என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 234887"
- கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தலைமையில் நடைபெற்றது.
- மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட கலெக்டர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தலைமையில் நடைபெற்றது.
பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 286 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.
மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட கலெக்டர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, தீ விபத்தால் வீடு இழந்த நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், திடுமலை பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவருக்கு ரெட்கிராஸ் சார்பில், சமையல் பாத்திரங்கள், வேட்டி, சேலை, பாய், போர்வை, கம்பளி, கொசுவலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், ரூ.840 மதிப்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு முழங்கை ஊன்று கோலும், ரூ.2,780 மதிப்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு காதொலி கருவியும், மற்றொரு மாற்றுத்திறனாளிக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையும் என 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,620 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.
பின்னர், மாவட்ட கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி, அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.
கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- குறைதீர்க்கும் கூட்டத்தில் தகவல்
- மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமை யில் இன்று நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி பொறுப்பு ரேவதி மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மீனவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக் களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து மீனவர்கள் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அபராத தொகையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மீனவர்க ளுக்கு வழங்கப் பட்ட உதவித்தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும். இணையம், அழிக்கால், கோவளம், மேல்மிடாலம் பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த பகுதிகளில் சரியான முறையில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படவில்லை.
கோவளம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தூண்டில் வளைவினால் மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சில மீனவர்கள் உயிரிழந்து உள்ளனர். தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும்போது அந்தப்பகுதி கிராம மக் களின் கருத்துக்கள் கேட்டு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். அந்த கிராமத்தில் ஒரு கமிட்டி அமைத்து பணியை தொடங்க வேண்டும்.
கேரளாவில் தூண்டில் வளைவு அமைப்பதற்கு 1000, 500 கிலோ எடை கொண்ட கற்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் குமரி மாவட்டத்தில் வீடுகளுக்கு கட்ட பயன்படுத்தப்படும் ஜல்லிகளையும், மணல்களையும் போட்டு தூண்டில் வளைவு அமைக்கப்படுவதால் தூண்டில் வளைவுகள் உடனடியாக சேதம் அடைகிறது. இதை முறைப்படுத்த நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும்.
குமரி மாவட்டத்தில் காணாமல் போன மீனவர்கள் மற்றும் நடுக்கடலில் தவிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்க கடல் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். சமீபத்தில் முட்டத்திலிருந்து 70 நாட்டிக்கல் தொலைவில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டபோது நடுக்கடலில் தவித்தனர்.
அவர்களை மற்ற மீனவர்கள் சென்று மீட்டு உள்ளனர். இதற்கு 2 மணி நேரம் ஆனது. கடல் ஆம்புலன்ஸ் வசதி இருந்தால் அந்த பகுதிக்கு 10 நிமிடத்தில் சென்று மீட்பு பணியை மேற்கொண்டு இருக்க முடியும்.
எனவே கடல் ஆம்பு லன்ஸ் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கீழ மணக்குடியில் தனியார், தொண்டு நிறுவனங்கள் மூலமாக சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப் பட்டுள் ளது.
500-க்கு மேற்பட்ட வீடு களில் மக்கள் வசித்து வரும் நிலையில் அந்த மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கு அதிகாரிகள் பதிலளித்து பேசுகையில், எல்லை தாண்டி மீன்பிடித்த தற்கான அபராத தொகை கடந்த 2 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது குமரி மாவட்டத்தை சேர்ந்த 66 படகுகள் தடையைமீறி மீன் பிடித்ததாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 7 பேர் மேல் முறையீடு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தூண்டில் விளைவு அமைப்பது தொடர்பாக மீனவ மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 2 மீட்பு படகுகள் வாங்க நடவ டிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
- வாரம்தோறும் புதன் கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட வேண்டும் என மாவட்ட போலீஸ் எஸ்.பி கலையரசன் உத்தர விட்டுள்ளார்.
