search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிவிப்பு"

    • அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை பெறலாம்
    • திருச்சி மாநகராட்சி அறிவிப்பு

    திருச்சி, ஏப்.20-

    திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-2024 முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30-ந்தேதிக்குள் செலுத்தி தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998, பிரிவு 84(1)ன் கீழ் 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம். எனவே, திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நடப்பாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30-ந்தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ.5,000 வரை ஊக்கத்தொகையினை பெற்றிடுமாறும், இம்மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மஞ்சள் பை விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்
    • மாநில அளவில் சிறந்த பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களுக்கு பணபரிசு வழங்கப்படும்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மற்றும் இவற்றிற்கு மாற்றாக பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணியை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு மாநில அளவில் இந்த விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. முதல் பரிசாக ரூ.10 லட்சமும் வழங்கப்பட உள்ளது.இந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தங்களுடைய வளாகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் வளாக பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில் முன் மாதிரியாகத் திகழும் பள்ளிகள்,கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்கி கவுரவிக்க முன் வந்துள்ளது.இதற்கான விண்ணப்ப படிவங்கள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப படிவத்தில் தனிநபர் , நிறுவனத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் சிடி பிரதிகள் இரண்டினை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 01.05.2023 ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ரெப்போ வட்டி விகிதத்தை 6.5 சதவீதமாக தொடருவதாக அறிவித்துள்ளது.
    • உற்பத்தி மற்றும் வினியோகத்தை எளிதாக்க வழிவகுக்கும்.

    திருப்பூர் :

    ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமான ரெப்போ வட்டி விகிதத்தை 6.5 சதவீதமாக தொடருவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியதாவது:-

    அமெரிக்க மத்திய வங்கி கடந்த 15 நாட்களில் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. ரிசர்வ் வங்கியும் இதை பின்பற்றும் என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ரெப்போ விகிதம் உயர்த்தப்படவில்லை. இதன்மூலமாக வர்த்தக முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும். வளர்ச்சியை ஒப்பிடுகையில் பெரும்பாலான மத்திய வங்கிகள் பணவீக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும், ரிசர்வ் வங்கி இரண்டுக்கும் இடையே நல்ல சமநிலையை உருவாக்கி வளர்ச்சிக்கு முதன்மை அளிக்கிறது. அதிகரித்து வரும் முதலீடு மேலும் உற்பத்தி மற்றும் வினியோகத்தை எளிதாக்க வழிவகுக்கும். அடுத்த 2 மாதங்களில் பணவீக்கம் குறையும். கடந்த ஆண்டு பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி 15 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இது உலகளாவிய வர்த்தகத்தின் பின்னணியில் பெரிய சாதனையாகும். ரெப்போ விகிதம் அதே நிலையில் தொடர்வது வர்த்தக வளர்ச்சிக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • 8ம் தேதி குறைதீர் முகாம் நடைபெறுகிறது
    • அந்தந்த வட்டங்களில் நடைபெறும் என்று கலெக்டர் கவிதா ராமு அறிவிப்பு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் கடைகள் தொடர்பான குறைதீர் கூட்டம் அந்தந்த வட்டங்களில் நடைபெற உள்ளது. வரும் சனிக்கிழமை(8ம்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடும்ப அட்டைகள், அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் தொடர்புடைய தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெறும். குடும்ப அட்டைகளில் பெயர்சேர்த்தல், பெயர்நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைபேசி எண் பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு முகாமில் கலந்து கொண்டு தீர்வு காணலாம். நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடர்பாடுகள், தனியார்சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர்பாதுகாப்பு சட்டம் 2019 ன் படி மேற்கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர்கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

    • சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெறுவதை முன்னிட்டு மாற்றம்
    • போலீஸ் சூப்பிரண்டு ஷியாமளா தேவி தகவல்

