search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 233271"

    • 1 கோடி மரங்கள் நடும் திட்டத்தில் முதற்கட்ட பணிகள் 29 கிராம ஊராட்சி பகுதிகளிலும் தொடங்கப்பட உள்ளன.
    • மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மரக்கன்றுகள் நடவு செய்து, அதனை எவ்வாறு பராமரிப்பது தொடர்பாக அறிவுரை வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில்1 கோடி மரங்கள் நடும் திட்டத்தில் முதற்கட்ட பணிகள் விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம் ஆகிய 3 பேரூராட்சி பகுதிகளிலும், மார்த்தாண்டம்பட்டி, வேலிடுபட்டி, கரிசல்குளம், தலைகாட்டுபுரம், ஆற்றங்கரை, எப்போதும்வென்றான், அயன் பொம்மையாபுரம், கீழ விளாத்திகுளம், காட்டுநாயக்கன்பட்டி, வில்வமரத்துபட்டி, பி.மீனாட்சிபுரம், ஆதனூர், கே.சுந்தரேஸ்வரபுரம், ராமச்சந்திராபுரம், டி.சண்முகபுரம், கமலாபுரம் உள்ளிட்ட 29 கிராம ஊராட்சி பகுதிகளிலும் தொடங்கப்பட உள்ளன. இதுதொடர்பான ஆய்வுக்கூட்டம் விளாத்திகுளத்தில் நடந்தது. கூடுதல் ஆட்சியர் சரவணன் தலைமை தாங்கினார். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மரக்கன்றுகள் நடவு செய்து, அதனை எவ்வாறு பராமரிப்பது தொடர்பாக அறிவுரை வழங்கினார். கூட்டத்தில், உதவி வன காப்பாளர் சக்திவேல், வனச்சரகர் கவின், வட்டாட்சியர்கள் சசிகுமார், கிருஷ்ணகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், சீனிவாசன், சிவபாலன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கணேசன், சந்தரவேல், வெங்கடாசலம், மரங்கள் மக்கள் இயக்க நிர்வாகிகள் ராகவன், சந்திரசேகர், தி.மு.க . ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், ராமசுப்பு, சின்ன மாரிமுத்து, ராதாகிருஷ்ணன், நவநீதக்கண்ணன், மும்மூர்த்தி, செல்வராஜ், நகர செயலாளர்கள் வேலுச்சாமி, பாரதி கணேசன், மருதுபாண்டி, பேரூராட்சித் தலைவர்கள் ராமலட்சுமி, சூர்யா அய்யன்ராஜ், வனிதா அழகுராஜ், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டது.
    • நடப்படும் மரக்கன்றுகள் நல்ல முறையில் பராமரித்து வளர்க்கும் பணியினை தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட பசுமை குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் சர்வதேச நீல வானம் தூய காற்று தினத்தை முன்னிட்டு வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மேற்கொண்டார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    தஞ்சாவூர் யாகப்பா நகர் பிஷப் தேவதாஸ் ஆம்ப்ரோஸ் பள்ளியில் (அன்னை வேளாங்கண்ணி கல்லூரி வளாகம்) தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம் ,மாவட்ட பசுமை குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின்கீழ் ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    இதுவரை வரை கல்லூரி மற்றும் பொது இடங்களில் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தில் நடப்படும் மரக்கன்றுகள் நல்ல முறையில் பராமரித்து வளர்க்கும் பணியினை சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் யாகப்பா நகர் பிஷப்தேவதாஸ் ஆம்ப்ரோஸ் பள்ளியில் கலெக்டர் தலைமையில் சர்வதேச நீல வானம், தூய காற்று தினத்தை முன்னிட்டு மாணவ -மாணவியர்கள் பசுமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இந்நிகழ்வில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற் பொறியாளர் விஜயப்பிரியா, கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர். ராதிகா மைக்கேல், இணைச் செயலாளர் பொறியாளர்முத்துக்குமார், பிஷப் பள்ளி தாளாளர் அருட்தந்தை வின்சென்ட் செபாஸ்டின், முதல்வர் சகோதரி பிரமிளா, கவின்மிகு தஞ்சை இயக்க உறுப்பினர்கள் செல்வராணி, கவிஞர் ராமதாஸ், தன்னார்வலர்கள் இளவரசன், பிரபாகர், ரவிக்குமார், குரு பிரசாத், கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு வகையான பழ மரங்கள் நடவு செய்யப்பட்டன.
    • பெர்சிமன் பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்து உள்ளது.

