என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாய்க்கால்"
- சாலை வசதி இல்லாததால் புதர் மண்டிய மண் சாலை வழியாக மூதாட்டியின் உடல் எடுத்து செல்லப்பட்டது.
- இறந்தவரின் உடலை கழுத்தளவு நீரில் எடுத்து சென்று மூதாட்டியின் உடலுக்கு தீ மூட்டினர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அசேஷம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சாந்தாமாணிக்கம் கிராமத்தில் 150 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.
இந்த கிராமத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவரின் மனைவி சீதாலட்சுமி என்ற 80 வயது மூதாட்டி உடல்நல குறைவால் உயிரிழந்தார்.
சீதாலட்சுமியின் உடல் இறுதி சடங்கிற்கு பின்னர் சாந்தாமாணிக்கம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது.
உரிய சாலை வசதி இல்லாததால் புதர் மண்டிய மண் சாலை வழியாக மூதாட்டியின் உடல் எடுத்து செல்லப்பட்டது.
இந்த மண் சாலையின் நடுவே திருமக்கோட்டை வாய்க்கால் செல்கிறது.
இந்த வாய்க்காலின் நடுவே பாலம் இல்லாததால் உயிரிழந்த மூதாட்டியின் உடலை தண்ணிரில் இறங்கி தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இறந்தவரின் உடலை கழுத்தளவு நீரில் எடுத்து சென்று மூதாட்டியின் உடலுக்கு தீ மூட்டினர்.
நம்நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளை கடந்த நிலையில் தற்போதும் முறையான சாலை வசதியோ பாலமோ இல்லாமல் கிராம மக்கள் அவதியுறுகின்றனர் என்பதற்கு இந்த நிகழ்வே உதாரணமாக அமைந்துள்ளது.
எனவே அரசு அதிகாரிகள், மாவட்ட நிறுவாகம் சாந்தாமானிக்கம் சுடுகாட்டிற்கு உடனடியாக சாலை மற்றும் பாலம் அமைக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கருப்பன்குளம் வாய்க்காலில் கடந்த 10-ம் தேதி நூறு நாள் வேலை திட்டத்தில் பணிகள் நடைபெற்றது.
- பாம்பு கடித்து மயக்கமடைந்த ஜெயக்கொடியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோணுலாம்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் அருகே கோவில் ராமாபுரம் செறுகடம்பூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் தொழிலாளி. இவரது மனைவி ஜெயக்கொடி.
(வயது 62) இவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள் உள்ளனர், மகன் ஆனந்தன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
அதே பகுதியில் உள்ள கருப்பன் குளம் வாய்க்காலில் இந்த நிலையில் கடந்த பத்தாம் தேதி நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிகள் நடைபெற்றது.
அப்போது ஜெயக்கொடி காலில் பாம்பு கடித்து ரத்தம் கொட்டியது இதில் மயக்கம் அடைந்த ஜெயக்கொடியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோணுலாம்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் மேல் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .
சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார் இது குறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாய்க்காலில் தவறி விழுந்து தண்ணீரில் மல்லிகா அடித்து செல்லப்பட்டார்.
- கல்லுக்குட்டை மேடு என்ற இடத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.
வெள்ளகோவில் :
காங்கேயம், திருப்பூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா (வயது 59). இவர் நேற்று அப்பகுதியில் செல்லும் பிஏபி. கிளை வாய்க்காலில் துணி துவைக்க சென்றுள்ளார், அப்போது வாய்க்காலில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
இந்தநிலையில் மல்லிகா வெள்ளகோவில் அருகே உள்ள கல்லுக்குட்டை மேடு என்ற இடத்தில் பிணமாக மீட்கப்பட்டார். வெள்ளகோவில் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பாசனத்திற்கு தண்ணீர் செல்ல பெருந்தடையாக இருந்து வருகிறது.
- ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, சாலியமங்களம் பகுதியில் உள்ள புத்தூர் வாய்க்காலில் ஏராளமாய் வெங்காய தாமரை செடிகள் மண்டியுள்ளது. அதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல பெருந்தடையாக இருந்து வருகிறது.
அதனால் புத்தூர் வாய்க்கால் மூலம் பாசன வசதிபெறக்கூடிய கொ க்கேரி, உடையார்கோயில், புத்தூர் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள ஆயிரகணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது விவசாய நிலங்களை பாதுகாக்க உடனடியாக சாலியமங்களம் பகுதியில் புத்தூர் வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல தடையாக உள்ள வெங்காயதாமரை செடிகளை உடனடியாக அகற்ற வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- திருப்பூர் மாவட்டம், காங்கயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுமார் 48 ஆயிரத்து 384 ஏக்கர் பாசன பரப்பை கொண்டது.
- ரூ.1 கோடி மதிப்பில் 6 இடங்களில் குழாய்களை அகற்றி சிறு பாலங்கள் அமைக்கும் பணியை செய்தித்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில், முத்து ரோடு, எம்ஜிஆர் நகர் அருகே ஒரு கோடி மதிப்பில் பிஏபி கிளை வாய்க்கால் புனரமைக்கும் பணியை செய்திதுறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் வெள்ளகோவில் கிளை வாய்க்காலானது பரம்பிக்குளம் பிரதான கால்வாய் சரகம் 126.100 கிலோமீட்டரிலிருந்து பிரிகிறது, கடந்த 1981 ம் ஆண்டு முதல் 1986 ம் ஆண்டு வரை பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட ஆயக்கட்டு பகுதிகளை விரிவாக்கம் செய்யும் நோக்கத்தின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது/
இந்த வாய்க்காலின் மொத்த நீளம் 270.650கிலோமீட்டர் ஆகும். இந்த வாய்க்காலானது திருப்பூர் மாவட்டம், காங்கயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுமார் 48 ஆயிரத்து 384 ஏக்கர் பாசன பரப்பை கொண்டதாகும்.தன் மொத்த ஆயக்கட்டு பரப்பு நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு முதலாம் மண்டலத்தில் 12.108 ஏக்கர், இரண்டாம் மண்டலத்தில் 12 ஆயிரத்து176 ஏக்கர், மூன்றாம் மண்டலத்தில் 12 ஆயிரத்து 91 ஏக்கர், நான்காம் மண்டலத்தில் 12 ஆயிரத்து 7 ஏக்கர் பாசனம் பெறப்பட்டு வருகிறது.
திட்ட காலத்தில் அமைக்கப்பட்ட குறுக்கு கட்டுமானங்களான மதகுகள் மிகவும் சிதலமடைந்து இருப்பதால் அவற்றை சீரமைக்க வேண்டி இருப்பதாலும் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாசன காலங்களில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால் பாசன நீர் வழங்க இடையூர் ஏற்படுவதால் ரூ.1 கோடி மதிப்பில் 6 இடங்களில் குழாய்களை அகற்றி சிறு பாலங்கள் அமைக்கும் பணியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட திட்ட அலுவலர் லட்சுமணன்.தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை உடுமலைப்பேட்டை செயற்பொறியாளர் கோபி, உதவி செயற்பொறியாளர் வடிவேல், உதவிபொறியாளர் கோகுல சந்தானகிருஷ்ணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.மோகன செல்வம்,தி.மு.க.நகர செயலாளர் கே.ஆர். முத்து குமார்,நகர துணை செயலாளர் சபரி.எஸ்.முருகானந்தன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள், பாசன சபை நிர்வாகிகள்,காங்கேயம் தாசில்தார் புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஆவணம் சாலையில் சிறுபாலம் அமைக்கும் பணி கடந்த மூன்று மாத காலமாக நடைபெற்று வருகிறது.
- எச்சரிக்கை பலகை வைக்கப்படாததால் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அருகில் வந்து நிலை தடுமாறி விபத்துக்கு ஆளாகின்றனர்.
