search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவிழ்ந்தது"

    • சென்னை அருகே உள்ள ஒரு கோவில் திருவிழாவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றனர். பின்னர் நேற்றிரவு சொந்த ஊருக்கு ஒரு சரக்கு வாகனத்தில் புறப்பட்டனர்
    • காரிப்பட்டி போலீசார் காரை பறிமுதல் செய்து அட்வின்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    கோவை மாவட்டம் செம்மேடு பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (45), இவரது மனைவி பத்மாவதி (40).இவர்களது மகள் மணிமேகலை (21), மகன் அருண்குமார் (19).

    இவர்கள் சென்னை அருகே உள்ள ஒரு கோவில் திருவிழாவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றனர். பின்னர் நேற்றிரவு சொந்த ஊருக்கு ஒரு சரக்கு வாகனத்தில் புறப்பட்டனர்.

    அந்த வாகனத்தை கரூர் மாவட்டம் வேடிச்சம்மபாளையம் ஒத்தையூர் பகுதியை சேர்ந்த மணிவேல் என்பவர் ஓட்டினார். இன்று அதிகாலை 2 மணியளவில் காரிப்பட்டி தனியார் பால் நிறுவனம் அருகே வந்த போது பின்னால் வந்த செங்கல்பட்டை சேர்ந்த அட்வின்குமார் (49) என்பவர் ஓட்டி வந்த கார் திடீரென சரக்கு வாகனம் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறிய சரக்கு வாகனம் தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வாகனத்தின் பின் பகுதியில் அமர்ந்து இருந்த பத்மாவதி, தேவராஜ், டிரைவர் மணிவேல் ஆகியோர் காயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். தகவல் அறிந்த காரிப்பட்டி போலிசார் அங்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் பத்மாவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேவராஜ் மற்றும் மணிவேலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து விசாரித்த காரிப்பட்டி போலீசார் காரை பறிமுதல் செய்து அட்வின்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • மழைநீர் குளம்போல் தேங்கி இருந்தது. இதனால் தேங்கிய மழைநீரின் ஓரமாக பஸ்சை டிரைவர் ஓட்டினர்.
    • மணல் அதிகமாக கொட்டியிருந்ததால் முழுவதுமாக பஸ் கவிழாமல் பாதி அளவு சாய்ந்தது .

    கடலூர்:

    கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி இன்று காலை வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுற்றுலா பஸ் சென்றது. கடலூர் அடுத்த செம்மங்குப்பம் பகுதிக்கு பஸ் வந்தபோது சாலையின் ஒருபுறத்தில் நேற்று பெய்த மழையால் மழைநீர் குளம்போல் தேங்கி இருந்தது. இதனால் தேங்கிய மழைநீரின் ஓரமாக பஸ்சை டிரைவர் ஓட்டினர். இதனால் சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் எதிர்பாராத விதமாக பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனே பஸ்சில் இருந்தவர்கள் அலறினர். மேலும் நேற்று இரவு கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த காரணத்தினால் அந்த பள்ளத்தில் சேறும் சகதியுமாகவும், சாலை ஓரத்தில் மணல் அதிகமாக கொட்டியிருந்ததால் முழுவதுமாக பஸ் கவிழாமல் பாதி அளவு சாய்ந்து எப்போது விழும் என்று தெரியாத வகையில் இருந்தது.

    கடலூர் - சிதம்பரம் சாலை 24 மணி நேரமும் அதிக அளவில் வாகனங்கள் செல்லும் போக்குவரத்து உள்ள சாலை என்பதால் இந்த விபத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சரிசெய்யமுடியாமல் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றது. இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.  இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    விழுப்புரம் - நாகப்பட்டினம் வழியாக 4 வழி சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலம் கையகப்படுத்தியும், சாலைகள் முழுவதும் பெயர்த்து புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சாலை வழியாக தினந்தோறும் ஏராளானமான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த பகுதியில் தற்போது நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணி மந்தமான நிலையில் நடைபெற்று வருவதாலும், தொடர் மழை காரணமாக இந்த வழியில் செல்லும் வாகனங்கள் அதிகமாக விபத்துகுள்ளாகி வருகிறது. இதனால் அதிகாரிகள் சாலை விரிவாக்க பணியை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கூறினர். 

    • கறிக்கோழிகளை ஏற்றி லாரி ஒன்று பந்தலூர் பஜாருக்கு வந்து கொண்டு இருந்தது.
    • லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டது.

