என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 237733"
- சிவகுமார் தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருந்தார்.
- கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மேவாணி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 22). கூலி தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் ஒரு இளம்பெண்ணை அவரது வீட்டுக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து விசாரித்தனர்.
அப்போது அந்த பெண்ணுக்கு திருமணமாகி 20 நாட்கள் தான் ஆகிறது. அந்த பெண் அவரது கணவருடன் வாழ பிடிக்காமல் சிவகுமா ருடன் வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சிவகுமார் அந்த பெண்ணை அவரது தாய் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டார்.
அதன் பிறகு அவர் வீட்டுக்கு வரவில்லை. அவரை அவரது உறவினர்கள் தேடி வந்தனர். அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை.
இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் உள்ள வேப்பமரத்தில் சிவகுமார் தூக்குபோட்டு தொங்கி கொண்டு இருந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குடும்ப பிரச்சினையால் விரக்தி
- போலீசார் விசாரணை
தூசி:
வெம்பாக்கம் தாலுகா சுருட்டல் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா. இவருக்கும் செய்யாறு தாலுகா தூசி அருகே கூழ மந்தல் கிராமம் சிவப்பிரகாசம் நகர் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி பாலமுருகன் என்பவருக் கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக பாலமுருகன் 2 நாட்க ளாக வீட்டில் பேசாமல் இருந்துள் ளார். நேற்று முன்தினம் ரஞ்சிதா தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்தநிலை யில் தூக்கில் தொங்கியபடி பாலமுரு கன் ரஞ்சிதாவுக்கு செல்போனில் படம் அனுப்பி உள்ளார். இதை கண்ட ரஞ்சிதா அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் உறவி னர்களுக்கு போன் செய்து உடனே வீட்டிற்கு சென்று பார்க் கும்படி கூறினார். அவர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கியபடி இருந்த பாலமுருகனை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ரஞ்சிதா தூசி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சுரேந்திரன் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார்
- பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுரேந்திரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்
ஈரோடு,
ஈரோடு மூலப்பாளையம் பாரதிபாளையம் முதல் வீதியை சேர்ந்தவர் சுரேந்திரன் (வயது 58). ஈரோடு சம்பத்நகர் உழவர் சந்தையில் வேளாண்மை உதவி அதிகாரியாக பணியாற்றி வந்த அவர் கடந்த செப்டம்பர் மாதம் விருப்ப ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில் சுரேந்திரன் உடல் நலக்குறை–வால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் கடந்த சில நாட்களாகவே மனஉளைச்சலுடன் காணப்பட்டார்.
கடந்த 9-ந் தேதி இரவில் சுரேந்தின் வீட்டின் படுக்கை அறைக்குள் சென்று தூங்க சென்றார். மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த இருந்த குமுதா நேற்று முன்தினம் காலையில் எழுந்து பார்த்தார்.
அப்போது சுரேந்திரன் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுரேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுரேந்திரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குழந்தை இல்லை.இது தொடர்பாக வேல்முருகன் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
- இந்நிலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி,
தருமபுரியை அடுத்த குமாரசாமிபேட்டை சத்யா நகரை சேர்ந்தவர் மாது. இவரது மகன் வேல்முருகன் (வயது 34).தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ரேகா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு குழந்தை இல்லை.இது தொடர்பாக வேல்முருகன் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது தந்தை மாது கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விரைந்து வந்து வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சந்தோஷ்குமாருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.
- சந்தோஷ்குமாரின் மனைவி அவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே அன்னூர் சாலை கருப்பராயன் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சந்தோஷ்குமார் (27). சந்தோஷ்குமாருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இதையடுத்து அவர் தனது மனைவியுடன் அன்னூர் சாலையில் உள்ள டேங்க் மேடு பகுதியில் தனியாக குடியிருந்து வந்தார்.இதனிடையே சந்தோஷ்குமாரின் மனைவி அவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட சந்தோஷ் குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சந்தோஷ்குமார் உடலை கைப்பற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கணவன்- மனைவி தகராரில் விபரீதம்
- போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38), ஆட்டோ டிரை வர். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, திரு வண்ணாமலை அருணாச லேஸ்வரர் கோவிலுக்கு விர தம் இருந்து நடைபயணம் செல்வதற்காகரமேஷ் மாலை அணிந்தார். ஆனால் சிலகாரணத்தினால் மனைவிக்கு தெரியாமல் அவர் மாலையை கழற்றியதாக கூறப்படுகிறது.
