடந்தது.
இதில் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் 26 நிறுவனங்களிலும், சட்டமுறை எடையளவுகள் (பொட்டலப் பொருட்கள்) விதிகளின் கீழ் 15 நிறுவனங்க ளிலும் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு சம்பந்த ப்பட்ட நிறுவனங்களின்மீது நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது.
மேலும் பொட்டலப் பொருட்கள் விதிகளின்கீழ் உரிய காணப்படாத 9 பட்டாகக் கடைகளில் முரண்பாடு கண்டறியப்பட்டு அந்த நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2011-ம் வருட சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகளின்கீழ் பொட்டலப் பொருட்களின் விவரங்களை குறிப்பிடாமல் விற்பனை செய்து வரும் சில்லரை மற்றும் மொத்த விற்பனை வணிக நிறுவனங்களின் மீது முதலாவதாக கண்டறியப்படும் முரண்பாட்டிற்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கவும், 2-வது முறையாக கண்டறியப்படும் முரண்பாட்டிற்கு நீதிமன்ற நடவடிக்கை தொடரவும் சட்டத்தில் வழிவகை உள்ளது.
தராசுகள் மற்றும் எடையளவுகளை பரிசீலனை செய்து முத்திரை ஆய்வர்களிடம் உரிய காலத்தின் முத்திரையிட்ட பின்பே வியாபாரத்திற்கு பயன்படுத்தவேண்டும்.
முத்திரையில்லாமல் எடையளவுகள் பயன்படுத்துபவர்களுக்கு முதல்முறையாக ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையும், 2-வது குற்றத்திற்கு நீதிமன்றம் வாயிலாக அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது.
மேற்கண்ட தகவலை மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்தார்.
- மேலும் நகையை எடுத்துச் சென்ற வாலிபர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் அங்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக் கிறார்கள். அவரை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- தனிப்படை போலீசார் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குமாரிடமிருந்து வாங்கி சென்ற மோட்டார் சைக்கி ளை அவர் எங்காவது பஸ்நிலையம் அல்லது ெரயில் நிலையத்தில் விட்டுச் சென்று இருக்க லாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
நாகர்கோவில், அக்.20-
நாகர்கோவில் கோட்டார் மேல தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 47). இவர் கடியப்ப ட்டணத்தில் நகை பட்டறை வைத்துள்ளார்.தினமும் காலையில் சென்று விட்டு குமார் இரவு வீட்டிற்கு வருவது வழக்கம்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இவரது நகை பட்ட றையில் வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் வேலைக்கு சேர்ந்தார்.அவர் குமார் வீட்டிலேயே தங்கினார். தினமும் குமார் வேலைக்கு செல்லும்போது மோட்டார் சைக்கிளில் அவரை அழைத்து செல்வது வழக்கம்.
நேற்றும் குமார் வேலைக்கு சென்றபோது அந்த வாலிபரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். மதியம் குமார் கடையில் இருந்து வெளியே சென்று விட்டு பின்னர் கடைக்கு வந்தார். அப்போது கடையில் இருந்த வட மாநில தொழிலாளியை சாப்பிட்டு விட்டு வருமாறு கூறினார்.
இதையடுத்து அவர் குமாரின் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து சென்றார். சாப்பிட சென்ற வட மாநில தொழிலாளி நீண்ட நேரம் ஆகியும் அவர் வரவில்லை. இதனால் குமார் அவரை தேடினார்.
