search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ்கள்"

    • தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • சென்னையில் வழக்கமாக இயக்கப்படும் 6,300 பஸ்களுடன் 4,218 சிறப்பு பஸ்களும் சேர்த்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 8 நாட்களே இருப்பதால் சொந்த ஊர் செல்லக்கூடியவர்கள் பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர்.

    பொதுமக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய வசதியாக 16,888 சிறப்பு பஸ்கள் தமிழகம் முழுவதும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

    தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    சென்னையில் வழக்கமாக இயக்கப்படும் 6,300 பஸ்களுடன் 4,218 சிறப்பு பஸ்களும் சேர்த்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அரசு விரைவு பஸ்களுக்கான இருக்கை முழுவதும் நிரம்பி விட்டன. இதனால் பிற போக்குவரத்து கழக பஸ்களுக்கு தற்போது முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரையில் 3 நாட்களுக்கும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கும் ஆயிரக்கணக்கானவர்கள் முன்பதிவு செய்து பயணத்திற்கு காத்து இருக்கின்றனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகளவு முன்பதிவு நடந்து வருகிறது. மக்கள் ஆன்லைன் வழியாக விறுவிறுப்பாக முன்பதிவு செய்து வருகின்றனர்.

    வருகிற 21, 22, 23 ஆகிய நாட்களுக்கு அரசு பஸ்களில் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பஸ்களில் எல்லா இருக்கைகளும் நிரம்பி விட்டதால் மக்கள் பயணத்தை வேறு தேதிக்கு மாற்றி வருகிறார்கள். ஆம்னி பஸ்களில் மக்கள் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்ய விரும்பாததால் 20-ந்தேதி (வியாழக்கிழமை) பயணத்திற்கு முன்பதிவு செய்கின்றனர்.

    குடும்பத்தோடு ஆம்னி பஸ்களில் பயணம் செய்ய ரூ. 6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை ஆவதால் அரசு பஸ்களில் குறைவான கட்டணத்தில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். அரசு பஸ்களை நோக்கி மக்கள் வருவதை அறிந்து போக்குவரத்து கழகங்கள் ஒருநாள் முன்னதாக புறப்படும் வகையில் முன்பதிவை தொடங்கி உள்ளது.

    தீபாவளிக்கு 4 நாட்கள் முன்பே சொந்த ஊர் புறப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. 20-ந்தேதி பயணத்திற்கு மக்கள் அதிகளவில் தற்போது முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். இதுவரையில் 20 ஆயிரம் பேர் வியாழக்கிழமை பயணத்திற்கு முன்பதிவு செய்திருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    சென்னை மற்றும் பிறநகரங்களில் இருந்து வெளியூர் செல்லும் பொதுமக்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. முன்பதிவு 2 மடங்கு அதிகரித்து உள்ளது. அதனால் பயணத்தை மேலும் ஒருநாள் முன்னதாக தள்ளி 20-ந்தேதிக்கு புறப்படுகிறார்கள்.

    சென்னையில் இருந்து 20-ந்தேதி செல்ல 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பண்டிகை முடிந்து சென்னை திரும்பவும் முன்பதிவு விறுவிறுப்பாக உள்ளது. 25, 26-ந்தேதி வரை முன்பதிவு செய்யப்படுகிறது.

    விரைவு பஸ்களில் இடங்கள் நிரம்பி விட்டதால் விழுப்புரம், சேலம்,கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி போக்குவரத்து கழகத்தில் உள்ள பஸ்களுக்கு தற்போது முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லக்கூடியவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
    • கடந்த 2 வருடத்தை காட்டிலும் இந்த ஆண்டு பஸ் பயணம் அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாட வெளியூரில் உள்ள மக்கள் விரும்புவார்கள்.

    சென்னை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல ரெயில்களில் முன்பதிவு செய்து தயாராக உள்ளனர்.

