search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 235118"

    • பிளாஸ்டிக்கிற்கு பதில் மாற்றுப் பொருள் கண்டுபிடிக்க வேண்டும்.
    • மாவட்டங்களில், பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுத்து அகற்ற ஏற்பாடு.

    நந்தம்பாக்கம்:

    ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்கள் தயாரிப்பு குறித்த தேசிய கண்காட்சி மற்றும் தொழில் முனைவோருக்கான இரண்டு நாள் கருத்தரங்கம் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தொடங்கியது. நிகழ்ச்சியில் காணொலி மூலம் பேசிய மத்திய சுற்றுசூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை மந்திரி பூபேந்தர் யாதவ், 


    பிளாஸ்டிக்கால் கணினி, செல்போன் போன்ற நன்மைகள் கிடைத்துள்ள போதும், பல தீமைகளுக்கு வழி வகுத்துள்ளது என்றார். கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி நடந்த சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாட்டில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக்கிற்கு பதில் மாற்றுப் பொருள் கண்டுபிடிக்க வேண்டும்ட என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதாக நினைவு கூர்ந்தார்.

    பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார். பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மரம், சணல், மூங்கில் ஆகியவற்றை பயன்படுத்துவதை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். 


    தொடர்ந்து பேசிய தமிழக அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், பிளாஸ்டிக்குக்கு மாற்றுப் பொருட்கள் கண்காட்சி இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் நடைபெறுகிறது என்றார். புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் போன்றவற்றில் பிளாஸ்டிக் பங்களிப்பும் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

    தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், பிளாஸ்டிக் கழிவுகள் பிரித்தெடுத்து அகற்றும் ஏற்பாடுகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார். ஆவின் பால் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மட்கும் தன்மையுடைய பைகளை பயன்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    • நாட்டிற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது உறுதியான நடவடிக்கை.
    • சோதனை தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் நடைபெற்றது.

    ராமநாதபுரத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய சிறு குறு தொழில்துறை இணை மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    தமிழகத்தில் பாஜக நிர்வாகிகளின் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து மாநில அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

    நாட்டிற்கு எதிராக செயல்படுபவர்கள் குறித்து சோதனை நடத்திய தேசிய புலனாய்வு நிறுவனம் உறுதியான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இந்த சோதனை தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் நடைபெற்றது.

    மத்திய அரசு 89 தொழில் குழுமங்களை உருவாக்கி உள்ளது, அவற்றில் 27 தொழில் குழுமங்கள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சுகாதார சேவைகள் கிடைப்பதில் பணக்காரர், ஏழை இடையே இடைவெளி குறைந்துள்ளது.
    • சுகாதார பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவது, முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது.

    அனைவருக்கும் ஆரோக்கிய திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையில் இரண்டு நாள் ஆரோக்கிய மந்தன் என்ற திட்டத்தை மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்

    மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி பாரதி பிரவின் பவார், நித்தி ஆயோக் உறுப்பினர் வினோத் பால், உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத் மற்றும் தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர் எஸ் சர்மா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 


    நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா, மிகப்பெரிய உலகளாவிய பொது சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் மிக முக்கியமான பங்குதாரர்களாக இந்த திட்டத்தின் பயனாளிகள் இருப்பதாக கூறினார்.

    நாட்டில் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 19 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார அட்டை தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் 24 கோடிக்கும் அதிகமான சுகாதார அட்டை எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

    இந்த நடவடிக்கை நாட்டின் சுகாதார பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதில் ஒரு முக்கிய மைல் கல் என்றும் அவர் குறிப்பிட்டார். அனைத்து மக்களுக்கும் சுகாதார சேவைகள் சென்றடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும், நாட்டில் சுகாதார சேவை கிடைப்பதில் பணக்காரர், ஏழைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் இந்த திட்டம் வெற்றி பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.

    • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது.
    • ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்டுபிடிப்புகளை இந்தியா ஆதரித்து வருகிறது.