பின்னர் அவரது பட்ட றையிலிருந்து நகையை சோதனை செய்தபோது 8 பவுன் நகை மாயமாகி இருந்தது தெரிய வந்தது. மாயமான நகையை வட மாநில தொழிலாளியே எடுத்து சென்றிருக்க லாம் என்று குமார் மண வாளக்குறிச்சி போலீசில் புகார் செய்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகி றார்கள். குமாரின் நகை பட்டறையில் அந்த வாலி பரை வேலைக்கு சேர்த்து விட்டது யார்? என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
மேலும் நகையை எடுத்துச் சென்ற வாலிபர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் அங்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக் கிறார்கள். அவரை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீசார் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குமாரிடமிருந்து வாங்கி சென்ற மோட்டார் சைக்கி ளை அவர் எங்காவது பஸ்நிலையம் அல்லது ெரயில் நிலையத்தில் விட்டுச் சென்று இருக்க லாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதை யடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையம் மற்றும் ெரயில் நிலையங்களில் மோட்டார் சைக்கிளை தேடும் பணி நடந்து வருகிறது. வேலைக்கு சேர்ந்த ஒரு வாரத்திலேயே நகை பட்டறையிலிருந்து நகையை வடமாநில தொழி லாளி திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது
- அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
- போலீஸ் துணை சூப்பிரண்டு பேட்டி
கன்னியாகுமரி:
மண்டைக்காடு அருகே கருமங்கூடலை சேர்ந்தவர் தொழிலதிபர் கல்யாணசுந்தரம் (வயது 55). கடந்த மாதம் 25-ந் தேதி இரவு இவரது வீட்டுமுன்பு மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் 2 பெட்ரோல் வெடி குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர்.
இதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது.ஜன்னல் அருகே போடப்பட்டிருந்த சோபா செட்டின் பிளாஸ்டிக் கவர் எரிந்து கருகியது.ஜன்னல் கீழ் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் எரிந்து சேதமடைந்தது. குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி குளச்சல் இலப்பைவிளை பகுதியை சேர்ந்த முஸ்ஸாமில் என்ற ஷமில்கான் (27) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அவர் இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கோர்ட் அனுமதி பெற்று நேற்று குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையி லான போலீசார் இலப்பை விளையில் உள்ள முஸ்ஸாமில் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் போலீசார் அவரது வீட்டிலிருந்து ஒரு லேப்டாப் மற்றும் செல்போன் சிம் கார்டு உள்பட ஆவணங்களை எடுத்து சென்றனர்.
சோதனையின்போது குளச்சல் வருவாய் ஆய்வாளர் முத்து பாண்டி, மணவாளக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் ராஜஸ்ரீ ஆகியோர் உடனிருந்தனர்.சோதனைகள் அனைத் தும் வீடியோவில் பதிவுச்செய்யப் பட்டது. இந்த திடீர் சோதனையின்போது அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.தகவலறிந்து பொதுமக்களும் முஸ்ஸாமில் வீட்டு முன் திரண்டனர்.இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
சோதனை முடிந்து வெளியே வந்த டி.எஸ்.பி. தங்கராமனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது சோதனை அறி க்கைகள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்' என கூறினார். மேலும் தலைமறைவாகியுள்ள மணவாளக்குறிச்சி பகு தியை சேர்ந்த ஆறான்வி ளை முகம்மது ராபின், ஆண்டார்விளை ஆதிலி மான் இவர்களின் வீடுகளிலும் குளச்சல் போலீஸ் டி.எஸ்.பி தங்கராமன் தலைமையில் சோதனை நடந்தது.
- மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 2 பேரிடம் இருந்த ரூ 10.ஆயிரம், வெள்ளி சங்கிலியை பறித்தனர்.
- கானூர் சோதனை சாவடியில் கீழ்வேளூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள தெட்சிணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (வயது 23).
இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (24).
இவர்கள் இருவரும் கடந்த 30-ம்தேதி புதுக்கோட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, பூலாங்குடி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளை வழிமறித்த 4 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 2 பேரிடம் இருந்த ரூ 10.ஆயிரம், வெள்ளி சங்கிலியை பறித்தனர்.
பின்னர் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளையும் திருடி சென்று விட்டனர்.
