search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 238825"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்திய இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சுற்றுலா பயனிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சகிச்சை பெற்று வருகின்றனர்.

    சிக்கிமில் உள்ள யுமதங் பள்ளத்தாக்கில் இன்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 74 சுற்றுலா பயணிகளை இந்திய இராணுவ வீரர்கள் மீட்டுள்ளனர்.

    இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

    நிலச்சரிவு குறித்து வெளியிட்ட அறிக்கையில், "யும்தாங் பள்ளத்தாக்கில் இருந்து 19 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுற்றுலா பயணிகள் சிக்கி தவித்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, இந்திய இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சுற்றுலா பயனிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    நிலச்சரிவில் சிக்கியவர்களை மரப்பலகை நடைபாதை, கயிறு, மனித சங்கிலி உருவாக்கி சுற்றுலா பயணிகளை மீட்டனர். மீட்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று, உணவு அளிக்கப்பட்டது. மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சகிச்சை பெற்று வருகின்றனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    • கனமழையால் நிலச்சரிவு ஏற்படும் என அரசு எச்சரிக்கை.
    • போலீசார் மற்றும் மீட்பு படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இடுக்கி:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக மலை கிராமங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் எனவும், இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் அம்மாநில அரசு எச்சரித்திருந்தது.

    இந்த நிலையில் கனமழை காரணமாக இடுக்கி மாவட்டம் தொடுபுழா தாலுகாவில் உள்ள குடையாத்தூர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் வீடு ஒன்று, மண்ணில் புதைந்தது. இதுகுறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புபடையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட தேடுதலுக்கு பிறகு இன்று அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து தேடும் பணியில் மீட்புபடையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • இமாசல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது.
    • தொடர் கனமழையால் சுற்றுலாவாசிகள் உள்பட உள்ளூர்வாசிகளும் சிக்கித் தவிக்கின்றனர்.

    சிம்லா:

    இமாசல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் சுற்றுலாவாசிகள் உள்பட உள்ளூர்வாசிகளும் சிக்கித் தவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, காங்கரா மாவட்டத்தில் உள்ள சக்கி ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த ரெயில்வே பாலம் உடைந்து விழுந்தது. வெள்ளம் வடியாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. வரும் 25-ம் தேதி வரை கனமழை பெய்யும், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது என பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், இமாசல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரும் அடங்குவர். மேலும் காணாமல் போன 5 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மாண்டி, சம்பா, காங்ரா, குல்லு, ஹமீர்பூர் மற்றும் சிம்லா மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என மாநில பேரிடர் பொறுப்பு படையினர் தெரிவித்தனர்.

    • இமாச்சலபிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
    • காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டம் கத்ரா நகரில் உள்ள மாதா வைஷ்னோ தேவி கோவில் அருகே இன்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    சிம்லா:

    இமாச்சலபிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுக்கு 5 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் 12-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர். அவர்களும் இறந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டம் கத்ரா நகரில் உள்ள மாதா வைஷ்னோ தேவி கோவில் அருகே இன்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    • மூணாறு-வட்டவாடா வழித்தடமானது பெரிய பாறைகள் மற்றும் சேறுகளால் முற்றிலும் மூடப்பட்டது.
    • வட்டவடா முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பெட்டிமுடியில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 6-ந் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 70 பேர் உயிரிழந்தனர்.

    அந்த பாதிப்பு மக்கள் மனதை விட்டு நீங்காத நிலையில் அதே நாளில் இன்று மூணாறு அருகே உள்ள குண்டலா எஸ்டேட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் மூணாறு-வட்டவாடா பாதையில் உள்ளது குண்டலா எஸ்டேட். இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் சுமார் 175 குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றன. நேற்று இரவு தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது நள்ளிரவு 12 மணியளவில் அந்த பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அந்த வழியே சென்றவர்கள் இதனை கவனித்து விட்டனர். உடனடியாக அவர்கள் தொழிலாளர்களை உஷார்படுத்தினர்.

    இதனை தொடர்ந்து மீட்பு நடவடிக்கை வேகமாக நடந்தது. அங்கிருந்த தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். இதனால் சுமார் 450 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    மீட்கப்பட்டவர்களுக்காக புதுக்குடியில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு பலரும் தங்க வைக்கப்பட்டனர். சிலர் உறவினர்கள் வீடுகளில் தங்கி உள்ளனர்.

    நிலச்சரிவில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டாலும் இடிபாடுகளில் சிக்கி அந்தப் பகுதியில் உள்ள 2 கடைகள் மற்றும் கோவில்கள் முற்றிலும் சேதமடைந்து உள்ளன.