    கூடலூர்

    பந்தலூர் அருகே உள்ள எருமாடு பஜாரில் இருந்து கறிக்கோழிகளை ஏற்றி லாரி ஒன்று பந்தலூர் பஜாருக்கு வந்து கொண்டு இருந்தது.

    நேற்று காலை 5.30 மணி அளவில் பந்தலூர் பஸ்நிலையம் பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே வந்தபோது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அதேப்பகுதியை சேர்ந்த விஜயகுமாரின் வீட்டின் மீது கவிழ்ந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. மேலும் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். லாரி கவிழ்ந்ததில் வீடு பலத்த சேதமடைந்தது. இதுபற்றி அறிந்ததும் பந்தலூர் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். மேலும் கிரேன் வரவழைக்கப்பட்டு வீட்டின் மீது விழுந்து கிடந்த லாரி மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் நேற்று காலை சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி பந்தலூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்

    • கடலூர் முதுநகரில் இருந்து மீன் ஏற்றிக் கொண்டு லாரி கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
    • டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி நடு ரோட்டிலேயே பயங்கர சத்தத்துடன் கவிழ்ந்தது.

    கடலூர்:

    கடலூர் முதுநகரில் இருந்து மீன் ஏற்றிக் கொண்டு லாரி கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. கடலூர் முதுநகர் அருகே சின்னகாரைக்காடு பகுதியில் விருத்தாசலம்-கடலூர் சாலையில் இன்று அதிகாலை வந்தது. அப்போது திடீரென டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி நடு ரோட்டிலேயே பயங்கர சத்தத்துடன் கவிழ்ந்தது.

    இதில் லாரியில் இருந்த மீன்கள் அனைத்தும் சாலையில் சிதறின. இது பற்றி அறிந்த கடலூர் முதுநகர் போலீ சார் விரைந்து சென்று நடுரோட்டில் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப் படுத்தும் முயற்சியில் ஈடு பட்டனர். மேலும் மீன்களும் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதியும், மின்கம்பமும் சேதமடைந்தது. லாரி டிரைவர் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்ப வத்தால் கடலூர்-விருத்தா சலம் சாலையில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கேரளாவில் இருந்து சென்னைக்கு வாழைத்தார் ஏற்றிக்கொண்டு மினி லாரி வந்தது.
    • . இந்த மினி லாரி இன்று அதிகாலை பெட்ரோல் பங்க் அருகே வந்த போது கட்டுபாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.

    விழுப்புரம்:

    கேரளாவில் இருந்து சென்னைக்கு வாழைத்தார் ஏற்றிக்கொண்டு மினி லாரி வந்தது. இதனை டிரைவர் ரவி (20) ஓட்டி வந்தார். அவருடன் வடிவேல் (23), துமேஷ் (24) ஆகியோர் வந்தனர். இந்த மினி லாரி இன்று அதிகாலை விழுப்புரம் அருகே உள்ள அரசூர் இருவேல்பட்டு பெட்ரோல் பங்க் அருகே வந்த போது கட்டுபாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் மினி லாரி டிரைவர் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சத்தம் போட்டதை கேட்ட இருவேல் பட்டு கிராம மக்கள் அங்கு விரைந்து சென்றனர்.பின்னர் பொக்லைன் எந்திரம் மற்றும் போலீசார் உதவியுடன் விபத்தில் சிக்கிய துமேசை மீட்டனர். பின்பு 3 பேரும் சிகிச்சைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கிரேனை நாமக்கல், கருமானூரை சேர்ந்த பொன்னாமலை(45) என்பவர் ஓட்டினார்.
    • அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று கிரேன் மீது மோதியது. இதில் கிரேன் வாகனம் கவிழ்ந்தது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடா சலம்(வயது45). பவானி அருகே வரதநல்லூரை சேர்ந்தவர் சுந்தரம்(52). கூலி தொழிலாளி. இருவ ரும் நேற்று மதியம் கிரேன் வண்டியில் சேலம்- கோவை நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

    கிரேனை நாமக்கல், கருமானூரை சேர்ந்த பொன்னாமலை(45) என்பவர் ஓட்டினார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று கிரேன் மீது மோதியது. இதில் கிரேன் வாகனம் கவிழ்ந்தது.

    வாகனத்தில் இருந்த டிரைவர் உள்பட 3பேரும் படுகாயமடைந்தனர். குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரையும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ×