என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 235064"
- குமாரபாளையம் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டெருமையை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.
- காட்டெருமை நேற்று மாலை 6 மணியளவில் சமயசங்கிலி தடுப்பணை பகுதியில் உள்ளதாக தகவல் கிடைத்தது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் கத்தேரி பிரிவு அருகே காட்டெருமை மேய்ந்துள்ளது. இதை கண்ட பொதுமக்கள் சிலர் அச்சத்தில் அங்கிருந்து விலகி சென்றனர். இது குறித்து தீயணைப்பு படை யினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தரப்பட்டது.
டீச்சர்ஸ் காலனி, சிவசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் எருமையை பார்த்ததாக பலர் கூறியதால் இந்த பகுதிகளில் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்ட வனத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் ஈரோடு மாவட்ட வன அலுவலர் கவுதம் தலைமையில் 40-க்கும் மேற்பட்டோர் தேடி வருகின்றனர்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட வன சரக அலுவலர் பெருமாள் கூறுகையில், இந்த காட்டெருமை ஏற்காடு பகுதியில் இருந்து மெல்ல மெல்ல இந்த பகுதிக்கு வந்துள்ளது.
ட்ரோன் கேமரா மூலமும் தேடி வருகிறோம். இப்பகுதியில் கரும்பு தோட்டங்கள் அதிகம் உள்ளதால் அதற்குள் புகுந்துள்ளது. விரைவில் பிடித்து விடுவோம் என்றார்.
இதனிடையே காட்டெருமை நேற்று மாலை 6 மணியளவில் சமயசங்கிலி தடுப்பணை பகுதியில் உள்ளதாக தகவல் கிடைத்தது. வனத்துறையினர் அங்கு சென்று காட்டெருமையை மடக்கிப் பிடித்தனர். பின்னர் காட்டெருமை சக்திய மங்கலம் காட்டுப்பகுதியில் விடப்பட்டது.
- ரெயில்வே உயா்அதிகாரிகளுடன் ஊட்டி வந்து கொண்டிருந்த சிறப்பு ரெயில் அரை மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது.
- பா்லியாறு பகுதியின் மலைப் பாதையில் உள்ள ெரயில்வே தண்டவாளத்தில் காட்டெருமை விழுந்தது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ெரயில் பாதையில் யானை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.
இந்நிலையில், பா்லியாறு பகுதியின் மலைப் பாதையில் உள்ள ெரயில்வே தண்டவாளத்தில் காட்டெருமை விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக ெரயில்வே துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற வனத்துறை மற்றும் ெரயில்வே துறையினா், அந்த காட்டெருமையை மீட்டனா். பின்னர் காட்டெருமைக்கு கால்நடை டாக்டர்கள் உதவியுடன் சிகிச்சை அளித்து கொண்டிருந்தனர்.
ஆனால் சிறிது நேரத்தில் காட்டெருமை சிகிச்சை பலனின்றி இறந்து விட்டது. இதையடுத்து காட்டெருமையை வனத் துறையினா் அங்கேயே குழி தோண்டி புதைத்தனா்.
இந்தச் சம்பவத்தால், மேட்டுப்பாளையத்தில் இருந்து ெரயில்வே உயா்அதிகாரிகளுடன் ஊட்டி வந்து கொண்டிருந்த சிறப்பு ெரயில் அரை மணி நேரம் தாமதமாக ஊட்டிக்கு வந்து சேர்ந்தது.
- சாலையோர புதரில் மறைந்திருந்த காட்டெருமை திடீரென வழிமறித்து தாக்கியது.
- இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கெங்கரை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி(31). இவர் சம்பவத்தன்று கோவில்மட்டம் பகுதிக்கு மொபட்டில் சென்றார். பின்னர் அங்கு உறவினை சந்தித்து பேசி விட்டு மீண்டும், வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
ஒன்னட்டி-கோவில்மட்டம் செல்லும் சாலையில் வந்த போது, அங்கு சாலையோர புதரில் மறைந்திருந்த காட்டெருமை திடீரென வழிமறித்து தாக்கியது.
இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
- தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகே காட்டெருமை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.
- தொட்டிக்குள் தவறி விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் மீட்டனர்.
வால்பாறை
வால்பாறை மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
அவை அவ்வப்போது தேயிலை தோட்டம் மற்றும் ெதாழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளது.
இந்த நிலையில் வால்பாறை அருகே வில்லோணி எஸ்டேட் மேல் பிரிவு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகே காட்டெருமை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.
