என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 238132"
- டி.டி.கே சாலை சந்திப்பில் இருந்து ஜி.கே மூப்பனார் மேம்பால சந்திப்பை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
- டி.டி.கே சாலை ஸ்ரீராம் நகர் தெற்குத் தெரு மற்றும் ஜி.கே. மூப்பனார் மேம்பால சந்திப்பு வழியாக நந்தனம் செல்லலாம்.
சென்னை:
சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
போட் கிளப் மெட்ரோ ரெயில் பணிகள் பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலையில் மேற் கொள்ள இருப்பதால், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு வார காலத்திற்கு (வருகிற 1-ந்தேதி முதல் 7-ந் தேதி வரை) சோதனை அடிப்படையில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்களைச் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் சாலை அதனை சுற்றியுள்ள பகுதிகள்:-
பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் சாலையில் ஜி.கே. மூப்பனார் மேம்பால சந்திப்பிலிருந்து டி.டி.கே சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் வழக்கம் போல் செல்லலாம். டி.டி.கே சாலை சந்திப்பில் இருந்து ஜி.கே மூப்பனார் மேம்பால சந்திப்பை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
மாநகர பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் மந்தை வெளியிலிருந்து கோட்டூர்புரம் மேம்பாலத்தை நோக்கி செல்லும் வாகனங்கள் அடையார் கிளப் கேட் சாலை, ஏ.பி.எம் அவின்யூ மற்றும் டர்ன் புல்ஸ் சாலை விரிவாக்கம் வழியாக இடது புறமாக செல்லலாம்.
மந்தைவெளியிலிருந்து நந்தனம் சிக்னல் சந்திப்பை நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் டி.டி.கே சாலை ஸ்ரீராம் நகர் தெற்குத் தெரு மற்றும் ஜி.கே. மூப்பனார் மேம்பால சந்திப்பு வழியாக நந்தனம் செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்திலிருந்து வரும் மாநகர பேருந்துகள் தெற்கு உஸ்மான் சாலை வழியாக செல்ல தடை.
- தெற்கு உஸ்மான் சாலை வழியாக தியாகராயநகர் பேருந்து முனையத்திற்கு செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம்.
சென்னை:
சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் மேம்பாலத்தில் இருந்து அண்ணாசாலை சி.ஐ.டி 1-வது மெயின் ரோடு வரை மேம்பாலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் தெற்கு உஸ்மான் சாலை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (28-ந் தேதி) முதல் 27.09.2023 வரை போக்கு வரத்து மாற்றம் செய்யப்படுகின்றது.
தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்திலிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணாசாலை சி.ஐ.டி 1-வது மெயின் ரோடு செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, கண்ணம்மாபேட்டை சந்திப்பு, தெற்கு மேற்கு போக்கு சாலை, மூப்பராயன் தெரு, இணைப்பு சாலை வந்து அண்ணாசாலை அடையலாம்.
தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்திலிருந்து வரும் மாநகர பேருந்துகள் தெற்கு உஸ்மான் சாலை வழியாக செல்ல தடை செய்யப்பட்டு, மேட்லி சந்திப்பு, பர்கிட் சாலை, மூப்பராயன் தெரு, இணைப்பு சாலை வந்து அண்ணாசாலை அடையலாம்.
அரங்கநாதன் சுரங்க பாதையில் இருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணாசாலை சி.ஐ.டி 1-வது மெயின் ரோடு செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, மேற்கு சி.ஐ.டி நகர் வடக்கு தெரு வழியாக வந்து அண்ணாசாலை அடையலாம்.
அண்ணாசாலை சி.ஐ.டி 1-வது மெயின் ரோடு சந்திப்பிலிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக தியாகராயநகர் பேருந்து முனையத்திற்கு செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தை அமாவாசை தினத்தன்று ராமேசுவரத்தில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- தமிழகத்தின் அனைத்து ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வருகை தருவார்கள்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும், கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் தை அமாவாசையான நாளை 21-ந்தேதி (சனிக்கிழமை) தமிழகத்தின் அனைத்து ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வருகை தரு வார்கள். தை அமா வாசையை முன்னிட்டு இன்று (20-ந் தேதி) மதியம் முதல் நாளை இரவு வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி ராமேசுவரம் நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் பஸ் நிலையத்திலிருந்து சிவகாமிநகர், சல்லிமலை, ரெட்டைப்பிள்ளையார் கோவில் தெரு, சவுந்தரியம்மன் கோவில் தெரு, சம்பை, மாங்காடு ரோடு வழியாக நகராட்சி கோவில் வாகன நிறுத்தும் இடத்திற்கு செல்ல வேண்டும்.