    சிறப்பு ரெயில்கள் உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டதால் மக்கள் அரசு பஸ்களை நாடிச் செல்கிறார்கள். அரசு பஸ்களுக்கான முன்பதிவு கடந்த மாதம் 24-ந்தேதி முதல் தொடங்கியது.

    தீபாவளி திங்கட்கிழமை வருவதால் அதற்கு முந்தைய சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் சொந்த ஊர்களுக்கு 21-ந்தேதியே (வெள்ளிக்கிழமை) பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

    அரசு விரைவு பஸ்களில் 21, 22, 23 ஆகிய 3 நாட்களுக்கு முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு சிலர் ஆம்னி பஸ்களிலும் புக்கிங் செய்து வருகின்றனர்.

    ரெயிலில் இடம் கிடைக்காத சாமான்ய மக்கள் அரசு சிறப்பு பஸ்களை எதிர் பார்த்து கொண்டு உள்ளனர்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்பதிவு அரசு பஸ்களில் 50 ஆயிரத்தை எட்டியுள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து 21-ந்தேதி பயணம் செய்ய 23 ஆயிரம் பேரும், 22-ந்தேதிக்கு 21 ஆயிரம் பேரும், 23-ந்தேதிக்கு 4 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனர். இன்று இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது-

    தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லக்கூடியவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த 2 வருடத்தை காட்டிலும் இந்த ஆண்டு பஸ் பயணம் அதிகரித்துள்ளது. சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் திங்கட்கிழமை ஆலோசனை நடத்துகின்றார்.

    வழக்கம் போல தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்த ஆண்டு கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு 10-ந்தேதி வெளியாகும்.

    முதல் கட்டமாக 450 அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு நடந்து வருகிறது. இதில் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல மட்டும் 40 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    தீபாவளி முடிந்து சென்னை திரும்ப 25-ந்தேதிக்கு 14 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • முழு அடைப்பு போராட்டம் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
    • தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்ததுடன் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    கடலூர்:

    நீலகிரி தொகுதி தி.மு.க. எம்.பி. ஆ. ராசா இந்துக்களை குறித்து அவதூறாக பேசியதை கண்டித்தும், அவரை கைது செய்ய கோரியும் புதுவையில் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டம் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த முழு அடைப்பினையொட்டி பெரும்பாலான தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்ததுடன் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு காலை முதலே பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், மருத்துவமனைகளுக்கு மற்றும் இதர வேலைகளுக்கு செல்வதற்கு ஏராளமானோர் தினந்தோறும் தனியார் பஸ்களில் சென்று வந்தனர். இன்று நடந்த போராட்டத்தை முன்னிட்டு கடலூரில் இருந்து புதுச்சேரி செல்வதற்கு தனியார் பஸ்கள் எதுவும் இன்று செல்லவில்லை. அரசு பஸ்கள் மட்டும் இன்று இயங்கின. காலை முதலே ஓரளவு அரசு பஸ்கள் மட்டும் இயங்கி வந்த நிலையில் தனியார் பஸ்கள் எதுவும் இயங்காததால் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இதனால் கூடுதலாக 10 அரசு பஸ்கள் அதிகாரிகளால் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்பட்டது. இதனால் பயணிகளின் கூட்டம் அலைமோதாமல் பாதுகாப்பான முறையில் பஸ்களில் பயணம் செய்தனர். மேலும் இந்த அரசு பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடலூரில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் புதுச்சேரி சென்று வந்தது குறிப்பிடுத்தக்கது. இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக இருந்தது.

    • திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அரசு பேருந்துகள் தொடர்ந்து விபத்துக்குள்ளாவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
    • திருச்சி மாவட்டத்தில் 438 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    திருச்சி :

    திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அரசு பேருந்துகள் தொடர்ந்து விபத்துக்குள்ளாவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அரசு பஸ்களை முறையாக பராமரிக்காததே காரணம் என டிரைவர்கள் தரப்பில் குற்றச்சாட்டப்படுகிறது.

