என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காலை உணவு திட்டம்"
- காலை உணவு திட்டம் குறித்து உண்மைக்கு புறம்பாக, தவறான தகவல்களை வேப்பூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் மேனகா பரப்பி உள்ளார்.
- மேனகாவை ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் அருணாசலம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வட்டாரத்தில் சில பள்ளிகளில் காலை உணவு திட்டம் தயாரிக்க சில உணவு பொருட்களின் இருப்பு இல்லை என்றும், அந்த உணவு பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி தலைமை ஆசிரியரிடம் உபயமாக (ஸ்பான்சர்) பெற்று உணவு தயாரிக்குமாறும், வேறு வழியில்லை என்றும், கலெக்டரே இந்த உத்தரவை போட்டிருப்பதாகவும், உணவு தயாரிக்கும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பில் உள்ள பெண் அலுவலர் வாட்ஸ் அப் குழுவில் குரல் பதிவு செய்து அனுப்பிய ஆடியோ வைரலானது. ஆனால் இது தவறான தகவல் என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் மறுப்பு தெரிவித்தார்.
இந்தநிலையில், காலை உணவு திட்டம் குறித்து உண்மைக்கு புறம்பாக, தவறான தகவல்களை பரப்பியதாக வேப்பூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் (வாழ்வாதாரம்) மேனகாவை ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் அருணாசலம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
- விரைவில் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என கனிமொழி எம்.பி. உறுதி கூறினார்.
- தொடர்ந்து அனைத்து மாணவ-மாணவிகளும் காலை உணவு சாப்பிட வேண்டும் என கூறினார்.
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. அங்கு பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் காலை உணவு சமைத்து வழங்குகிறார்.
அங்கு பயிலும் மாணவ-மாணவிகளில் பெரும்பாலான குழந்தைகளை காலை உணவு சாப்பிட வேண்டாம் என்று பெற்றோர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல்கள் கிடைத்ததும் வருவாய்துறை, ஊராட்சி துறை, காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் பெற்றோர்கள் ஏற்க மறுத்தனர்.
இதனை அறிந்த சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று உசிலம்பட்டி பள்ளிக்கூடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். காலை உணவையும் சாப்பிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து தலைமை ஆசிரியர், காலை உணவு திட்ட சமையலர், மாணவ-மாணவிகள் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்தனர். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், ''உசிலம்பட்டியில் உள்ள சிலருக்கும், காலை உணவு திட்ட சமையலருக்கும் இடையே தனிப்பட்ட பிரச்சினை காரணமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை காலை உணவு சாப்பிட அனுமதிக்க மறுத்து வருகின்றனர். இதுகுறித்து குழந்தைகளுக்கு எதுவும் தெரியவில்லை. இந்த பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும்'' என்றார்.
இந்நிலையில் சம்பந்தப்படட அந்த பள்ளியில் இன்று கனிமொழி எம்.பி., ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். தொடர்ந்து கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினர். தொடர்ந்து கிராம பொதுமக்களிடம் தங்களின் அடிப்படை பிரச்சனைகளை கேட்டறிந்தனர்.
பொதுமக்கள் சாலை வசதி, வாறுகால்வசதி, தார்ச்சாலை வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். விரைவில் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என கனிமொழி எம்.பி. உறுதி கூறினார். மேலும் காலை உணவு மாணவ-மாணவிகளுக்கு பயனுள்ள திட்டம். எனவே தொடர்ந்து அனைத்து மாணவ-மாணவிகளும் காலை உணவு சாப்பிட வேண்டும் என கூறினார்.
அப்போது கிராமமக்கள் கூறுகையில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளோம். எந்த வேறுபாடும் இல்லை. எனவே தொடர்ந்து மாணவ-மாணவிகள் காலை உணவுதிட்டத்தில் சாப்பிடுவார்கள் என்றனர். அப்போது அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மேயர் ஜெகன் பெரியசாமி, எட்டயபுரம் பேரூராட்சிமன்ற தலைவர் ராமலட்சுமி சங்கர் நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.
- உணவு எப்படி இருக்கு? என்பது குறித்து கேட்டறிந்தார்
- அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்
அணைக்கட்டு:
வேலூர் அடுத்த அடுக்கம்பாறை அருகே உள்ள சாத்துமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் ஆகியோர் காலை உணவு திட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் கலெக்டர், எம்.எல்.ஏ. உள்ளிட்டோர், மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். அப்போது கலெக்டர் மாணவர்களிடம் உணவு எப்படி இருக்கு? என்பது குறித்து கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தை ஆய்வு செய்த கலெக்டர், காலை உணவு திட்டத்தில் ஏதாவது குறைபாடுகள் கண்டாலோ அல்லது புகார்கள் வந்தாலோ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இதில் ஒன்றிய குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சு மிராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் பயிலும் சுமார் 17 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் பெறுகிறார்கள்.