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷியாமளா தேவி வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பெரம்பலூர் மாவட்டத் தில் உள்ள சிறுவாச்சூர் கிரா–மத்தில் பிரசித்தி பெற்ற மதுர காளியம்மன் கோவில் குடமுழுக்கு 21 வருடங்களுக்கு பிறகு நாளை (5-ந்தேதி) மிகவும் விமரிசையாக நடைபெற உள்ளது. குடமுழுக்கு விழா வில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.எனவே மக்களின் பயன் பாட்டிற்காகவும், போக்குவரத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும், பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினரால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாளை காலை 4 மணி முதல் மதியம் 2 மணி வரை கனரக வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அன்றைய தினம் திருச்சியில் இருந்து சென்னை மற்றும் வட மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் திருச்சி–சென்னை நெடுஞ்சாலையில் உள்ள காரை பிரிவு ரோட்டில் இருந்து வலது புறமாக திரும்பி அரியலூர் சென்று அங்கிருந்து சென்னை செல்ல வேண்டும்.சென்னையில் இருந்து திருச்சி மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் பெரம் பலூர் 4 ரோட்டில் இருந்து இடது புறமாக திரும்பி அரியலூர் வழியாக திருச்சி செல்லுமாறும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட் டுள்ளது.சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் குடமுழுக்கு திருவிழாவிற்காக திருச்சி மற்றும் தென் மாவட்டங் களிலிருந்து வாகனங்களில் வருபவர்கள் தங்கள் வாகனங்களை சிறுவாச்சூர் கிராமத்திற்கு முன்பு உள்ள ஆல்மைட்டி மெட்ரிகுலேசன் பள்ளி அருகில் வாகனங்களை நிறுத்தவும்,துறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து வரும் வாகனங்கள் புதுவேலூர் சாலையிலுள்ள ரஞ்சனி காமராஜ் திருமண மண்டபம் அருகிலும், சென்னை மற்றும் வட மாவட்டங்களிலிருந்து வாகனங்களில் வருபவர்கள் ராம் இன் பெட்ரோல் பங்கிற்கு எதிர்புறம் தேசிய நெடுஞ்சாலையில் சென்டர்மீடியனில் வலது புறமாக திரும்பி வலது புறமுள்ள கிராமசாலையில் இருந்து விளாமுத்தூர் சாலை மற்றும் நொச்சியம் சாலை ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார் பாக ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

    • பள்ளப்பட்டி விவசாயிகள் இலவசமாக உழவர் சந்தையில் கடை அமைத்து கொள்ள அனுமதி
    • வியாபாரம் ெசய்ய வேளாண்துறையினர் அழைப்பு

    கரூர்,

    அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறி விவசாயம் செய்யும் விவசாயிகளின் நலனுக்காக பள்ளப்பட்டி உழவர் சந்தை செயல்பட்டு வருகின்றது. தற்போது புதுப்பித்தல் பணிகள் முடிந்து உழவர் சந்தை மீண்டும் சிறப்பாக செயல்பட தொடங்கியுள்ளது. விவசாயிகள் உழவர் சந்தையில் விற்பனை செய்து லாபம் பெற வேளான் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காய்கறி விளைவிக்கும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள், மதிப்பு கூட்டிய பொருட்கள், மற்றும் உற்பத்தி செய்யப்படும் பழமரக்கன்றுகள் ஆகியவற்றை உழவர் சந்தையில் வைத்து விற்பனை செய்திட ஏதுவாக இலவசமாக கடை தராசு, மின்சாரம், குடிநீர் மற்றும் இலவச கழிப்பிடம் ஆகிய வசதிகள் செய்து தரப்படுகிறது.

    இங்கு வரும் விவசாயி களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்யப்படுவ துடன் இடைத்தரகர்கள் இல்லாமலும் கமிஷன் இல் லாமலும் நல்ல விலைக்கு விற்று லாபம் பெறலாம். மேலும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் பெறலாம். துறையுடன் இணைந்து உரம், விதைகள் மருந்து மற்றும் மானிய திட்டங் களுக்கு உழவர் சந்தைக்கு வந்து விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு முன்னு ரிமை வழங்கப்படுகிறது.மேலும் பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் திட்டத்தின் கீழ் விவசா யிகளுக்கு உணவு சம்பந் தப்பட்ட தொழில் புரிவ தற்காக இயந்திரங்கள் வாங்குவதற்கு 35சதவீத மானியத்துடன் வங்கி மூலமாக கடன் ஏற்பாடு செய்து தரப்படுகிறது.வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆணைக்கிணங்க அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக ளில் காய்கறி பயிரிடும் விவசாயிகள் நல்ல விலை கிடைக்க பள்ளப்பட்டி உழவர் சந்தையில் வந்து விற்பனை செய்து லாபம் பெறலாம்.

    மேலும் உழவர் சந் தைக்கு வந்து விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு திட்டங்களில் முன்னு ரிமை வழங்கப்படும் என்றும் வேளாண் துறையினர் தெரிவித்தனர்.

    • ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
    • மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் அறிவிப்பு

    கரூர்,

    தொழில் பயிற்சி முடித்தவர்கள், இணையதள பதிவுகளை சரி செய்ய விண்ணப்பிக்கலாம் என, கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், 2014 முதல் 2021 வரை சேர்க்கை செய்யப்பட்டவர்கள், என்.சி.வி.டி., இணையதளத்தில் பதிவேற்றம் தகவல்களை சரி செய்து கொள்ளலாம். இதில், பயிற்சியாளர்களின் விபரங்களாகிய பயிற்சியாளரின் பெயர், தந்தையின் பெயர், தாயின் பெயர், புகைப்படம், பிறந்த தேதி ஆகியவற்றில் மாற்றம் இருப்பின் சரி செய்து கொள்ள விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது. அதை பின் பற்றி அந்தந்த தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்று அல்லது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • கல் மண் எடுப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில் பணிகள் பாதிக்கப்பட்டது
    • மத்திய அரசிடம் கோரி ரூ.14.99 கோடி பெற்று கொடுத்ததையும் நினைவுபடுத்துகிறேன்.