பேராவூரணி:
பேராவூரணி பேரூராட்சி யில் பட்டுக்கோட்டைசாலை, அறந்தாங்முதன்மைச் சாலை, சேதுபாவாசத்திரம் சாலை, ஆவணம் சாலை ஆகிய இடங்களில்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்ற ப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றது. பட்டுக்கோ ட்டை சாலை, முதன்மைச் சாலை, அறந்தாங்கி சாலை யில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.ஆவணம் சாலையில் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
ஆவணம் சாலையில் ஒரு பக்கத்தில் மழை நீர் வடிகால் முடிக்கப்பட்டு, அங்கிருந்து சாலையின் மற்றொரு பக்கம் உள்ள மழை நீர் வடிகால் வாய்க்காலுடன் இணைப்பதற்காக குறுக்கே சிறுபாலம் அமைக்கும் பணி கடந்த மூன்று மாத காலமாக நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதி பணி முடிக்கப்படாமல் உள்ளது.
இதனால் இந்த வழியாக வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்பட்டு போக்குவரத்து நெருக்கடிக்கு ஆளாகிறது. எச்சரிக்கை பலகை வைக்கப்படாததால் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அருகில் வந்து நிலை தடுமாறி விபத்துக்கு ஆளாகின்றனர்.
எனவே எச்சரிக்கை பலகை வைக்கவும், சாலை பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலை த்துறையினரை கேட்டுக் கொண்டுள்ளனர்.
- வரும் ஆண்டில் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணி விஸ்தரிக்கப்படும் என்றார்.
- வாய்க்கால்கள் வேளாண் பொறியியல் துறை மூலம் தூர்வாரப்படுவது இதுவே முதன்முறை.
சீர்காழி:
கொள்ளிடம் அருகே உள்ள மாதானம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி குடோனில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உர மூட்டைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டு அறிந்தார்.
அதன் பின்னர் அண்ணாதுரை கூறுகையில், தற்போது450 சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு உள்ளன. வாய்க்கால்கள் வேளாண் பொறியியல் துறை மூலம் தூர்வாரப்படுவது இதுவே முதன்முறை.இதன் மூலம் முன்பை விட வாய்க்கால்கள் தூர்வாரும் பணி சிறப்பாக நடைபெற்றுள்ளது.
வரும் ஆண்டில் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணி விஸ்தரிக்கப்படும் என்றார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர், துணை இயக்குனர் மதியரசன், கொள்ளிடம் வேளாண்மை உதவி இயக்குனர் எழில்ராஜா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் அரவிந்த், உர கட்டுப்பாட்டு அலுவலர் வருகுனபாண்டியன், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் ராமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் காந்திமதிசிவராமன் மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள், ஊழியர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வேளாண் இயக்குனர் அண்ணாதுரை கொள்ளிடம் அருகே உள்ள உமையாள்பதி கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள பருத்திப்பயிர், நெற்பயிற் உள்ளிட்ட பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- வாய்க்காலில் வரக்கூடிய தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக மூழால்வாஞ்சேரி, கோட்டச்சேரி, சாலபோகம், வெங்காய களஞ்சேரி ஆகிய கிராமங்கள் காத்து க்கொண்டிருக்கிறது.
- பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்து தண்ணீரை தடை செய்யும் விதமாகவும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா உத்தமதானபுரம் கிராமத்தில் பாசனம் செய்யும் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் முழுவதுமாக நிரம்பி உள்ளன.
இந்த வாய்க்காலில் வரக்கூடிய தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்காக மூழால்வாஞ்சேரி, கோட்டச்சேரி, சாலபோகம், வெங்காய களஞ்சேரி ஆகிய கிராமங்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், இப்படி பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்து தண்ணீரை தடை செய்யும் விதமாகவும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.