- உணவு வழங்குவதில் குறைபாடுகள் இருப்பதை கண்டறியப்பட்டால் உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விரிவுபடுத்தப்பட்டது.
இந்த நிலையில் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேற்று பறக்கை அரசு நடுநிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களி லுள்ள அரசு பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங் கும் திட்டத்தினை நாகப்பட்டி னம் மாவட்டம் திருக்குவளை அரசு தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்தார். இதன் மூலம் தமிழகத்தில் ஊரக பகுதிகளை சேர்ந்த 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் பயிலும் சுமார் 17 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் பெறுகிறார்கள்.
இந்த திட்டத்திற்காக ரூ.404 கோடி ஒதுக்கப்பட் டுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் மாணவ-மாணவிகளின் கற்றல் திறனை மேம்ப டுத்துவதேயாகும். ஆரோக் கியமான வருங் கால சந்ததியினரை உரு வாக்கிடவும், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறை பாட்ைட நீக்கி அரசு பள்ளிகளில் மாணவ-மாணவி களின் வருகையை அதிகப்படுத்துவதை உறுதி செய்வது ஆகும்.
மேலும், காலை உணவு திட்டத்தின் வாயிலாக குழந்தைகளுக்கு பள்ளி வேலை நாட்களில் சேமியா, வெண் பொங்கல், ரவை, கோதுமை ரவை உள்ளிட்ட சத்தான உணவுகள் வழங் கப்பட்டு வருகிறது. உணவு வழங்குவதில் குறைபாடுகள் இருப்பதை கண்டறியப்பட்டால் உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்ைக மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.
அதைத்தொடர்ந்து அவர் பள்ளி மாணவர்களிடம் காலை உணவு வழங்குவது குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) பீபீ ஜாண், துறை சார்ந்த அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் காலை உணவின் தரம், அளவு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
- காலை உணவு சமைப்பது குறித்து எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு, கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
கரூர்:
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வேலன் செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதல்-அமைச்சர் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த சுமதி என்ற பெண் சமைப்பதற்காக பணி அமர்த்தப்பட்டுள்ளார்.
இந்த பெண் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், பள்ளியில் சமையல் பணி செய்யக்கூடாது. அப்படி செய்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் என்று, ஊர் பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டரிடம், சமூக ஆர்வலர் ராஜகோபால் மற்றும் தோழர் களம் அமைப்பினர் புகார் அளித்தனர்.
உடனே கலெக்டர் பிரபுசங்கர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு சென்றனர். அங்கு கலெக்டர் உணவின் தரம், அளவு ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் காலை உணவு உண்ணாத, 15 குழந்தைகளின் பெற்றோரை விசாரணை செய்தார்.
அருந்ததியர் சமூக பெண் சமைத்தால் தம்முடைய குழந்தை உணவு சாப்பிடாது, வேண்டுமென்றால் குழந்தையின் பள்ளி மாற்று சான்றிதழ் பெற்றுக் கொள்கிறேன், என தெரிவித்தார்.
இதையடுத்து எதிர்ப்பு தெரிவித்த பாலசுப்பிரமணியன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்படும் என, கலெக்டர் பிரபுசங்கர் எச்சரிக்கை விடுத்தார்.
இதை தொடர்ந்து, அவர் தன் குழந்தையை காலை உணவு உண்ண ஏற்பாடு செய்யப்படும் என மன்னிப்பு கேட்டதன் அடிப்படையில், வழக்கு தொடுக்காமல் எச்சரித்து விடுவிக்கப்பட்டார். மேலும் காலை உணவு சமைப்பது குறித்து எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு, கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
- உணவு சரியாக வழங்கப்படுகிறதா? என மாணவர்களிடம் கேட்டறிந்தார்
- ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆய்வு செய்த போது சந்தோஷமாக உள்ளது என்றார்
வேலூர்:
வேலூர்மாவட்டம், காட்பாடி அடுத்த வஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மற்றும் ஜாப்ரா பேட்டை நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தமிழக அரசின் சார்பில் செயல்ப டுத்தப்படும் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் திடீரென ஆய்வு செய்தார்.