    ஊட்டி,

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நீலகிரி மாவட்டத்தில், பேரிக்காய், ஆரஞ்சு, லிச்சி, பிளம்ஸ், பீச், லில்லி உள்பட பல்வேறு வகையான பழ மரங்கள் நடவு செய்யப்பட்டன. தற்போது பெர்சிமன் பழ சீசன் தொடங்கி உள்ளது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள பழப்பண்ணையில் பெர்சிமன் பழங்கள் கொத்துக்கொத்தாக காய்த்து தொங்குகின்றன.

    இதையொட்டி குன்னூர் பழவியல் நிலையத்தில் பெர்சிமன் பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்து உள்ளது. இதுகுறித்து குன்னூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- கடந்த 1952-ம் ஆ

    ண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து பெர்சிமன் பழ நாற்றுகள் கொண்டு வரப்பட்டு, குன்னூர் தோட்டக்கலை பண்ணையில் நடவு செய்யப்பட்டது. இது ஆதாம்-ஏவாள் பழம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பழம் மருத்துவ குணம் வாய்ந்தது. குன்னூர் பழவியல் நிலையத்தில் பெர்சிமன் பழம் கிலோவுக்கு ரூ.170 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • சாலையோரம் வெட்டி போடப்பட்டு இருந்த மரத்துண்டுகளை பறிமுதல் செய்தனர்.
    • அனுமதியின்றி சிலர் மரத்தை வெட்டி கடத்த முயற்சிப்பதாக சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் சேரம்பாடி அருகே சுங்கம் பகுதியில் நின்றிருந்த ராட்சத மரத்தை சிலர் உரிய அனுமதி பெறாமல் வெட்டி அகற்றியதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் உத்தரவின்பேரில் பந்தலூர் தாசில்தார் நடேசன், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் அபிராமி ஆகியோர் நேரில் சென்று பார்ைவயிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் சாலையோரம் வெட்டி போடப்பட்டு இருந்த மரத்துண்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோன்று எருமாடு அருகே வெட்டுவாடியில் ராட்சத மரத்தை உரிய அனுமதியின்றி சிலர் வெட்டி கடத்த முயற்சிப்பதாக சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் உதவி வனபாதுகாவலர் ஷர்மிலி, வனவர் ஆனந்த், வனகாப்பாளர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்றனர். பின்னர் மரத்துண்டுகளை பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏற்காடு அடிவாரம் வழியாக தினமும் லோடு, லோடாக லாரிகளில் பெரிய பெரிய மரங்கள் சேலத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த மரங்கள் ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது.
    • 2 லாரிகளையும் பிடித்து ஏற்காடு தாசில்தாரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

    சேலம்:

    ஏற்காடு அடிவாரம் வழியாக தினமும் லோடு, லோடாக லாரிகளில் பெரிய பெரிய மரங்கள் சேலத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த மரங்கள் ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஏற்காடு செம்மநத்தம் கிராமத்தில் கலெக்டர் கார்மேகம் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 2 லாரிகளில் மரங்கள் வெட்டி கொண்டு செல்லப்பட்டது. இதனை கலெக்டர் கார்மேகம் பார்த்து அந்த லாரிகளை நிறுத்தி ஆய்வு செய்தார். அப்போது ஏற்காடு புத்தூர் கிராமத்தில் இருந்து மரங்களை அனுமதியின்றி வெட்டி கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து 2 லாரிகளையும் பிடித்து ஏற்காடு தாசில்தாரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். பின்னர் ஏற்காடு தாசில்தார் 2 லாரிகளையும் ஏற்காடு வனச்சரக அலுவலரிடம் ஒப்படைத்து, மேல்நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார். அதன்பேரில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மரங்கள் கடத்தலை தடுக்க ஏற்காடு அடிவாரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தலைமையிலான குழு அமைத்து, தினமும் லாரிகளை ேசாதனை செய்தால் இதுபோல் நிறைய லாரிகள் பிடிபட வாய்ப்புகள் உள்ளன.

    • ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1911-ம் ஆண்டு ரூ.9.68 லட்சம் மதிப்பில் பனமரத்துப்பட்டி ஏரி உருவாக்கப்பட்டது.
    • இதனை தொடர்ந்து ஏரி மறுசீரமைப்பு பணிக்கு தமிழக அரசு ரூ.98 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

    சேலம்:

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1911-ம் ஆண்டு ரூ.9.68 லட்சம் மதிப்பில் பனமரத்துப்பட்டி ஏரி உருவாக்கப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் சேலம் மாநகர மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக தீர்த்து வைத்த பெருமை இந்த ஏரிக்கு உண்டு. 1924-ம் ஆண்டு சேலம் மாநகருக்கென மேட்டூர் தனிக்குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது.

