search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 232160"

    • சோலார் மட்டம் பகுதியில் ஒரு சிறுத்தை இரைதேடி தேயிலை தோட்டத்துக்குள் சுற்றி திரிந்தது.
    • ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பெரும்பாலான பகுதிகள், காட்டுப்பகுதியில் அமைந்து உள்ளது. இது ஈரோடு மாவட்டம் வரை பரந்து விரிந்து உள்ளது.

    இங்கு சிறுத்தை, புலி, கரடி, காட்ெடருமை, மான் போன்ற வன விலங்குகள் அதிகம் உள்ளன. இதில் காட்டெருமை, கரடி ஆகியவை உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வாடிக்கையான ஒன்றாக மாறி விட்டது.

    இந்த நிலையில் கோத்தகிரி அருகில் உள்ள சோலார் மட்டம் பகுதியில் ஒரு சிறுத்தை இரைதேடி தேயிலை தோட்டத்துக்குள் சுற்றி திரிந்து உள்ளது. இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலை தளத்தில் பதிவு செய்து உள்ளார்.

    கோத்தகிரியில் உள்ள தேயிலை தோட்டத்தில் ஒரு சிறுத்தை இரைதேடி முகாமிட்டு உள்ள சம்பவம், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே வனத்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுபோன்று வன விலங்குகளும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது குடியிருப்பு வாசிகளை கலக்கமடைய செய்துள்ளது. இதில் நேற்று இரவு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று அங்கிருந்த தேயிலை தோட்டத்திற்குள்ளே உணவு தேடி சுற்றிவந்துள்ளது.

    இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

    • ஏர்வாடியில் யாத்ரீகர்கள் போர்வையில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
    • கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் புகழ் பெற்ற பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அனைத்து சமூக மக்களும் வேண்டுதலுக்காக தர்காவிற்கு குடும்பத்துடன் வந்து தங்கி செல்கின்றனர்.

    இதை சாதகமாக்கும் வெளிமாநில சமூக விரோதிகளும் பக்தர்கள், மன நோயாளிகள் போர்வையில் தங்கி உள்ளனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் தர்கா வளாகத்தில் தனி நபர்களாக ஏராளமான ஆண்கள் வலம் வருகின்ற னர். இவர்களை தர்கா நிர்வாகத்தினர் அடையா ளம் கண்டு விசாரித்து வெளி யேற்றினாலும் பக்தர்கள் போர்வையில் மீண்டும் தர்கா வளாகத்தில் புகுந்து தங்கி வருகின்றனர். பல்வேறு அசம்பாவித சம்பவங்கள், திருட்டுக்கள் நடந்தும் வழக்கு விசார ணைக்கு பயந்து போலீசா ரிடம் பக்தர்கள் புகார் தெரிவிப்பது கிடையாது.

    பிற மாநில போலீசாருக்கு 'டிமிக்கி' கொடுத்து ஏர்வாடி யில் தங்கி வந்த பல சமூக விரோதிகளை வெளிமாநில போலீசார் தர்கா வளா கத்தில் ஏற்கனவே பிடித்து சென்றனர். தர்கா நிர்வாகத்தினரின் தீவிர கண்காணிப்பு காரண மாக தற்போது காட்டு பள்ளிவாசல் பகுதிக்கு சென்று விடுகின்றனர். ஏர்வாடியில் கூடுதல் போலீ சார் நியமித்து சந்தேகத்திற் குரிய விடுதிகளில் ஆய்வு மேற்கொள்வ துடன், கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 10 நாட்களாக சிறுத்தை புலி எந்த கால்நடையையும் வேட்டையாடவில்லை. மேலும் இப்பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறியும் தெரியவில்லை.
    • கரூர் மாவட்டத்தில் முகாமிட்டு சிறுத்தை புலி பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். தற்போது அந்த பகுதியிலும் கடந்த ஒரு வாரமாக சிறுத்தை புலி நடமாட்டம் தென்படவில்லை. இதனால் பரமத்திவேலூர், கரூர் பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே இருக்கூர் ஊராட்சி செஞ்சுடையாம்பாளையம், வெள்ளாளபாளையம், புளியம்பட்டி மற்றும் சுண்டப்பனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆடு, கன்று குட்டி, கோழிகள், மயில்கள், நாய் உள்ளிட்டவைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை புலி பொதுமக்க ளுக்கு அச்சுறுத்தலாக இருந்தது.

    இந்த சிறுத்தை புலியை பிடிக்க வனச்சரக அலுவலர் பெருமாள் தலைமையில் வனத்துறை யினர் ட்ரோன், கண்காணிப்பு காமிரா மற்றும் கூண்டு அமைத்து அதன் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக சிறுத்தை புலி எந்த கால்நடையையும் வேட்டையாடவில்லை. மேலும் இப்பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறியும் தெரியவில்லை.