     பிட்ஸ்பர்க்: 

    அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற உலக தூய்மை எரிசக்தி நடவடிக்கை அமைப்பு கருத்தரங்கில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    போக்குவரத்தில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் நிலையான உயிரி எரிபொருள்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பயோடெக்னாலஜி துறை மூலம் இந்தியா, மேம்பட்ட உயிரி எரிபொருள்கள் மற்றும் கழிவுகளிலிருந்து ஆற்றல் தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்டுபிடிப்புகளை ஆதரித்து வருகிறது.

    நவீன உயிரித் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி மேம்பட்ட நிலையான உயிரி எரிபொருளில் பணிபுரியும் ஒரு இடைநிலைக் குழுவைக் கொண்ட 5 உயிரி ஆற்றல் மையங்களை இந்தியா நிறுவியுள்ளது. காலநிலை மாற்றத்தின் உலகளாவிய சவாலை எதிர்கொள்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது.

    2030 ஆம் ஆண்டில் உமிழ்வு தீவிரத்தை 35% குறைக்கும் இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கத் திட்டத்தை இந்தியாவும் செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • டிஜிட்டல் தொழில்நுட்பம் இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.
    • கொரோனா காலத்தில் நமது பாரம்பரிய மருத்துவ முறை பெரிதும் உதவியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழாவில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டு 274 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார். மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை மந்திரி எல்.முருகன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். விழாவில் பேசிய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளதாவது:

    மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் மூலம் மாநில மொழிகள் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மாராட்டி உள்பட இந்தியாவின் அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்தான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    ஒருவர் தாய்மொழியில் பயிலும்போது சிரமமான பாடங்களையும் எளிதாக கற்க முடியும். மாணவர்கள் படித்து பட்டம் பெறுவதோடு, ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து நபர்களுக்காவது வேலை தரும் வண்ணம் தங்களை முன்னேற்றிக் கொள்ள வேண்டும்.  


    மின்னணு பரிமாற்றத்தில் இந்தியா உலக அளவில் முக்கிய பங்கு வகிக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. 2023 ஆம் ஆண்டிற்குள் ஒன்றரை கோடி கிராமங்கள் ஆப்டிகல் பைபர் சேவையைப் பெறும். நமது நாடு பழமையான கலாச்சாரத்தையும் மருத்துவ முறைகளை கொண்டுள்ளது. கொரோனா காலத்தில் நமது பாரம்பரிய மருத்துவ முறைகள் பெரிதும் உதவிகரமாக இருந்தன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சேரும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்கள் செயல்பட வேண்டும் என மத்திய மந்திரி அறிவுறுத்தினார்.
    • வேளாண்மை துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை மந்திரி ஜான் பெர்லா தலைமையில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் முன்னிலையில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வீடுகள் குறித்தும், பண்ணை குட்டை அமைத்தல், புதிய குளங்கள் அமைத்தல் போன்ற திட்ட பணிகள் குறித்து மத்திய மந்திரி கேட்டறிந்தார்.

    கிராமப் பகுதிகளில் ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான பணிகளை அதிகளவு மேற்கொள்ள திட்டமிட வேண்டும் என அலுவலர்களிடம் தெரிவித்தார். வேளாண்மை துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    விவசாயிகளின் தேவைக்கேற்ப திட்டங்களை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார். மத்திய மந்திரி பேசுகையில், மாணவர்களின் கல்விக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உயர் கல்வி படிக்கின்ற மாணவர்கள் வெளிநாட்டில் படிப்பவர்கள் மற்றும் பிற மாநிலங்களில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உரிய காலத்திற்குள் கல்வி உதவித்தொகை மற்றும் கல்விக் கடன்களை காலதாமதம் இன்றி கிடைக்க அலுவலர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    கல்வியின் வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி வேண்டு மானாலும் மத்திய அரசு வழங்க தயாராக உள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்று சேர்ந்திடும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சேக் மன்சூர், கோட்டாட்சியர்(பொறுப்பு) மரகதநாதன், பரமக்குடி கோட்டாட்சியர் முருகன் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரத்த தானம் செய்ய முன்வருமாறு அனைத்து மக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
    • ஒவ்வொரு இரண்டு வினாடிகளிலும், இந்தியாவில் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது.