- மொத்தம் 99 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில், வாரம்தோறும் புதன் கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட வேண்டும் என மாவட்ட போலீஸ் எஸ்.பி கலையரசன் உத்தர விட்டுள்ளார். இதை யொட்டி இந்த வாரம் புதன்கிழமை நடைபெற்ற முகாமிற்கு எஸ்.பி.கலை யரசன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் சார்பில் குடும்பப்பிரச்னை, சொத்துப்பிரச்னை உள்ளிட்டவை குறித்து மொத்தம் 99 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. அவற்றைப் பெற்றுக் கொண்ட எஸ்.பி மனுக்களை பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்க, போலீஸ் அதிகாரிக ளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில், ஏ.டி.எஸ்.பி.க்கள் கனகேஸ்வரி, ராஜு, டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கோரிக்கை மனுக்களின் மீது விசாரணை நடத்தி பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகளை வழங்கினர்.
- ரேசன் கார்டு சம்மந்தமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம்.
- சமூக இடைவெளியை கடைபி டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் ரேசன் கார்டுதாரர்க ளுக்கான குறைதீர் கூட்டம் நாளை(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்ப கல் 1 மணி வரை, நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்த மங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபா ளையம் தாலுகா வழங்கல் அலுவலகங்களில், சம்பந்தப் பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் இந்த குறைதீர் முகாமில் கலந்து கொண்டு, ரேசன் கார்டு சம்மந்தமான கோரிக்கை களுக்கு தீர்வு காணலாம். மேலும், பொது விநியோ கத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ளும், பொது மக்கள் அனைவரும், கொரோனா முன்னெச்ச ரிக்கை அறிவு ரைகளை தவறாமல் கடை பிடித்து, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபி டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
- விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் பழனிவேல் (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை ( வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
எனவே தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர் , திருவையாறு, பூதலூர், ஒரத்தநாடு ஆகிய வட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
- வட்டாட்சி யர் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில் பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மார்ச் மாதம் 2-வது சனிக்கிழமையான வருகிற 11-ந்தேதி ஒவ்வொரு வட்டாட்சி யர் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாமில் பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்.
இந்த முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், கைபேசி எண் பதிவு மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்தலுக்கான மனு பெற்ற உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதன்பேரில் உரிய நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
- தளவாய்பட்டியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
- நாளை காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை சந்தாதாரர்கள், பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை தொழில் அதிபர்கள், மாலை 4 மணி முதல் 5 மணி வரை விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ளலாம்.
சேலம்:
சேலம் இரும்பாலை ரோடு தளவாய்பட்டியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சிவகுமார் தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் ஹிமான்ஷூ தலைமையிலும், ஈரோடு மாவட்ட அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் வீரேஷ் தலைமையிலும் நிதி ஆப்கே நிகட் என்ற பெயரில் இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
நாளை காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை சந்தாதாரர்கள், பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை தொழில் அதிபர்கள், மாலை 4 மணி முதல் 5 மணி வரை விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ளலாம்.
இக்கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அது குறித்த விவரங்களுடன் தங்களது பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், யு.ஏ.என். எண், தொலைபேசி எண் மற்றும் செல்போன் எண்கள் ஆகிய விவரங்களுடன் கலந்து கொள்ளலாம் என்று சேலம் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்துமாறு, டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
- அதன்படி, சேலம் நெத்திமேட்டில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
அன்னதானப்பட்டி:
தமிழகத்தில் அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்துமாறு, டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சேலம் நெத்திமேட்டில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் செல்லப்பாண்டியன், கென்னடி தலைமை தாங்கினர் . இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தையல்நாயகி, சண்முகம், ராஜேந்திரன், சின்னசாமி, இளமுருகன் ஆகியோர் தனித்தனியே புகார் மனுக்கள் பெற்று விசாரித்தனர்.
24 புகார் மனுக்கள் பெறப்பட்டு, விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டது. இது போல மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
- 136 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
- சமுதாயக்கூடத்தில் வருவாய்த்துறை சார்பில் நடைபெற்றது.
