search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காண்டிராக்டர்"

    • பண்ணாரி சோதனை சாவடியில் நின்றிருந்த போலீசார் சிறுமியை அழைத்து விசாரித்த போது, சிறுமி நடந்தவற்றை கூறினார்.
    • போலீசார் அவரை தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பாசூரை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது50).

    இவர் ஈரோடு மாவட்டம் கொடிவேரியில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் காண்டிராக்டராக உள்ளார்.

    இவரது மனைவி சித்ரா (34). இவர்களுக்கு வேத விக்னேஷ்வரி(13) என்ற மகளும் மோகன்ராம், அகிலேஷ்வரன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    வேத விக்னேஷ்வரி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சுப்புராஜூக்கு தொழிலில் போதிய வருமானம் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் அவரது மில்லில் வேலை பார்ப்பவர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாமல் இருந்துள்ளார்.

    தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்புராஜ் ரூ.2 லட்சம் கடன் வாங்கி தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்தார்.

    ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி அடைக்க முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாகவே அவர் யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்தார். கடனை அடைக்க முடியாததை நினைத்து வருத்தப்பட்டும் வந்துள்ளார்.

    வேதவிக்னேஷ்வரியை, தினமும் சுப்புராஜ் தான் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு, மீண்டும் அழைத்து வருவது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று மகளை அழைப்பதற்காக பள்ளிக்கு சென்றார்.

    பின்னர் அங்கு மகளை அழைத்து கொண்டு கொல்லிமலைக்கு சென்றார். அங்குள்ள மலை உச்சிக்கு சென்ற அவர், திடீரென, அங்கிருந்து, மகளை தள்ளி விட முயற்சித்தார்.

    அப்போது சிறுமி தனது தந்தையிடம் பஸ்சுக்கு லேட் ஆகுது, எனக்கு பசிக்கிறது என கூறி தந்தையை அழைத்தார். இதையடுத்து, சுப்புராஜ் மகளுடன் ஈரோட்டுக்கு சென்றார்.

    பின்னர் பன்னாரி அம்மன் கோவில் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அவர் பூச்சி மருந்தை குடித்து விட்டு, அதனை மகளின் வாயில் ஊற்றி குடிக்க சொல்லியுள்ளார். ஆனால் சிறுமி குடிக்க மறுப்பு தெரிவித்து கதறி அழுதார்.

    குழந்தை அழுததை பார்த்ததும் பதறிபோன சுப்புராஜ், தனது மகளிடம் ரூ.70-யை கொடுத்து, நீ வீட்டுக்கு செல் நான் வந்து விடுகிறேன் என தெரிவித்து அனுப்பி வைத்தார்.

    சிறுமியும் அங்கிருந்து நேராக வீட்டிற்கு புறப்பட்டு வந்தார். வரும் வழியில் பண்ணாரி சோதனை சாவடியில் நின்றிருந்த போலீசார் சிறுமியை அழைத்து விசாரித்த போது, சிறுமி நடந்தவற்றை கூறினார்.

    இதையடுத்து போலீசார் சிறுமியை மீட்டு அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சிறுமியை மீட்டு அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.

    அன்னூர் போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பூச்சி மருந்துடன் காட்டுக்குள் சென்ற சுப்புராஜை வனத்துறையினரும், போலீசாரும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுவரை அவரை பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. அவரின் கதி என்ன என்பது தெரியவில்லை. போலீசார் அவரை தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • வலியால் அலறி துடித்த 4 பேரையும் அங்கு நின்றவர்கள் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
    • வீரகனூர் பகுதியில் பதட்டம் நீடிப்பதால் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீரகனூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கலியன். இவரது மகன் புகழேந்தி என்ற ரவிக்குமார் (37), எம்.பி.ஏ. பட்டதாரி.

    இவரும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரும் தூத்துக்குடியில் உள்ள ஒரு மாலில் பெயிண்ட் அடிக்கும் பணியை காண்டிராக்ட் எடுத்து செய்து வந்தனர். இவர்களுடன் ரவிக்குமாரின் அண்ணன் செல்வக்குமார் (44), இவர்களது சித்தப்பா மகன் யவுன் (27) ஆகியோரும் பெயிண்ட் அடித்து வந்தனர்.

    இந்நிலையில் சதீசுக்கு தெரியாமல் புதிதாக ஒரு மாலில் பெயிண்ட் அடிக்கும் காண்டிராக்டை ரவிக்குமார் எடுத்துள்ளார். இது சதீசுக்கு தெரிய வந்ததால் இது குறித்து பேசுவதற்காக பா.ஜனதா கட்சியின் தொழில் நுட்ப பிரிவு சேலம் மாவட்ட செயலாளர் சாமுவேல் (37) என்பவரை அழைத்தனர்.