இதன்காரணமாக கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த கவிதா நேற்று முன்தினம் வீட்டின் அறைக்குள் சென்று தூக்குப் போட்டு கொண்டார்.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்தூர் டவுன் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.
- பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மதனகோபாலபுரம் ஆரோக்கியா நகரை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சக்தி பிரசாத் (வயது 25). பட்டதாரியான இவர் கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும் அவரிடம், அவரது பெற்றோர் அவ்வவ்போது சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த 2 நாட்களாக வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் குடும்பத்தினருடன் சக்தி பிரசாத் தூங்கினார். நேற்று அதிகாலை 4 மணியளவில் மணி எழுந்து வந்து பார்த்த போது மகன் சக்தி பிரசாத்தை காணவில்லை. இதனால் அவர் அருகே உள்ள இடங்களுக்கு மகனை சென்று தேடியுள்ளார். அப்போது வீட்டின் அருகே மணிக்கு சொந்தமான மாவு மில்லில் சக்தி பிரசாத் சேலையால் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் குடும்பத்தினர் உதவியுடன் சக்தி பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சக்தி பிரசாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனவேதனை அடைந்த குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
- தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் குமார் உடல் பிரேத பரிசோதனை முடிந்து இன்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
ஈரோடு:
ஈரோடு செங்கோடம்பாளையம் ராஜீவ்நகரை சேர்ந்தவர் குமார் (வயது 39). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.
அதன்பிறகு குமார் தனது அறைக்கு தூங்க சென்று விட்டார். காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்து அவரது குடும்பத்தினர் கதவை தட்டி உள்ளனர். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. இதனையடுத்து குடும்பத்தினர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனவேதனை அடைந்த குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் குமார் உடல் பிரேத பரிசோதனை முடிந்து இன்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
- கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம்.
- அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொண்டலாம்பட்டி:
சேலம் அம்மாபேட்டை சோழன் மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). ஆட்டோ டிரைவரான இவருக்கு ரேகா (37) என்ற மனைவி உள்ளார். கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று மாலை வழக்கம் போல் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த சுரேஷ் பொன்னம்மாபேட்டை புது தெருவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று தூக்குப்போட்டு கொண்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் சுரேஷ் இறந்து விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கூப்பிடும்போது மீண்டும் விசாரணைக்கு வரவேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது.
- வீட்டுக்கு வந்த சுபாஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகேயுள்ள தேவரெட்டியூர் பகுதியாய் சேர்ந்தவர் சுபாஷ்(வயது 24). லாரி டிரைவர்.
இவரும் ,இவரது நண்பர்களுமான சென்னமூர்த்தி, பாபு, சதீஷ், ராமராஜன் ஆகியோர் இருமத்தூர் ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர்.
இதில் சென்னமூர்த்தி நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னமூர்த்தியின் சாவு குறித்து சுபாஷ் உள்ளிட்ட நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதாகவும், கூப்பிடும்போது மீண்டும் விசாரணைக்கு வரவேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் விசாரணைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த சுபாஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து கம்பைநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- குடும்ப பிரச்சினையால் விபரீதம்
- போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் டவுன் துரை நகர் இளங்கோ என்பவரின் மகள் ஐஸ் வர்யா ( வயது 21 ) இந்த ஆண்டுசென்னையில் என்ஜினீயரிங் முடித் துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.
குடும்ப பிரச்சினை காரணமாக திடீரென்று நேற்று தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தனது துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .
இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
- அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விபரீத முடிவு
- போலீசார் விசாரணை
வாலாஜா:
வாலாஜாபேட்டை காமராஜர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி தனுஸ்ரீ (வயது 20).வீட்டில் தனியாக இருந்தபோது தனுஸ்ரீ நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசாரின் விசாரணையில் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்