search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 231373"

    • சிறப்பு நவநாள் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது.
    • அந்தோணியார் சொரூபம் தாங்கிய தேரை புனிதநீர் தெளிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்க ண்ணியை அடுத்த கருங்கண்ணியில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது.

    ஆலயத்தின் இந்த புத்தாண்டின் முதல் செவ்வாய்க்கிழமை முன்னிட்டு தேர்பவனி நடை பெற்றது சிறப்பு நவநாள் கூட்டுப்பாடல் திருப்பலி ஆலய பங்குத்தந்தை டேவிட்செல்வகுமார் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிகப்பட்ட சப்பர த்தில் எழுந்தருளிய அந்தோணியார் சொரூபம் தாங்கிய தேரை புனித நீர் தெளிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    அதனைதொடர்ந்து கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

    கிறிஸ்தவ சமுதாய பெருந்தலைவர் எம். பிரான்சிஸ் துணைத் தலைவர் விக்டர் பவுல்ராஜ் மற்றும் ஊர் பொறுப்பாளர்கள் இறை மக்கள் கருங்கன்னி அடைக்கல அன்னை அருட்சகோதரிகள் உள்ளி ட்ட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை.
    • ரூ.6 லட்சம் மதிப்பில் தேரை புனரமைத்தனர்.

    ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இந்த நிலையில் பல ஆண்டுகளாக நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் தேர் சிதிலமடைந்து காணப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை.

    தற்போது கோவில் திருவிழா நடந்து வருவதை முன்னிட்டு நகர தி.மு.க. செயலாளர் என்.ஆர்.சங்கர் குடும்பத்தினர் அவர்களது சொந்த செலவில் ரூ.6 லட்சம் மதிப்பில் தேரை புனரமைத்தனர். சாமி வைக்கும் பலகை, மர சிற்பங்கள், தேரில் சேதமடைந்த பகுதியை அகற்றிவிட்டு புதிய மரத்தில் சிற்பங்கள் செய்து பொருத்துதல், இரும்பு சக்கரங்களுக்கு பெயிண்டு அடித்து சீரமைத்தல் மற்றும் தேர் துணி ஆகிய பணிகள் நடந்தன.

    இந்த நிலையில் நேற்று காலையில் புனரமைக்கப்பட்ட தேர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் தலைமையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தேரை வடம்பிடித்து இழுத்து தேர் நிலையத்திற்கு கொண்டு செல்லும் பணி நடந்தது. இதில் நகர செயலாளர் என்.ஆர்.சங்கர், மாவட்ட பிரதிநிதி கல்யாண் ஜூவல்லரி ரங்கசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கவுன்சிலர் விநாயகமூர்த்தி, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் ராஜேஷ் பாபு, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ரங்கசாமி, நகராட்சி உறுப்பினர்கள், நகர தி.மு.க. நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், கோவில் நிர்வாக அதிகாரி நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ராஜேஷ் குமார் எம்.பி.க்கு பரிவட்டம் கட்டி பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து புனரமைக்கப்பட்ட தேரை பக்தர்கள் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள தேர் நிலையத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனர்.

    • அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் கோரிக்கை
    • இந்த கோவில்களில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.

    நாகர்கோவில்:

    அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் ஒரு கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் நாகர்கோவில் நாகராஜா கோவில், கிருஷ்ணன் கோவிலில் அமைந்துள்ள கிருஷ்ணசாமி கோவில், வடிவீஸ்வரத்தில் உள்ள அழகம்மன் கோவில், பூதப்பாண்டியில் உள்ள பூதலிங்கசாமி கோவில்கள் உள்ளன.

    இந்த கோவில்களில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெறும் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். எனவே இக்கோவில்களின் தேர் ஓடும் வீதிகளில் உள்ள மின் வயர்களை புதைவடங்களாக மாற்றி தருமாறு கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பங்குனி மாதத்தில் அமாவாசை தினத்தை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா கொண்டாடப்படும்.
    • திருவிழாவின் 15 வது நாளில் திருத்தேரில் அம்மன் எழுந்தருளி உலா வரும் தேரோட்டம், சிறப்பாக நடந்து வருகிறது.

    உடுமலை :

    உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும், பங்குனி மாதத்தில் அமாவாசை தினத்தை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா நோன்பு சாட்டப்பட்டு 15 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும்.

