என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மண்வளம்"
- வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கூட்டம் நடந்தது.
- உழவன் செயலி, மண்வளம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி அடுத்த திருநகரி கிராமத்தில் கலைஞரின் அணைத்து கிராம ஒருங்கிணைத்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம வேளாண் முன்னேற்ற குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வேளா ண்மை இணை இயக்குனர் ஜெ. சேகர் தலைமை வகித்தார். உதவி இயக்குனர் ராஜராஜன்,ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விவசாயிகளுக்கு வேளா ண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், உழவன் செயலி, மண்வளம் ஆகியவை குறித்து பயிற்சி அளித்து விளக்க ப்பட்டது.
துணை வேளா ண்மை அலுவலர் ரவிச்சந்தி ரன், உதவி வேளாண் அலுவலர்கள் வேதயராஜன், விஜய் அமிர்தராஜ், அலெக்சாண்டர், உதவி தோட்டக்கலை அலுவலர் சிவாஜி, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பார்கவி, உதவி தொழில்நுட்ப மேலாளர் செளந்தரராஜன் மற்றும் விவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.
இதேபோல் செம்பனிருப்பு கிராமத்திலும் வேளாண் முன்னேற்ற குழு கூட்டம் வேளாண்மை துணை இயக்குனர் மதியரசன் தலைமையில் நடைபெற்றது.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் மண் வளத்தை பாதுகாக்க கோடை உழவு செய்யுங்கள் என விவசாயிகளுக்கு உதவி இயக்குநர் அறிவுறுத்தினார்.
- பறவைகளுக்கு இரையாக்கி மண்ணை உதிரியாக வைப்பதற்கு உதவுகிறது.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று, அங்ககச்சான்று உதவி இயக்குநர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சித்திரை மாத புழுதி, பத்தரை மாற்றுத் தங்கம். சித்திரையில் மழை பெய்தால் பொன் ஏர் பூட்டலாம் என்று பழமொழிகள் கூறுகின்றன. கோடை மழையை பயன்படுத்தி மானாவாரி நிலத்தில் சரிவிற்கு குறுக்காக கடைசி உழவு அமையுமாறு உழுவதே கோடை உழவு ஆகும்.
இதனால் மழை நீர் மண்ணுக்குள் இழுக்கப்பட்டு நீண்ட காலம் தேங்கி மண்ணின் ஈரத்தன்மையை அதிகரிக்கிறது. நெல் அறுவடைக்கு பின் களிமண் சுருங்குவதால் ஆழமான வெடிப்பு ஏற்பட்டு நிலத்தின் அடிமண் ஈரம் ஆவியாகிறது.
4 அல்லது 5 மாதங்கள் கழித்து இந்த நிலத்தில் நெல் சாகுபடி செய்ய நீர் பாய்ச்சும்போது நீர் வேர் உறிஞ்சும் மட்டத்திற்கு கீழே சென்று விடுகிறது. நிலத்தை தயார்படுத்த அதிக அளவு கால்வாய் நீர் தேவைப்படுகிறது. நீர் விரயமாவதுடன் நிலம் தயார் செய்ய தேவைப் படும் நாட்களும் அதிகமாகின்றன.
இவற்றை எல்லாம் நீக்கி மண் வளத்தை காக்க நடவு நிலத்தை தயார் செய்ய நீரின் தேவையை குறைக்க, அடிமண் இறுக்கம் நீங்கி நீர் கொள்திறன் அதிகரிக்க மண்ணுக்கடியில் காணப்படும் கூட்டுப் புழுக்களை மேற்பரப்பில் தள்ளி, பறவைகளுக்கு இரையாக்கி மண்ணை உதிரியாக வைப்பதற்கு உதவுகிறது.
கோடை உழவு செய்யாத நிலங்களில் களைகளின் பெருக்கம் அதிகமாகி, மண்ணில் உள்ள நீர் மற்றும் சத்துகளை உறிஞ்சி விடுகிறது. அடுத்த பயிர் சாகுபடியில் அதிக களை முளைத்து பயிர் சேதம், சாகுபடி செலவு அதிகமாகிறது.
அருகு, கோரை, கண்டங்கத்தரி, காட்டு கண்டங்கத்தரி, பார்த்தீனியம். சாரணை, மஞ்சக்கடுகு, நாயுருவி, தொய்யாக்கீரை, பண்ணைக் கீரை களைகள் அதிகமாக உற்பத்தியாகின்றன. கோடை உழவு செய்வதால் இந்த களைகளின் பெருக்கம் வெகுவாக குறைகிறது.
பயிர் அறுவடைக்கு பின் எஞ்சிய கட்டைப்பயிர் பெரும்பாலான பூச்சிகள், நோய்க்கிருமிகளுக்கும் உணவாகவும், உறைவிடமாகவும், இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் அமைகிறது. கோடை உழவு செய்வதால் இந்த கட்டைப்பயிர் உரமாகி நுண்ணுயிர்களுக்கு உணவாகி மண்வளத்தை கூட்டுகிறது.
கோடை உழவு செய்வதால் மண்ணில் காற்றோட்டம் அதிகமாகி நுண்ணுயிர் எண்ணிக்கை பெருகி மண்வளமாகிறது. ராமநாதபுரம் மாவட்ட உழவர்கள் அனைவரும் கோடை உழவு செய்து சாகுபடி நிலங்களை வளமான நிலங்களாக மேம்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஈசா யோகா மையம் சார்பில்"மண்வளம் காப்போம்" என்ற கருத்தை பொதுமக்களிடையே விழிப்புணர்வு
- ஈஷா யோகா நிர்வாகி தினேஷ் முன்னிலையில் இந்த இருசக்கர வாகன பேரணி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இருந்துபுறப்பட்டது
கன்னியாகுமரி :
ஈசா யோகா மையம் சார்பில்"மண்வளம் காப்போம்" என்ற கருத்தை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடி வரை சென்று விட்டு திரும்பி மீண்டும் கன்னியாகுமரி வந்தடையும் வகையில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியின் தொடக்க விழாகன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடந்தது.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துவடிவாள் தலைமையில் ஈஷா யோகா நிர்வாகி தினேஷ் முன்னிலையில் இந்த இருசக்கர வாகன பேரணி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இருந்துபுறப்பட்டது. அவர்கள் கொட்டாரம், சுசீந்திரம், நாகர்கோவில், ஆரல்வாய்மொழிவழியாக தூத்துக்குடிசெல்கிறார்கள். அங்கு அவர்கள் இரவு தங்குகிறார்கள். இன்று காலை தூத்துகுடியில்இருந்து புறபட்டு திருச்செந்தூர், உவரி, கூடன்குளம், செட்டிகுளம் வழியாக இன்றுமாலை கன்னியாகுமரி வந்தடைய உள்ளார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்