search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக் திருட்டு"

    • சி.சி.டி.வி. கேமரா மூலம் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தொடர் வாகனங்கள் திருடப்பட்டு வந்தது. போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரக்கோணம் அடுத்த பெருமூச்சு பகுதியில் கடையின் முன்பு நிறுத்தி இருந்த பைக் மாயமானது. இது சம்பந்தமாக அரக்கோணம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் ஒரு இளம் பெண் பைக்கை திருடி செல்வது தெரிய வந்தது. சி.சி.டி.வி. காட்சி மூலம் போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அந்த இளம் பெண் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அரக்கோணம் அடுத்து பாராஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. மேலும் விசாரணை நடத்தியதில் அவரது கணவருடன் சேர்ந்து பல்வேறு பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

    போலீசார் அந்த இளம் பெண் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேமரா காட்சிகளுடன் புகார்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகர் பகு தியை சேர்ந்தவர் திவாகர். நியூடவுன் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆட்டோ டிரைவராக வேலைபார்த்து வருகிறார்.

    இவர் தனது பைக்கை தான் பணி புரியும் நிறுவனத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தபோது மர்ம நபர்கள் பைக்கை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதுகுறித்து திவாகர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளுடன் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • பைக் திருடர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கை ஸ்டார்ட் செய்து, வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர்.
    • தப்பி ஓடிய திருடன் பக்கத்து காலனியில் உள்ள பூங்காவில் பதுங்கியிருந்தபோது பிடிபட்டான்.

    புதுடெல்லி:

    தெற்கு டெல்லியின் கல்காஜி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில், பைக் திருடர்கள் கேட்டில் மோதி விழுந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    சம்பவத்தன்து மதியம் 2 மணியளவில் மாநகராட்சி அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு அந்த காலனிக்குள் 2 பேர் வந்துள்ளனர். அப்போது, கூரியர் டெலிவரி ஏஜென்ட் ஒருவர் பைக்கில் சாவியை அப்படியே வைத்து விட்டு வீட்டின் காலிங் பெல்லை அடிக்க சென்றதை கவனித்துள்ளனர். உடனே அவர்கள் இருவரும், கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பைக்கை ஸ்டார்ட் செய்து, வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர்.

    இதைப் பார்த்த டெலிவரி ஏஜெண்ட், தனது பைக்கை திருடிக்கொண்டு போவதாக கூச்சலிட்டார். உடனே குடியிருப்பின் காவலாளி ஓடிச் சென்று கேட்டை சாத்தினார். இதனால் கேட் மீது பைக் மோதி, பைக் திருடர்கள் இருவரும் கீழே விழுந்தனர். அவர்களில் ஒருவனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். மற்றொருவன் பக்கத்து காலனியில் உள்ள பூங்காவில் பதுங்கியிருந்தபோது பிடிபட்டான். இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    காவலாளி சரியான நேரத்தில் கேட்டை சாத்துவதும், வேகமாக சென்ற பைக் திருடர்கள் கேட்டில் மோதி விழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    • ஜி.பி.எஸ். கருவி மூலம் மீட்பு
    • மடக்கி பிடித்து அடி உதை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பெரும்புலிபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தேவன் இவரது மகன் ராஜ்குமார் என்பவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    இவர் தனது பைக்கை பெரும்புள்ளிப்பாக்கம் பங்கு கடை அருகே நிறுத்தி வைத்திருந்தார். அப் போது பைக்கை மர்ம கும்பல் திருடி சென்றனர்.

    அதில் ஜி.பி.எஸ். பொறுத்திருந்தார். இதனால் ராஜ்குமார் பைக் எந்த வழியாக செல்கிறது என பார்த்து தனது நண்பர்களுக்கு தகவலை அளித்துள்ளார். அதன்படி அவர்கள் சென்று பைக்கை திருடி சென்றவர்களை மடக்கி பிடித்துள்ளனர்.

    பின்னர் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவலூர் போலீசார் அண்ணன் தம்பியான ஏழுமலை மற்றும் சீனிவாசன் ஆகியோரை மீட்டுபாணாவரம் அரசு மருத்துவமனை கொண்டு சென்று பின்னர் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 4 பைக்குகள் பறிமுதல்
    • போலீசார் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்

    வாலாஜா:

    வாலாஜாபோலீசார் வி.சி.மோட்டூர் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாகமோட் டார்சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

    அவர் வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த சலீம் (வயது 20) என்பதும், பைக் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. சொந்த ஊரில் வாகனங்களை திருடினால் வெளியில் தெரிந்துவிடும் என நினைத்து, ராணிப்பேட்டையில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி பைக் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வாலாஜா அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த 2 பைக்குகளை திருடியுள்ளார். அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சலீமை கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 4 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவருக்கு துணையாக இருந்த அவருடைய நண்பர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த கம்பியை மட்டும் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் விவசாயி சில நாட்களுக்கு முன்பு இவரது பைக் திருடு போனது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்தின் பேரில் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    விசாரணையில் நாச்சார குப்பம் பகுதியைச் சேர்ந்த ரூபாதி (வயது 20 )என்பதும் இவர் பல்வேறு இடங்களில் வைத்து ஈடுபட்டதும் தெரியவந்தது.

    பிரபாகரனின் பைக்கை திருடியதை ஒப்புக்கொண்டார்.

    பின்னர் ரூபாதி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகன சோதனையில் சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் பகுதியில் கடந்த ஒரு மாதமாக பைக்குகள் அடிக்கடி திருடும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

    இதனைத் தொடர்ந்து ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று காலை பைபாஸ் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கர்நாடகா மாநிலம் பங்காருபேட்டை டவுன் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (வயது 35) என்பவரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் ஆம்பூர் பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அருண்குமாரை கைது செய்தனர்.

    பின்னர் அவர் அளித்த தகவலின் பேரில் பதுக்கி வைத்திருந்த 8 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் அருண்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனியில் பைக் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
    • இதேபோல் உத்தமபாளையம் அருகே மர்ம நபர்கள் பைப்புகளை திருடிச்சென்றது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    தேனி:

    தேனி ரெயில்வே கேட் அருகே வசித்து வருபவர் செந்தில்குமார் (வயது 43). இவர் தனது வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திச் சென்றார். அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இது குறித்து தேனி போலீசில் செந்தில்குமார் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே நாராயணத் தேவன்பட்டியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 68). இவரது தோட்டத்தில் இருந்த பைப்புகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தேனி அருகே செல்போன் மற்றும் பைக் திருடுபோனதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே கோம்பையை சேர்ந்தவர் முருகன் (48). இவரது தோட்டத்தில் இருந்த பிளாஸ்டிக் பைப்புகளை ரெங்கநாதபுரத்தை சேர்ந்த கனகராஜ் (29) என்பவர் திருடிச் ெசன்றார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து கோம்பை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கம்பத்தை சேர்ந்தவர் ரமேஷ் (31). சம்பவத்தன்று தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் உள்ளே புகுந்து செல்போனை திருடினார். விரட்டியபோதும் கண் இமைக்கும் நேரத்தில் அவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி சீனிவாசநகரை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது36). தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் அருகே நிறுத்தி இருந்தார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஆண்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
    • எஸ்.எஸ்.காலனி போலீசார் வாலிபரை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை பொன்மேனியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (20). சம்பவத்தன்று இவரது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்றார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த பாலு மகன் ரமேஷ் (19) மோட்டார் சைக்கிள் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    ×