இதை உடனடியாக பாசனத்திற்கு ஏற்ற வகையில் அகற்றி தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரெட்டவயல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 27 விவசாயிகளுக்கு தள்ளுபடியான கடன் தொகை கிடைக்காமல் மோசடி செய்யப்பட்டுள்ளது.
- கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 1 மாதம் கடந்தும் இதுவரை உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் தண்ணீர் திறப்பதற்கான எந்த ஆயத்த பணியும் நடைபெறவில்லை.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் தலை மையில் விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-
பேராவூணி வட்டம், ரெட்டவயல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 27 விவசாயிகளுக்கு தள்ளுபடியான கடன் தொகை கிடைக்காமல் மோசடி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விவசாயிகள் புகார் செய்ததையடுத்து நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டது. எனவே மீண்டும் கைப்பற்றப்பட்ட தொகையை சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு கிடை த்திட நடவடிக்கைஎடுக்க வேண்டும்.கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்ப ட்டு 1 மாதம் கடந்தும் இதுவரை உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலிலும், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலிலும்தண்ணீர் திறப்பதற்கான எந்த ஆயத்த பணியும் இதுவரை நடைபெறவில்லை.இது விவசாயிகளை கவலை யடையச் செய்துள்ளது. எனவே உடன் தூர்வாரி
பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.
- தூர்வாரப்படாத வாய்க்காலை சீரமைத்து பாசன வசதி தரக்கோரி மனு அளிக்கப்பட்டது.
- போதிய நீர்பாசன வசதி ஏற்படுத்தித்தர நீதிபதி உத்தரவிட்டார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா பெரியாறு வைகை வடி நில கோட்டத்திற்குட்பட்ட ஆண்டிபட்டி பிரிவு–-1ன்கீழ் உள்ள ஆண்டிபட்டி மடைகள் மூலம் கட்டக்குளம் பிரிவின்கீழ் சுமார் 150 ஏக்கர்பயன் பெற்றுவந்தது.
இந்த நிலையில் 4 வழிச்சாலை அமைத்த போது அந்த வாய்க்கால் சேதம் அடைந்தது. இதனால் கடந்த 20 வருடங்களாக விவசாய நிலங்களுக்கு தேவையான பெரியார் பாசன பங்கீட்டு நீர் பாசன வசதி இல்லாமல் தடைபட்டிருந்தது.
இதுகுறித்து அந்தப்பகுதியை சேர்ந்த விவசாயி தங்கராஜ் விவசாயிகள் சார்பில் பலமுறை பொதுப்பணித்துறை, வருவாய் துறை என பல்வேறு அரசுத்துறை னரிடம் முறையீடு செய்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மதுரை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ரஜினியிடம் மனு கொடுத்தார்.
இந்த மனு தொடர்பான விசாரணையில் மதுரை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் பெரியார் வைகை வடி நில பிரிவு -1 அதிகாரிகளுக்கு 400 மீட்டர் நீளமுள்ள நீர்பாசன கால்வாயை தூர்வாரி சுமார் 150 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய போதிய நீர்பாசன வசதி ஏற்படுத்தி தர உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின்படி 400 மீட்டர் நீளமுள்ள நீர் பாசன கால்வாய் தூர்வாரப்பட்டு விவசாய நிலங்களுக்கு தேவையான நீர் செல்ல வழிவகை ஏற்படுத்தபட்டுள்ளது.
இதன் மூலம் அந்த பகுதியை சேர்ந்த 150 ஏக்கர் விவசாய நிலத்திற்கு தேவையான நீர்பாசன வசதி பெற்று பயனடைந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இது போன்ற பொது சேவை பயன்பாட்டில் குறைபாடுகள் தொடர்பான மனுக்களை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் எந்தவித கட்டணமின்றி விசாரித்து விரைவில் நிவாரணங்களை சட்டப்படி பெற்றுகொள்வதற்கான வழிவகைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என நிரந்த மக்கள் நீதிமன்ற தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ரஜினி தெரிவித்தார்.
