search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா செடி"

    • தனிப்படை போலீசார் கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர்.
    • ராகுலை கைது செய்துள்ள நிலையில் பிரகாசை போலீசார் தேடி வருகின்றனர்

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம்அருகே வீட்டு தோட்டத்தில் ஒருவர் கஞ்சா செடி வளர்ப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங்க்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை பிரிவு போலீசார் நாகை அருகே நரிமணம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது நரிமணம் சுல்லாங்கால் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 21) என்பவரது வீட்டின் தோட்டத்தில்

    கஞ்சா செடி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக பிரகாஷின் தம்பி ராகுலை கைது செய்து நாகூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ராகுலின் அண்ணன் பிரகாஷ் ஈரோட்டில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் பணிபுரிந்து வருவதாகவும், அவர் ஈரோட்டில் இருந்து கஞ்சா விதையினை எடுத்து வந்து தோட்டத்தில் விதைத்து வளர்த்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. மேலும் பிரகாஷின் தம்பி ராகுலை கைது செய்துள்ள நிலையில் பிரகாசை போலீசார் தேடி வருகின்றனர்.

    நாகூர் அருகே கிராம பகுதியில் கஞ்சா செடி வளர்த்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கார் டிரைவர் வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • வீட்டில் வளர்ந்து வருவது கஞ்சா செடி என்று கண்ணுசாமியின் மகனுக்கு தெரிந்தது.

    காஞ்சிபுரம்:

    கஞ்சா விற்பனை மற்றும் புழக்கத்தை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்து பயன்படுத்தி வந்த டிரைவர் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம், பல்லவர்மேடு கிழக்குபகுதியை சேர்ந்தவர் கண்ணுசாமி(43). கார் டிரைவர். இவரது வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வெட்டப்பட்ட தண்ணீர் கேனில் மணல் நிரப்பி அதில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருவது தெரிந்தது. சுமார் 3 அடி உயரத்தில் வளர்ந்து இருந்த அந்த கஞ்சா செடியை போலீசார் பறிமுதல் செய்து அதனை வளர்த்த டிரைவர் கண்ணுசாமியை கைது செய்தனர். அவர்தான் பயன்படுத்த கஞ்சா செடியை வளர்த்து வந்ததாக தெரிவித்து உள்ளார்.

    இதற்கிடையே அவர் கஞ்சா செடி வளர்த்து சிக்கியது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கண்ணுசாமி வீட்டில் கஞ்சா செடியை வளர்க்க தொடங்கியதும் அவர் மீது சந்தேகப்பட்ட மனைவி இதுபற்றி கேட்டு உள்ளார். ஆனால் அவர் புளிச்சகீரை செடி என்று கூறி சமாளித்தார். இதனை அப்பாவியாக நம்பிய அவரது மனைவியும் கீரைச்செடி என்று நினைத்து அதற்கு தண்ணீர் ஊற்றி வந்து உள்ளார்.

    ஆனால் வீட்டில் வளர்ந்து வருவது கஞ்சா செடி என்று கண்ணுசாமியின் மகனுக்கு தெரிந்தது. பள்ளியில் படித்து வரும் அவர் இந்த கஞ்சா செடியை செல்போனில் வீடியோவாக படம் பிடித்து எங்கள் வீட்டில் கஞ்சா செடி வளர்கிறது என்று தனது நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார். பின்னர் இந்த வீடியோ வைரலாக பலருக்கு பரவி உள்ளது. அப்படி இந்த வீடியோ போலீசாரின் செல்போனுக்கும் வந்தது. இதன்பின்னரே உஷாரான போலீசார் கண்ணுசாமியின் வீட்டில் சோதனை செய்தபோது அவர் கஞ்சா செடி வளர்த்து பயன்படுத்தி வந்தது தெரிந்தது. கஞ்சா செடி குறித்து மகன் அனுப்பிய வீடியோவால் அவர் சிக்கிக்கொண்டார். இது தொடர்பாக கண்ணுசாமியிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சன்னியாசி கரடு என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான கோழி தீவன அரவை ஆலை இயங்கி வருகிறது.
    • இந்த அரவை ஆலை வளாகத்தில் கஞ்சா செடி பயிரிடப்பட்டு உள்ளதாக நாமக்கல் நகர போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திடீர் சோதனை நடத்தினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் - மோகனூர் சாலையில் வகுரம்பட்டி ஊராட்சி க்கு உட்பட்ட சன்னியாசி கரடு என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான கோழி தீவன அரவை ஆலை இயங்கி வருகிறது. இதில் ஏராளமான வடமாநில தொழிலாளிகள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த அரவை ஆலை வளாகத்தில் கஞ்சா செடி பயிரிடப்பட்டு உள்ளதாக நாமக்கல் நகர போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 3 கிலோ எடையுள்ள ஒரு கஞ்சா செடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த செடியை காவல் நிலையத்திற்கு எடுத்து வந்த போலீசார் இது தொடர்பாக ஆலை உரிமையாளர் குணசேகரன் மற்றும் பணியாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கஞ்சாப் பொட்ட லங்கள் விற்பதால் லாபம் கிடைக்காது கஞ்சா செடி வளர்த்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கஞ்சா செடி விதை கொடுத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) நந்த குமார் மற்றும் போலீ சார் கஞ்சா மற்றும் போதை பொருள் தடுப்பு சம்பந்த மாக கொக்கு பாளையம் சந்திப்பில் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 2 பேர் போலீ சாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.

    அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தபோது, அவர்கள் பண்ருட்டி போலீஸ் லைன் 4-வது தெருவை சேர்ந்த புருஷோத்த மன் (வயது 20), பண்ருட்டி நவீன் குமார் (22) எனதெரியவந்தது.