    திருவிழாவின் 15 வது நாளில் திருத்தேரில் அம்மன் எழுந்தருளி உலா வரும் தேரோட்டம், சிறப்பாக நடந்து வருகிறது. பல லட்சம் மக்கள் பங்கேற்கும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

    கோவில் அருகில் இருந்து தேரை பக்தர்கள் இழுத்து செல்ல, பின்னால் இருந்து யானை தள்ளி செல்லும் சிறப்பான நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.பல நூற்றாண்டு பழமையான மாரியம்மன் கோவில் தேர் மரத்தினால் செய்யப்பட்டு பின்னர் இரும்பு சக்கரம் பொருத்தப்பட்டிருந்தது.தேர் பழமையானதாக உள்ளதால் அதற்கு பதிலாக புதியதாக ரூ.53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் எண் கோண வடிவில் புதிய தேர் செய்யப்பட்டுள்ளது.

    பழைய தேரை விட சிறப்பு அம்சங்களுடனும், சிற்ப வேலைப்பாடுகளுடனும் 5 நிலைகளை கொண்டதாகவும், தேரின் மொத்த உயரம் 12 அடியாகவும், இதில் தேர்பலகை 9 அடி உயரத்திலும், சுவாமிகள் எழுந்தருளும் உற்சவருக்கான சிம்மாசனம் இரண்டடி உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

    புதிய தேருக்கு ஏறத்தாழ 780 கன அடி இலுப்ப மரமும், 20 கன அடி தேக்கு மரமும் பயன்படுத்தப்பட்டது. தேரின் வெளிப்புறத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன், அம்மன் தலங்கள் குறித்த வரலாற்று சிற்பங்கள் மற்றும் சிவன், மகாவிஷ்ணு, விநாயகர், முருகன் சிற்பங்கள் என 220 மரச்சிற்பங்களும், வாழ்வியல் தத்துவம் விளக்கும் வகையில் 120 போதியல் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.திருப்பூர் ரோட்டிலுள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் புதிய தேர் செய்யப்பட்டது. இந்நிலையில் புதிய தேரை மாரியம்மன் கோவில் தேர் நிலைக்கு கொண்டு வரவும், புதிய தேர் வெள்ளோட்டம் மேற்கொள்ளவும், கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    அதற்காக பல 100 ஆண்டுகள் சுவாமி எழுந்தருளி, தேரோடும் வீதிகளில் ஓடிய பழைய தேர், நிலையிலிருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொக்லைன் எந்திரம் உதவியுடன் இழுத்துச்செல்லபட்டு திருப்பூர் ரோட்டிலுள்ள கோவில் நிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.பழைய தேரை பழுதடையாமலும், அமைப்பும், அழகும் மாறாமல் முறையாக பராமரிக்க அறநிலையத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். உடுமலை நகராட்சியில் தேரை கண்காட்சியாக வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    • 1923-ஆம் ஆண்டு ரோம் நகரில் புனித குழந்தை இயேசுவின் தெரசா அருளாளராக அறிக்கையிடப்பட்டார்
    • கண்டன்விளை ஆலயத்தின் இரு ஆலய மணிகளும் புனித தெரசாவின் சொந்த சகோதரிகள் அன்பளிப்பாக அனுப்பி வைத்தவையாகும்.

    கன்னியாகுமரி:

    அன்பிற்காகத் தம்மையே அர்ப்பணித்து எளிய முறையில் சிறிய வழியில் இறையன்பையும் பிறர் அன் பையும் நிறைவாக வாழ்ந்து காட்டிய எம் பாதுகாவலி புனித குழந்தை இயேசுவின் தெரசா இறையருளை வாரி வழங்கத் தேர்ந்தெடுத்த இடம்தான் கண்டன் விளை.

    கண்டன்விளை காரங் காடு பங்கின் ஒரு பகுதியாக இருந்தது. காரங்காடு பங்கு மிகப் பெரியதாக இருந்த மையால் புதிதாக இன்னும் ஓர் ஆலயம் கட்ட வேண் டுமென விரும்பிய அருட்தந்தை இக்னேஷியஸ் மரியா கண்டன்விளையில் இடம் தேர்வு செய்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

    1923-ஆம் ஆண்டு ரோம் நகரில் புனித குழந்தை இயேசுவின் தெரசா அருளாளராக அறிக்கையிடப்பட்ட விழா வில் கலந்து கொண்ட அன்றைய ஆயர் பென்சிகர் கண்டன்விளையில் எழுப் பப்படும் ஆலயம் சிறு மலரின் முதல் ஆலயமாக அமையும் என ஆயர் பேரவையில் அறிவித்தது கண்டன்விளைப் பங்கை உலகறியச் செய்தது. இந்த ஆலயம் 7-4-1924 அன்று அர்ச்சிக்கப்பட்டது. மேம்படுத்தப்பட்ட புதிய ஆலயம் 7-4 1929 அன்று கட்டி முடிக்கப்பட்டது.

