search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 234398"

    • இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
    • கண்ணில் விழிலென்ஸ் பொருத்தி மீண்டும் பார்வை பெற ஏற்பாடு செய்யப்பட்டது

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர அரிமா சங்கம், வேலம்மாள் மருத்துவ கல்லூரியுடன் இணைந்து இலவச கண் மருத்துவ முகாமை நடத்தியது.

    சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் லயன்ஸ் டாக்டர் எம்.வி.எம்.மருதுபாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்ற இம்முகாமில் அரிமா சங்க ஆளுநர் சசிகுமார் முன்னிலை வகித்தார்.

    முன்னாள் ஆளுநர் செல்லப்பாண்டி முகாமை தொடங்கி வைத்தார். இதில் சோழவந்தான் அரிமா சங்க பொருளாளர் காந்தன் மற்றும் நிர்வாகிகள், வேலம்மாள் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

    முகாமில் கண்புரை நோயால் கண் பார்வை குறைவாக உள்ளவர்களுக்கு மற்றும் கண்பார்வை இல்லாதவர்களுக்கும் இலவசமாக கண்ணில் விழிலென்ஸ் பொருத்தி மீண்டும் பார்வை பெற ஏற்பாடு செய்யப்பட்டது.

    அரிமா சங்க முன்னாள் தலைவர் ராசி கண்ணன் நன்றி கூறினார். சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
    • கண்புரை அறுவை சிகிச்சைக்கான நோயாளிகளை அடையாளம் காணுதல் போன்ற சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி (தன்னாட்சி), விரிவாக்க நடவடிக்கைகள், என்எஸ்எஸ் பிரிவுகள் (எண். 192 & 209), உன்னத் பாரத் அபியான் திட்டம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை, ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தியது. கல்லூரி முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் முத்துலட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் கண் சோர்வு. நீண்ட பார்வை, குறுகிய பார்வை, கண் விழித்திரை நோய்கள், குழந்தைகளுக்கான கண் பராமரிப்பு மற்றும் கண்புரை அறுவை சிகிச்சைக்கான நோயாளிகளை அடையாளம் காணுதல் போன்ற சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 183 பேர் பயனடைந்தனர். என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் என்.சி.சி. கேடட்கள் தன்னார்வ தொண்டு செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை விரிவாக்கம் மற்றும் உன்னத பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் பிரிவு எண்.209 ராஜீவ்காந்தி, பிரிவு எண். 192 மாரீசுவரன் செய்திருந்தனர்.

    • பல்வேறு இடங்களின் வழியாக சென்று ராசாமி ராசுதாரர் மருத்துவ மனையில் பேரணி முடிவ டைந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள், டாக்டர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ராசா மிராசுதாரர் மருத்துவமனை கண் பிரிவு மற்றும் லயன்ஸ் சங்கங்கள் சார்பில் கண் தானம் செய்வோம் விழிப்புணர்வு பேரணி தஞ்சை ரெயிலடியில் நடைபெற்றது.

    இந்த பேரணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடிய சைத்து தொடங்கி வைத்து பேசினார்.

    இதில் குந்தவை நாச்சியார் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண் தானம் செய்வோம் என்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

    பல்வேறு இடங்களின் வழியாக சென்று ராசாமி ராசுதாரர் மருத்துவ மனையில் பேரணி முடிவ டைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள், டாக்டர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • எம்.டி. சமுதாய அறக்கட்டளை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
    • 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள், குழந்தைகள், முதியோர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை எம்.டி. சமுதாய அறக்கட்டளை சார்பில் மகாத்மா காந்தி நகரில் உள்ள சகாய பள்ளியில் கார்த்திகா விஷன் கேர் ஆப்டிக்கல்ஸ் மூலம் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. இம்முகாமில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள், குழந்தைகள், முதியோர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் பங்கேற்றவர்க ளுக்கு கண்பார்வை சோதனை, கண் அழுத்த சோதனை, கண்புரை, நீரழிவினால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை கார்த்திகா விஷன் கேர் ஆப்டிக்கல்ஸ் மற்றும் பள்ளி தாளாளர் ஜோசப், தலைமையாசிரியர் ரஞ்சி ரூபிணி மற்றும் எம்.டி. சமுதாய அறக்கட்டளை நிறுவனர் டாக்டர்.ஜெரினா செய்திருந்தனர்.