பின்னர் தண்ணீர் குடிப்பதற்காக அங்குள்ள தண்ணீர் தொட்டியின் அருகே சென்றது. அங்கு தண்ணீர் குடிக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக காட்டெருமை தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது.
இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வால்பாறை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் ஆகியோரின் உத்தரவின் பேரில் வால்பாறை வனசரகர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த காட்டெருமையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காட்டெருமையை மீட்க முடியவில்லை.
இதையடுத்து அந்த தொட்டியின் பக்கவாட்டு சுவரை உடைத்து காட்டெருமையை மீட்கும் பணி நடந்தது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு இரவு 8 மணியளவில் தொட்டிக்குள் தவறி விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் மீட்டனர். பின்னர் அதனை வனத்தில் விட்டனர்.
- 2 பேரை பிடிக்க வனத்துறை வேட்டை
- கறியை பறிமுதல் செய்தனர்
செங்கம்:
செங்கம் அருகே உள்ள வலசை இந்திராநகர் பகுதியை சேர்ந்த 2 பேர் வலசை மலைப்பகுதியில் சுற்றி திரிந்த காட்டு எருமையை வேட்டையாடி அதனை கூறு போட்டு சுமார் 15 கிலோ கறியை அவர்களது வீட்டினில் காய வைத்திருப்பதாக வனத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து வனசரகர் ராமநாதன் தலைமையில் இந்திரா நகர் பகுதியில் உள்ள அவர்களது வீட்டிற்கு அதிரடியாக சென்ற வனத்துறையினர் அங்கு சோதனை நடத்தினர். வீட்டினுள் காட்டெருமை கறியை துணி காய வைப்பது போல் காய வைத்திருந்தனர்.
இதனை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். காட்டெருமை கறியை பறிமுதல் செய்தனர்.
வனத்துறையினர் வரும் தகவல் அறிந்து 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பிச்சென்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.
- காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
- வனத்துறையினர் விரைந்து வந்து காட்டெருமையை பார்வையிட்டனர்.
அரவேணு
நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு வனசரகத்தில் யானை, காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தைவிட்டு வெளியேறி குடியிருப்பு பகுதி மற்றும் தேயிலை தோட்டங்களில் நடமாடி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.
நடு ஹட்டி கிராமத்ைதயொட்டிய தேயிலை தோட்டத்தில் நேற்று காலை வழக்கம்போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேயிலை தோட்டத்திற்குள் காட்டெருமை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
வனசரகர் செல்வகுமார் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து காட்டெருமையை பார்வையிட்டனர். பின்னர் காட்டெருமை இறந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, தேயிலை தோட்டம் வழியாக செல்லும் மின்கம்பி, அறுந்து கிடந்ததை பார்த்தனர். இதனால் காட்டெருமை மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தேயிலை தோட்ட பகுதியில் மின்சார கம்பி அறுந்து கிடந்துள்ளது. அப்போது தேயிலை தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை எதிர்பாரத விதமாக மின்சார கம்பியில் மோதி இறந்துள்ளது என்றனர்.
இதையடுத்து வனத்துறையினர் இன்று காலை கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் இறந்த காட்டெருமையின் உடலை உடற்கூராய்வு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
- ஏற்காட்டில் காட்டெருமை மோதி அரசு பஸ் சேதம் அடைந்தது.
- இதனால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
ஏற்காடு:
ஏற்காடு பஸ் நிலையத்திலிருந்து இருந்து நேற்றிரவு 9 மணி அளவில் அரசு பஸ் சுமார் 20 பயணிகளுடன் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் செந்தில்குமார் ஓட்டினார்.
பஸ் ஏற்காட்டில் உள்ள தனியார் எஸ்டேட் அருகில் வந்து கொண்டிருக்கும் போது யாரும் எதிர்பார்க்காத வகையில் காட்டெருமை ஒன்று சாலையின் குறுக்கே ஓடியது.
இதை எதிர்பார்க்காத டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இதனால் அந்த காட்டெருமை பஸ்சின் முன்பக்கத்தில் மோதியது. மோதிய வேகத்தில் காட்டெருமை காட்டுக்குள் ஓடிவிட்டது.
இந்த சம்பவத்தில் பஸ்சின் முன்பக்கம் மற்றும் கண்ணாடி பலத்த சத்தத்துடன் உடைந்து சுக்கு நூறாக உடைந்தது. பஸ்சில் இருந்த பயணிகள்ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதாக கருதி பதற்றத்துடன் கீழே இறங்கி ஓடினர்.
அதன்பிறகே பஸ்சில் காட்டெருமை மோதிய விவரம் பயணிகளுக்கு தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்