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் ஒலிக்கும் இரு ஆலய மணிகளும் புனித தெரசாவின் சொந்த சகோதரிகள் (அன்பளிப் பாக) அன்பாக அனுப்பி வைத்தவையாகும். அம்மணி களில் நான் அனைத்து இந்திய மக்களையும் சிறுமல ருக்கு வணக்கம் செலுத்த கண்டன்விளைக்கு அழைப் பேன் என்னும் சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள புனித குழந்தை தெரசாவின் இரு சொரூபங் களும் கார்மல் மாதா சொரூபமும் ரோமிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டவையாகும். திருத்தந்தையால் அனுப்பி வைக்கப்பட்ட புனிதையின் பேரருளிக்கமும் இங்கு பக்தர்களின் வணக்கத் திற்காக வைக்கப்பட்டுள் ளது. 1944-ஆம் ஆண்டு தனிப் பங்காக உயர்த்தப்பட்ட கண்டன்விளைக்கு அருட் தந்தை. ஸ்டீபன் முதல் பங் குத்தந்தையாகப் பொறுப் பேற்றார். முன்னாள் பங்குத் தந்தையர் மற்றும் பங்கு மக்களின் முயற்சியால் புனித லூர்து அன்னை கெபி, ஒரே கல்லாலான கொடி மரம், சக்கரங்களையுடைய தேர், குருசடி, அருட்சகோத ரியர் இல்லம், அருட்பணிப்பேரவை அலுவலகம், அழகிய பீடம், முப்பக்கக் கோபுரங்கள், நடுநிலைப் பள்ளி, தெரஸ் அரங்கு, செபமாலை மலைச்சிற்றால யம், கூடாரம், யூடிக்கா மருத்துவமனை, புனித தெரசா மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளி ஆகிய அனைத்தும் உரு வாக்கப்பட்டுள்ளன.

    1994-ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட பங்கு பொன் விழாவின் நினைவாக, அன்றுமுதல் வாரந் தோறும் வியாழக் கிழமை மாலை 6.15 மணிக்கு செபமாலையும் தொடர்ந்து நவநாள் திருப் பலியும் நடைபெற்று வரு கின்றன. பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து பங்கேற்று இறையாசீர் பெற்றுச் செல்கின்றனர். இங்கு நாள்தோறும் காலை 6.15 மணிக்கு ஞாயிறு மற்றும் திருநாட்களில் காலை 7 மணிக்கும் திருப்பலி நடைபெற்று வருகிறது.இந்த ஆலயத் தின் நூற்றாண்டு விழா 2023-ஆம் ஆண்டு தொடங்கி 2024-ம் ஆண்டு நிறைவு பெறஉள் ளது. இந்த ஆலய திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வரு கிறது.

    விழாவில் இன்று (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு திருமுழுக்கு, காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து சிறப்பு திருப்பலியை திருத்துவபுரம் பங்குதந்தை பீட்டர் தலைமை தாங்கி நிறைவேற் றுகிறார். கருமாத்தூர் குருமட தேவராஜ் அருளுரை யாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, இரவு 7 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்று கிறார். 9.30 மணிக்கு தேர்ப்பவனி ஆகியவை நடைபெறுகிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழ மை) அதிகாலை 5.30 மணிக்கு முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன் தலைமை தாங்கி திருப்பலி நிறை வேற்றுகிறார். காலை 8 மணிக்கு பாளையங் கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமை தாங்கி திருவிழா சிறப்பு திருப்ப லியை நிறைவேற்றுகிறார். காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் மறைமாவட்ட அருட்பணியா ளர் இஞ்ஞாசி ராஜசேகரன் தலைமை தாங்கி மலை யாள திருப்பலியை நிறை வேற்றுகிறார். 11.30 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், 6.30 மணிக்கு திருக்கொடி இறக்கம் ஆகியவை நடக் கிறது.

    இதற்கான ஏற்பாடு களை பங்குதந்தை வெ.சகாய ஜஸ்டஸ், இணை பங்குதந்தை சத்தியநாதன், துணைத்த லைவர் பி.எம். ஜஸ்டஸ், செயலாளர் ஐசக், பொருளாளர் வறுவேலாள், துணை செயலா ளர் லல்லி மலர், பங்கு பேரவை நிர்வாகிகள் மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் பத்தாம் பத்திநாதர் ஆலயத்தில், 64-வது தேர் பவனித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கலந்து கொண்டனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் பத்தாம் பத்திநாதர் ஆலயத்தில், 64-வது தேர் பவனித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில், மெழுகு தீபமேந்தி திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு,சேலம் மறை மாவட்ட ஆயர். அருட்செல்வம் ராயப்பன் தலைமை வகித்தார். இதனைத்தொடர்ந்து புனித அந்தோணியார், அன்னை மரியாள், புனித பத்தாம் பத்திநாதர் ஆகியோர் திருவுருவத்துடன், 3 திருத்தேர்பவனி ஊர்வலம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த தேர்பவனி ஊர்வலத்தில், திரளான பக்தர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வாழப்பாடி கத்தோலிக்க கிறிஸ்துவ திருச்சபை பங்குத்தந்தை ஜெயசீலன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் ஆண்டுப்பெரு–விழாவை ஒட்டி தேர்த்திருவிழா நடைபெற்றது.
    • தேசியக்கொடி அலங்காரத்துடன் தேர் பவனி ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் 125 ஆண்டு பழமையான புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் ஆண்டுப்பெரு–விழாவை ஒட்டி தேர்த்திருவிழா நடைபெற்றது.

