search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படகு"

    • 17 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • 8 மீனவர்களை சிறை பிடித்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அவர்கள் கச்சத்தீவு நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 5 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.

    இதில் அட்டமால் பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவரது விசைப்படகை சிறைபிடித்தனர். படகில் இருந்த ஜான்சன், அருண், முருகன், கிங்ஸ்டன், கிரிட்டன், முருகன், ராரல் மானிக்ஸ், ரிமோட்டன் ஆகிய 8 மீனவர்களை சிறை பிடித்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

    இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெக தாப்பட்டினத்தை சேர்ந்த நடராஜன், கோவிந்தராஜ், சோனையன், சேப்பான், ராமகிருஷ்ணன் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், ரங்கய்யன், அழகிரி முருகேசன், கருப்பையா உள்பட 2 விசைப்படகுகள் மற்றும் 9 மீனவர்களையும் கைது செய்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

    ஒரே நாளில் மூன்று விசைப்படகுகள் மற்றும் 17 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள் ளது.

    மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்திட மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • ஆற்றின் நடுவில் சென்ற போது திடீரென அந்த படகு கவிழ்ந்தது.
    • தண்ணீரில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 30 பேரை அவர்கள் மீட்டனர்.

    நைஜர்:

    வட மத்திய நைஜீரியா நாட்டில் நைஜர் மாகாணம் மொக்வா நகரில் இருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு படகில் விவசாய பணிகளுக்காக சென்று கொண்டு இருந்தனர். அங்குள்ள ஆற்றில் அணையை கடந்து விவசாய பண்ணைக்கு படகு சென்றது. இந்த படகில் பெண்கள், குழந்தைகளும் பயணம் செய்தனர்.

    ஆற்றின் நடுவில் சென்ற போது திடீரென அந்த படகு கவிழ்ந்தது. இதனால் அதில் பயணம் செய்தவர்கள் ஆற்றுக்குள் விழுந்து தத்தளித்தனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    தண்ணீரில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 30 பேரை அவர்கள் மீட்டனர். ஆனாலும் இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 26 பேர் ஆற்றில் மூழ்கி இறந்து விட்டனர். அவர்களது உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். படகில் சென்ற பலரை காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    • மேற்கூரையின் மீது ஏறி ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளை மாற்றும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.
    • சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    கன்னியாகுமரி :

    கொல்லங்கோடு அருகே உள்ள வாறுவிளை வீடு மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 62). கூலி தொழிலாளி யான இவர் நேற்று முன்தினம் வள்ளவிளை பகுதியில் உள்ள ஒரு படகு பழுது பார்க்கும் இடத்தில் உள்ள மேற்கூரையின் மீது ஏறி ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளை மாற்றும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது திடீரென்று ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டு உடைந்து கீழே விழுந்தது. இதில் பாலகிருஷ்ணன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை சக தொழிலாளர்கள் மீட்டு பாறசாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது மனைவி லில்லீபாய் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கன்னியாகுமரியில் 5-வது நாளாக படகு போக்குவரத்து பாதிப்பு
    • 4 நாட்களாக கன்னியா குமரியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள் வாங்கி காணப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகுஅடிக்கடி கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் தாழ்வது, கடல் நீர்மட்டம் உயர்வது, கடல் சீற்றம், கடல்கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன.

    குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்தநிலையில் பவுர்ண மியையொட்டி கடந்த 4 நாட்களாக கன்னியா குமரியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள் வாங்கி காணப்படுகிறது. இன்னொரு புறம் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது.

    இன்று 5-வது நாளாக இந்த நிலை நீடிக்கிறது. இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்கக்கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. அதே வேளையில் இந்திய பெருங் கடல் மற்றும் அர பிக்கடல் பகுதியில் கடல் கொந்த ளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப் பட்டது.

    இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்கு வரத்து தொடங்கப்படவில்லை. இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயி லில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையில் காலை 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது.

    இதைத்தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு விவே கானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவே கானந்தர் நினைவு மண்ட பத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்த னர். கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து இன்று 5-வது நாளாக பாதிக்கப்பட்டது.

    மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற் கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின.

    இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • படகில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தண்ணீரில் மூழ்கினார்கள்.
    • அதிக பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    ஜகார்த்தா:

    இந்தோனேஷியா நாட்டில் சுமார் 17 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய தீவுகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல படகுகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அடிக்கடி நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்கள் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது.