இது குறித்து புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் கீழ்வேளூர் அருகே உள்ள கானூர் சோதனை சாவடியில் கீழ்வேளூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த அஜித் (23), அகரகடம்பனூர் ஊராட்சி கோவில்கடம்பனூரை சேர்ந்த வினோத் (24), கோவில்கடம்பனூர் ஸ்ரீகண்டி நத்தத்தை சேர்ந்த சுதீஷ் (19) என்பதும் இவர்கள் மூவரும் மேற்படி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- குமரி மாவட்டத்தில் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் கஞ்சா, போதை புகையிலை பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
- மருந்து கடைகளில் போதை மாத்திரை, போதை ஊசி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தினர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் கஞ்சா, போதை புகையிலை பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை தடுப்பதற்கு தமிழக போலீசார் பல்வேறு நட வடிக்கைகள் எடுத்து வரு கின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் நேற்று மாலை குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் குளச்சல் அண்ணாசிலை சந்திப்பு, காமராஜர் பஸ் ஸ்டாண்டு, காந்தி சந்திப்பு ஆகிய பகுதிகளில் உள்ள ஆங்கில மருந்து கடைகளில் போதை மாத்திரை, போதை ஊசி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு போதை மாத்திரைகள், போதை ஊசி மருந்துகள் எதுவும் சிக்கவில்லை.பின்னர் போலீசார் 'டாக்டர்களின் மருந்து சீட்டுக்கு மட்டும்தான் மருந்து, மாத்திரைகள் கொடுக்க வேண்டும்'என அறிவுறுத்தி சென்றனர்.இது போல் திங்கள்நகர், பேயன்குழி பகுதியில் உள்ள மருந்து கடைகளிலும் அவர் சோதனை செய்தார்.இதனால் அப்பகுதி பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
- குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது.
- 3 டன்களுக்கு மேல் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சுவாமிமலை:
திருவிடைமருதூர் அருகே அம்மாசத்திரத்தில் குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து கடைகளில் விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின்படி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் குடோனில் இருந்த 3 டன்களுக்கு மேல் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக திருவிடைமருதூர் இன்ஸ்பெக்டர் அம்மாசத்திரம் சந்தன கணபதி ெதருவை சேர்ந்த செல்வகுமார் (வயது 43) மற்றும் நேரு நகர், மல்லிகை வீதியை சேர்ந்த வெங்கடேசு (43) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வாஞ்சூர் மற்றும் நாகூர் பகுதிகளில் உள்ள 7 கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
- ஒரு கடையில் புகையிலை பொருட்கள் வைத்திருந்ததற்காக ரூ.5000 அபராதம் விதித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் நாகூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் வாஞ்சூர் மற்றும் நாகூர் பகுதிகளில் உள்ள 7 கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் இரண்டு கடைகளில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தனர்.
அதனை கைப்பற்றி அந்த இரண்டு கடைகளுக்கும் சீல் வைத்தனர். மேலும் ஒரு கடையில் புகையிலை பொருட்கள் வைத்திருந்ததற்காக ரூ.5000 அபராதம் விதித்தனர்.
இது போன்ற தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் எச்சரிக்கை விடுத்தார்.
- சோதனையில் 336 மது பாட்டில்கள் மற்றும் 550 லிட்டர் பாண்டி சாராயம் இருந்தது.
- காரைக்காலில் இருந்து சீர்காழி பழையார் மீனவ கிராமத்திற்கு சாராயம் கடத்தி செல்வது தெரியவந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பொறுப்பில் இருக்கும் செல்வி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தலைமை காவலர்கள் அன்பரசன், பாலமுருகன், மற்றும் போலீசார் பாகசாலை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வாகன சோதனை செய்தனர்.
அப்போது அதிவேகமாக வந்த இண்டிகோ காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் 7 அட்டை பெட்டிகளில் 336 மது பாட்டில்கள் மற்றும் 550 லிட்டர் பாண்டி சாராயம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக மதுவிலக்கு போலீசார் காரையும் கடத்தப்பட்ட சாராயம் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
காரை ஓட்டி வந்த சீர்காழி தாலுக்கா வழுதலைக்குடி கீழத் தெருவை சேர்ந்த வீரமணி என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் காரைக்காலில் இருந்து சீர்காழி பழையார் மீனவ கிராமத்திற்கு சாராயம் கடத்தி செல்வது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு வீரமணியை கைது செய்தனர்.
- ரேசன் கடையில் கலெக்டர் சோதனை நடத்தினார்.