    நாகர்கோவில் :

    விஜய் வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் காரோடு முதல் கன்னியாகுமரி வரையிலான 4 வழிச்சாலை பணிகள் குமரி மாவட்டத்திலிருந்து கல் மண் எடுப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில் பணிகள் பாதிக்கப்பட்டது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் 2019 ஜூலை மாதம் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்தார். பின்னர் கொரோனா தாக்கத்தினால் இந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    நான் மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்று நாடாளு மன்ற உறுப்பினர் ஆன பின்னர் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை சந்தித்து பணி களை மீண்டும் தொடங்கவேண்டும் என கோரினேன். பணிகள் தொடங்காமல் இருந்த பட்சத்தில் மீண்டும் அமைச்சரை 2022-ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தொடர்பு கொண்டு பணிகளை தொடங்க கோரினேன்.

    2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த பணியை செய்து வந்த நிறுவனம் இந்த பணி ஒப்பந்தத்தை நிறைவேற்ற இயலாமல் விலகி விட்டது. இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது கேள்வி எழுப்பினேன். மேலும் கவன ஈர்ப்பு கோரிக்கை ஒன்றினையும் சமர்ப்பித்தேன். மாவட் டத்தில் மண் எடுப்பதற்கு அனுமதி கிடைக்காததால் பக்கத்து மாவட்டத்திலிருந்து மண் எடுப்பதற்கு மாநில அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் இந்த பணியை மீண்டும் தொடங்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது. அதை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து மண் எடுக்க கோரிக்கை வைத்தேன். தமிழக அரசு அதற்கான அனுமதி அளித்தது.

    இந்த பணியை மீண்டும் தொடங்க சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அதிக நிதி தேவை என நெடுஞ்சாலைத்துறை தெரிவித்ததை தொடர்ந்து மத்திய அரசிடம் இந்த பணியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து நிதியும் பெறப்பட்டது.

    கடந்த வருடம் நவம்பர் மாதம் நெடுஞ்சாலை துறை இயக்குனரை சந்தித்து சாலை பணிகளை விரைவில் தொடங்க வலியுறுத்தியதின் பெயரில் டிசம்பர் மாதம் இந்த பணிக்கான டெண்டர் விடப்பட்டது. டெண்டர் விடப்பட்ட பின்னரும் ஒப்பந்தம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதை கண்டு கடந்த மாதம் மீண்டும் அமைச்சரை சந்தித்து ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்ய கோரினேன். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி இதற்காக போராட்டம் நடத்தியது.

    தொடர் முயற்சிகளின் வெற்றியாக நேற்று குமரி மாவட்டம் வழியாக கடந்து செல்லும் 4 வழிச்சாலை பணிகளுக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு ஒப் பந்தக்காரருக்கு வழங்கப்பட் டது. இந்த பணிகள் விரைவில் தொடங்கும். மட்டுமல்லாமல் 4 வழிச் சாலை தாமதமாவதை கருத்தில் கொண்டு தற்பொ ழுது உபயோகத்தில் உள்ள நெடுஞ்சாலையை செப்பனிட்டு சீரமைக்க மத்திய அரசிடம் கோரி ரூ.14.99 கோடி பெற்று கொடுத்ததையும் இத்தருணத்தில் நினைவுபடுத்துகிறேன்.

    4 வழிச்சாலை பணிகளுக்காக நிலத்தை அளித்த நில உரிமையாளர்களுக்கு தகுந்த நிவாரணம் தராததை அறிந்து அதை பெற்று தரவும் உரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். பாரதிய ஜனதா கட்சியினர், மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும் கன்னியாகுமரி மக்களுக்கு உதவ முன்வரவில்லை. ஆனால் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில் அதற்கு உரிமை கொண்டாட ஓடி வருவது அரசியல் லாபத்துக்காக மட்டுமே.

    முன்னாள் மத்திய மந்திரி பாரதிய ஜனதா இங்கு வெற்றி பெற்றால் மட்டுமே இந்த சாலை பணிகள் இனிமேல் நடைபெறும் என்று சவால் விட்டதை மக்கள் மறந்திருக்க மாட்டார் கள். 4 வழிச்சாலை பணி கள் தொடங்கி அதை கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இன்னும் முயற்சிகள் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பல்நோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடம் காலி
    • நேரிலும், தபால் மூலமாகவும், இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

