என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 235761"
- பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம்
- தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
நாகர்கோவில் :
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிக்க விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் பின்வரும் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம்தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம்(ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளை யாட்டுக்கள் மட்டும்), பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் ஆகும். இதற்கு தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுபோட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் இந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான வின்ணப்பங்கள் இதற்கென அரசால் அமைக்கப் பட்ட உயர்மட்ட குழு மூலம் ஆய்வு செய்யப்ப டும். அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இறுதி யாக தேர்ந்தெடுக்கப்படும் விண் ணப்பதாரர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவர். அதிக பட்சம் விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு 2 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படும்.
இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்புமுள்ள விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை வருகிற 20-ந்தேதி மாலை 5 மணிக்குள் சமப்பிக்க வேண்டும். தபால் மற்றும் நேரடி விண்ணப் பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது.
மேற்காணும் 3 திட்டங்களுக்கு கடந்த 30.11.2022 முதல் 22.12.2022 வரை ஏற்கனவே, விண்ணப்பங்களை விண்ணப்பித்தவர்கள் கடந்த 4 மாதங்களில் பெற்ற பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி விவரங்களை ஏற்கெனவே உள்ள தங்களு டைய பதிவு கணக்கு மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தகவல் மையம் எண்களான 95140 00777 மற்றும் 78258 83865 தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தார்.
- முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாகரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.
திருப்பூர் :
மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் 2022-23 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள்வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள்மற்றும் வணிக வளாகங்களுக்கு "மஞ்சப்பை விருதுகள்" வழங்கப்படும் எனஅறிவித்தார்.
இதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக்கைப்பபைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணி பை)போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டைஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள்மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இவ் விருதுகள் வழங்கப்படும். விருதுபெறுவோர்களுக்கு, முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாகரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.
இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால், பிளாஸ்டிக்இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள்,கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என திருப்பூர் மாவட்டவிண்ணப்பிக்கலாம் வினீத் தெரிவித்துள்ளார்.
இதற்கான விண்ணப்பப் படிவங்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகஇணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபர்-நிறுவனத்தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு பிரதிகள் இரண்டினை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 01.05.2023 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஓட்டல் மேலாண்மை படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் தெரிவித்துள்ளார்.
மதுரை
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் பி.எஸ்.சி. (ஓட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி), டிப்ளமோ இன் புட் ப்ரொடக்ஷன், உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர் ஆகிய படிப்புகளுக்கு விண்ண ப்பங்கள் வரவேற்கப்ப டுகின்றன. எனவே 10, 12-ம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்ற, குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு மிகாத மாணவ மாணவிகள் விண்ணப்பி க்கலாம்.
படிப்பு முடிந்தவுடன் நட்சத்திர விடுதிகள், விமானம்-கப்பல் மற்றும் உயர்தர உணவக ங்களில் வேலை வாய்ப்பு பெற்று தரப்படும்.
பி.எஸ்.சி. (ஓட்டல் மேலா ண்மை) பட்டபடிப்புக்கு NCHM JEE பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த நுழைவு தேர்வுக்கான பயிற்சி சென்னையில் தாட்கோ மூலம் வழங்கப்படும். இதற்காக மாணவ- மாணவிகள் வருகிற 27-ம் தேதிக்குள் www.tahdco.com இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். படிப்புக்கான செலவி னத்தை தாட்கோ ஏற்றுக்கொள்ளும். ஓட்டல் மேலாண்மை படிப்பு முடித்தவர்களுக்கு ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000 முதல் ரூ.35,000/- வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றபடி ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை பதவி உயர்வு அடிப்படையில் மாத ஊதியம் பெறலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் தெரிவித்து உள்ளார்.
- கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
- பணியாளர்கள் நலவாரியம் அமைக்க அரசு ஆணையிடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி:
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள், தொழு நோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்களின் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றம் கல்வி மேம்பாட்டிற் காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உப தேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் அமைக்க அரசு ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த நலவாரியத்தில் உறுப்பினராக சேருவ தற்கான விண்ணப்பப் படி வங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபனை் மையினர் நல அலுவல கங்கள், மாவட்ட சிறு பான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட ரோமன் கத்தோலிக் திருச் சபை அதன் பேராயர்கள் மற்றும் ஆயர்கள், புராட்ட ஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயர்கள், சினாட் ஆப் பெண்டகோஸ்டல் சர்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய் யப்பட்ட திருச்சபைகளிட மிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்காணும் திருச்சபை களின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பி னர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
மேலும் இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பி னர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழி லாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறையின் கட்டுப் பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங் கப்பட்டு வரும் நலத் திட்டங்கள் போன்றே வழங்கப்படும்.
