என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 231917"
- தேர் திருவிழா நடத்துவது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை பரமத்திவேலூர் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் கலைச்செல்வி முன்னிலையில் நடைபெற்றது.
- இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் செந்தில்குமார், வருவாய் துறையினர், போலீசார் மற்றும் அனைத்து தரப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூரில் வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர் திருவிழா நடத்துவது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை பரமத்திவேலூர் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் கலைச்செல்வி முன்னிலையில் நடைபெற்றது.
இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் செந்தில்குமார், வருவாய் துறையினர், போலீசார் மற்றும் அனைத்து தரப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில், தாசில்தார் கலைச்செல்வி அறிவுரையின்படி சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் அமைதியான முறையில் திருவிழாவை நடத்த அனைவரும் ஒப்புக்கொண்டனர்.
மேலும் கோவில் திருவிழா, இந்து சமய அறநிலையத்துறை மூலம் நடத்தப்பட வேண்டும். இந்து சமய அறநிலைய துறையினர் தவிர தனிப்பட்ட நபர்கள் யாரும் நன்கொடைகள் வசூலிக்க கூடாது.
சாமி ஊர்வலத்தின் போது எந்த தரப்பினரும் தனது சமூகத்தை முன்னிலை படுத்தி ஆடைகள் மற்றும் தொப்பிகள் அணியக்கூடாது. வெட்டும் குதிரை ஊர்வலம் வரும் 23-ந் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை மட்டும் நடைபெற வேண்டும். தேரோட்டம் வரும் 25-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற வேண்டும்.
கோவில் பெயருடன் வெள்ளை நிற பனியன் அணிந்த பொத்தனூரைச் சேர்ந்த 60 பேர் மட்டும் தேருக்கு சன்னக்கட்டை போட வேண்டும். திருவிழா நடைபெறும் போது எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாத வகையில் அமைதியான முறையில் திருவிழா நடத்தப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் வருவாய்த்துறையினர் போலீசார் மற்றும் அனைத்து தரப்பினர் கலந்து கொண்டனர்.
- தேன்கனிக்கோட்டை பேட்ட ராயசுவாமி கோவில் பிரம்மோத்சவ விழா நடைபெற்று வருகிறது.
- முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நாளை 4-ம் தேதி காலை 10 மணி அளவில் தேர்திருவிழா நடைபெறுகிறது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பேட்ட ராயசுவாமி கோவில் பிரம்மோத்சவ விழா நடைபெற்று வருகிறது.
இன்று இரவு இரவு 9 மணிக்கு கஜேந்திர மோக்ஷம் என்ற ராமபானம் நிகழ்ச்சி, முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நாளை 4-ம் தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணி அளவில் தேர்திருவிழா நடைபெறுகிறது.
இரவு 8 மணிக்கு சம்பூர்ன இராமயானம் நாடகம், மறுநாள் (5ம் தேதி) காலை 8 மணிக்கு. எருது விடும் விழா, இரவு பாட்டுகச்சேரி பல்லக்கு ஊர்வலம் மற்றும் வானவேடிக்கை நடை பெறுகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
- மல்லிகார்ஜுன சாமிக்கு திருக்கல்யாண உற்சவ வைபோகம் நடைபெற்றது.
- ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அம்ருதா மல்லிகார்ஜுன சாமி கோவில் உள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து 600 ஆண்டுகளுக்கு முன்பு சாமியின் திருமண் கொண்டு வரப்பட்டு இங்கு இந்த கோவிலானது, பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியன்று மல்லிகார்ஜுன சாமி கோவில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று தேர்த்திருவிழா நடைபெற்றது.
முன்னதாக சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமியை வைத்து, எஸ் .முதுகானப்பள்ளி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
தேர் கிராமத்தின் வீதிகளில் சுற்றி வந்து பின்னர், கோயிலுக்கு அருகே நிலைக்கு கொண்டுவரப்பட்டது. மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று மல்லிகார்ஜுன சாமிக்கு திருக்கல்யாண உற்சவ வைபோகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியிலும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் மகா சிவராத்திரியை முன்னிட்டு, இரவ ஜாம பூஜை, பக்தி சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த விழாவில், திரளான மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காங்கயம்:
காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்குமண்டலத்தில் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். மேலும் நாட்டில் வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. இந்தநிலையில் சிவன்மலையில் உள்ள சுப்ரமணியசாமி கோவிலின் தைப்பூச தேர்த் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.
இந்நிலையில் வீரகாளியம்மன் கோவில் தேர் திருவீதியுலா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் மாலை 4 மணியளவில் வீரகாளியம்மன் தேர் பாதை, மலை அடிவாரம், பெரிய வீதி வழியாக அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி வந்து, பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.வரும் 5-ந்தேதி சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவிலின் தைப்பூச தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற உள்ளது.
- கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா மார்ச் 1-ந் தேதியும் நடைபெற உள்ளது.
- போக்குவரத்து நெறிமுறைகளை கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும்.
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மருதமலை, அருள்மிகு சுப்பிரமணி–யசுவாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா மற்றும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சந்தீப்(சட்டம் ஒழுங்கு), மதிவாணன் (போக்குவரத்து), மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன் பேசியதாவது:-
கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா 28-ந் தேதி முதல் 7-ந் தேதி வரையும், கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா மார்ச் 1-ந் தேதியும் நடைபெற உள்ளது. இந்த திருவிழாக்களை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.
பண்டிகை தினங்களில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடு பணிகளை சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மூலம் மேற்கொள்ளப்படுவதுடன், தேவையான போக்குவரத்து நெறிமுறைகளை கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும்.
போதிய அளவிலான காவலர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்திட வேண்டும்.திருவிழா நாட்களில் வழிபாட்டுத்தலங்களில் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைபிடித்திட வேண்டும்.
மாநகராட்சியின் மூலம் திருவிழாவின் போது குடிநீர் விநியோகம் தடையின்றி நடைபெற தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். திருக்கோவிலில் தேவையான இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைத்தும், குப்பைகளை அகற்றி பிளிச்சிங் பவுடர், கிருமி நாசினி தெளித்து உடனுக்குடன் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
தீயணைப்பு வாகனத்தினை நிறுத்திவைப்பதுடன், தேவையான பணியாளர்களை பணியில் ஈடுபடுத்திட வேண்டும்.
திருவிழா நாட்களில் கோவில்களுக்கு மின்சாரம் தடையின்றி வழங்குவதுடன், தேர் செல்லும் பாதைகளில் மின் இணைப்புகளை சரிவர கண்காணித்திட வேண்டும். திருவிழா நாட்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் சூழல் நிலவுவதால், மருத்துவ உதவி வழங்கிட மருத்துவர் குழுவோடு 2 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருப்பதுடன், முதலுதவி மேற்கொள்ளும் பொருட்டு, தனியாக மருத்துவ குழு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேர்செல்லும் பாதைகளில் உள்ள மேடு, பள்ளங்கள் ஏதேனும் இருப்பின் சீர்படுத்தி சாலை செப்பனிடுதல் வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு திருவிழா சிறப்பாக நடைபெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அந்தியூர் அடுத்த புதுபாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெகு விமரிசையாக தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
- கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பண்டிகை நடைபெறவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு வழக்கம் போல் பண்டிகை நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்போடு பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த புது பாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெகு விமரிசையாக தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த பண்டிகையின் போது தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தும் பண்டிகையின் போது நடைபெறும் மாட்டுச் சந்தை குதிரைச் சந்தையை பார்த்து செல்வார்கள்.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பண்டிகை நடைபெறவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு வழக்கம் போல் பண்டிகை நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்போடு பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் புதுப்பாளையம் பகுதியில் கடை நடத்துவதற்காக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், ராட்டினம் உள்ளிட்டவை அமைப்பதற்கு தேவையான இடங்களை தேர்வு செய்து இடத்தின் உரிமையாளர் இடத்தில் பேசுவதா? வேண்டாமா? என்ற குழப்ப நிலையில் வியாபாரிகளும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்துபவர்களும் உள்ளனர்.
இருப்பினும் இந்த ஆண்டு குருநாதசாமி கோயில் பண்டிகை நடைபெறும் என்ற ஆவலோடு பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
- 16 வகையான அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றது.
- அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாக திருவிழா இன்று நடைபெற்றது.
தாராபுரம்:
தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாக திருவிழா இன்று நடைபெற்றது. தாராபுரத்தில் பழைய காவல் நிலைய வீதியில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இன்று வைகாசி திருவிழா நடைபெற்றது .
நிகழ்ச்சிக்கு முன்பாக மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் 500 லிட்டர் பாலினை தாராபுரம் அமராவதி ஆற்றில் இருந்து தலையில் சுமந்து சோலை கடைவீதி, மாரியம்மன் கோவில் வழியாக பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலை வந்தடைந்தனர். பின்னர் பாலாபிஷேகம் உட்பட 16 வகையான அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்று சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்