அங்கிருந்து ராமநாதபுரம் செல்லும் வாகனங்கள் கோவில் மேற்குவாசல் வழியாக திட்டக்குடி வந்து பஸ் நிலையம் வழியாக செல்ல வேண்டும். தனுஷ்கோடி செல்லும் வாகன ங்கள் திட்டக்குடி வந்து தேவர் சிலை ரெயில்வே பீடர் ரோடு வழியாக செல்ல வேண்டும். தனுஷ் கோடியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள் ரெயில்வே பீடர் ரோடு, வண்ணார் தெரு, டவுன் போலீஸ் நிலையம், பஸ் நிலையம் வழியாக செல்ல வேண்டும்.
ராமேசுவரம் பஸ் நிலையம், பாம்பன் ரோடு பாலத்தில் இருந்து வாகனங்கள் நிறுத்துமிடம் வரை சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குற்ற செயல்களை தடுத்து கண்காணிக்கும் விதமாக ராமேசுவரம் கோவிலை சுற்றிலும், நகரின் பல்வேறு இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டு கண்காணிக்கப் பட்டு வருகிறது.
ராமேசுவரம் கோவில், அக்னிதீர்த்த கடற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இந்த காணும் பொங்கலுக்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யும் போதெல்லாம் 10 நிமிடங்களுக்குள் கூகுள் வரைபடத்தில் RoadEase ஆப் மூலம் தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படும்.
- வாகன ஓட்டிகள் தங்களது கூகுள் மேப் மூலம் மாற்று பாதைகளை கண்காணித்து அவர்கள் செல்லக்கூடிய இலக்கை சென்றடையும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை:
காணும் பொங்கலையொட்டி மெரினாவில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-
மெரினாவில் காணும் பொங்கல் அன்று காமராஜர் சாலையில் பெருந்திரளாக மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலை அருகில், மக்கள் கூட்டம் மிக அதிகமாக கூடும் போது. வடக்கில் இருந்து வரும் வாகனங்கள் பாரிமுனை-முத்துசாமி பாயின்ட்-வாலாஜா பாயின்ட்-அண்ணாசாலை பெரியார் சிலை-அண்ணா சிலை-வெல்லிங்டன் பாயின்ட்-ஸ்பென்சர் சந்திப்பு-பட்டுளாஸ் சாலை-மணிக்கூண்டு-ஜி.ஆர்.எச். பாயின்ட் வழியாக டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை சென்று, தங்களது இலக்கினை அடையலாம்.
அடையாறில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில், திருப்பப்பட்டு பாரதி சாலை. பெல்ஸ் ரோடு, வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்களது இலக்கினை அடையலாம்.
மேலும் பாரதி சாலையானது கண்ணகி சிலையில் இருந்து ஒருவழிப் பாதையாகவும், வாலாஜா சாலையில் இருந்து பெல்ஸ் ரோட்டுக்கு வாகனங்கள் செல்ல தடை செய்தும் பாரதி சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு நோக்கி வாகனங்கள் அனுமதிக்கவும் செய்யப்பட்டுள்ளது. (பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்).
பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்ல தடைசெய்தும், வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (விக்டோரியா விடுதி சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்படும்).
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இந்த காணும் பொங்கலுக்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யும் போதெல்லாம் 10 நிமிடங்களுக்குள் கூகுள் வரைபடத்தில் RoadEase ஆப் மூலம் தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படும். இதன் மூலம் வாகன ஓட்டிகள் தங்களது கூகுள் மேப் மூலம் மாற்று பாதைகளை கண்காணித்து அவர்கள் செல்லக்கூடிய இலக்கை சென்றடையும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆர்.கே.சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும்.