நிரந்தர மக்கள் நீதிமன்றமானது மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாற்று சமரச தீர்வு மைய கட்டடிடத்தில் அனைத்து நீதிமன்ற வேலைநாட்களிலும் செயல்பட்டு வருகிறது.
- வடிகால் வாய்க்காலில் தண்ணீர் போக முடியாமல் தேங்கி கிராமத்திற்கும் நஞ்சை வயல்களுக்கும் பெருத்த சேதத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.
- சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் குழிமாத்தூர் கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவையாறு:
திருவையாறு அருகே குழிமாத்தூர் கிராமத்தின் மத்தியில் பஞ்சாயத்துக்கு சொந்தமான குளம் உள்ளது. மழைக்காலங்களில் கிராமத்தில் பெய்யும் மழைநீர் முழுவதும் இக்குளத்தில் வடிந்து நிரம்பும். மேலும் கருப்பூர் மெயின்ரோட்டில் குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரியும் அந்தளி பாசன வாய்க்காலிலிருந்து வரும் நீரும் இக்குளத்தில் வடிந்து நிரம்பி குளத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள பாசன வாய்க்காலில் வடிந்து கிராமத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள சுமார் 80 ஏக்கர் பரப்பளவுள்ள நஞ்சை நிலங்களுக்கு பாசன நீர் கிடைக்கச் செய்கிறது.
2 மீட்டருக்கு மேல் அகலமான இந்த குளத்து நீர் வடிகால் வாய்க்கால் சுமார் 1 மீட்டருக்கு மேல் வாய்க்காலின் இருபுறமும் உள்ள வயல்களோடு சேர்த்து வரப்புகள் அமைக்ப்பட்டுள்ளதால் வாய்க்கால் 2 அடி அகலமுடையதாக குறுகிவி ட்டது. இதனால் அந்தளி வாய்க்காலிருந்து வரும் தண்ணீரும் மழைக்காலத்தில் கிராமத்தில் பெய்யும் மழை நீரும் ஒரே நேரத்தில் வடியும் போது வடிகால் வாய்க்காலில் தண்ணீர் போக முடியாமல் தேங்கி கிராமத்திற்கும் நஞ்சை வயல்களுக்கும் பெருத்த சேதத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.
எனவே, குழிமாத்தூர் கிராம பஞ்சாயத்துக் குளத்திலிருந்து செல்லும் வடிகால் மற்றும் பாசன வாய்க்காலை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து, அகலப்படுத்தி, மழைக்காலங்களில் குளத்திலிருந்து வடியும் நீர் முழுமையாக வடிந்து செல்லுமாறு தூர்வாரியும் புதுப்பித்துத் தருமாறு சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் குழிமாத்தூர் கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கீழ்பவானி அணை நீர்ப்பாசன சபையின் கூட்டம் ரங்கம்பாளைத்தில் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.
ஈரோடு:
கீழ்பவானி அணை நீர்ப்பாசன சபையின் கூட்டம் ரங்கம்பாளைத்தில் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சபையின் 2021 -2022-ம் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவுகள் நிதிஅறிக்கை ஏற்றுக்கொள்ள பட்டுள்ளது.
கீழ்பவானி சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது ஆனால் தொடர்ந்து நடைபெற வில்லை. இதனால் கீழ்பவானி ஊஞ்சலூர் பகிர்மான கால்வாயில் பாசனம் பெறும் எம் 8 ஏ பாசன சபையிலுள்ள ஆயக்கட்டு நிலங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை.
எனவே சீரமைப்பு வேலைகளை தொடர்ந்து செய்ய வேண்டும். கீழ்பவானி ஆயக்கட்டு விவசாயிகளின் பாசன உரிமையையே பாதுகாக்கும் வகையில் வருகிற ஜூலை மாதம் 10-ந் தேதி சிவகிரியில் கீழ்பவானி ஆயக்கட்டு உரிமை பாதுகாப்பு நடைபெறும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்