என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நகை பணம் கொள்ளை"
- போலீசாரின் விசாரணையில் முகமூடி கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து சென்றது தெரிய வந்தது.
- வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
பவானி:
ஈரோடு மாவட்டம் சித்தோடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மின்வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஜெகநாதன் (59). இவர் ஈரோடு மின்வாரிய அலுவலகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி யசோதா (35).
நேற்று விடுமுறை தினம் என்பதால் ஜெகநாதன் வீட்டில் இருந்தார். அப்போது இரவு 8.30 மணி அளவில் இவரது வீட்டிற்கு 4 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்த படி வந்தனர். அவர்கள் கையில் கத்தி, கடப்பாரை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்து இருந்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெகநாதன் மற்றும் அவரது மனைவி யசோதா ஆகியோர் கத்தி கூச்சலிட முயன்றனர். ஆனால் முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டி உள்ளனர். இதையடுத்து அவர்கள் பயத்தில் அமைதியானார்கள்.
பின்னர் முகமூடி கொள்ளையர்கள் வீட்டின் பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.
தொடர்ந்து ஜெகநாதன் அவரது மனைவி யசோதா ஆகியோர் சத்தம் போட்டனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது முகமூடி கொள்ளையர்கள் வந்து சென்றது தெரிய வந்தது.
பின்னர் இது குறித்து ஜெகநாதன் சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. துப்பறியும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது.
போலீசாரின் விசாரணையில் முகமூடி கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து சென்றது தெரிய வந்தது. மேலும் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் சித்தோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
- நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன் பட்டியை சேர்ந்தவர் சிக்கந்தர் (வயது 64).
சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.
பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீேராவை திறந்து அதில் இருந்த வளையல், செயின், கம்மல், மோதிரம் உள்பட 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
கதவு திறந்து இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சிக்கந்தருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் தனது வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தார்.
அப்போது பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவர் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
- விக்னேஷ் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
- விக்னேஷ் இரவு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த மொன்னவேடு, சீயன்சேரி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (25). இவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் 12 மணிக்கு விக்னேஷ் தனது குடும்பத்தாருடன் வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல வேலைக்கு சென்றார். இரவு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 2 சவரன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம் ரூபாய் 10 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து விக்னேஷ் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- பள்ளிப்பேட்டை ஊராட்சியில் உள்ள மருவூர் அவென்யூ குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.
- நள்ளிரவில் சுமார் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அச்சரப்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் மின்சார வாரியத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஹரிகரன். இவர் அச்சரப்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பேட்டை ஊராட்சியில் உள்ள மருவூர் அவென்யூ குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நள்ளிரவில் சுமார் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
சத்தம் கேட்டு எழுந்த ஹரிகரன், அவரது மனைவி ஜெயா மற்றும் மகள் உள்பட அனைவரையும் கத்தியை காட்டி மிரட்டி கை, கால் கட்டி போட்டனர். பிறகு மர்ம கும்பல் வீட்டிலிருந்த 8 பவுன் தங்கநகைகள், 1¼ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.84 ஆயிரம் உள்ளிட்ட அனைத்தையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது சம்பந்தமாக அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேர் கொண்ட கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள கரும்பூர் வி.ஜி.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (54), விவசாயியான இவர், வீட்டில் புகுந்த மர்மநபர்கள் 12 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்தை திருடி சென்றனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், செங்கல்பட்டை அடுத்த திம்மாவரம் ஊராட்சியில் வசித்து வரும் கிருஷ்ணவேணி (60), வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகையும், ரூ.10ஆயிரத்தை திருடி சென்றது தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
- ராஜேசின் மனைவி வீட்டை பூட்டி விட்டு அவரது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
- சென்னை திரும்பிய ராஜேஷ் தனது வீட்டில் பணம், நகை கொள்ளை போனது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.
போரூர்:
சென்னை மேற்கு மாம்பலம் லேக் வியூ சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் கார்த்திக் (வயது 37) முந்திரி பருப்பு மொத்த வியாபாரி.
இவர் தொழில் சம்பந்தமாக நேற்று முன்தினம் கடலூர் புறப்பட்டு சென்றார். இதையடுத்து ராஜேசின் மனைவி வீட்டை பூட்டி விட்டு அவரது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ராஜேஷ் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதிலிருந்த 6 பவுன் நகை, 100 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை சுருட்டி சென்றுவிட்டனர்.
இன்று அதிகாலை சென்னை திரும்பிய ராஜேஷ் தனது வீட்டில் பணம், நகை கொள்ளை போனது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் அசோக் நகர் போலீசில் புகார் அளித்தார். விரைந்து வந்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர்.
- திருவெண்ணைநல்லூர் அருகே வியாபாரி வீட்டு கதவை உடைத்து நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
- கோவிலுக்கு சென்ற அய்யனார் நேற்று மாலை வீடு திரும்பினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே பெண்ணை வலம் பகுதியை சேர்ந்தவர் அய்யனார். மளிகை கடை நடத்திவருகிறார். இவர் தனது குடும்பத்துடன் கடந்த 1-ம்தேதி பழனி, திருப்பரங்குன்றம் போன்ற முருகன் கோவிலுக்கு சென்றார். வீட்டில் யாரும் இல்லாத இந்த சந்தர்ப்பத்தை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அய்யனார் வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டின் பின்பக்கம் உள்ள கதவினை நெம்பி வீட்டினுள் புகுந்தனர். பின்னர் வீட்டினுள் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து 8 பவுன் நகை மற்றும் 25000 ரொக்க பணத்தை திருடி சென்றனர்.
கோவிலுக்கு சென்ற அய்யனார் நேற்று மாலை வீடு திரும்பினார். தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டின் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகை பணம் கொள்ளை போயிருந்தது. இது குறித்து அய்யனார் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருவெண்ணை நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து நகை பணத்தை திருடி சென்ற மர்மகும்பலை வீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்