    இவர்கள் 2 பேரும் சேர்ந்து பண்ருட்டி வேதபுரீஸ்வரர் நகரில் உள்ள முருகன் என்ப வரின் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. கைதான வாலிபர் புருஷோத்தமன் போலீசில் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில் கூறி இருப்ப தாவது:-

    நானும் நவீன்குமாரும் சிறு வயது முதல் நண்பர்கள். எங்கள் இருவருக்கும் மது, கஞ்சா பழக்கம் உண்டு. வாரத்தில் 2 நாட்கள் மட்டும் கொத்தனார் வேலைக்கு செல்வேன் மற்ற நாட்களில் அடையாளம் தெரியாத ஆட்கள் கொண்டுவந்து தரும் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வந்தோம் அதில் அதிக லாபம் கிடைத்தது.

    ஒரு முறை சென்னை சென்றபோது அங்கிருந்த ஒருவர் கஞ்சாப் பொட்ட லங்கள் விற்பதால் லாபம் கிடைக்காது கஞ்சா செடி வளர்த்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கஞ்சா செடி விதை கொடுத்தனர். அதை வளர்க்க எங்கள் வீட்டில் இடம் இல்லாததால் எனது பெரியம்மா வீட்டில் வளர்த்து, அந்த செடியை விற்பனை செய்து வந்தோம். என்று கூறினர்.அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறை யில் அடைத்தனர்.

    • கண்மாய் கரையில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது செய்யப்பட்டார்.
    • ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கஞ்சாவை இறக்குமதி செய்து இங்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

    மதுரை

    மதுரையில் கண்மாய் கரையில் கஞ்சா பயிரிடப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. அதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    அவரது உத்தரவின் பேரில் மதுரை வடக்கு போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், உதவி கமிஷனர் விஜயகுமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் செல்லூர் பகுதியில் ரகசியமாக விசாரணை நடத்தினர்.

    அப்போது தாகூர் நகர் கண்மாய் கரையில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது அங்கு ஒரு வாலிபர் பதுங்கியிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் 1.125 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கஞ்சா செடிகள் இருந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் செல்லூர் மணவாளன் நகரை சேர்ந்த தினேஷ்குமார் என்ற அறிவு (வயது 27) என்பது தெரியவந்தது.

    அவர் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கஞ்சாவை இறக்குமதி செய்து இங்கு விற்பனை செய்து வந்துள்ளார். இதில் அவருக்கு அதிக லாபம் கிடைத்துள்ளது. தினேஷ்குமார் கண்மாய் கரையில் உட்கார்ந்து கஞ்சா புகைப்பது வழக்கம். அங்கு ஒரு சில விதைகள் முளைத்தன. அதில் ஒரு செடி மட்டும் பெரிதாக வளர்ந்துள்ளது.

    அந்த செடியை அவர் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து கஞ்சாவுடன் தினேஷ் குமாரை செல்லூர் போலீசார் கைது செய்தனர்.

    • மணவாளநகர் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்தபோது ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்ந்து இருந்து தெரியவந்தது.
    • கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்கை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த பாப்பரம்பாக்கம் கிராமத்தில் ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக மணவாள நகர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மணவாளநகர் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்தபோது ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்ந்து இருந்து தெரியவந்தது.

    அந்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த அமித் பண்டிராஜ், கவுதம் (26) ஆகிய இருவரும் கஞ்சா செடி வளர்த்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர்.

    திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி தலைமையிலான போலீசார் திருவள்ளூரில் உள்ள பள்ளி அருகே கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்கை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலை பகுதியில் உள்ள குத்தியாலத்தூர், கேர்மாளம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
    • போலீசார் விவசாயி மாதனுக்கு கஞ்சா விதை கிடைத்தது எப்படி என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    தமிழகம் முழுவதும் குட்கா, கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலை பகுதியில் உள்ள குத்தியாலத்தூர், கேர்மாளம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கேர்மாளத்தை அடுத்துள்ள அத்தியூர் பகுதியை சேர்ந்த மாதன் (77) தனது விவசாய நிலத்துக்கு அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தில் சோளப் பயிர்களுக்கு இடையே கஞ்சா செடிகள் பயிரிட்டிருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கு பயிரிடப்பட்டிருந்த 496 கஞ்சா செடிகளை கைப்பற்றி அழித்தனர். மேலும் இதுதொடர்பாக கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த மாதனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    போலீசார் விவசாயி மாதனுக்கு கஞ்சா விதை கிடைத்தது எப்படி என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள பல்வேறு தோட்டங்களிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    • குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை
    • இருளப்பபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்,

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி நாகர்கோவில் தக்கலை குளச்சல் சப் டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பது தெரியவந்தது.

    இதை அடுத்து போலீசார் அந்த கஞ்சா செடியை கைப்பற்றினார்கள் இதுகுறித்து இருளப்பபுரத்தைச் சேர்ந்த சுதன் மீது (வயது 21) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் சொத்துகள் முடக்கப்பட்டு வருகிறது.

    கஞ்சா விற்பனை மட்டுமின்றி வனப்பகுதியில் கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்க்கும் நபர்களையும் போலீசார் கண்டறிந்து அவர்களை கைது செய்து வருகின்றனர். அதன்படி போடி வனச்சரகத்திற்குட்பட்ட கொட்டக்குடி காப்புகாடு முந்தல் பிரிவில் கஞ்சா செடி பயிரிட்டு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சாலப்பாறை காலனியை சேர்ந்த தம்புராஜ் மகன் ராஜா(32) என்பவர் கஞ்சா நாற்றுகள் மற்றும் விதைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த வனத்துறையினர் ராஜாவை பிடித்து குரங்கணி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×