    இதையடுத்து நேற்றிரவு 7 மணியளவில் வீரகனூர் அருகே பெரம்பலுர் தேசிய நெடுஞ்சாலையில் சதீஷ், ரவிக்குமார், சாமுவேல் ஆகியோர் கூடினர். அப்போது சதீசுக்கு தெரியாமல் ஏன் காண்டிராக்ட் எடுத்து செய்கிறாய் அவருடன் சேர்ந்து செய் என ரவிக்குமாரிடம், சாமுவேல் கூறினார். இதனை ரவிக்குமார் ஏற்காததால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    அப்போது ரவிக்குமார் அங்கிருந்த கல்லை எடுத்து சாமுவேலை தலையில் தாக்கினார். இதில் சாமுவேல் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து ரவிக்குமாரை கழுத்து, முகம், தலை உள்பட பல இடங்களில் சரமாரியாக குத்தினார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு செல்வகுமாரும், யுவனும் அங்கு வந்து தடுக்க முயன்றனர். அப்போது செல்வகுமாரையும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாமுவேல் கத்தியால் குத்தினார். யுவனுக்கும் நெற்றியில் வெட்டு விழுந்தது. இதையடுத்து வலியால் அலறி துடித்த 4 பேரையும் அங்கு நின்றவர்கள் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இந்த மோதலில் பலத்த காயம் அடைந்த ரவிக்குமார், செல்வக்குமார், யுவன் ஆகிய 3 பேரையும் மேல் சிசிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் சாமுவேல் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் டாக்டரிடம் கருத்து கேட்டு அவரை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து வீரகனூர் பகுதியில் பதட்டம் நீடிப்பதால் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • மனைவி விவாகரத்து பெற்றதால் விபரீத முடிவை எடுத்தார்.
    • ‘வங்கி பணத்தை எடுத்து இறுதிச் சடங்கு செய்ய வேண்டுேகாள் விடுத்தார்.

    கோவை

    கோவை தடாகம் அருகே உள்ள பன்னிமடை ஏ.என்.டி. நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 38). டிரான்ஸ்போர்ட் காண்டிராக்டர்.இவருக்கும் வனிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து வனிதா தனது கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். கடந்த 5 ஆண்டுகளாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.வனிதா விவாகரத்து கேட்டு தனது கணவர் வினோத்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பினார். அவரும் விவாகரத்து கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்தார். இந்த வழக்கு கோர்ட்டில் நடந்தது வந்தது. வழக்கின் தீர்ப்பு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்து நீதிபதி 2 பேருக்கும் விவாகரத்து வழங்கினார். இதனால் வினோத்குமார் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த வினோத்குமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்வதற்கு முன்பு வினோத்குமார் கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் எனக்கு இந்த உலகத்தில் வாழ பிடிக்க வில்லை. இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. அண்ணா, பாப்பாவை நன்றாக பார்த்துக்கொள். கடந்த 10 மாதங்களாக எனக்கு சாப்பாடு கொடுத்து பார்த்துக்கொண்ட பக்கத்து வீட்டுக் காரர்களுக்கு நன்றி. அண்ணா என்னுடைய எல்.ஐ.சி. பணத்தை எடுத்து வங்கியில் டெபாசிட் செய்து உள்ளேன். அந்த பணத்தை எடுத்து என் இறுதி சடங்கிற்கு செலவிடவும். இவ்வாறு அதில் எழுதி இருந்தார்.பின்னர் போலீசார் வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.28 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி நடந்து முடிந்தது.
    • பல்வேறு ஊர்களில் அடிகுழாயை மறைத்தும், மோட்டார் சைக்கிளுடன் சேர்த்தும் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

    பழனி:

    பழனி நகராட்சி 7-வது வார்டு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. பழைய தாராபுரம் சாலையில் இருந்து பெரியநாயகி அம்மன் கோவில் வரை கீழ வடம்போக்கி தெரு உள்ளது. இந்த பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அடிகுழாய் அமைக்கப்பட்டது. தற்போது வரை அந்த குழாயில் பொதுமக்கள் தண்ணீர் பிடித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.28 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி நடந்து முடிந்தது. அடி குழாயில் பாதி பகுதியை மூழ்கடித்து சாலை அமைக்கப்பட்டது. இதனால் தற்போது குடம் வைத்து இந்த குழாயில் தண்ணீர் பிடிக்க முடியவில்லை. டப்பாவை வைத்து பிடித்து குடத்தில் ஊற்றி பிறகு தண்ணீர் எடுத்து செல்லும் நிலை உள்ளது.

    சாலை மேல் சாலை அமைக்க கூடாது என்று அரசு உத்தரவு உள்ளது. இதனை காற்றில் பறக்க விட்டு இப்பகுதியில் சாலை அமைத்துள்ளதால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

    எனவே இந்த பணியை மேற்கொண்ட அரசு காண்டிராக்டர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஏற்கனவே பல்வேறு ஊர்களில் அடிகுழாயை மறைத்தும், மோட்டார் சைக்கிளுடன் சேர்த்தும் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அந்த காண்டிராக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுபோல இப்பகுதியிலும் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு முறையான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பிரேத பரிசோத னைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பு
    • ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    நெல்லை முன்னீர்பள்ளம் மேல கருங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 39), கட்டிட காண்ட்ராக்டர்.