    • மோகனூர் அரிமா சங்கம், நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின.
    • இதில் சுமார் 250 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 72 நபர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டார்கள்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மோகனூர் அரிமா சங்கம், நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின. முகாமிற்கு அரிமா சங்கத் தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட துணை ஆளுநர் தமிழ்மணி, 2-ம் துணை ஆளுநர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அரிமா சங்க செயலாளர் வினோத் வரவேற்றார். செயலாளர்( சேவை) சரவணன் அறிமுக உரை யாற்றினார். முகாமில் மாவட்ட கண்ணொளி திட்ட தலைவர் விஸ்வநாதன் முகாமை தொடங்கி வைத்தார். ஜி. எல்.டி. ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், மோகனூர் சுப்பிரமணியம் கல்லூரியின் சேர்மேனும் ,லியோ கிளப்ஸ் மாவட்ட தலைவருமான பழனியாண்டி, உன்னியூர் எஸ்.எஸ்.பாலிடெக்னிக் மருத்துவமனை நிர்வாக இயக்குனரும் , மாவட்ட தலைவருமான டாக்டர் செந்தில்ஆண்டவன், மோகனூர் அரிமா சங்க கண்ணொளி திட்ட தலைவர் டாக்டர் சந்திரமோகன், மாவட்ட தலைவர் ராமலிங்கம் ,மண்டல தலைவர் தனபால், வட்டாரத் தலைவர் சுரேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    முகாம் முடிவில் பொருளாளர் என்ஜினியர் சக்கரவர்த்தி நன்றி கூறினார். இதில் சுமார் 250 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 72 நபர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். இவர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு பெண்கள் மேல் நிலைப்பள்ளிப் பள்ளியில் இருந்து பேருந்து மூலம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

    • குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் மற்றும் ராஜா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • இந்த முகாமில் 220 பேர் பங்கேற்று பயன்பெற்றனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் மற்றும் ராஜா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    இதில் சங்க தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். முன்னாள் தேசிய தலைவர் இளங்கோ முகாமை தொடக்கி வைத்தார்.

    டாக்டர் கிருஷ்ணமூர்த்தி குழுவினர் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சர்க்கரை அளவு, ரத்த பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவை இலவசமாக பார்க்கப்பட்டது.

    இந்த முகாமில் 220 பேர் பங்கேற்று பயன்பெற்றனர். மேலும் முன்னாள் குளோபல் சேர்மன் ஈஸ்வர், முன்னாள் தலைவர்கள் மனோகர், சம்பத்குமார், சந்திரன், பன்னீர்செல்வம், தனசேகர், சண்முகம்,விஜயபிரதாப் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

    • 215 பேர் கண் பரிசோதனை முகாமில் பங்கேற்று பயன் பெற்றனர்.
    • ஆறுமுகநேரி பேரூராட்சி துணை தலைவர் கல்யாணசுந்தரம் முகாமை தொடங்கி வைத்தார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி இந்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    ஆறுமுகநேரி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளையின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த முகாமில் வங்கியின் கிளை மேலாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.

    ஆறுமுகநேரி பேரூராட்சி துணை தலைவர் கல்யாணசுந்தரம் முகாமை தொடங்கி வைத்தார். 215 பேர் முகாமில் பங்கேற்று பயன் பெற்றனர்.

    இவர்களில் 18 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    ஆறுமுகநேரி நகர தி.மு.க செயலாளர் நவநீத பாண்டியன், வார்டு கவுன்சிலர் வெங்கடேசன், இந்து மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் குமரன் உள்பட பலர் முகாமில் கலந்து கொண்டனர்.

    ×