search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ப்பு நாய்"

    • வழக்கமாக வளர்ப்பு நாய்கள், அவற்றோடு பிரியமாக இருப்போரிடம் எப்போதும் நெருக்கமாக இருக்கும்.
    • சுயம்பு செல்வத்தின் மகளிடமும் அவர் வளர்த்த நாய் பிரியமாக இருந்தது.

    நாகர்கோவில்:

    திருமணம் ஆயிரம் காலத்து பயிர்.

    திருமண பந்தத்தில் இணையும் பெண், திருமணம் முடிந்ததும் கணவர் வீட்டிற்கு வாழ செல்வது வழக்கம். அப்படி புறப்படும் பெண்ணை, உற்றார், உறவினர்கள் அனைவரும் வாழ்த்தி வழி அனுப்பி வைப்பார்கள்.

    பிறந்தது முதல் பெற்றோர் வீட்டில் செல்லமாக வளர்ந்த பெண், திடீரென கணவர் வீட்டிற்கு புறப்பட்டு செல்லும் போது அவரை வளர்த்த பெற்றோர் கண்களில் இருந்து அவர்களை அறியாமல் கண்ணீர் வடியும். இதனை ஆனந்த கண்ணீர் என்றும் கூறலாம். பெற்ற மகளின் பிரிவை தாங்க முடியாமல் ஏற்படும் துயரம் எனவும் கூறலாம்.

    ஒவ்வொரு திருமண வீடுகளிலும் இந்த நிகழ்வை பார்க்கலாம். அப்போது மணப்பெண்ணின் தாய் ஒருபக்கம் அழ, மறுபக்கம் தந்தை யாருக்கும் தெரியாமல் கண்ணை கசக்கி கொண்டிருக்க, உடன்பிறந்தவர்கள், சகோதரியை கட்டிப்பிடித்து அழ இந்த காட்சிகள் கூடி நிற்போரை கலங்க வைக்கும்.

    இதனை கண்டு மணப்பெண்ணும் கண்கள் பனிக்க கணவனோடு புறப்பட்டு செல்வார். நாகர்கோவிலை அடுத்த சித்திரை மகராஜபுரம் பகுதியை சேர்ந்த சுயம்பு செல்வன் என்பவரது வீட்டு திருமணத்தில் மணப்பெண் கணவர் வீட்டுக்கு புறப்பட்ட போது அவர் வளர்த்த நாய் மணப்பெண் முன்பு நடத்திய பாச போராட்டம் பார்த்தவர்களை கண்கலங்க வைத்துவிட்டது.

    வழக்கமாக வளர்ப்பு நாய்கள், அவற்றோடு பிரியமாக இருப்போரிடம் எப்போதும் நெருக்கமாக இருக்கும். சுயம்பு செல்வத்தின் மகளிடமும் அவர் வளர்த்த நாய் பிரியமாக இருந்தது. 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு திருமணம் முடிந்தது. மாலையில் அவர் கணவர் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது மணப்பெண் வளர்த்த நாய் குரைத்து கொண்டே இருந்தது. உடனே வீட்டில் இருந்தவர்கள் அந்த நாயை அவிழ்த்து விட்டனர்.

    பிரிய மறுத்து கண்ணீர் விட்ட வளர்ப்பு நாயை கட்டிப்பிடித்த மணப்பெண்.

    பிரிய மறுத்து கண்ணீர் விட்ட வளர்ப்பு நாயை கட்டிப்பிடித்த மணப்பெண்.

    உடனே அந்த நாய் ஓடி சென்று மணப்பெண்ணின் மீது தாவி, தாவி பாய்ந்தது. அவரும் நாயை செல்லமாக தடவி கொடுத்தப்படி இருந்தார். பின்னர் அவர் கணவருடன் புறப்பட தயாரானதும், அந்த நாய், மணப்பெண்ணின் முந்தானையை பிடித்தபடி அவரை விடமறுத்து அழுதது. மணப்பெண்ணின் குறுக்கும், நெடுக்குமாக நடந்து பிரிவை தாங்க முடியாத நிலையை உணர்த்தி காட்டியது. இது அங்கு கூடியிருந்தவர்களை நெகிழ வைத்தது.

    இந்த காட்சிகள் அனைத்தையும் திருமணத்திற்கு வந்த சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

    • தேவையான மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நாயை வெளியில் கொண்டு வருவதற்கு அனுமதி கேட்டனர்.
    • நாயை வீட்டிற்குள் அடைத்து வைத்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் பாபுகுமார்(வயது39). தொழில் அதிபர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வீட்டு கடன் பெற்றார்.