    விடுதலை அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் ரத்த தான முகாமை, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். அப்போது அவர் ரத்த தானம் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    விடுதலையின் அமிர்தப்பெருவிழாவைப் போல ரத்த தான அமிர்தப் பெருவிழாவும் பெரிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும். இதையொட்டி நாடு தழுவிய அளவில் நடைபெறும் மெகா தன்னார்வ ரத்த தான இயக்கத்தில் கலந்து கொண்டு, ரத்த தானம் செய்ய முன் வருமாறு அனைத்து குடிமக்களையும் கேட்டுக் கொள்கிறேன். 


    ரத்த தானம் செய்வது தேசிய தேவையை பூர்த்தி செய்யும். ரத்த தானம் செய்வது சமூகத்திற்கும் மனித குலத்திற்கும் ஒரு சிறந்த உன்னதமான சேவையாகும். ஒவ்வொரு இரண்டு வினாடிகளிலும், இந்தியாவில் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. வாழ்நாளில் மூவரில் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது.

    2021 புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் ஆண்டுத் தேவை சுமார் 1.5 கோடி யூனிட்கள். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், ரத்தத்திற்கு மாற்று எதுவும் இல்லை, மேலும் 1 யூனிட் ரத்தம் மூன்று உயிர்களைக் காப்பாற்றும். ஒரு நபரின் உடலில் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. ஒவ்வொரு 90 நாட்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • வருங்கால சந்ததியினருக்கு இயற்கை வளங்களை நாம் அளிக்க வேண்டும்.
    • கடற்கரையை பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது

    பெசன்ட் நகர்:

    சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற கடற்கரை தூய்மை இயக்கம் நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு, கடற்கரையை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

    8 ஆயிரம் கி. மீ. பரந்து விரிந்துள்ள இந்திய கடற்கரையில் எண்ணற்ற வளங்கள் பொதிந்து கிடக்கின்றது. கடலை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடந்து வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பு இருந்த போதும், கடல்சார் பொருட்கள் உற்பத்தி அதிகமாகவே இருந்தது. 


    இத்தகைய கடல் அன்னையை தாய் நாட்டை போன்று போற்றி பாதுகாக்க வேண்டும். வருங்கால சந்ததியினருக்கு இயற்கை வளங்களை நாம் அளிக்க வேண்டும். எனவே கடலை, கடற்கரையை பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. 100வது சுதந்திர தினத்தில் இந்தியா உலகிற்கே வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதை நோக்கி நாம் அனைவரும் உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5ஜி தொலைத் தொடர்பு சேவையில் கதிர் வீச்சு அளவு குறைவாகவே உள்ளது.
    • ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரெயில்களை வடிவமைக்க நடவடிக்கை.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற மாணவர்களுடனான உரையாடல் நிகழ்ச்சியில் பேசிய மத்திய தொலைத் தொடர்புத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், 5ஜி சேவையின் வேகம் 4ஜி சேவையை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்றார்.

    5ஜி ஆய்வகம் சென்னை ஐஐடியில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 5ஜி தொலைத் தொடர்பு சேவையின்போது வெளிப்படும் கதிர் வீச்சின் அளவு உலக சுகாதார ஆணையம் பரிந்துரைந்த அளவை விட குறைவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    நாடு முழுவதும் முதல் கட்டமாக 13 நகரங்கள் 5ஜி சேவையைப் பெற வாய்ப்பு உள்ளதாகவும், அதில் ஒடிசாவும் இருக்கும் என்றும் அவர் கூறினார். ​​தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் தங்கள் சேவையின் தரத்தை மேம்படுத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது என்றும் அவர் குறிபிப்பிட்டார்.

    2023 ஆம் ஆண்டிற்குள் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வகையில் ரெயில்களை வடிவமைக்க முயற்சி நடைபெறுவதாகவும், கதி சக்தி கொள்கையின் மூலம் நாட்டின் இணைக்கப்படாத பகுதிகளை ரெயில்வே மூலம் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    • மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்தால், காற்று மாசு குறையும்.
    • மக்கள் குறைவான கட்டணத்தில் வசதியான பயணத்தை விரும்புகின்றனர்.

