search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொது மக்கள் கோரிக்கை"

    • பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் சென்று வரும் பாதையாகும்.
    • பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகளும் பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து செட்டியாபத்து, மெஞ்ஞானபுரம், நாசரேத், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், பாளையங்கோட்டை வழியாக நெல்லை செல்லும் போக்குவரத்து பாதை மிகவும் முக்கியமான போக்குவரத்து நிறைந்த பாதையாகும்.

    இந்தப் பாதையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஊர்கள் உள்ளது. உடன்குடியில் இருந்து தினசரி 20 முறை நெல்லைக்கு பஸ் சென்றது. தற்போது ஏற்பட்டு கனமழை காரணமாக செட்டியாபத்து, லட்சுமிபுரம், மருதூர் கரை, நாசரேத் மற்றும் பல இடங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இன்னும் வெள்ளம் வடியவில்லை.

    பல இடங்களில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் உடன்குடி- நெல்லை இடையே போக்குவரத்து இன்று 10-வது நாளாக தொடங்கவில்லை.

    இந்த வழித்தடத்தில் ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வந்து செல்வார்கள். பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் சென்று வரும் பாதையாகும்.

    இந்தப் பாதையை உடனடியாக சரி செய்து உடன்குடி -நெல்லைக்கு பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகளும் பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • உத்திரமேரூர் செல்லும் பஸ்களில் மாணவர்கள் அதிகம் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள்.
    • பல நேரங்களில் மாணவர்களுக்கும், பஸ்டிரைவர், கண்டக்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து ஏராளமான மாணவ மாண விகள் படித்து வருகிறார்கள்.

    பெரும்பாலும் இவர்கள் அரசு பஸ்களில் வந்து செல்கிறார்கள். காலை மற்றும் மாலை நேரத்தில் போதிய பஸ்கள் இல்லாததால் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் பஸ்நிலையத்தில் இருந்து மானாம்பதி, கீழ்ரோடு வழியாக உத்திரமேரூர் செல்லும் பஸ்களில் மாணவர்கள் அதிகம் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள்.

    இதனால் பல நேரங்களில் மாணவர்களுக்கும், பஸ்டிரைவர், கண்டக்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து செல்லும் நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சாக்கடை கழிவு நீர் அகற்றாமல் இருப்பதால் பல்வேறு சுகா தார சீர்கேடுகள் அங்கு வசிக்கும் மக்களுக்கு வந்துள்ளது.
    • மக்கள் அச்சத்தை போக்க குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும்.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி பகுதி களில் பல்வேறு தெருக்களில் கழிவுநீர் கால்வாய்களில் கழிவுநீர் அகற்றப்படாததால் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வரு கிறது. குறிஞ்சிப்பாடி சிகா மணி ரைஸ் மில் தெருவில் ஒரு மாதமாக சாக்கடை கழிவு நீர் அகற்றாமல் இருப்பதால் பல்வேறு சுகா தார சீர்கேடுகள் அங்கு வசிக்கும் மக்களுக்கு வந்துள்ளது.

    தமிழகத்தில் கொரோனா தொற்று தாக்கம் குறைந்து தற்போது பல மாவட்ட ங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அது போல நேற்று குறிஞ்சிப்பா டியை அடுத்த கல்குணம் கிராமத்தில் அரசுப் தொடக்க பள்ளியில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு மாணவி காய்ச்சலால் இறந்து விட்டார்.

    இந்நிலையில் பேரூ ராட்சி பகுதிகளில் தெருக்க ளில் செல்லும் வாய்க்கால்க ளில் கழிவு நீர் தேங்கி நிற்ப தால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் என மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். மக்கள் அச்சத்தை போக்க குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும். அனைத்து வார்டு பகுதியில் சாக்கடை கழிவு நீர் அகற்ற துப்புரவு பணியாளர்களை துரிதமாக செயல்பட வைக்க வேண்டும் என்பதே குறிஞ்சிப்பாடி பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • சிறுவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் நோயாளிகள் வெயில் , மழைக்காலங்களில் பாதுகாப்பாக அமர்ந்திருந்தனர்.
    • ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்ட பயணியர் நிழற்குடை மீண்டும் அமைக்கப்படவில்லை.

