search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்"

    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • நெதர்லாந்து தனது முதல் போட்டியில் வங்காளதேசத்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டி தொடரில் தற்போது சூப்பர்12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று 2-வது போட்டியில் இந்தியா நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நெதர்லாந்து தனது முதல் போட்டியில் வங்காளதேசத்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோர்க்கியா 4 விக்கெட்டும் ஷம்சி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
    • ரோசோவ் மற்றும் டிகாக்கின் அதிரடியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது.

    South Africa won by 104 runs

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்கா - வங்காள தேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.

    ரோசோவ் மற்றும் டிகாக்கின் அதிரடியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வங்காள தேசம் அணி களமிறங்கியது.

    நோர்க்கியா மற்றும் ஷம்சியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வங்காளதேசம் அணி 101 ரன்னில் சுருண்டது. அதிகப்பட்சமாக தாஸ் 34 ரன்கள் எடுத்தார். கேப்டன் சகீப் அல் ஹசன் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோர்க்கியா 4 விக்கெட்டும் ஷம்சி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    • அயர்லாந்து அணி 19.2 ஓவரில் 157 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது.
    • இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்தது.

    மெல்போர்ன்:

    மெல்போர்னில் இன்று நடந்த ஆட்டத்தில் குரூப்1 பிரிவில் உள்ள இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதின

    மழையால் ஆட்டம் தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. மழை விட்ட பிறகு 45 நிமிட நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது. ஆனால் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை.

    இங்கிலாந்து கேப்டன் ஜாஸ்பட்லர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அயர்லாந்து கேப்டன் பல் பிரீனும், பால் ஸ்டிர்லிங்கும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் ஓவரில் அயர்லாந்து அணியால் 3 ரன்களே எடுக்க முடிந்தது.

    2-வது ஓவர் வீசப்பட்ட போது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 9 பந்துகள் வீசப்பட்ட நிலையில் மழையால் ஆட்டம் மீண்டும் தடைபட்டது.

    மழை விட்டதும் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இங்கிலாந்து வீரர்கள் பந்து வீச்சு நேர்த்தியாக இருந்தது. கேப்டன் பல்பிரீன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார்.

    அயர்லாந்து அணி 19.2 ஓவரில் 157 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு 158 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    பால்பிரீன் அதிகபட்சமாக 47 பந்தில் 62 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), டக்கர் 27 பந்தில் 34 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார்.

    இங்கிலாந்து தரப்பில் மார்க்வுட், லிவ்விங்ஸ்டோன் தலா 3 விக்கெட்டும், சாம்கரண் 2 விக்கெட்டும் பென்ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டம் கைப்பற்றினர்.

    158 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து ஆடியது. கேப்டனும், தொடக்க வீரருமான பட்லர் முதல் ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த அலெக்ஸ் 7, பென் ஸ்டோக்ஸ் 6, ப்ரோக் 18, மலான் 35 ரன்னில் வெளியேறினர். இதனால் இங்கிலாந்து அணி 13.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து மொய்ன் அலி மற்றும் லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்தனர். மொய்ன் அலி அதிரடியாக விளையாடி 12 பந்தில் 24 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். அப்போது மழை குறுக்கிட்டது. இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி அயர்லாந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    • பாகிஸ்தானுடன் நாங்கள் அதிகமாக கிரிக்கெட் விளையாடவில்லை.
    • இந்தப் போட்டி இரு நாட்டு மக்களுக்கும் முக்கியமானதாகும்.

    பெர்த்:

    20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 16-ந் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. 16 நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டி நவம்பர் 13 வரை நடைபெறுகிறது.

    ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி 'சூப்பர் 12' சுற்றில் நேரடியாக விளையாடுகிறது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் அக்டோபர் 23-ந் தேதி மோதுகிறது.

    தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் மற்றும் முதல் சுற்றில் இருந்து நுழையும் 2 அணிகள் ஆகியவற்றுடன் இந்தியா விளையாடுகிறது.

    20 ஓவர் உலகக்கோப்பைக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலியா (17-ந் தேதி), நியூசிலாந்துடன் (19- ந் தேதி) பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

    இந்தநிலையில் ஆஸ்திரேலியா லெவனுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு தமிழக வீரர் ஆர்.அஸ்வின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது பாகிஸ்தானுடனான போட்டி குறித்து கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தானுடன் நாங்கள் அதிகமாக கிரிக்கெட் விளையாடவில்லை. இந்தப் போட்டி இரு நாட்டு மக்களுக்கும் முக்கியமானதாகும். ஆட்டத்தின் வெற்றி, தோல்வி என்பது ஒரு பகுதியாகும்.