- பெசன்ட் நகர் 7-வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் ஓல்காட் பள்ளியை நோக்கி அனுமதிக்கப்படாமல், எம்ஜி சாலையை நோக்கி திருப்பி விடப்படும்.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை ரன்னர்ஸ் சார்பில் 4 பிரிவுகளாக (42 கிமீ, 32 கிமீ, 21 கிமீ மற்றும் 10 கிமீ) மாரத்தான் ஓட்டம் நாளை (8-ந்தேதி) நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணி முதல் நேப்பியர் பாலம் மற்றும் பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியிலிருந்து மாரத்தான் ஓட்டம் தொடங்கப்பட்டு காமராஜர் சாலை, சாந்தோம் ஹை ரோடு, டாக்டர்.டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சர்தார் படேல் சாலை, ஓ.எம்.ஆர்., கே.கே.சாலை, இ.சி.ஆர். வழியாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தை சென்றடையும்.
இந்நிகழ்ச்சி தொடர்பாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
* அடையார் மார்க்கத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க. பாலம், டாக்டர். டி.ஜி.எஸ்.தினகரன் சாலை, சாந்தோம் ஹை ரோடு, காமராஜர் சாலை மற்றும் உழைப்பாளர் சிலை வரை வழக்கம் போல் எந்தவித மாற்றமும் இல்லாமல் செல்லலாம்.
* போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க. பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் வாகனங்கள் கொடி மரச் சாலை சாலைக்கு வழியாக திருப்பி விடப்பட்டு வாலாஜா பாயின்ட் அண்ணாசாலையில் வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.
* ஆர்.கே.சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். அவ்வாகனங்கள் ராயப்பேட்டை ஹைரோடு, லஸ் கார்னர், ஆர்.கே.மடம் சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.
* மத்திய கைலாசிலிருந்து வரும் வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலையை நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது, அவ்வாகனங்கள் எல்.பி. சாலை, சாஸ்திரி நகர் வழியாக திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம்.
* காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாகனங்கள் எல்.பி. சாலை, சாஸ்திரி நகர், திருவான்மியூர் சிக்னல் வழியாகத் தங்களது இலக்கை சென்றடையலாம்.
* பெசன்ட் நகர் 7-வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் ஓல்காட் பள்ளியை நோக்கி அனுமதிக்கப்படாமல், எம்ஜி சாலையை நோக்கி திருப்பி விடப்படும்.
* மாநகர போக்குவரத்து கழக பஸ்கள் மட்டும் பெசன்ட் நகர் டெப்போவிற்கு அனுமதிக்கப்படும். பெசன்ட் அவென்யூ, எம்.எல். பார்க் நோக்கி அனுமதிக்கப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாரத்தான் ஓட்டம் காரணமாக நாளை அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை தாம்பரம் மாநகர காவல் எல்லையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளன என தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் அறிவித்துள்ளார்.
சோழிங்கநல்லூர் சந்திப்பிலிருந்து, சென்னை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் இடது புறம் செம்மொழி சாலையாக செல்ல வேண்டும்.
அதேபோல், மேட்டுக்குப்பம் ராஜ் நகர் சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் ராஜீவ்காந்தி சாலையில் வலது புறமாக செல்ல வேண்டும். மேலும், மேடவாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் அனைத்து வாகனங்களும், வேளச்சேரி பிரதான சாலை பள்ளிக்கரணை வழியாக செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- மின்மாற்றிகளை மாற்றி அமைக்கும் பணி நாளை முதல் நடக்கிறது
- பொதுமக்கள் ஒத்து ழைப்பு அளிக்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சா லையில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலை சாவடி வரை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள உயர் மின்னழுத்த மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை மாற்றி அமைக்கும் பணி நாளை முதல் நடக்கிறது.
இந்த பணியை நெடுஞ்சாலை, மின் சாரத்துறையினர் ஒருங்கி ணைந்து மேற்கொள்ள உள்ள னர். இப்பணிகள் முடியும் காலமான சுமார் 15 நாட்க ளுக்கு இந்த சாலையில்போக் குவரத்து மாற்றம் செய்யப்ப டுகிறது.
குடியாத்தத்தில் இருந்து பள்ளிகொண்டா வழியாக வேலூர் செல்லும் வாகனங் கள் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி வடுகன் தாங்கல், காட்பாடி வழியாக செல்ல வேண்டும்.
வேலூரில் இருந்து பள்ளிகொண்டா வழியாக குடியாத்தம் செல்லும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை 48-ஐ பயன்படுத்தி செதுவாலை, விரிஞ்சி புரம் வழியாக சென்று தேசிய நெடுஞ்சாலை 75-ஐ அடைந்து வடுகன்தாங்கல் வழியாக குடியாத்தம் செல்ல வேண்டும்.