    அரியலூர்,

    அரியலூர் சகி}ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பல்நோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடத்துக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்தது:அரியலூர் மாவட்டத்தில் குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் உணவு ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க சமூக நலத்துறையின் கீழ் "சகி} ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்படுகின்றது. அதில் பணிபுரிய கீழ்கண்ட நிலைகளில் ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.பல்நோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடங்களுக்கு 8 வது தேர்ச்சி (அ) 10 வது தேர்ச்சி, தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்இதற்கு 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராகவும், சமையல் தெரிந்த பெண் பணியாளராக இருத்தல் வேண்டும். 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும். உள்ளுரை சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். உதவியாளர் பணிக்கு ரூ.6,400}யும், பாதுகாவலர் பணிக்கு ரூ.10,000}மும் தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும்.விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை அரியலூர் மாவட்ட இணையதளத்தில்  பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி:  ஒருங்கிணைந்த சேவை மையம், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், அரியலூர் சித்தா மருத்துவம் எதிரில், அரியலூர்} 621704 என்ற முகவரிக்கு 23.03.2024 அன்று மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

    • கோரிக்கையை பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • நல்ல அறிவிப்பு வரும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தை தனி தாலுக்காகவாக அறிவிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாகும்.

    கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் இது தொடர்பாக நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் கேள்வி எழுப்பிய போது, வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் இந்தக் கோரிக்கையை பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் இம்மாதம் 20-ம் தேதி 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது.

    இந்தக் கூட்டத் தொடரில் திருமருகல் தனி தாலுகா அறிவிப்பு செய்ய வேண்டுமென, நேற்று சென்னையில் வருவாய்த் துறை அமைச்சரை ஷா நவாஸ் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

    நல்ல அறிவிப்பு வரும் என்று அமைச்சரும் உறுதியளித்தார்.

    இதனால் திருமருகல் தனி தாலுகா அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நாகை தொகுதி மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

    • ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தர்மர் எம்.பி. பேட்டியளித்துள்ளார்.
    • இதுநாள் வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித நிவாரணத் தொகையும் வழங்கப்படவில்லை.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அ.தி.மு.க. எம்.பி. தர்மர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சியான மாவட்டம் என்றுதான் அழைப்பார்கள். அரசு அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றால் இந்த மாவட்டத்திற்கு தான் பணி மாறுதல் செய்வார்கள். ஆனால் அந்த நிலையை மாற்றி பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி இந்த மாவட்டத்தையும் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் வளர்ச்சி அடைய செய்தது அ.தி.மு.க. ஆட்சி தான்.

    வறண்ட மாவட்டம் என்ற நிலை மாறி, வளர்ச்சி அடைந்த மாவட்டம் என்ற நிலையை உருவாக்கியது அ.தி.மு.க. அரசுதான். ஆனால் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததாலும், கண்மாய்கள், குளங்களில் தண்ணீர் இல்லாததாலும் நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் நஷ்டத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகி விட்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகையாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுநாள் வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித நிவாரணத் தொகையும் வழங்கப்படவில்லை.

    தற்போது தமிழக அரசு மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை உள்பட டெல்டா மாவட்டங்களை மட்டும் வறட்சி மாவட்டமாக அறிவித்துள்ளது. இது ராமநாதபுரம் மாவட்டத்தையும், ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளையும் வஞ்சிக்கும் செயலாகும். இது கண்டனத்திற்குரியது.

    ஏற்கனவே பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி வங்கிகளிலும், வெளியில் வட்டிக்கும் பணம் வாங்கி அந்த கடன்களை எப்படி அடைப்பது? என்று விவசாயிகள் விழி பிதுங்கி இருக்கும் இந்த வேளையில் ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அரசு அறிவிக்காதது மாவட்ட மக்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும். ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக ஏன் அறிவிக்கவில்லை? என்ன காரணம்? என்பதை அரசு விளக்க வேண்டும்.

    இந்த மாவட்டத்தில் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஏன் வறட்சி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை? ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இதுகுறித்து தமிழக அரசுக்கும், விவசாய துறை செயலாளருக்கும், இ-மெயில் மூலம் அறிக்கை அனுப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காய்கறி, மளிகை கடைகள் நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் இருந்தன.
    • பேரூராட்சி மூலம் வாடகை செலுத்தக்கோரி தொடர்ந்து பல அறிவிப்புகள் அனுப்பப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்ப்ட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம், கடைகள் மற்றும் மீன் மற்றும் பல்பொருள் அங்காடியில் உள்ள காய்கறி, மளிகை கடைகளுக்கு நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் இருந்த குத்தகைதாரர்களுக்கு பேரூராட்சி மூலம் வாடகை செலுத்த கோரி தொடர்ந்து பல அறிவிப்புகள் அனுப்பப்பட்டது.

    ஆனால் இது நாள் வரை வாடகை செலுத்தாத 15 கடைகளை காவல் துறை, வருவாய் துறையின் முன்னிலையில் செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி ஊழியர்களால் கடைகளை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    ×