    இங்குள்ள முனா தீவில் இருந்து சுலவேசி தீவுக்கு நேற்று ஒரு படகு சென்றது. இந்த படகில் சுமார் 40 பேர் பயணம் செய்தனர். தெற்கு சென்சாஷி பகுதியில் சென்ற போது திடீரென அந்த படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தண்ணீரில் மூழ்கினார்கள். இது பற்றி அறிந்ததும் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த கடலோர படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    படகு கவிழ்ந்ததில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். படகில் வந்த பலர் மாயமாகி விட்டனர். அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    அதிக பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • ரூ.47 லட்சம் செலவில் சீரமைப்பு
    • சுப்பையார் குளத்தை சீரமைத்ததற்காக மேயர் மகேசிற்கு பாராட்டு விழா நடத்தினர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி 14-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ண ன்கோவில் சுப்பையார்குளம் உள்ளது. இந்த குளம் ஆகாயத்தாமரைகள் படர்ந்து சேறும் சகதியுமாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மோசமான நிலையில் காணப்பட்டது.

    குளத்தை தூர்வாரி சீரமைக்க 14-வது வார்டு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் நாகர்கோ வில் மாநகராட்சி மேயர் மகேஷ் ரூ.47 லட்சம் செலவில் குளத்தை தூர்வாரி சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார்.

    அதன்படி கடந்த சில நாட்களாக இந்த பணிகள் நடந்தது. குளத்தில் கிடந்த கழிவு மண் அகற்றிவிட்டு சுற்றுச்சுவர்கள் கட்டப்ப ட்டுள்ளது. இந்த நிலையில் 14-வது வார்டு பொதுமக்கள் சுப்பையார் குளத்தை சீரமைத்ததற்காக மேயர் மகேசிற்கு பாராட்டு விழா நடத்தினர்.

    இந்த நிகழ்ச்சிக்கு 14-வது வார்டு கவுன்சிலர் கலா ராணி தலைமை தாங்கினார். மேயர் மகேஷ் பொதுமக்கள் மத்தியில் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகர மத்தியில் இப்படி ஒரு குளம் கிடைப்பது அரிது. இந்த குளத்தை பொது மக்கள் நீங்கள் சுத்தமாக வைத்துக்கொள்ள வே ண்டும். இதற்கு குளத்தை சுற்றி நடைபாதை மற்றும் பூங்கா அமைக்கப்பட உள்ளது. அதனையும் பாது காப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். குப்பைகளை குளத்திற்குள் கொட்ட க்கூடாது.

    வேறு பகுதியில் இருந்து வந்து கொட்டினாலும் அதை கண்காணித்து தடுக்க வேண்டும். குளத்தை சுற்றி தடுப்பு சுவர் மேல் கம்பிவேலி அமைக்கப்பட உள்ளது. மாநகராட்சி பணியாளர்கள் வரும்போது குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும்.

    இந்த குளத்தை பாதுகாக்கும் வகையில் ஒரு பாதுகாப்புக்குழு அமைத்து குளத்தை கண்காணிக்க வேண்டும். குளத்தை சேதப்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் இந்த குளத்தை நல்ல படியாக பராமரித்தால் படகு விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த குளத்தை பாதுகாக்கும்போது சுற்றுப்புறங்களில் நிலத்தடி நீரும் பெருகும். இந்த பகுதியில் உள்ள இடங்களுக்கும் மதிப்பு கூடும்.

    இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் தி.மு.க. மாநகர துணை செயலாளர் வேல்முருகன், சிறுபான்மை நல உரிமை பாதுகாப்பு துணை அமைப்பாளர் ஜெகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கடலோர பாதுகாப்பு படை போலீசார் படகில் சென்று சோதனை மேற்கொண்டனர்.
    • சிறப்பு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு டிரோன் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை கடற்கரையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சாகர் கவச் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.

    இதில் கடலோர பாதுகாப்பு படை காவல் உதவி ஆய்வாளர் ரகுபதி தலைமையில் போலீசார் தொண்டியக்காடு, தம்பிக்கோட்டை, கீழக்காடு, ஜாம்புவானோடை, சின்னான் கொள்ளைக்காடு உள்ளிட்ட இடங்களில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் படகில் சென்று சோதனை மேற்கொண்டனர்.

    மேலும், முத்துப்பேட்டை நகர் பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பு தமிழ்மாறன், சட்டம் ஒழுங்கு டி.எஸ்.பி. சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் ஆலங்காடு, தம்பிக்கோட்டை கீழக்காடு, பேட்டை, கோபாலசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு சுமார் 70-க்கும் மேற்பட்ட போலீசார் டிரோன் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் பார்வையிட்டார். அப்போது ஏ.டி.ஜி.பி வெள்ளத்துரை உடன் இருந்தார்.