குடியாத்தத்தில் இருந்து பள்ளிகொண்டா வழியாக ஒடுகத்தூர், அணைக்கட்டு செல்லும் வாகனங்கள் குடியாத்தத்தில் இருந்து மேல்பட்டி சாலையில் உள்ளி கூட் ரோடு சந்திப்பை அடைந்து ஒடுகத்தூர், அணைக்கட்டு செல்ல வேண்டும். கிருஷ்ணகிரி மார்க்கத்தில் இருந்து பள்ளிகொண்டா வழியாக குடியாத்தம் செல்லும் வாகனங் கள் மாதனூர் - உள்ளி கூட்ரோடு மும்முனை சந்திப்பு வழியாக மேல்பட்டி சாலை வழியாக குடியாத்தம் செல்ல வேண்டும்.
இந்த போக்குவரத்து மாற்றம் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பணி முடியும் வரை நடைமுறைப்படுத்தப்படும். மற்றநேரங்களில் தற் போது உள்ளபடி அதே சாலையை பயன்படுத்தி கொள்ளலாம். கனரக வாகனங்கள் பள்ளிகொண்டாவிற்குள் நுழைவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க உள்ள தாலும், மழைநீர் வடிகால் வாய்கள் நீண்ட காலத்துக்கு பயன்படுத்த பணிகளை மேற் கொள்ள வேண்டி உள்ளதால் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி தவிர்க்க முடியாது. போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மயிலாப்பூரில் உள்ள கச்சேரி சாலையில் சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகள் நடக்கவுள்ளது.
- கடந்த 10-ந்தேதி முதல் ஒரு வாரம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
சென்னை :
சென்னை மயிலாப்பூரில் உள்ள கச்சேரி சாலையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட உள்ள கட்டுமான பணிகளை கருத்தில்கொண்டு, போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டு கடந்த 10-ந்தேதி முதல் ஒரு வாரம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இது நன்றாக செயல்பட்டதால், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கோரியப்படி இந்த போக்குவரத்து மாற்றங்கள் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கச்சேரி சாலை மற்றும் அதை சுற்றியுள்ள சாலைகளில் 24-ந்தேதி (நாளை) முதல் 3 ஆண்டுகளுக்கு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் வருமாறு:-
* முண்டக்கன்னி அம்மன் கோவில் தெருவில் இருந்து கச்சேரி சாலைக்கு வாகனங்கள் செல்வதை கட்டுப்படுத்தி, கல்விவாரு தெருவில் தற்போது உள்ள ஒருவழி பாதை அமைப்பு மாற்றியமைக்கப்பட்டு வாகனங்கள் கச்சேரி சாலையில் இருந்து முண்டக்கன்னி அம்மன் கோவில் தெருவுக்கு அனுமதிக்கப்படும்.
* லஸ் சந்திப்பில் இருந்து கச்சேரி சாலை வழியாக சாந்தோம் நெடுஞ்சாலைய நோக்கி இலகு ரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு, கல்விவாரு தெரு வழியாக முண்டக்கன்னி அம்மன் கோவில் தெரு மற்றும் பஜார் சாலை வழியாக செல்லலாம்.
* சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து கச்சேரி சாலை வழியாக லஸ் சந்திப்பை நோக்கி இலகு ரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு, தேவடி தெரு, நடு தெரு மற்றும் ஆர்.கே.மடம் சாலை அல்லது மாதா சர்ச் சாலை வழியாகவும் செல்லலாம்.
* மாநகர பஸ் எண் '12 பி' லஸ் சந்திப்பில் இருந்து கச்சேரி சாலை வழியாக பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் செல்ல தடை செய்யப்பட்டு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலை வழியாகவும் திரும்பி வரும்போது வி.எம்.தெரு வரை வழக்கம்போல் வந்து டி.டி.கே.சாலை வழியாக செல்லலாம்.
* மாநகர பஸ் எண் '12 எக்ஸ்' லஸ் சந்திப்பில் இருந்து கச்சேரி சாலை வழியாக பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் செல்ல தடை செய்யப்பட்டு, ஆர்.கே.மடம் சாலை மற்றும் தெற்கு கால்வாய் கரை சாலை வழியாகவும் திரும்பி வரும்போது மந்தைவெளி பஸ் நிறுத்தம் வரை வழக்கம்போல் வந்து வெங்கடகிருஷ்ணா சாலை மற்றும் ஆர்.கே.மடம் சாலை வழியாக செல்லலாம்.