    சிவகங்கை மாவட்டத்திற்கு திருச்சியில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ் டிரைவர் கூறுகையில், தமிழக அரசு டவுன் பஸ்களில் பெண்கள் பயணம் செய்ய இலவசம் என அறிவித்துள்ளது. இந்த டிக்கெட் கட்டணத்திற்கான மானியத்தை போக்குவரத்துக் கழகத்திற்கு முறையாக வழங்கவில்லை. இதனால் சீராக பஸ்கள் பராமரிக்கப்படுவதில்லை. சில நேரங்களில் நாங்கள் எங்கள் சொந்த பணத்தை செலவழிக்க வேண்டி இருக்கிறது.

    இதுபற்றி ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க பிரதிநிதி ஒருவர் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் 438 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான பஸ்கள் தமிழக அரசின் இலவச கட்டணத்துக்குள் வருகிறது. தினமும் ரூ.13 ஆயிரம் வசூல் செய்த பஸ்ஸில் தற்போது ரூ.3000 கூட வசூல் ஆகவில்லை.

    டிரைவர், கண்டக்டர்கள் விடுமுறை இல்லாமல் இரண்டு ஷிப்ட் தொடர்ச்சியாக பணியாற்ற நிர்பந்திக்கப்படுகிறார்கள். இதுவும் விபத்துக்கு காரணமாக இருக்கிறது. எனவே தமிழக அரசு அரசு போக்குவரத்து கழக செயல்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

    இதுபற்றி திருச்சி அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, டிரைவர்கள் கூடுதல் நேரம் பணியாற்றுவது நடைமுறையில் இருக்கிறது. ஆனால் அரசு பஸ்கள் வழக்கம் போல் சீராக பராமரிக்கப்பட்டு வருகிறது. உபகரணங்களும் அவ்வப்போது மாற்றப்படுகின்றன என்றார்.

    • மதியநேரத்தில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மாறுவதால் சில அரசுபஸ்கள் இடைநிறுத்தம் செய்கிறது.
    • நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து உடன்குடிக்கு புறப்படும் பஸ் முறையாக வருவதில்லை. இதை நம்பி காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

    உடன்குடி:

    ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, நாசரேத், மெஞ்ஞானபுரம் வழியாக உடன்குடிக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் அதிகமான மக்கள் பயணம் செய்கிறார்கள்.

    உடன்குடி, மெஞ்ஞானபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதி உள்ள 100-க்கு மேற்பட்ட கிராம மக்கள்நெல்லைக்கு செல்லும்போதும் நெல்லை, பாளை, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து உடன்குடி பகுதிக்கு வருபவர்களும் இந்த வழித்தடத்தை தான் அதிகமாக விரும்புகின்றனர்.

    அதனால் நெல்லையில் இருந்து உடன்குடிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தவறாமல் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் மதியநேரத்தில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மாறுவதால் சில அரசுபஸ்கள் இடைநிறுத்தம் செய்கிறது. உடன்குடியில் இருந்து புறப்படும் பஸ் ஸ்ரீவை குண்டத்தில் திரும்புகிறது.

    நெல்லையில் இருந்து புறப்படும் பஸ் ஸ்ரீவைகுண்டத்தில் திரும்புகிறது. இதனால் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து நண்பகல் 12.30-க்கு உடன்குடிக்கு புறப்படும் பஸ் முறையாக வருவதில்லை. இதை நம்பி காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

    இதனால் மதிய நேரத்தில் சுமார் 3 மணி நேரம் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் நிலை உருவாகிறது. இதனால் மதிய நேரத்தில் முறையாக அரசு பஸ் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இது பற்றி பயணி ஒருவர் கூறியதாவது, கட் சர்வீஸ் என்ற பெயரில் சுமார் 3 மணி நேரம் நெல்லை -உடன்குடிக்கு பஸ் போக்குவரத்தினை தடை செய்தால் உடன்குடியில் பஸ்களை சிறைபிடிக்கும் போராட்டம் பயணிகள் சார்பில் நடைபெறும் என்றார்.