    அதே நேரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் தலமாக இருந்த பனமரத்துப்பட்டி ஏரியில் சினிமா படப்பிடிப்புகள் தொடர்ந்து நடந்தது. எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., ெஜயசங்கர், விஜயகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த பல திரைப்படங்கள் இங்கே படமானது குறிப்பிடத்தக்கது. இப்படி சிறப்பு வாய்ந்த பனமரத்துப்பட்டி ஏரி 2137.92 ஏக்கர் பரப்பளவும், 168 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டது.

    சேலம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரிக்கு சுற்றியுள்ள ஜருகுமலை, போதமலை, வரட்டாறு, கூட்டாறு ஆகிய பகுதிகளில் இருந்து தண்ணீர் வந்து நிரம்பும். அரசு சார்பில் ஏரி பராமரிக்கப்படாததாலும், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் ஏரிக்கு நீர்வரத்து இன்றி கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. அத்துடன் நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் ஏரிக்கு தண்ணீர் வரத்துக்கு வழியில்லாமல் ஆனது.

    இந்த நிலையில் பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைப்பது தொடர்பாக அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து ஏரி மறுசீரமைப்பு பணிக்கு தமிழக அரசு ரூ.98 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

    முதற்கட்டமாக ஏரியில் பரந்து விரிந்து காணப்படும் சீமை கருவேல மரங்கள் மற்றும் பல்வேறு வகை விலை உயர்ந்த மரங்களை அகற்றும் வகையில் டெண்டர் விடப்பட்டது. இந்த மரங்களை வெட்டி எடுத்துக்கொள்ள சேலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் சுமார் ரூ.1.84 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

    இதையடுத்து அந்த நிறுவனம், ஏரியில் உள்ள மரங்களை வெட்டி எடுக்கும் பணியை தொடங்கி உள்ளது. நாள்தோறும் ஏராளமான தொழிலாளர்கள் வந்து மரங்களை வெட்டி, அவற்றை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்காக மரங்கள் வெட்டும் கருவி, அரிவாள், கத்தி, கோடாரி, வாள் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. பெரிய மரங்கள் கயிறு கட்டி வெட்டி சாய்க்கப்படுகின்றன.பின்னர் அங்கு வைத்தே நீளமாக அளவீடு செய்து, மரங்கள் துண்டு துண்டாக வெட்டி, லாரிகளில் ஏற்றப்படுகின்றன.

    குறிப்பாக விறகுகள் மற்றும் வீட்டு உபயோகத்துக்கு பயன்படும் மர கட்டைகள், பலகைகள் என தனித்தனியாக தரம் பிரித்து லாரிகளில் ஏற்றப்படுகிறது. தினமும் ஏராளமான லோடுகள் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் மரங்கள் நிறைந்து பசுமையாக காணப்பட்ட ஏரி, கொஞ்சம், கொஞ்சமாக வெட்ட வெளியாக மாறி வருகின்றன.

    • ர்நிலைகள், வடிகால்கள் சுத்தம் செய்து சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    • மண்வாளம் பாதுகாத்தல் குடிநீர் ஆதாயங்களை பாதுகாத்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    அரவேணு

    கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான முக்கிய குடிநீர் ஆதாரமான தடுப்பணை, நீர்நிலைகள், வடிகால்கள் சுத்தம் செய்து சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    பேரூராட்சி இயக்குனர் இப்ராஹிம் ஷா அறிவுறுத்தலின்படி செயல் அலுவலர் சதாசிவம் (பொறுப்பு), துப்புரவு ஆய்வாளர் ரஞ்சித், பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி மற்றும் தூய்மை பணியாளர்கள் இந்த பணியினை செய்து வருகின்றனர்.


    கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து நீர்நிலைகளையும் சுத்தப்படுத்துதல் ஆங்காங்கே மரம் நடுதல் மண் சரிவு மற்றும் மலை மண்வாளம் பாதுகாத்தல் குடிநீர் ஆதாயங்களை பாதுகாத்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

    • பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன.
    • லையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வந்தது. இதனால் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன.

    கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் சற்று மழை குறைந்திருந்தது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அதனை தொடர்ந்து நள்ளிரவு 2 மணிக்கு பலத்த மழை கொட்டி தீர்த்தது. அருவங்காடு, வண்டிச்சோலை, ரெயில்நிலையம், வண்ணாரபேட்டை, பெட்போர்டு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.

    இந்த மழைக்கு இன்று காலை குன்னூரில் இருந்து டால்பினோஸ் செல்லும் வழியில் சாலையோரம் நின்றிருந்த ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புதுறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர். மேலும் மழை காரணமாக கடும் குளிரும் நிலவி வருகிறது.

    கூடலூர், பந்தலூர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சேரம்படி நாயகன்சோலையில் உள்ள பள்ளிக்கூடத்தின் மதில் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக யாரும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்க ப்பட்டது.

    • காப்பு காடுகளில் நன்கு வளர்ந்துள்ள மரங்களை மர்மநபர்கள் நோட்டமிட்டு, அவற்றை வெட்டி கடத்துவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
    • 1095 சதுர கிமீ பரப்பளவுள்ள இம்மலைகளின் உயரம் 2000 முதல் 3000 அடி வரை உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கல்வ ராயன் மலைப்பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான காப்பு காடுகள் அதிக அளவில் உள்ளன. அங்கு தேக்கு மரம், வேம்பு, சந்தனம், சில்வர் ஓக் , மஹோகனி, வேங்கை, செம்மரம் உள்ளிட்ட பல வகையான மரங்கள் வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இம்மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதி ஆகும். 1095 சதுர கிமீ பரப்பளவுள்ள இம்மலைகளின் உயரம் 2000 முதல் 3000 அடி வரை உள்ளது. கல்வராயன் மலையின் தென்மேற்கு பகுதி ஆத்தூர், மேற்குப்பகுதி சங்கராபுரம் வரையும், வடதிசையில் செங்கம் வரையிலும் பரவியுள்ளது. கல்வராயன் மலையின் வடக்கே சாத்தனூர் அணைக்கட்டும், தெற்கே ஆத்தூர் கணவாயும், கிழக்கே மணிமுத்தாறு அணையும், மேற்கே சித்தேரி மலையும் அமைந்துள்ளன. கல்வராய ன்மலையடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது.

    இந்த நிலையில் கலக்க ம்பாடி மற்றும் ஆவாரை, நாவலூர் உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில் உள்ள காப்பு காடுகளில் நன்கு வளர்ந்துள்ள மரங்களை மர்மநபர்கள் நோட்டமிட்டு, அவற்றை வெட்டி கடத்துவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வனத்துறை உயர் அதிகாரிகள், அந்த பகுதிகளுக்கு சென்று பார்த்தபோது, அங்கு விலை உயர்ந்த மரங்கள் வெட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடத்தப்பட்ட இந்த மரங்களில் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என தெரிகிறது.

    மர்ம நபர்கள் கொண்டு செல்ல முடியாமல் விட்டு சென்ற சுமார் 10, 15 அடி நீளம் பலகைகள் அங்கு கிடந்தன. அவற்றை வனத்துறையினர் கைப்பற்றினர். மர்ம கும்பல் இதுவரை எத்தனை மரங்கள் வெட்டி உள்ளனர் என்பதை அதிகாரிகள் ஆய்வு வருகிறார்கள்.

    விசாரணை தீவிரம்

    விசாரணையில், வனத்து றையினர் காடுகளில் ரோந்து சென்று வரும் நேரத்தை மர்ம கும்பல் நோட்டமிட்டும் வனத்துறையினர் ரோந்து வராத பகுதிகளை கண்காணித்தும் நள்ளிரவில் காப்புக்காட்டுக்குள் புகுந்து இந்த விலை உயர்ந்த மரங்களை வெட்டி உள்ளனர். மேலும் மரங்கள் வெட்டும்போது அவற்றின் சத்தம் கேட்டாமல் இருக்க, கூர்மையான மிஷினை பயன்படுத்தி உள்ளனர். கிளைகளில் கயிறுகளை கட்டிக் கொண்டு அடிப்பகுதியை வெட்டி சாய்த்துள்ளனர். பின்னர் அந்த மரங்களை அங்கேயே துண்டு, துண்டுகளாக்கி பலகைகளாக செதுக்கி கடத்திச் சென்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

    இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து வனத்துறையினர் கலக்கம்பாடி மற்றும் ஆவாரை, நாவலூர் உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக இந்த பலகைகளை ஆத்தூர், கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் உள்ளிட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஆகவே அந்த பகுதிகளுக்கு சென்றும் மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    கண்காணிப்பு காமிரா

    மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதை தடுக்கவும், வனப்பகுதிக்குள் நுழையும் மர்ம கும்பலை உடனடியாக கண்டுபிடிக்க ஏதுவாகவும் காப்புகாடுகளை சுற்றிலும் அதிநவீன சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நேற்று இரவு ஊட்டி அருகே உள்ள கேத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
    • லவ்டேல் டி.எப்.எல்.பகுதியில் சாலையோரம் நின்றிருந்த மரம் முறிந்து விழுந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வந்தது. இதனால் சாலையோரங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மண்சரிவும் ஏற்பட்டது.

    ஆறுகளிலும், நீர்நிலைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. வீடுகள் சேதம் அடைந்தனர். கடந்த சில தினங்களாக மழை சற்று ஒய்ந்து காணப்படுகிறது. இதையடுத்து சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்தன.

    இந்த நிலையில் நேற்று இரவு ஊட்டி அருகே உள்ள கேத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீரும் தேங்கியது.

    இன்று காலை ஊட்டி அடுத்த லவ்டேல் டி.எப்.எல்.பகுதியில் சாலையோரம் நின்றிருந்த மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.

    தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை வெட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சிவகங்கை மாவட்டத்தில் கருவேல மரங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பங்கேற்று விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், சிவகங்கை மாவட்டத்தல் உள்ள 4ஆயிரத்து 226 முன்னாள் ஜமீன் கண்மாய்களில் 1,748 கண்மாய்கள் கடந்த வருடங்களில் தூர்வாரப்பட்டுள்ளன.

    தற்போது கொத்தங்குடி, வலையான்வயல், பள்ளிவயல், கொத்தான்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 42 கண்மாய்கள் மொத்தம் ரூ.24.14 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார்.சாலைவழித்தட மாற்றம் செய்தல், சாலையில் தடுப்புச்சுவர் அமைத்தல், விவசாயப்பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள், காட்டுமாடுகளை அப்புறப்படுத்துதல், ஆக்கிரமிப்புக்களை அகற்றுதல், பட்டா வழங்குதல், பட்டா திருத்தம் செய்தல், நிலஅளவை செய்யக் கோருதல், அங்கன்வாடி கட்டிடம், நியாயவிலைக்கடை கட்டித்தரக் கோருதல், கிராமக்கிணறு பழுதை சீர் செய்தல், சிமெண்ட் களம் அமைத்து தரக்கோருதல், தார்ச்சாலை சீரமைத்தல், ஆற்றுப்பகுதியில் உள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்றுதல், விவசாயிகளுக்கு தேவையான உரங்களை இருப்பு வைக்கக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கலெக்டரிடம் விவசாயிகள் எடுத்துரைத்தனர்.

    அந்த கோரிக்கைகள் தொடர்பாக, தற்போது அந்தபகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் எடுத்துரைத்தனர். தகுதியான கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏதுவாக களஆய்வு செய்ய துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர்(பொறுப்பு) தனபாலன், கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர்கள் கோ.ஜீனு, ரவிச்சந்திரன், கால்நடைப் பராமரிப்புத்துறை இணை இயக்குநர் நாகநாதன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பிரபாகரன் (தேவகோட்டை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சர்மிளா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் வனவருக்கு மிரட்டல் விடுத்த கணவன், மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
    • ஓட்டல்களில் விறகுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் வனச்சரக வனவர் இளவரசன் (வயது 29). வனப்பகுதியில் வெட்டப்படும் மரங்கள் ராஜபாளையம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் விறகுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இது குறித்து விசாரித்தபோது மாலையாபுரத்தைச் சேர்ந்த அழகர்சாமி மலைவாழ் மக்களிடம் மரங்களை வெட்ட சொல்லி விறகுகளை வாங்கி ஓட்டல்களுக்கு விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அழகர்சாமியை வனவர் எச்சரித்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த அழகர்சாமியின் மனைவி பாலத்துக்கனி என்பவர் செல்போன் மூலம் இளவரசனை தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளை பேசி, மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது

    இதுகுறித்து இளவரசன் ராஜபாளையம் வடக்கு‌ போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து அழகர்சாமி, அவரது மனைவி பாலத்துகனியை தேடி வருகின்றார்.

    ×