    அதை உறுதி செய்யும் வகையில், கரூர் மாவட்டம் நொய்யல் அருகே அத்திப்பாளையம்புதூரில் கடந்த 16-ந் தேதி சிறுத்தை புலி 5 ஆடுகளை கடித்து கொன்றது. தகவல் அறிந்த இருக்கூர் சமுதாய கூடத்தில் முகாமில் இருந்த சேலம், நாமக்கல், ஈரோடு, சத்தியமங்கலம், முதுமலை பகுதிகளை சேர்ந்த வனத்துறையினர், கரூர் மாவட்டத்தில் முகாமிட்டு சிறுத்தை புலி பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். தற்போது அந்த பகுதியிலும் கடந்த ஒரு வாரமாக சிறுத்தை புலி நடமாட்டம் தென்படவில்லை. இதனால் பரமத்திவேலூர், கரூர் பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

    மேலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 40க்கும் மேற்பட்ட வனத்துறையினர், தங்களது கூடாரங்களை காலி செய்து வருகின்றனர். தற்போது 4 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    பரமத்திவேலூர், கரூர் பகுதிகளில் சிறுத்தை புலியின் நடமாட்டம் தென்படவில்லை. சிறுத்தை புலி ஒரே இரவில் 50 கிலோமீட்டர் வரை கடந்து செல்லும் திறன் உடையது. மேலும் கரூர் மாவட்ட எல்லைப் பகுதியில் இருந்து கொடைக்கானல் மலை, 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் சிறுத்தை புலி கொடைக்கானல் பகுதிக்கு சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.

    • 8 அடிக்கு 1 அடி இடைவெளி விட்டு பாத்தி நடவு செய்ய வேண்டும்.
    • விளக்கு பொறி அமைத்து தாய்ப்பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து அழிக்கலாம்.

    சீர்காழி:

    சீர்காழி வட்டாரம் அகணி கிராமத்தில் புகையன் தாக்கிய வயலை பார்வையிட்டு சீர்காழி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜராஜன் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் புகையான் தாக்குதலில் இருந்து நெற்பயிரை காப்பாற்றும் வழிமுறை குறித்து விளக்கமளித்துள்ளார்.

    தற்பொழுது சீர்காழி வட்டாரத்தில் இரவில் வெப்ப நிலை குறைவாகவும், பகலில் மந்தமான சூரிய வெளிச்சம் இருப்பதினாலும் சம்பா, தாளடி நெற்பயிரில் பரவலாக புகையான் பூச்சி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

    பூச்சிகள் வேர்களின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் பயிர் மஞ்சள் நிறமாக மாறும் பின்னர் பழுப்பு நிறமாக மாறும்.

    பாதிக்கப்பட்ட வயல் ஆங்காங்கே வட்ட வட்டமாக புகைந்தது போல காணப்படுவது தாக்குதலின் அறிகுறியாகும். இதனை கட்டுப்படுத்த நடவு வயலில் 8 அடிக்கு 1 அடி இடைவெளி விட்டு பாத்தி நடவு செய்ய வேண்டும்.

    மண் பரிசோதனை பரிந்துரைப்படி தழைச்சத்து இடும்பொழுது 3 – 4 முறையாக பிரித்து இடவேண்டும்.

    களை செடிகளை அகற்றி விடவேண்டும்.புகையான் பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன், தாங்கும் திறன் கொண்ட ரகங்களை பயிரிடலாம்.

    விளக்குப் பொறி அமைத்து தாய்ப்பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்கா ணித்து அழிக்கலாம்.

    மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை ஹெக்டேருக்கு 12 என்ற அளவில் அமைக்கலாம். வயலில் புகையானின் இயற்கை விரோதிகளான சிலந்தி, பச்சை மிரிட் நாவாய்ப் பூச்சி, புள்ளி வண்டு, தட்டான், ஊசித் தட்டான் போன்ற இரை விழுங்கிகளும், அனேக்ரஸ், ஒலிகோசிட்டா போன்ற முட்டை ஒட்டுண்ணிகளும் இப்பூச்சியைப் பெரும் அளவில் கட்டுப்படு த்துகின்றன. பொருளாதார சேத நிலையை எட்டியவுடன் கீழ்க்கண்ட பூச்சிக் கொல்லிகளுள் ஏதேனும் ஒன்றை ஒரு ஹெக்டேருக்கு தெளிக்க வேண்டும்.

    குளோரன்டிரினிலிப்ரோல் 18.5 எஸ்சி – 150 மி.லி. அல்லது இமிடாகுளோபிரிட் 17.8 எஸ் எல் – 100 மி.லி. அல்லது ப்யூப்ரோபெசின் 25 எஸ்சி 652 மி.லி. புகையானின் மறு உற்பத்தியை பெருக்கும் மீதைல்பாரத்தியான் மற்றும் செயற்கை பைரித்ராய்டு மருந்துகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

    • சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று பண்ணாரியம்மன் கோவில் வளாக பகுதியில் உள்ள சுற்று சுவரில் ஏறி அங்குமிங்கும் உலாவி கொண்டிருந்தது.
    • இதனால் கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அடர்ந்த வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இங்கு உலகப்பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி வனப்பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலய பகுதியில் இரவு நேரங்களில் காட்டு பன்றிகள், யானைகள் உலாவுவது வழக்கமாக உள்ளது.

    இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று பண்ணாரியம்மன் கோவில் வளாக பகுதியில் உள்ள சுற்று சுவரில் ஏறி அங்குமிங்கும் உலாவி கொண்டிருந்தது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்தார்.

    இதனையடுத்து வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கும், பக்தர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    ×