    மேலும் மூணாறு-வட்டவாடா வழித்தடமானது பெரிய பாறைகள் மற்றும் சேறுகளால் முற்றிலும் மூடப்பட்டது. இதனால் வட்டவடா முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சாலையில் தேங்கியுள்ள இடிபாடுகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜா கூறுகையில், இரவு வேளையில் பயணித்தவர்கள் நிலச்சரிவை பார்த்து எச்சரித்ததால், மீட்பு நடவடிக்கை உடனே நடந்தது. இதனால் உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது மீட்பு பணி நடைபெற்று வருகிறது. அது முடிவடைந்த பின்னரே நிலைமையை மதிப்பிட முடியும் என்றார்.

    • சாலையில் இருந்து பாறாங்கற்கள் அகற்றப்படும் வரை போக்குவரத்தக்துக்கு தடை.
    • சாலை விரைவில் சுத்தம் செய்யப்படும் என எல்லை சாலை அமைப்பு தெரிவித்துள்ளது.

    இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குலு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக மணாலி தாலுகாவில் உள்ள நேரு குண்ட் அருகே இரவு நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதன் காரணமாக, சாலை துண்டிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. சாலையில் இருந்து பாறாங்கற்கள் அகற்றப்படும் வரை போக்குவரத்து பல்சான் வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    குலு மாவட்ட நிர்வாகம், சாலையை சீரமைக்க எல்லை சாலைகள் அமைப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், சாலை விரைவில் சுத்தம் செய்யப்படும் என எல்லை சாலை அமைப்பு தெரிவித்துள்ளது.

    • மகாராஷ்டிராவில் 20 கிராமங்கள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
    • 3,873 பேர் அங்கிருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியது. கடந்த 24 மணி நேரத்தில் கட்சிரோலி மற்றும் சந்திராப்பூர் மாவட்டங்களில் 20.5 மி.மீட்டர் மழை பதிவானது. வெள்ளப்பெருக்கால் அந்த மாநிலத்தின் பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளன.

    20 கிராமங்கள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், 3,873 பேர் அங்கிருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்பாக விபத்துக்களில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

    இதுதொடர்பாக மகாராஷ்டிரா மாநில பேரீடர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூலை 14ந் தேதி வரை மழை வெள்ளம், மின்னல், நிலச்சரிவு மரம் மற்றும் பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்தது உள்ளிட்ட சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




    • சாலையில் ஓடும் கார் மீது பாறை உருண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
    • காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ராம்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    ஹிமாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்படுகிறது.

    இந்நிலையில், ஹிமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள நிர்மந்த் தாலுகாவில் உள்ள பாகிபுல் என்றி இடத்தில் நேற்று இரவு 10.45 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதில், சாலையில் ஓடும் கார் மீது பாறை உருண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

    மேலும், இறந்தவர் சோலன் மாவட்டத்தைச் சேர்ந்த தேவானந்த் என்றும், சஞ்சீவ் குமார், தீபக் குமார் மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோர் காயம் அடைந்தனர்.

    காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ராம்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று மூத்த பேரிடர் மேலாண்டை அதிகாரி தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இடிபாடுகளில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
    • ராணுவம், அசாம் ரைபிள்ஸ் குழுவினர் முழு வீச்சில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். துபுல் ரெயில் நிலையம் அருகே இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது.

    இதுவரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ராணுவம், அசாம் ரைபிள்ஸ் குழுவினர் முழு வீச்சில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த இடிபாடுகளில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இதுகுறித்து நோனி மாவட்ட ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " துப்புல் யார்டு ரெயில்வே கட்டுமான முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, உயிரிழப்புகள் பதிவாகி வருகிறது. டஜன் கணக்காணவர்கள் உயிருடன் புதைக்கப்பட்டதால் மேலும் உயிரிழப்புகள் பதிவாகலாம் என அஞ்சப்படுகிறது.

    நிலைமை மோசமடைந்து வருவதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், ஆற்றின் அருகே வராமல் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். முடிந்தவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுங்கள். பொதுமக்கள் மேலும், எச்சரிக்கையாக இருக்கவும், மழையின் நிலை மேலும் மோசமடைந்தால் எந்த உதவிக்கும் தயாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

    இதுகுறித்து மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " துபுல் நிலச்சரிவின் நிலைமையை மதிப்பிடுவதற்கு இன்று அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களை பிரார்த்தினையில் வைப்போம். சம்பந்தப்பட்ட இடத்திற்கு உதவ மருத்துவர்களுடன் ஆம்புலன்ஸ்களும் அனுப்பப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டிருந்தார்.

    ×