கல்வி உதவித்தொகை 10-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ. பாலிடெக்னிக் படிப்பு, தொழிற்கல்வி பட்டப்படிப்பு வரை, விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ.1 லட்சமும், விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை, இயற்கை மரணம் உதவித் தொகை ரூ.20 ஆயிரமும், ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ. 5 ஆயிரமும், திருமண உதவித் ெதாகை ஆண்களுக்கு ரூ. 3 ஆயிரம் (ம) பெண்களுக்கு ரூ.5 ஆயிரம், மகப்பேறு உதவித்தொகை ரூ.6 ஆயிரம் மற்றும் கருச்சிதைவு, கருக்கலைப்பு உதவித் தொகை ரூ. 3 ஆயிரம், கண் கண்ணாடி உதவித்தொகை ரூ.500, முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும்) ரூ.1,000 வழங்கப்படும்.
மேலும், விவரங்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கூடுதலாக புதிய தொழில் பிரிவுகள் துவங்கிக் கொள்ள விண்ணப்பிக்கலாம்.
- ஐ.டி.ஐ.கள் இல்லாத நிலையில் ஒரு புதிய தனியார் தொழிற்பயிற்சி நிலையம் துவங்கலாம்.
திருப்பூர் :
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பயிற்சிப் பிரிவின், வாழ்வியல் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் வழிகாட்டுதலின்படி புதிய தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் துவங்குவ தற்கும்மற்றும்செயல்பட்டுக்கொண்டிருக்கும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் கூடுதலாக புதிய தொழில் பிரிவுகள் துவங்கிக் கொள்ள கீழ்காணும் வகைபாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம்.
மாவட்டத்தின் வட்டாரங்களில் ஐ.டி.ஐ.கள் இல்லாத நிலையில் ஒரு புதிய தனியார் தொழிற்பயிற்சி நிலையம் துவங்கலாம்.பயிற்சி வழங்கும் விதமாகஅனைத்து துறைகளிலும் நடைபெற்று க்கொண்டிருக்கும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி ஐ.டி.ஐ.கள், 4-பிரிவுகளுக்கு குறைவாக இருக்கும் நிலையில் புதிய தொழில் பிரிவுகள் துவங்க www.nimionlineadmission.in/iti என்ற இணையதளத்தில் வருகிற 25-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 400ம், பட்டதாரிகளுக்கு ரூ. 600 வீதம் மூன்றாண்டு காலத்திற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
- விண்ணப்பத்தில் வயது வரம்பு, தகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் நலனுக்காக மாதம் ஒன்றுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ. 200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 300ம், மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 400ம், பட்டதாரிகளுக்கு ரூ. 600 வீதம் மூன்றாண்டு காலத்திற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதே போல், மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு நிறைவு செய்துள்ள பதிவுதாரர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முறையே ரூ.600, ரூ. 750, ரூ. 1000 வீதம் மாதம் ஒன்றுக்கு வழங்கப்படுகிறது.
இந்த உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை இணைதளத்தில் இருந்து விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது வேலைவாய்ப்பு அட்டையுடன் விண்ணப்ப படிவத்தினை நேரிலும் பெற்று கொள்ளலாம்.
விண்ணப்பத்தில் வயது வரம்பு, தகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், விண்ணப்பத்துடன், அனைத்து கல்வி சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, புகைப்படம், ஆதார் கார்டு, குடும்ப அட்டை மற்றும் தேசியமாக்கப்பட்ட வங்கியின் கணக்கு புத்தகம் உள்ளிட்டவையின் நகல்கள் இணைத்து, மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம், வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் சமர்பிக்க வருகிற 30-ந் தேதி கடைசி நாளாகும். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவராக இருப்பின் சுய உறுதிமொழி ஆவணம் சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 7,200-க்கும் மேற்பட்டோர் மாதாந்திர ஓய்வூதியம் பெறுகின்றனர்.
- ஆயுள் சான்றை உரிய ஆவணங்களை பதிவேற்றி இணைய வழி விண்ணப்பிக்க வேண்டும்.
ஈரோடு:
கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலா ளர்கள் தொடர்பான 18 அமைப்புசாரா தொழிலா ளர்கள் நலவாரியங்களில் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் போன்ற அனைத்து விண்ணப்பங்க ளும் tnuwwb.tn.gov.in என்ற தொழிலாளர் துறை இணைய தளம் வாயிலாக பெறப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் இந்நலவாரியங்களில் 60 வயது நிறைவடைந்த 7,200-க்கும் மேற்பட்டோர் ஓய்வூதியதாரர்களாக மாதாந்திர ஓய்வூதியம் பெறுகின்றனர்.
ஆண்டு தோறும் ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றை உரிய ஆவணங்களை பதிவேற்றி இணைய வழி விண்ண ப்பிக்க வேண்டும்.
2023–-24-ம் ஆண்டுக்காக வரும் 30-ந் தேதிக்குள் https://tnuwwb.tn.gov.in/applicationlives/applicationlive என்ற இணைய தள முகவரியில் சமர்பிக்க வேண்டும்.
ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, ஓய்வூதிய உத்தரவு நகல், புகைப்படம்–1, வங்கி புத்தக நகல், நடப்பு மாதம் வரை வரவு–செலவு பரிவர்த்தனை விபரம் அடங்கிய விபரங்களை பதிவு பெற்ற தொழிற்சங்கம் அல்லது இ–சேவை மையம் அல்லது சி.எஸ்.சி. கணினி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலக தொலைபேசி எண்:0424-2275591, 2275592 மூலம் அல்லது அலுவலக மின்னஞ்சல்: losserode@gmail.com மூலம் தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை, தொழிலா ளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகேசன் வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- சிவகங்கை மாவட்டத்தில் மணிமேகலை விருது பெற சமுதாய அமைப்பினர் விண்ணப்பிக்கலாம்.
- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்திலோ அல்லது 04575- 240962 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சரின் ஆணையின்படி 2022-23-ம் ஆண்டிற்கு ஊரக மற்றும் நகர்புறங்களில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் அமைப்புகளுக்கு தமிழக அரசால் மணிமேகலை விருது வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டிற்கு மணிமேகலை விருதுக்கு தகுதியான மேற்கண்ட சமுதாய அமைப்புகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த விருதிற்கு தகுதியான சமுதாய அமைப்புகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகில் 25.4.2023-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சிவகங்கையில்உள்ள திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்திலோ அல்லது 04575- 240962 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் போட்டி தேர்வு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
- பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ மூலமாக இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவினை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் 2023-ம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டி அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், 11 ஆயிரம் காலி அரசு பணியிடங்கள் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்வில் ஆதிதிரா விடர், பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ மூலமாக இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில் சேர 18 முதல் 32 வயது வரை உள்ள 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிக்கேற்ப ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம்முதல் ரூ.22 ஆயிரம் வரை வழங்கப்படும். மேற்கண்ட தேர்வுக்கு ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராணுவத்தில் சேர ஆன்லைன் பதிவு தேதி நீட்டிக்கப்பட்டது.
- விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டை அல்லது 10-ம் வகுப்பு சான்றிதழை பயன்படுத்தி பதிவு செய்யலாம்.
ராமநாதபுரம்
திருச்சி மண்டல ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலர் தீபக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
இந்திய ராணுவம் ஜீனியர் கமிஷன் அதிகாரிகள்/பிற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறையில் மாற்றங்களை அறிவித்துள்ளது. முதல் கட்டத்தில் joinindianarmy.nic.in (இந்திய ராணுவத்தில் சேரவும்) இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைனில் விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களும் பொது நுழைவுத்தேர்வுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
2-ம் கட்டத்தில் பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் அந்தந்த ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகங்களால் தீர்மானிக்கப்பட்ட இடங்களில் ஆட்சேர்ப்பு பேரணிக்கு அழைக்கப்படுவார்கள். அங்கு அவர்கள் உடல்தகுதி சோதனைகள் மற்றும் உடல் அளவீட்டு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். இறுதியாக 3-ம் கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பேரணி நடைபெறும் இடத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்திய ராணுவத்தில் சேர இணையதளத்தில் ஆன்லைன் பதிவு 20.3.2023 வரை இருந்த நிலையில் தற்பொழுது 31.3.2023 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. புதிவு செய்யும் செயல்முறை முந்தையதைப்போலவே உள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டை அல்லது 10-ம் வகுப்பு சான்றிதழை பயன்படுத்தி பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராமநாதபுரம் மாவட்ட மானிய விலையில் மின் மோட்டார் பெற ஆதிதிராவிட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
2022-23-ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயி களுக்கான துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.
இந்த திட்டத்தில் மின் மோட்டார் குதிரைத்திற க்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 3 லட்சத்து 60 ஆயிரம் மானியத்தில் ஆதிதிராவிட விவசாயிகள் 900 பேருக்கும், பழங்குடியின விவசாயிகள் 100 பேருக்கும், மொத்தம் 1000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பத்திருக்க வேண்டும். துரித மின் இணைப்புத் திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5 குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.2.50 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.2ஆயிரமும் 7.5 குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ. 2.75 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத் தொகை ரூ. 27 ஆயிரத்து 500-ம் 10 குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம்
ரூ. 3 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ. 30, ஆயிரமும் 15 குதிரைத்திறன் மின் இணைப்புக்கட்டணம் ரூ. 4 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.40 ஆயிரத்திற்கான வங்கி வரைவோலை அளிப்பவர்களுக்கு முன்னு ரிமை அளிக்கப்படும். தகுதியில் லாத விண்ணப்பத்தாரர்கள் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும்.
கடந்த 2017 முதல் 2022 ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும் தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 சதவீத பயனாளி பங்குத்தொ கையுடன் புதியதாக விண்ணப்பிக்குமாறு ேகட்டுக்கொள்ளப் படுகிறது. ஏற்கனவே மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தொழில் நல்லுறவு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு
பெரம்பலூர்:
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்க வேலை அளிப்பவர், தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொழிலாளர் உதவி ஆணையர் மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் விவரம் வருமாறு:- பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் வேலை அளிப்பவர்கள் மற்றும் ெதாழிலாளர்கள் இடையே தொழில் அமைதியையும் நல்ல தொழில் உறவையும் பேணிப்பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு ெதாழில் நல்லுறவு பரிசுத்திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
நல்ல தொழில் உறவை பேணிப் பாதுகாக்கும் வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017, 2018, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட முத்தரப்பு குழு தேர்ந்தெடுக்கும். இந்த விருதுக்குரிய விண்ணப்ப படிவங்களை தொழிலாளர் துறையின் வலைதளத்தில் http/www.labour.tn.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்