- இந்த ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன் மற்றும் வட்டாட்சியர் உடன் இருந்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூரில் ராம்கோ கூட்டுறவு சங்கம் மூலம் செயல்பட்டு வரும் நியாயவிலை கடையை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் திடீர் ஆய்வு செய்தார். நியாயவிலைக் கடையில் உள்ள உணவுப் பொருட்களின் தரம் குறித்து பார்வையிட்டார். குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவுப் பொருட்கள் வரப்பெற்றுள்ளதா? என பதிவேடுகளை பார்வையிட்டு பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் கூறுகையில், ஒவ்வொரு நியாய விலைக்கடைகளில் அங்குள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பொருட்கள் இருப்பதை கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும். அதே போல் வழங்கும் உணவுப் பொருட்களின் அளவு சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் காலதாமதமின்றி வழங்குவதை கூட்டுறவுத் துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன் மற்றும் வட்டாட்சியர் உடன் இருந்தனர்.
- அனுமதி பெறாமல் உள்ள பட்டாசு கடைகள் குறித்த போலீசார் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
- பதுக்கி வைக்கப்பட்ட சுமார் ஒரு கோடி மதிப்பிலான வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன. இதனால் இப்பகுதி குட்டி சிவகாசி என்றும் அழைக்கப்படுவதும் உண்டு.
இதில் அனுமதி பெறாமல் உள்ள பட்டாசு கடைகள் எது? என்பது குறித்த ஆய்வு நடத்தும் பணியில் திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் வலங்கைமான் காவல்துறை ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
வலங்கைமானில் உள்ள வெடிக்கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டதில் அரசு நிர்ணயித்த அளவைவிட தனிநபராக வீட்டிலும் குடோ னிலும் பதுக்கி வைக்கப்பட்ட சுமார் ஒரு கோடி மதிப்பிலான வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து அதை பதுக்கி வைத்ததாக வலங்கைமான் பகுதியை சேர்ந்த சுந்தர், ராஜா, ரவிச்சந்திரன், சீனிவாசன், மற்றொரு ரவிச்சந்திரன், அருணகிரிநாதன், பாலகுரு ஆகிய 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் மீதமுள்ள கடைகளில் அனுமதிபெறப்ப ட்டுள்ளதா? என்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் இந்த அதிரடியான சோதனை நடைபெற்று வருவது, வெடி கடைகள் நடத்தும் வியாபாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் திரையரங்கில் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப் படுவதாக ஆன்லைன் வாயிலாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் வந்தது.
- இதையடுத்து தரமற்ற குளிர்பானங்கள், பிஸ்கெட்டுகளை உணவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம்:
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதையடுத்து அந்த படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் காலை முதலே ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்த நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் திரையரங்கில் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப் படுவதாக ஆன்லைன் வாயிலாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் வந்தது.
இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் உத்தரவின் பேரில் வட்டார அலுவலர் சிவலிங்கம் தலைமையிலான குழுவினர் தியேட்டரில் இன்று காலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது காலாவதியான பிஸ்கட் பாக்கெட்டுகள், பூச்சி விழுந்த கெட்டுப்போன பால், குளிர்பானங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை எடுத்து லேபல்கள் இல்லாத ரோஸ் மில்க் 250 மில்லி லிட்டர் அளவு கொண்ட 94 பாட்டில்கள், கோல்ட் காபி 250 மில்லி லிட்டர் எடை கொண்ட 56 பாட்டில்கள்,250 கிராம் பிஸ்கட் 9 பாக்கெட் இவை அனைத்தும் லேபுள்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் 5 லிட்டர் பால் குளிர்சாதன பெட்டியில் இருந்தது .இந்த பால் கெட்டுப் போனதாக கூறப்படுகிறது. இந்த பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.இது குறித்து கேண்டீன் மீது வழக்கு தொடரப்படும் என்றும் மேலும் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்பு துறைஅதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், திரையரங்க உரிமையாளருக்கு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
- சி.பி.ஐ. நாடு முழுவதும் இன்று 56 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.
- 19 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் ஒரே நேரத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சிறுமிகள் தொடர்பான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தது, பகிர்ந்தது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
சிங்கப்பூரில் உள்ள இன்டர்போல் அளித்த தகவலின்படி, சி.பி.ஐ. இது குறித்து 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் சிறுமிகள் தொடர்பான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தது, பகிர்ந்தது தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. நாடு முழுவதும் இன்று 56 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.
19 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் ஒரே நேரத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.