    பங்குத் தந்தை கிரகோரி–ராஜன் தலைமையில் ஆலய தேரினை முன்னாள் ஆயர் சிங்கராயன் கலந்து கொண்டு ஆண்டுப்பெருவிழா திருப்பலி நிறைவேற்றி மற்றும் தேர் பவனியை தொடங்கி வைத்தார்கள். ஜெயராக்கினி மாதா தேரானது ஆத்தூரின் முக்கிய வீதிகளின் வழியே பவனியாக சென்றது.முன்னதாக மாதாவின் தேரானது தேசிய கொடியின் வடிவில் மூவர்ணத்தில் அலங்கரிக்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் ரெமோ மற்றும் பிரான்சிஸ் தலைமையில் சிறப்பாக செய்திருந்தனர்.இவ்விழா–வில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்,

    • ராஜகோபுரத்தின் நுழைவாயிலின் முன்புறம் தீப கம்பம் அமைந்துள்ளது.
    • மூவர்கண்டியம்மன் கோவில் கல் தூண்கள் கொண்டும் மேற்கூரை முழுவதும் கல்லினால் கட்டப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் சோமவாரப்பட்டியில் மிகவும் பழமை வாய்ந்த மூவர்கண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வடபுறம் உள்ள ராஜகோபுரத்தின் நுழைவாயிலின் முன்புறம் தீப கம்பம் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலின் கிழக்குபுறத்தில் திண்ணை மண்டபம் அமைந்துள்ளது.

    வடக்கு பிரகாரத்தில் உள்ள வாயில் நுழையும் போது கல்யாண மண்டபம் அடுத்து மணி மண்டபம் அமைந்துள்ளது. சிற்ப கட்டிட வேலைப்பாடுகள் நிறைந்த மூவர் கண்டியம்மன் கோவில் கல் தூண்கள் கொண்டும் மேற்கூரை முழுவதும் கல்லினால் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு தூண்களிலும் சிற்பக்கலையை எடுத்துக்காட்டும் வகையில் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் மேற்கூரையில் நடுவிலும் சிற்பங்கள் காணப்படுகிறது. கோவிலின் நுழைவு வாயிலில் இருந்து கருவறை மண்டபத்தில் இரு பக்கங்களிலும் உள்ள தூண்களில் காவல் தெய்வங்களின் சிற்பங்கள் காணப்படுகிறது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு பக்தர் ஒருவர் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான தேரை இந்து அறநிலையத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தார். ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தின் போது தேர்திருவீதி உலா நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காளையார்கோவிலில் இன்று சோமேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது.
    • சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தேரை வடம் பிடித்து இழுத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் நகர் மையபகுதியில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற சவுந்தரநாயகி அம்மன் சமேத சோமேஸ்வரர் சுவாமி கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இங்கு 3 பிரதான சிவபெரு மான் சன்னதிகளும், அம்மன் சன்னதிகளும், 2 பெரிய ராஜகோபுரங்க ளும் அமைந்துள்ளளன. இந்த கோவிலில் சுவாமி-அம்மனுக்கும் பங்குனி, வைகாசி, ஆடி மாதங்களில் திருவிழா நடைபெறுகிறது.

    வைகாசி மாதத்தில் சோமேஸ்வருக்கும், சவுந்தர நாயகி அம்ம னுக்கும் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதனையடுத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை நடந்தது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் 9-வது நாள் நிகழ்வாக இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.

    விழாவில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தேரை வடம் பிடித்து இழுத்தார். பா.ஜ.க. முன்னாள் தேசிய பொது குழு உறுப்பினர் எச். ராஜா, மாவட்ட தலைவர் சக்தி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    குமாரபாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் ரூ.7 லட்சம் மதிப்பில் தேர் நிறுத்த இடம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தம்மண்ணன் வீதி பெரிய மாரியம்மன் கோவிலில் ரூ.7 லட்சம் மதிப்பில் தேர் நிறுத்த இடம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

    கோவில் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதின் பேரில் குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தனது சொந்த பொறுப்பில் இதை அமைத்து கொடுக்க உள்ளார்.

    இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் சேர்மன் விஜய்கண்ணன், கோவில் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

    ×