    20 ஓவர் போட்டியை பொறுத்தவரை ஆட்டத்தின் முடிவு மிகவும் நெருக்கமானதாக இருக்கும்.

    நாங்கள் பாகிஸ்தான் அணிக்கு மதிப்பு அளிக்கிறோம். அது போலத்தான் அவர்களும் மரியாதை கொடுக்கிறார்கள்.

    ரமீஸ்ராஜா இது தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் எனக்கு தெரியாது.

    இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.

    பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ்ராஜா பாகிஸ்தானை இந்தியா மதிக்க தொடங்கி விட்டது என்ற கருத்துக்கு அஸ்வின் இந்த பதிலை அளித்துள்ளார்.

    • ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதால் அழுத்தம் இருப்பதாக ஒரு சில புகார் உள்ளது.
    • நான் ஒரு விவசாயி. ஆனால் விளையாட்டை ரசித்து மிகவும் அனுபவித்து ஆடினேன்.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்த போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. உலகக்கோப்பைக்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    வேகப்பந்து வீரர் பும்ரா, ஆல் ரவுண்டர் ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக 20 ஓவர் உலகக்கோப்பையில் ஆடவில்லை. முன்னணி வீரர்களான இருவரும் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. உலகக்கோப்பைக்கான மாற்று வீரர்கள் பட்டியலில் இருந்த தீபக் சாஹரும் காயம் அடைந்துள்ளார். அதிகமான போட்டிகளில் விளையாடுவதால் வீரர்கள் காயத்தில் சிக்குவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அதிக அழுத்தம் இருப்பதாக உணரும் வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாட வேண்டாம் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதால் அழுத்தம் இருப்பதாக ஒரு சில புகார் உள்ளது. அதனை சிலர் வெளிப்படையாக தொலைக்காட்சியில் சொல்லி நான் பார்த்து உள்ளேன். இதனால் அவர்களுக்கு இதனை சொல்லிக்கொள்கிறேன்.

    ஐ.பி.எல்.லில் ஆடுவதால் வீரர்கள் மீது அதிக அழுத்தம் இருப்பதாக சொல்கிறார்கள். அழுத்தமாக உணர்ந்ததால் வீரர்கள் ஐ.பி.எல்.லில் விளையாட வேண்டாம் என்று நான் சொல்லிக்கொள்கிறேன்.

    வீரர்கள் கிரிக்கெட்டை ரசித்து ஆடினால் அழுத்தம் இருக்காது. மன அளவிலான சோர்வு குறித்து என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் ஒரு விவசாயி. ஆனால் விளையாட்டை ரசித்து மிகவும் அனுபவித்து ஆடினேன். கிரிக்கெட் அழுத்தம் இருப்பதாக நான் உணர்ந்தது இல்லை. வீரர்களும் விளையாட்டை ரசித்து ஆடினால் அழுத்தம் எதுவும் இருக்காது.

    இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.

    • டி20 உலகக்கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.
    • இதில் 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

    8-வது டி 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலகக்கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

    இந்த நிலையில் இந்த உலகக்கோப்பை தொடருக்கான கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இளம் வீரரான மைக்கேல் பிரேஸ்வெல் இடம் பிடித்துள்ளார். 

    நியூசிலாந்து அணி:

    கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிம் சவுத்தி, இஷ் சோதி, மிட்செல் சான்ட்னர், க்ளென் பிலிப்ஸ், ஜிம்மி நீஷம், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, மார்ட்டின் கப்டில், லாச்லன் பெர்குசன், டெவோன் கான்வே, மார்க் சாப்மேன், மைக்கேல் பிரேஸ்வெல், டிரென்ட் போல்ட், பின் ஆலன்.

    • 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி அக்டோபர்-நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
    • அணியில் திறமையான வீரர்கள் இருப்பதால் விராட் கோலியின் இடம் கேள்வி குறியாகவே இருக்கிறது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் ஆட்டம், 20 ஓவர்) உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலித்த அவர் தற்போது ரன் குவிக்க முடியாமல் திணறுகிறார்.

    ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 35 ரன் எடுத்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதாவது அவரது ஆட்டம் முன்புபோல் அதிரடியாக இல்லை. இதனால் விமர்சிக்கப்பட்டுள்ளார்.

    தனது பேட்டிங்கை சீர் செய்ய அவர் ஏதாவது ஒரு வகையான போட்டியில் இருந்து ஓய்வுபெற வாய்ப்புள்ளது. 20 ஓவர் அதிரடியான ஆட்டம் என்பதால் அதில் இருந்து விலகலாம் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

    20 ஓவர் உலகக்கோப்பை போட்டி அக்டோபர்-நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கு பிறகு விராட் கோலியை 20 ஓவரில் இருந்து விடுவிப்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளது.