    • 48 கடற்கரை கிராமங்களில் ரோந்து பணி தீவிரம்
    • தீவிரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்க ஒத்திகை

    கன்னியாகுமரி :

    தமிழ்நாட்டில் 13 மாவட்டங்கள் கடலோர பகு தியில் உள்ள மாவட்டங்கள் ஆகும். இதனால் இந்த மாவட்டங்களில் கடல் வழியாக படகு மூலம் தீவிரவாதிகள் ஊடுரு வலை தடுக்க ஆண்டுதோறும் கடலில் படகுமூலம் போலீ சார் பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு போலீசார் இந்திய கடலோர காவல் படை இந்திய கடற்படை மீன்வளத்துறை மற்றும் உள்ளூர் போலீசார் இணை ந்து தமிழகத்தின் கடலோர பகுதியில் "சாகர்கவாச் ஆப ரேஷன்"என்ற பாதுகாப்பு ஒத்திகையை நடத்தினார்கள். அதன்படி கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு போலீ சார் 2 அதிநவீன ரோந்து படகுமூலம் பாது காப்பு ஒத்திகையில் ஈடுப ட்டனர்.

    கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் அவர்கள் பாது காப்பு ஒத்திகையில் ஈடுப ட்டனர். சின்ன முட்டம் துறைமுகத்தில் இருந்து கூடங்குளம் கடல் பகுதிவரை ஒரு ஒரு குழுவினர் அதிநவீன ரோந்து படகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அதேபோல இன்னொரு குழுவினர் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து குளச்சல் கடல் பகுதி வரை க்கும் அதிநவீன படகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதுதவிர கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை யிலான 72 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள 48 கடற்கரை கிராமங்களில் போலீசார் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர்.

    மேலும் கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து ஜீப் மூலம் போலீ சார் கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றி கண்க ணித்தனர். நெல்லை, குமரி மாவட்ட கடலோர பகுதிகளில் அமைந்துள்ள 10-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளில் போலீசார் இரவு-பகலாக அதிரடி வாகன சோதனை நடத்தினார்கள். அதேபோல லா ட்ஜ்களிலும் சந்தேகப்ப டும்ப டியான நபர்கள் யாரா வது தங்கி இருக்கிறார்களா? என்று உள்ளூர் போலீசாரும் தீவிர சோதனை நடத்தினார்கள்.

    • பயணிகள் தங்கும் குடில்கள், காட்டை ரசிக்கும் டவர் ஆகிய பகுதியை ஆய்வு செய்தார்.
    • டிக்கெட் கவுண்டர் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்தி காட்டில் சுற்றுலா துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுலா மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அதற்கான பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. அந்த பணிகளை எவ்வாறு மேற்கொள்வது? என ஆய்வு செய்வதற்காக அமைச்சர் ராமச்சந்திரன் அலையாத்தி காட்டில் நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக, முத்துப்பேட்டைக்கு வந்த அமைச்சரை தி.மு.க. ஒன்றிய செயலாளர் மனோகரன், நகர செயலாளர் கார்த்திக் ஆகியோர் வரவேற்றனர்.

    பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் ஜாம்புவானோடை படகு துறைக்கு வந்து அங்கிருந்து வனத்துறை படகு மூலம் கோரையாறு வழியாக அலையாத்திகாட்டிற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் காட்டின் உள்ளே இருக்கும் நடைபாதைகள், சுற்றுலா பயணிகள் தங்கும் குடில்கள், காட்டை ரசிக்கும் டவர் ஆகிய பகுதியை ஆய்வு செய்தார்.

    காட்டிலிருந்து திரும்பிய அமைச்சர் படகுத்துறையில் கூடுதல் படகுகள் விடுவது, சுற்றுலா பயணிகள் காத்திருக்கும் வகையில் வசதிகள் மேற்கொள்வது, வாகனங்கள் நிறுத்துமிடம் அமைப்பது, கழிப்பிடம், குடிநீர் வசதி போன்ற வசதிகளை மேற்கொள்வது, டிக்கெட் கவுண்டர் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

    ஆய்வின்போது, சுற்றுலா துறை செயலாளர் சந்தீப் நந்தூரி, மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, வன அலுவலர் ஸ்ரீகாந்த், செல்வராஜ் எம்.பி., மாரிமுத்து எம்.எல்.ஏ., மன்னார்குடி ஆர்.டி.ஓ. கீர்த்தனா மணி, தாசில்தார் மகேஷ் குமார், வன அலுவலர் ஜனனி, மாவட்ட கவுன்சிலர் அமுதா மனோகரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் ஜாம்பை கல்யாணம், ஊராட்சி தலைவர் லதா பாலமுருகன், துணைத்தலைவர் ராமஜெயம் மற்றும் வருவாய் துறையினர், வனத்துறையினர் உடன் இருந்தனர்.

    • கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 1 மணி நேரம் தாமதமாக தொடக்கம்

    கன்னியாகுமரி:

    அமாவாசை தினம் என்பதால் கன்னியாகுமரியில் ஒரு புறம் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது.

    இன்னொரு புறம் கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. அதே வேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகவும் காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    இதற்கிடையில் காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    அதன்பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் கடல்சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். மேலும் கன்னி யாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங் களில் கடல் சீற்றமாக காணப்பட்டது.

    இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின. இத னால் இந்த கடற்கரை கிரா மங்களில் பெரும்பாலான கட்டுமரம் மற்றும் வள்ளம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் ஆவதையொட்டி மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
    • தெலுங்கானாவில் ஆற்றில் திடீரென படகு கவிழ்ந்த விபத்தில் அமைச்சர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் ஆவதையொட்டி மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

    ஐதராபாத் அருகே உள்ள கரீம் நகரில் உள்ள ஆசிஃப் நகரில் தெலுங்கானா மாநில ஆண்டுவிழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

    இந்த பகுதிக்கு அங்குள்ள ஆற்றில் படகில் தான் செல்ல வேண்டும். இதில் கலந்து கொள்வதற்காக அந்த மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காங்குலா கமலாகர் படகில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, படகு திடீரென கவிழ்ந்தது. நிலைதடுமாறிய அமைச்சர் தண்ணீரில் விழுந்தார். கரையில் இருந்த போலீசார் மற்றும் அரசியல் கட்சியினர் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக போலீசார் தண்ணீரில் இறங்கி அமைச்சர் மற்றும் அவருடன் இருந்த நிர்வாகிகளை லாவகமாக காப்பாற்றினர்.

    படகு கவிழ்ந்த விபத்தில் அமைச்சர் தண்ணீரில் நிலை தடுமாறி நூலிலையில் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    படகு கவிழ்ந்து அமைச்சர் தண்ணீரில் விழும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • மன்னார் வளைகுடா கடல்பகுதி வழியாக இலங்கையில் இருந்து ஒரு படகில் தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • இலங்கையில் இருந்து ரூ.4 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

    பனைக்குளம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் இலங்கைக்கு அருகில் அமைந்துள்ளது. இதனால் கடல் வழியாக தங்கம், கஞ்சா, கடல் அட்டைகள், பீடி இலைகள் உள்பட பல்வேறு பொருட்களை கடத்தி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

    இலங்கையில் இருந்து கடத்தல் காரர்கள் தங்கத்தை கடத்தி வருவதை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கடத்தல்காரர்கள் வரும் பகுதிகளுக்கு ரோந்து படகில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு மன்னார் வளைகுடா கடல்பகுதி வழியாக இலங்கையில் இருந்து ஒரு படகில் தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினரின் உதவியுடன் ஹோவர் கிராப்ட் கப்பலில் குறிப்பிட்ட பகுதிக்கு சென்றனர்.

    அப்போது மண்டபத்திற்கும், வேதாளைக்கும் இடைப்பட்ட கடல்பகுதியில் ஒரு நாட்டுப்படகு வந்து கொண்டிருந்தது. அதை நிறுத்துமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். அதிகாரிகளை பார்த்ததும் நாட்டுப்படகில் இருந்தவர்கள் ஏதோ ஒரு பொருளை கடலில் வீசியுள்ளனர்.

    இதையடுத்து மத்திய புலனாய்வு பிரிவினர் மற்றும் கடலோர காவல் படையினர் அந்த நாட்டுப்படகில் ஏறி சோதனை செய்தனர். அந்த படகில் வேதாளை பகுதியை சேர்ந்த முகமது நாசர், அப்துல் கனி, பாம்பன் பகுதியை சேர்ந்த ரவி ஆகியோர் இருந்தனர்.

    அவர்களை மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்து சென்று தனித்தனியாக அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கடலில் வீசியது தங்கக்கட்டிகளா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் ரோந்து சென்ற போது இலங்கை பகுதியில் இருந்து மேலும் ஒரு நாட்டுபடகு வருவது தெரியவந்தது. அந்த படகை போலீசார் மடக்கி, அதில் வந்த அசாருதீன், சாதிக் அலி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் இலங்கையில் இருந்து ரூ.4 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து தங்கம் கடத்தி வந்த 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதே போல் தங்கம் கடத்தி வந்தது தொடர்பாக நேற்று 3 பேர் வந்த படகையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று கடத்தல்காரர்கள் படகில் இருந்து கடலில் பார்சலை வீசிய பகுதி மணாலி தீவுப்பகுதி ஆகும். அங்கு கடலில் தங்கம் வீசப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் மீனவர்களை வைத்து தங்கத்தை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து பிடிபட்ட சம்பவம் மண்டபம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×