ஊட்டி,
பந்தலூர் அருகே சேரங்கோடு சமுதாயக்கூடத்தில் வருவாய்த்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரத்துல்லா தலைமை தாங்கினார். பந்தலூர் தாசில்தார் நடேசன், பிதிர்காடு வனச்சரகர் ரவி, துணை தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர்கள் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேரங்கோடு படச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தொகுப்பு வீடு, முதியோர் உதவித்தொகை, சாலை, தெருவிளக்கு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து 136 கோரிக்கை மனுக்களை அளித்தனர். முகாமில் சேரங்கோடு ஊராட்சி தலைவர் லில்லி எலியாஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக சமா்ப்பிக்கலாம்.
- விவசாயிகள் நுண்ணீா்ப் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளலாம்.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் நாளை 24-ந்தேதி நடக்கிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை 23-ந்தேதி ( வியாழக்கிழமை) காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது.மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலா்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம்.
மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக சமா்ப்பிக்கலாம். இக்கூட்டரங்கில் விவசாயிகள் நுண்ணீா்ப் பாசனம் அமைத்திட ஏதுவாக வேளாண்மை அலுவலா், தோட்டக்கலை அலுவலா் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலா்களைக் கொண்டு வேளாண் உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆகவே, தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகள் நுண்ணீா்ப் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
- சேலம் தலைமை தபால் துறை கிழக்கு கோட்ட முதுநிலை கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் கோட்ட அளவில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
- இக் கூட்டம் 29-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
சேலம்:
சேலம் கிழக்கு கோட்ட தபால் துறை முதுநிலை கண்காணிப்பாளர் அருணாச்சலம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் தலைமை தபால் துறை கிழக்கு கோட்ட முதுநிலை கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் கோட்ட அளவில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 29-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில், பொதுமக்கள் அனைவரும் தபால் துறை சம்பந்தமாக ஏதேனும் குறைகள் இருந்தால் அதுபற்றிய புகார்களை குறைதீர்க்கும் நாளன்று நேரிலோ அல்லது சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலக முகவரிக்கு 26-ந் தேதிக்கு முன்பாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். புகாரின் தபால் உறையில் குறைதீர்க்கும் கூட்டம் என்பதை குறிப்பிட்டு எழுத வேண்டும். மணியார்டர், வி.பி.பி., வி.பி.எல்., பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு தபால் பற்றிய புகார்கள் என்றால் அனுப்பிய தேதி, முழு முகவரி, பதிவு அஞ்சல் எண், அலுவலகத்தின் பெயர் அனைத்தும் இடம் பெற்றிருக்க வேண்டும். சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் காப்பீடு பற்றிய புகார்கள் என்றால் கணக்கு எண், பாலிசி எண், வைப்பு தொகையாளரின் பெயர், வசூலிக்கப்பட்ட தொகை விவரங்கள் அல்லது வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சேலம் மண்டல அளவில் வருங்கால வைப்பு நிதி குறித்த குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 10-ந்தேதி சேலம் இரும்பாலை சாலையில் மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் நடக்கிறது.
- மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
சேலம்:
சேலம் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் விஜய் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் மண்டல அளவில் வருங்கால வைப்பு நிதி குறித்த குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 10-ந்தேதி சேலம் இரும்பாலை சாலையில் மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் நடக்கிறது. வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சிவகுமார் தலைமை தாங்குகிறார்.
கிருஷ்ணகிரி கூட்டுறவு காலனி சாலையில் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் அமலாக்க அதிகாரி சாத்தகிராமன் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. சந்தாதாரர்களுக்கு காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், தொழில் அதிபர்களுக்கு மதியம் 3 மணி முதல் 4 மணி வரையிலும், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விருப்பம் உள்ளவர்கள் வருகிற 9-ந் தேதிக்கு முன்னதாக மாவட்ட அலுவலகங்களில் தெரிவிக்க வேண்டும். அல்லது ro.salem@epfindia.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்