    பசுமை மற்றும் தூய்மைப் போக்குவரத்து குறித்து டெல்லியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் சிறப்புரையாற்றிய மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை மந்திரி நிதின்கட்கரி, தனிப்பட்ட வாகன பயன்பாட்டை குறைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றார்.

    பொதுத்துறை மற்றும் தனியார் ஒருங்கிணைப்பில் மின்சார வாகன பொதுப் போக்குவரத்து அமைப்பை, தொழில்ரீதியாக செயல்படுத்தினால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது போன்று லண்டனில் செயல்படும் போக்குவரத்து முறைக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

    மக்கள் குறைவான கட்டணத்தில் அதிக வசதியான பயணத்தை விரும்புவதாக அவர் கூறினார். போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை சரி செய்யவும், பயணத்தை எளிதாக்கவும், கைகளால் பயணச்சீட்டு தரும் முறைக்கு பதிலாக, அட்டை அல்லது க்யூஆர் குறியீடு முறையிலான பயணச்சீட்டை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

    மின்சார வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்தால், காற்று மாசு குறைவதுடன், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும் என்றும் அவர் தெரிவித்தார். 15 லட்சம் கோடியில் ஆட்டோமொபைல் துறையை உருவாக்க அரசு முயற்சித்து வருவதாகவும், இது 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் மந்திரி நிதின் கட்கரி கூறினார்.

    பொருளாதார நம்பகத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சிக்கு மாற்று எரிபொருள் மற்றும் போக்குவரத்துத் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    • தொலைத் தொடர்பு சேவையின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.
    • எதிர்காலத்துக்கு ஏற்ற தொலைத் தொடர்பு சட்டம் அவசியம்.

    டெல்லியில் நடைபெற்ற தொலைத் தொடர்பு கள அலுவலர்கள், அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளின் மாநாட்டில் உரையாற்றிய மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளதாவது:

    டிஜிட்டல் பொருளாதாரத்தின் உலகளாவிய டிஜிட்டல் உள்ளடக்கத்தில் தரமான தொலைத்தொடர்பு இணைப்பு அவசியம். தொழில்துறை மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து, தொலைத் தொடர்புத்துறை அலுவலர்கள் பணியாற்றினால் மட்டுமே தொழில்நுட்பத்தின் மாறும் தன்மைக்கு ஏற்றவாறு தொலைத்தொடர்புத் துறையை முன்னெடுத்துச் செல்ல முடியும்

    நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தொலைத்தொடர்பு இணைப்பை உறுதி செய்தல், சேவையின் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை இலக்காக கொண்டு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் பழங்கால தொலைத் தொடர்பு சட்டங்களுக்கு பதிலாக வலுவான மற்றும் எதிர்காலத்துக்கு ஏற்ற சட்டம் அவசியம். இது தொடர்பான வரைவு அறிக்கை, பொது மக்களின் கருத்துக்களுக்காக விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார்.
    • பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்

    கன்னியாகுமரி:

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை மந்திரி ஜெனரல் வி.கே.சிங் இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதுரை வருகிறார்.

    பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார். மாலை 4 மணிக்கு கன்னியாகுமரியில் குமரி மாவட்ட விதான் சபா பிரகாஷ் யோஜனா கமிட்டி உறுப்பினர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடுகிறார். இரவு கன்னியாகுமரியில் தங்குகிறார். நாளை காலை 6 மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசிக்கிறார். அதன் பிறகு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தனிப்படகில் சென்று பார்வையிடுகிறார்.

    10 மணிக்கு கார் மூலம் நாகர்கோவில் புறப்பட்டு செல்கிறார். அங்கு காலை 11 மணி முதல் 12 -30 மணி வரை முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். அதன் பிறகு மாலை 3-30 மணிக்கு தக்கலை புறப்பட்டு செல்கிறார். அங்கு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.அதன்பிறகு மீண்டும் கன்னியாகுமரி வருகிறார்.நாளை மறுநாள் (16-ந்தேதி) காலை 9 மணிக்கு அவர் கார் மூலம் மதுரை புறப்பட்டு செல்கிறார்.

    ×