மேற்கண்ட தகவல் சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- வாகனங்கள் அனைத்தும் கே.ஜி.தியேட்டர், அரசு கலைகல்லூரி சாலை சந்திப்பு வழியாக மற்ற பகுதிகளுக்கு செல்லலாம்.
- லட்சுமி மில் சந்திப்பு, புலியகுளம் சாலை வழியாக ராமநாதபுரம் சந்திப்பை அடைந்து திருச்சி சாலையில் செல்லலாம்.
கோவை,
கோவை ரேஸ்கோர்ஸில் மாநகராட்சி சார்பில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்ற நிகழ்ச்சி நாளை காலை 5 மணி முதல் 10 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக கீழ் கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருச்சி ரோடு-வெஸ்ட் கிளப் சந்திப்பிலிருந்து ரேஸ்கோர்ஸ் வழியாக செஞ்சிலுவை சங்கம் அடைந்து காந்திபுரம் செல்லும் பஸ்கள் அனைத்தும் கிளாசிக் டவர், ெரயில் நிலையம், செஞ்சிலுவை சங்கத்தை அடைந்து காந்திபுரம் செல்லலாம்.
காந்திபுரத்தில் இருந்து ரேஸ்கோர்ஸ் வழியாக திருச்சி சாலை செல்லும் பஸ்கள் அனைத்தும் அவினாசி சாலை அண்ணா சிலை சந்திப்பில் இருந்து லட்சுமி மில் சந்திப்பு, புலியகுளம் சாலை வழியாக ராமநாதபுரம் சந்திப்பை அடைந்து திருச்சி சாலையில் செல்லலாம்.
திருச்சி ரோடு-வெஸ்ட் கிளப் சந்திப்பிலிருந்து ரேஸ்கோர்ஸ் கே.ஜி.தியேட்டர் வழியாக மற்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் ரேஸ்கோர்ஸ் வெஸ்ட் கிளப் சாலையில் இருந்து கிழக்கு நோக்கி திரும்பி ஸ்கீம் ரோடு அல்லது தாமஸ் பார்க் சந்திப்பு, காஸ்மோபாலிடன் கிளப் சந்திப்பை அடைந்து திருஞானசம்பந்தம் சாலை வழியாக அவினாசி சாலையை அடைந்தும் அல்லது தாமஸ் பார்க், அப்துல் ரஹீம் சாலை, காமராஜர் சாலை வழியாக அவினாசி சாலையை அடைந்தும்,செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
ஓசூர் சாலையில் இருந்து கே.ஜி.தியேட்டர் வழியாக மற்ற பகுதிகளுக்கு செல்ல ரேஸ்கோர்ஸ் சாலையை பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் கே.ஜி.தியேட்டர், அரசு கலைகல்லூரி சாலை சந்திப்பு வழியாக மற்ற பகுதிகளுக்கு செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வியாசர்பாடி, செங்குன்றம், மாதவரம், பெரியார் நகர் பகுதிக்கு செல்லக்கூடிய பஸ்கள் புளியந்தோப்பு வழியாக மாற்றி விடப்பட்டுள்ளது.
- தற்போது மழை இல்லாத நேரத்தில் பள்ளம் ஏற்பட்டதால் அதனை விரைவாக சரி செய்ய முடிகிறது.
சென்னை:
பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அண்ணா சதுக்கம்-பெரம்பூர் இடையே ஓடும் 29-ஏ பஸ் மட்டும் ஓட்டேரி மேகலா தியேட்டர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. மற்ற பஸ்கள் அனைத்தும் புளியந்தோப்பு போலீஸ் நிலையம் அருகில் இருந்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
வியாசர்பாடி, செங்குன்றம், மாதவரம், பெரியார் நகர் பகுதிக்கு செல்லக்கூடிய பஸ்கள் புளியந்தோப்பு வழியாக மாற்றி விடப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றப்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் குறுகிய தெருக்களிலும், சந்துக்கள் வழியாக செல்கின்றனர். புரசைவாக்கத்தில் இருந்து பட்டாளம், புளியந்தோப்பு வரை செல்லக்கூடிய பல்வேறு வழிகளில் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் செல்கின்றன.