    அணியில் திறமையான வீரர்கள் இருப்பதால் அவரது இடமும் கேள்வி குறியாகவே இருக்கிறது.

    • கடந்த பிப்ரவரி மாதம் ஓமனில் நடந்த தகுதி சுற்று மூலம் அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தகுதி பெற்றன.
    • உலகக்கோப்பை போட்டிக்கு கடைசி இரு அணிகளாக ஜிம்பாப்வேயும், நெதர்லாந்தும் நுழைந்தன.

    புலவாயோ:

    8-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

    இந்தப் போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, 2021 போட்டியின் முடிவின்படி 'டாப் 11' அணிகளான இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நமீபியா, ஸ்காட்லாந்து ஆகியவை நேரடியாக தகுதி பெற்றன.

    எஞ்சிய 4 நாடுகள் தகுதி சுற்று மூலம் தேர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் ஓமனில் நடந்த தகுதி சுற்று மூலம் அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தகுதி பெற்றன.

    இந்தநிலையில் உலகக்கோப்பை போட்டிக்கு கடைசி இரு அணிகளாக ஜிம்பாப்வேயும், நெதர்லாந்தும் நுழைந்தன. ஜிம்பாப்வேயில் நடந்த தகுதி சுற்றில் இந்த இரு அணிகளும் அரை இறுதியில் வெற்றி பெற்றதால் வாய்ப்பை பெற்றன. ஜிம்பாப்வே அணி 27 ரன்னில் பப்புவா நியூ கினியாவையும், நெதர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவையும் வீழ்த்தியது.

    உலகக்கோப்பையில் விளையாடும் 16 நாடுகளில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக 2-வது சுற்றில் (சூப்பர்-12)விளையாடும். முதல் சுற்றில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய 8 அணிகள் விளையாடும். இதில் இருந்து 4 நாடுகள் 'சூப்பர் 12' சுற்றுக்கு முன்னேறும்.

    • 2021 டி20 உலகக்கோப்பையில் முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • மெல்போர்னில் நடக்கும் போட்டியை சுமார் 1,50,000 ரசிகர்கள் பார்ப்பார்கள்.

    2022-ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தயார்ப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வெளிநாட்டு தொடர்களில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்த முறை இந்திய அணியை வீழ்த்துவது பாகிஸ்தான் அணிக்கு எளிதாக இருக்காது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து சோயிப் அக்தர் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்துவது பாகிஸ்தான் அணிக்கு சவாலாக இருக்கும்.

    2021 டி20 உலகக்கோப்பையில் முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா இந்த முறை சரியான திட்டமிடலுடன் வரும்.


    இப்போதே போட்டி முடிவுகளை கணிப்பது கடினம். ஆனால் மெல்போர்ன் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் பாகிஸ்தான் இரண்டாவது பந்து வீச வேண்டும்.

    இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளை காண இந்த முறை ரசிகர்கள் அதிகளவில் வருவார்கள் என்று நம்புகிறேன். மெல்போர்னில் நடக்கும் போட்டியை சுமார் 150,000 ரசிகர்கள் பார்ப்பார்கள். அதில் 70,000 பேர் இந்திய ரசிகர்களாக இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 

    • தீபக் ஹூடாவை போன்ற நடு வரிசையில் விளையாடக் கூடிய ஒருவர் இந்திய அணிக்கு தேவை.
    • தீபக் ஹூடா தனது ஆப்-ஸ்பின் மூலமும் அணிக்கு நன்றாக செயல்பட முடியும்.

    மும்பை:

    20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற அக்டோபர் மாதம் 16-ந்தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இப்போட்டி தொடருக்கான இந்திய அணியில் யார்-யார் இடம் பெற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக இந்திய அணி முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டி தொடரில் சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடா அயர்லாந்து தொடரில் ஒரு கவன ஈர்ப்பை பெறுவார் என்று எதிர்பார்க்கிறேன். தீபக் ஹூடாவை போன்ற நடு வரிசையில் விளையாடக் கூடிய ஒருவர் இந்திய அணிக்கு தேவை. இது மிகவும் கடினமான பணி. அதை ஐ.பி.எல்.லின் தீபக் ஹூடா அற்புதமாக செய்தார். அவர் இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

    வறண்ட ஆடு களத்தில் முக்கியமான சூழ்நிலைகளில் தீபக் ஹூடா தனது ஆப்-ஸ்பின் மூலமும் அணிக்கு நன்றாக செயல்பட முடியும். அவரை 20 ஓவர் உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்றார்.

    ×