    கடலூர்:

    கடலூர் அரசு மருத்துவமனை அருகே கடந்த பல ஆண்டுகளாக பயணியர் நிழற்குடை இருந்து வந்தது. இந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், தனியார் மருத்துவமனைகள், வணிக வளாகத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து சென்றனர். இதன் காரணமாக இங்கு அமைக்கப்பட்டு இருந்த பயணியர் நிழற்குடையை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் நோயாளிகள் வெயில் , மழைக்காலங்களில் பாதுகாப்பாக அமர்ந்திருந்தனர். மேலும் சாலையில் பொதுமக்கள் நிற்காமல் இருந்ததால், இந்த பகுதியில் பாதிப்பும் ஏற்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் சாலை ஓரத்தில் கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்காக பயணியர் நிழற்குடை அகற்றப்பட்டது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்ட பயணியர் நிழற்குடை மீண்டும் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையில் நின்று தினந்தோறும் பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர்.

    மேலும் மழை மற்றும் சுட்டெரிக்கும் வெயிலில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கால்கடக்க நீண்ட நேரம் நின்று பஸ்ஸில் பயணம் செய்து வருகின்றனர். மேலும் மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகள் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வெயில் மற்றும் மழையில் நிற்பதால் மீண்டும் மீண்டும் உடல் உபாதைகள் ஏற்பட்டு மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் ஏற்கனவே அமைத்திருந்த நிழற்குடையை எந்தவித காரணமும் இன்றி அகற்றியதால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதோடு அதிகாரிகளின் அலட்சியத்தின் உச்சமாக இதனை பார்க்க நேரிடுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆண்டாண்டு காலமாக அமைக்கப்பட்டிருந்த பயணியர் நிழற்குடை மீண்டும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • 4 கி.மீ தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
    • விவசாயிகள் காய்கறிகள், பழங்கள், கரும்பு, நெல் உள்ளிட்ட பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பிக்கிலி ஊராட்சி பூதிநத்தம் முதல் செக்கிலிநத்தம் வரை உள்ள 4 கி.மீ தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.

    இந்த சாலை வழியாக தினந்தோறும் பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலர் சென்று வருகின்றனர்.

    விவசாயிகள் காய்கறிகள், பழங்கள், கரும்பு, நெல் உள்ளிட்ட பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. சிகிச்சைக்காக அவசர ஊர்தி அழைக்கபட்டால் கூட குண்டும் குழியுமாக உள்ள சாலையில் சரியான நேரத்தில் வர முடிவதில்லை.

    கடந்த 5ஆண்டுகளாக கிராம பொதுமக்கள் பல்வேறு புகார் மனுக்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஒகேனக்கல் குடிநீரை தினமும் வழங்கவேண்டும்.
    • பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை.

    நல்லம்பள்ளி,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் இண்டூர் ஊராட்சிக்குட்பட்ட பச்சேரியன் கொட்டாய் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இணைப்பு மற்றும் 2 ஆழ்துளை கிணறும் உள்ளது.ஒகேனக்கல் குடிநீர் 2 நாட்களுக்கு ஒருமுறை தான் விநியோகம் செய்கின்றனர்.

    2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வருவதால் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.மேலும் பாதி டேங்க் தண்ணீர் தான் விடுகின்றனர்.மேலும் ஆழ்துளை கிணறுகள் இரண்டும் பழுதடைந்துள்ளது.இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது என பொது மக்கள் தெரிவித்தனர்.

    மேலும் இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவரிடம் முறையிட்டால் நிதி இல்லை என கூறி பழுதடைந்த ஆழ்துளை மோட்டாரை சரி செய்ய மறுக்கிறார்.

    எனவே ஒகேனக்கல் குடிநீர் தினந்தோறும் வழங்கவும் மற்றும் பழுதடைந்த ஆழ்துளை மின்மோட்டாரை பழுது நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×