தற்போது மழை இல்லாத நேரத்தில் பள்ளம் ஏற்பட்டதால் அதனை விரைவாக சரி செய்ய முடிகிறது. மழை பெய்தால் இந்த பணி கடுமையாக பாதிக்கப்படுவதோடு பொதுமக்களுக்கு சிரமங்கள் அதிகமாக ஏற்பட்டு இருக்கும்.
பள்ளத்தை சரி செய்யும் பணி முடியும் வரை அந்த சாலையில் போக்குவரத்து நடைபெறாது. அடுத்தடுத்து அந்த பகுதியில் பள்ளம் விழுவதற்கு காரணம்? என்ன என மண்ணின் தன்மையையும் ஆராய்கிறார்கள்.
சமீபத்தில் பெய்த கனமழையின்போது பள்ளம் ஏற்பட்ட பகுதியில் தான் மழை வெள்ளம் அதிகளவில் தேங்கி நின்றது. அதனை வெளியேற்ற எடுத்த நடவடிக்கையால் கழிவுநீர் குழாய் பாதிக்கப்பட்டதா? எனவும் ஆய்வு செய்யப்படுகிறது.
சம்பவ இடத்தில் குடிநீர் வாரிய தலைமை பொறியாளர் ராமசாமி, பகுதி பொறியாளர் வைதேகி உள்ளிட்ட அதிகாரிகள் முகாமிட்டு பணியினை வேகப்படுத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தை திரு.வி.க. நகர் தொகுதி எம்.எல்.ஏ. தாயகம் கவி ஆய்வு செய்தார்.
பள்ளத்தை சரி செய்ய 5 நாட்கள் ஆகும் என்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- டி.டி.கே. சாலையில் சேமியர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை சந்திப்பு வரை ஒரு வழிபாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
- சி.பி.ராமசாமி சாலையில் சி.வி.ராமன் சாலை சந்திப்பில் இருந்து ஆர்.ஏ.புரம் 2-வது பிரதான சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக கடந்த 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை ஒருவார காலத்திற்கு கவிஞர் பாரதிதாசன் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டது.
மேலும் இன்று (12-ந்தேதி) முதல் அடுத்த மூன்று வருடத்திற்கு கவிஞர் பாரதிதாசன் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
அதன்படி டி.டி.கே. சாலையில் சேமியர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை சந்திப்பு வரை ஒரு வழிபாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதே போல் சி.பி.ராமசாமி சாலையில் சி.வி.ராமன் சாலை சந்திப்பில் இருந்து ஆர்.ஏ.புரம் 2-வது பிரதான சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா சாலையில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை வழியாக டி.டி.கே. சாலைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்று பாதையில் அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாநகர பஸ்கள் திருவள்ளுவர் சாலை, எல்டாம்ஸ் சாலை வழியாகவும், இலகுரக வாகனங்கள் சீதம்மாள் காலனி 1-வது பிரதான சாலை வழியாகவும் செல்லலாம்.
டி.டி.கே. சாலையில் இருந்து ஆழ்வார்பேட்டை சிக்னலுக்கு செல்ல வேண்டிய மாநகர பஸ்கள் திருவள்ளுவர் சாலை மற்றும் எல்டாம்ஸ் சாலை வழியாகவும், இலகுரக வாகனங்கள் சீதம்மாள் காலனி 1வது பிரதான சாலை அல்லது சி.வி.ராமன் சாலை வழியாக மாற்று பாதையில் செல்லலாம்.
டி.டி.கே. சாலையில் உள்ள ஆழ்வார்பேட்டை மேம்பாலத்திலிருந்து வரும் மாநகர பஸ்கள் நேராக சி.பி. ராமசாமி சாலை வழியாக சேமியர்ஸ் சாலைக்கு செல்லலாம்.
லஸ் சர்ச் சாலை வழியாக ஆழ்வார்பேட்டை சிக்னலுக்கு செல்ல வேண்டிய மாநகர பஸ்கள் டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை மேம்பால சர்வீஸ் சாலை வழியாக செல்லலாம்.
இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டுனர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மெட்ரோ ரெயில் பணிகள் இருவேறு இடங்களில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
- போக்குவரத்து மாற்றம் ஒருவார காலம் அமலில் இருக்கும்.