மேலும் மாணவர்களுக்கு வழங்கபடும் உணவை ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். காலை உணவு சரியாக வழங்கப்படுகிறதா? நன்றாக இருக்கிறதா? என மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் கதிர்ஆனந்த் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்- அமைச்சரால் காலை உணவு திட்டம் மாநகராட்சி பள்ளி களில் தொடங்கப்பட்டு அதனை கிராமப்புற பள்ளி களிலும் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பள்ளிகளிலும் ஆய்வு செய்த போது சந்தோஷமாக உள்ளது. மாணவர்களிடம் கேட்கும் போதெல்லாம் மகிழ்ச்சியாக உள்ளது. காலை உணவு திட்டம் தொடங்கபட்ட பின்னர் தலைமை ஆசிரி யர்களும், மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவது தவிர்க்கபடுகிறது.
மாணவர்கள் வருகையும் உயர்ந்துள்ளது. உதயசூ ரியனை கைகளால் மறைக்க முடியாது. முதல்வரின் திட்டங்கள் எல்லா தரப்பு மக்களிடத்திலும் மீண்டும், மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை நிலைநாட்டுகிறது.
முதல்வர் என் கடன் பணி செய்கிடப்பதே என்ற வகையில் செயல்பட்டு வருகிறார். இந்தியாவிற்கு எடுத்துகாட்டாக இந்த திட்டம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு முன்பு அத்தனை பொய்ப் பரப்புரைகளும் தோற்றோடும்.
- ஓவியத் திறன் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:
காலை உணவுத் திட்டம் குறித்து கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுமி ஒருவருக்கு உணவு ஊட்டி விடுவது போன்ற காட்சியை தத்ரூபமாக பள்ளியில் உள்ள போர்டில் வரைந்திருந்தனர். பள்ளி மாணவர்கள் வரைந்த அந்த ஓவியத்தை மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருப்பதோடு, மாணவர்களையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், "இந்தக் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு முன்பு அத்தனை பொய்ப் பரப்புரைகளும் தோற்றோடும். அவர்களின் ஓவியத் திறன் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
- ரூ.404 கோடியில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவை மேற்கோள் காட்டி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 7-ந் தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்த அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அன்று அண்ணா பிறந்த நாளில் மதுரையில் இத்திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 1.14 லட்சம் தொடக்கப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரூ.404 கோடியில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரகப் பகுதி மற்றும் பேரூராட்சி, நகர்புற பகுதிகளில் உள்ள 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 31,008 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தினை கடந்த 25-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் குறித்து பிரபல நாளிதழ் ஒன்று சர்ச்சைக்குரிய வகையில் செய்தி வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரபல நாளிதழ் வெளியிட்ட செய்தியை மேற்கோள் காட்டி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதையடுத்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
கல்வி நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது திராவிட மாடல்.
கழிவறை நிரம்பி வழிகிறதா என்று பார்க்கிறது ஆரிய மாடல்
எனக் கூறியுள்ளார்.
- முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலர் இளம்பகவத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.
- காலை உணவு திட்டம் அனைத்து தரப்பிலும் வரவேற்பு பெற்றுள்ளது.
சென்னை:
முதலமைச்சர் காலை உணவு திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 18 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் அடைகிறார்கள்.
பள்ளிக்கு காலை உணவு சாப்பிடாமல் மாணவர்கள் வருவதால் கல்வி கற்பதில் ஏற்படும் சிரமங்கள், பள்ளி இடைநிற்றலை தவிர்த்தல் போன்ற காரணத்திற்காக இத்திட்டம் செயல்படுத்துவதால் பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.
பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அது போலவே இத்திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துகிறார்கள் என்பதை பார்ப்பதற்காக தெலுங்கானா மாநில அரசு அதிகாரிகள் நேற்று இரவு சென்னை வந்தனர்.
அவர்கள் இன்று அதிகாலையில் வட சென்னை பகுதியில் காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களை பார்த்தனர்.
சென்னை வந்துள்ள தெலுங்கானா மாநில முதலமைச்சரின் செயலாளர் ஸ்மிதா சபர்வால், அரசு பழங்குடியினர் நலத்துறை, செயலாளர் டாக்டர்.கிறிஸ்டினா சொங்து , கல்வித்துறை செயலாளர் கருணா வக்காட்டி, முதலமைச்சரின் சிறப்புப் பணி அலுவலர் பிரியங்கா வர்கீஸ், பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் துறை அரசு சிறப்புச் செயலாளர் பாரதி ஹொல்லிக்கேரி, உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் ராயபுரத்தில் உணவு தயாரிக்கும் கூடம் மற்றும் மாநகராட்சி உருது தொடக்க பள்ளியில் திட்ட செயல்பாடுகளை பார்வையிட்டனர்.
அவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலர் இளம்பகவத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.
உணவு தயாரிக்கும் கூடத்தில் எவ்வாறு உணவு தயாரிக்கப்படுகிறது, உணவு பொருட்கள் கொள்முதல் செய்யும் முறை, பள்ளிகளுக்கு எவ்வாறு எடுத்துச் செல்லப்படுகிறது என்பதை கேட்டு தெரிந்து கொண்டதோடு, உணவை ருசி பார்த்தனர்.
அதை தொடர்ந்து ராயபுரம் ஆரத்தூண் சாலையில் உள்ள மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவதை பார்வையிட்ட தெலுங்கானா அதிகாரிகள் பள்ளி ஆசிரியர்களிடத்தில் நாளொன்றுக்கு எத்தனை மாணவர்கள் பயன்பெறுகிறார்கள், பெற்றோர்களின் கருத்துகள் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் இளம்பகவத் நிருபர்களிடம் கூறும்போது, காலை உணவு திட்டம் அனைத்து தரப்பிலும் வரவேற்பு பெற்றுள்ளது. தெலுங்கானா மாநில அலுவலர்களை போல மற்ற மாநில அலுவலர்கள் விரும்பினாலும் அவர்களும் பார்வையிடலாம் என தெரிவித்தார்.
- நேற்று வழங்கிய ரவை சாப்பிடும் போது கெட்டியாக இருந்ததாக கூறப்படுகிறது.
- சமையல் அறையை பூட்டியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மதிய உணவு 40 குழந்தைகள் சாப்பிடுகின்றனர். காலை உணவு 35 குழந்தைகள் சாப்பிடுகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை ரவை சமைத்து குழந்தைகளுக்கு வழங்கி உள்ளனர். நேற்று வழங்கிய ரவை சாப்பிடும் போது கெட்டியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள் இது பற்றி பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று காலையில் அப்பகுதியை சேர்ந்த கோமதி என்ற பெண் இது தொடர்பாக கூறி சமையல் ஊழியர்கள் காமாட்சி, சுமதி ஆகியோரிடம் வாக்குவாதம் செய்து திடீரென சமையல் அறையை பூட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காலை உணவு சாப்பிட வந்த குழந்தைகள் தவித்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த தாசில்தார் தமிழரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமாதானம் செய்து குழந்தைகளுக்கு உணவு வழங்கி அதிகாரிகளும் சாப்பிட்டனர்.
இது பற்றி தாசில்தார் தமிழரசி கூறுகையில், கோமதி என்பவர் பெற்றோர் கழக ஆசிரியர் உறுப்பினராக உள்ளார். மேலும் அதே பள்ளியில் தூய்மை பணியாளராகவும் உள்ளார். சமையல் அறையை பூட்டியது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
- கமுதி பகுதியில் காலை உணவு திட்டம் தொடக்கப்பட்டது.
- இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட115 மையங்களில் முதல்வரின் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. கமுதி அருகே என்.கரிசல் குளம் ஊராட்சிக்கு உட்பட்ட என்.வாலசுப்பிரமணியபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்வி போஸ் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்தினார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மணிமேகலை, சங்கரபாண்டியன், மேலாளர் ராமசந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் மகாலட்சுமி ஜெயராஜ், தலைமையாசிரியை சிவஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேவகோட்டை நகராட்சி பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டம் தொடங்கப்பட்டது.
- நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் 6 நகராட்சி பள்ளிகள் உள் ளன. இப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் 167 பேர் பயின்று வருகின்றனர். தமிழக அரசு முதலமைச் சரின் காலை உணவு திட் டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து தேவகோட்டை நகராட்சியில் ஜீவா நகரில் உள்ள ஒருங்கி–ணைந்த சமையல் கூடத்தில் இருந்து உணவுகள் நகராட்சி பள்ளிகளுக்கு உணவு எடுத்து செல்லப்பட்டது. 16-வது நகர்மன்ற தொடக் கப்பள்ளியில் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், நகர்மன்றத் துணைத் தலை–வர் ரமேஷ், ஆணையாளர் பார்கவி ஆகியோர் முதல்–மைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத் தனர். நகர்மன்ற தலைவர் மாணவர்களுக்கு உணவுகள் பரிமாறப்பட்டு மாணவ மாணவிகளுடன் அமர்ந்து அருகில் உள்ள மாணவருக்கு ஊட்டி விட்டு உணவு அருந் தினார். இதனால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்