    • டீசல் தட்டுப்பாடு காரணமாக நீண்ட தூர சேவைகள் மற்றும் 50 சதவீத சாதாரண சேவைகள் குறைக்கப்பட்டு உள்ளன.
    • திங்கட்கிழமைக்கான எரிபொருளைச் சேமிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள அரசு போக்கு வரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    போக்குவரத்துக் கழகத்தின் சராசரி தினசரி வருவாய் ரூ.6.5 கோடி. இதில் டீசல் செலவு ரூ.3.5 கோடி. இதனை எண்ணெய் நிறுவனங்களுக்கு போக்குவரத்து கழகம் வழங்கினாலும் கட்டண பாக்கி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    தற்போதைய நிலையில் கேரள அரசுபோக்குவரத்துக் கழகம், எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டண பாக்கி ரூ.135 கோடியாக உயர்ந்து உள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் டீசல் வழங்குவதை நிறுத்தி விட்டன.

    எனவே போக்குவரத்துக் கழகம் தற்போது, ​​தினமும் பணம் செலுத்தி டீசல் கொள்முதல் செய்து வருகிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.) நிலுவையில் உள்ள ரூ.123 கோடி மற்றும் வட்டி உட்பட முந்தைய பாக்கியான ரூ.139 கோடியை தீர்க்காமல் டீசல் வழங்க மறுத்துவிட்டது.

    இதன் காரணமாக கேரள அரசு போக்குவரத்துக் கழகம் தனது சேவைகளை குறைத்து உள்ளது. டீசல் தட்டுப்பாடு காரணமாக நீண்ட தூர சேவைகள் மற்றும் 50 சதவீத சாதாரண சேவைகள் குறைக்கப்பட்டு உள்ளன.

    திங்கட்கிழமைக்கான எரிபொருளைச் சேமிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. டீசல் தேவைக்காக 10 மாவட்ட ங்களில் சாதாரண சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், மாநிலத்தின் பல பகுதிகளில் பயணிகள் பரிதவிப்புக்கு உள்ளாகினர்.

    இதனால் வட்ட கொட்டாரக்கரை பஸ் நிலையத்திற்குள் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போக்குவரத்துக் கழகம் சார்பில் மழை மற்றும் விடுமுறை காரணமாகவே சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிதம்பரத்தில் இன்று பரபரப்பு 2 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.
    • மர்ம கும்பல் பஸ்சின் பக்கவாட்டில் சரமாரியாக கற்களை வீசியது. இதில் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்தது. கல்வீச்சு சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை.

    சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி புதுவை மாநில அரசுக்கு சொந்தமான பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் இன்று அதிகாலை சிதம்பரம் அருகே சீத்தாம்பாளையம் பகுதியில் சென்றது. அப்போது பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் ஒரு கும்பல் பஸ் மீது சரமாரியாக கற்களை வீசியது. அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இதனால் பயணிகள் அச்சத்துடன் திடுக்கிட்டனர். உடனே அவர்கள் கீழே இறங்கினர். அப்போது அந்த பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்திருந்தது. உடனடியாக அரசு பஸ் டிரைவர் சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு பஸ்சை ஓட்டி சென்றார்.

    இதேபோல் சென்னையில் இருந்து வேளாங்கண்ணிநோக்கி தமிழக அரசுக்கு சொந்தமான சொகுசுபஸ் சென்றது. இந்த பஸ் சீத்தாம்பாளையம் பகுதியில் வந்தபோது மர்ம கும்பல் பஸ்சின் பக்கவாட்டில் சரமாரியாக கற்களை வீசியது. இதில் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்தது. கல்வீச்சு சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை. உடனடியாக இந்த பஸ் சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் வந்த கும்பல் பஸ்கள் மீது கற்களை வீசியது தெரியவந்தது. எனவே பஸ் மீது கற்களை வீசி சென்ற கும்பல் யார்? எதற்காக வீசினர்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    ×