சென்னை :
மெட்ரோ ரெயில் பணிகள் இருவேறு இடங்களில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பனகல் பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 12-ந்தேதி (நாளை) முதல் ஒரு வார காலத்துக்கு சோதனை அடிப்படையில் சில போக்குவரத்து மாற்றங்களை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
தியாகராய சாலையில் தற்போதுள்ள ஒரு வழிப்பாதையில் இருந்து மாற்றப்பட்டு பனகல் பூங்காவில் இருந்து ம.பொ.சி.-க்கு செல்லலாம். தணிகாசலம் சாலை சந்திப்பில் இருந்து பனகல் பூங்காவுக்கு செல்ல அனுமதி இல்லை. இந்த வாகனங்கள் தணிகாசலம் சாலை, வெங்கட்நாராயணா சாலை வழியாக உஸ்மான் சாலையை (பனகல் பார்க்) அடையலாம்.
உஸ்மான் சாலையில் இருந்து பாஷ்யம் சாலை வழியாக போத்தீசுக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை வழியாக திருப்பி விடப்படும்.
பர்கிட் சாலையில் இருந்து வரும் மாநகர பஸ்கள் தணிகாசலம் சாலை வழியாக செல்ல தடைசெய்யப்பட்டு சிவஞானம் சாலை, தியாகராயசாலை வழியாக திருப்பி பர்கிட் சிக்னலில் இருந்து வாகனங்கள் வெங்கட்நாராயணா சாலை வழியாக அண்ணாசாலைக்கு செல்ல தடை செய்யப்படுகிறது. மேற்கண்ட வாகனங்கள் இந்தி பிரசார சபா தெரு, சவுத் போக் சாலை, ம.பொ.சி. சந்திப்பு வந்து அண்ணாசாலையை அடையலாம்.
தியாகராயநகர் மேட்லியில் இருந்து பர்கிட் சாலை வழியாக அண்ணாசாலைக்கு வெங்கட்நாராயணா சாலை வழியாக செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, மூப்பாரப்பன் தெரு, இணைப்பு சாலை வந்து அண்ணாசாலையை அடையலாம்.
நந்தனம் சந்திப்பில் இருந்து வெங்கட்நாராயணா சாலை வழியாக செல்லும் வாகனங்கள் பனகல் பூங்கா வரை வழக்கம் போல செல்லலாம்.
மேற்கண்ட தகவல் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- டி.டி.கே.சாலையில் சேமியர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
- சி.பி.ராமசாமி சாலையில் சி.வி.ராமன் சாலை சந்திப்பில் இருந்து ஆர்.ஏ. புரம் 2-வது பிரதான சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மெட்ரோ ரெயில் பணிகள் கவிஞர் பாரதிதாசன் சாலையில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக நாளை (சனிக்கிழமை) முதல் 11-ந்தேதி வரை ஒரு வார காலத்திற்கு கவிஞர் பாரதிதாசன் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்களை செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளன.
டி.டி.கே.சாலையில் சேமியர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சி.பி.ராமசாமி சாலையில் சி.வி.ராமன் சாலை சந்திப்பில் இருந்து ஆர்.ஏ. புரம் 2-வது பிரதான சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அண்ணாசாலையில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை வழியாக டி.டி.கே. சாலைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்று பாதையில் அனுப்ப உத்தேசிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மாநகர பஸ்கள் திருவள்ளூர் சாலை, எல்டாம்ஸ் சாலை வழியாகவும், இலகு ரக வாகனங்கள் சீதம்மாள் காலனி 1-வது பிரதான சாலை வழியாகவும் செல்லலாம்.
டி.டி.கே. சாலையில் இருந்து ஆழ்வார்பேட்டை சிக்னலுக்கு செல்ல வேண்டிய மாநகர பஸ்கள் திருவள்ளூர் சாலை மற்றும் எல்டாம்ஸ் சாலை வழியாகவும், இலகு ரக வாகனங்கள் சீதம்மாள் காலனி 1-வது பிரதான சாலை (அல்லது) சி.வி.ராமன் சாலை வழியாக மாற்று பாதையில் செல்லலாம்.
டி.டி.கே. சாலையில் உள்ள ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருந்து வரும் மாநகர பஸ்கள் நேராக சி.பி.ராமசாமி சாலை வழியாக சேமியர்ஸ் சாலைக்கு செல்லாம்.
லஸ் சர்ச் சாலை வழியாக ஆழ்வார்பேட்டை சிக்னலுக்கு செல்ல வேண்டிய மாநகர பஸ்கள் டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை மேம்பால சர்வீஸ் சாலை வழியாக செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்