    இவர் நேற்றிரவு மேலப் பாளையம் பகுதி யில் ரெயில்வே தண்டவாளம் அருகே இருந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் ரெயில்வே தண்டவாளத்தில் இருந்து ஆறுமுகம் சாப்பிட்டு உள்ளார்.

    அப்போது அந்த வழியாக வந்த ரெயில் ஆறுமுகத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் பலியானது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோசப், குமார்ராஜ் ஆகி யோர் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னார்கள். பின்னர் பிணத்தை கைப் பற்றி பிரேத பரிசோத னைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து நாகர் கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள். பலியான ஆறுமுகத்திற்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். காண்ட்ராக்டர் ரெயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

    • மதுரையில் சமையல் காண்டிராக்டர் வீட்டில் நகை திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் தான் சமையல் காண்டிராக்டர் வீட்டிலும் ைகவரிசை காட்டியது தெரியவந்தது.

    மதுரை

    மதுரை வசந்தநகர் 1-வது தெருவை சேர்ந்தவர் சீனிவாச சங்கர நாராயணன். சமையல் காண்டிராக்டராகன இவர் கடந்த 29-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்சியில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து 40 பவுன் நகை, ரூ. 20 லட்சம் ரொக்கம் திருடிவிட்டு தப்பினர்.

    இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். திருட்டு நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்ேபாது 2 பேர் நள்ளிரவில் சீனிவாச சங்கர நாராயணன் வீட்டுக்கு செல்வது தெரியவந்தது.

    இதை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் கடந்த 26-ந் தேதி ஆண்டாள்புரம் பகுதியில் நரேந்திரன் என்பவரது வீட்டில் கேமரா செல்போன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அதே நபர்கள் சமையல் காண்டிராக்டர் வீட்டிலும் ைகவரிசை காட்டியது தெரியவந்தது.

    போலீசார் கேமிராவில் பதிவான 2 பேரின் உருவங்களை வைத்து விசாரணை நடத்தியதில் அதில் ஒருவர் மதுரை வைத்தியநாதபுரத்தை சேர்ந்த அந்தோணி கணபதி மகன் பாண்டியராஜன் (வயது 22) ஆவார். இவர் மீது அடிதடி, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் மதுரை நகர் போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளன.

    இதனை தொடர்ந்து போலீசார் பாண்டியராஜன் வீட்டில் சென்று அவரை கைது செய்தனர். போலீஸ் நிலையத்தில் அழைத்து விசாரணை நடத்தியதில் தனது கூட்டாளி கணேசன் என்பவருடன் சேர்ந்து அவர் சமையல் காண்டிராக்டர் வீட்டில் நகை, பணம் திருடியுள்ளார்.

    அவரிடம் இருந்து 30 பவுன் நகை, ரூ. 8 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மீதம் 10 பவுன் நகை, ரூ.12 லட்சம் ரொக்கம் கணேசன் எடுத்து சென்றுள்ளார். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    சமையல் காண்டிராக்டர் வீட்டில் கொள்ளை நடந்த 13 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • காண்ட்ராக்டர் மீது சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • வடசேரி போலீசார் காண்ட்ராக்டர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரம் அப்துல்கலாம் காலணி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 44) காண்ட்ராக்டர்.இவர் மீது சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் இவர் மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பார்வதிபுரம் அப்துல் கலாம் காலனி பகுதியை சேர்ந்தவர் மெர்சி சுரேஷ் (வயது 64) ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் வடசேரி போலீசில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனது மகளுக்கு அண்ணா பல்கலை கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஜெயக்குமார் கூறினார்.இதை நம்பி அவரிடம் ரூ.21 லட்சம் பணம் கொடுத்தேன். மேலும் 63 பவுன் நகையையும் வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தராமல் இழுத்தடிப்பு செய்து வந்தார்.

    இதனால் நான் கொடுத்த பணத்தையும் நகையையும் திருப்பி கேட்டேன். இதுவரையில் ரூ.16 லட்சம் பணத்தை கொடுத்தார். மீதமுள்ள ரூ.5 லட்சம் பணம், மற்றும் 63 பவுன் நகையை பலமுறை கேட்டும் தரவில்லை.

    இந்த நிலையில் என் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து எங்களது சி.சி.டி.வி. கேமராவை சேதப்படுத்தியதுடன் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டி சென்று உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.

    இதுதொடர்பாக வடசேரி போலீசார் ஜெயக்குமார் மீது மோசடி வழக்கு உள்பட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ெஜயக்குமார் மீது ஏற்கனவே ஏராளமான வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×