    வாங்கிய வீட்டுக்கடனை குறித்த காலத்தில் செலுத்தவில்லை என தெரிகிறது. இதனால் அவரது வீடு ஏலத்துக்கு வந்தது.

    அப்போது வங்கி அதிகாரிகளிடம் வீட்டினை தானே வாங்கி கொள்வதாக பாபுகுமார் கூறியிருந்தார். ஆனால் அதனை வங்கி அதிகாரிகள் ஏற்காமல் ஏலத்தில் விட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாபுகுமார் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், பாபு குமாரின் வீட்டுக்கு நேற்று வங்கி அதிகாரிகள் போலீசாருடன் வந்தனர்.

    பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த அனைவரையும் வெளியேற்றி விட்டு, திடீரென வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர். அப்போது வீட்டுக்குள் வளர்ப்பு நாய் ஒன்று இருந்துள்ளது.

    அப்போது தேவையான மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நாயை வெளியில் கொண்டு வருவதற்கு அனுமதி கேட்டனர். ஆனால் அதிகாரிகள் அதற்கு மறுத்துவிட்டனர்.

    இதுகுறித்து பாபுகுமார் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். பின்னர் வீட்டில் இருந்த நாயை மட்டும் 3 மணி நேரத்திற்கு பிறகு வெளியில் கொண்டு வந்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

    நாயை வீட்டிற்குள் அடைத்து வைத்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • செல்லப் பிராணி சே சீ முதல் முறையாக கர்ப்பம் அடைந்ததை யொட்டி ஹரிஹரன் அதற்கு சீமந்தம் செய்திட தன் பெற்றோரிடம் கூறினார்.
    • அலங்காரம் செய்து நாய் சேசீயை நிற்க வைத்து, வீட்டின் உரிமையாளர்கள் நலுங்கு வைத்து சீமந்தம் செய்து ஆரத்தி எடுத்து மகிழ்ந்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஓலையாம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் - மாரியம்மாள்.

    இவர்களது மகன் ஹரிஹரன். பட்டதாரி வாலிபரான ஹரிஹரன் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் நாய்க்குட்டியை ஆசையாக வீட்டிற்கு எடுத்து வந்து வளர்த்துள்ளார்.

    மகனின் ஆர்வத்தைக் கண்ட அவரது பெற்றோரும் நாய்க்கு பால், பிஸ்கட் போன்ற உணவுகளை வழங்கி மகனுடன் சேர்ந்து பாசமாக நாய்க்குட்டியை தங்கள் வீட்டின் ஒரு பிள்ளையாக வளர்த்து வந்தனர்.

    அந்த நாய்க்கு சே சீ என பெயரிட்டு தங்கள் குடும்ப உறுப்பினராகவே அவற்றை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் தாங்கள் வளர்த்து வரும் செல்லப் பிராணி சே சீ முதல் முறையாக கர்ப்பம் அடைந்ததை யொட்டி ஹரிஹரன் அதற்கு சீமந்தம் செய்திட தன் பெற்றோரிடம் கூறினார்.

    முதலில் தயங்கி அவரது பெற்றோர் பின்னர் தங்கள் குடும்ப உறுப்பினராக வளர்த்து வரும் செல்ல பிராணி சே சீக்கு சீமந்தம் செய்ய முன்வந்தனர்.

    அதன்படி நல்ல நாள் பார்த்து நேற்று சே சீக்கு சீமந்தம் செய்தனர். முன்னதாக ஆப்பிள் உட்பட பழ வகைகள் இனிப்புகளை சீர் வரிசை தட்டுகளாக வைத்தனர். ஒரு சிலரை மட்டும் சீமந்தத்திற்கு அழைத்தனர்.

    பின்னர் சே சீக்கு அலங்காரம் செய்து நாய் சேசீயை நிற்க வைத்து, வீட்டின் உரிமையாளர்கள் நலுங்கு வைத்து சீமந்தம் செய்து ஆரத்தி எடுத்து மகிழ்ந்தனர்.

    இதனை வீடியோவாக எடுத்து தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர்.

    அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • வீட்டில் வளர்த்து வந்த சிப்பிப்பாறை நாய், வாலிபர் மேல் ஆக்ரோஷத்துடன் பாய்ந்தது.
    • காலை வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்த கோபால், தனது வளர்ப்பு நாய் மர்ம நபர் ஒருவரை பிடித்து வைத்திருந்ததை பார்த்து காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், பல்லடம் வடுகபாளையம் புதூர் ஸ்ரீனிவாசா நகரை சேர்ந்தவர் கோபால்(வயது 52) விவசாயி. சம்பவத்தன்று இரவு வாலிபர் ஒருவர் இவரது வீட்டு சுற்றுச்சுவரை தாண்டி குதித்து திருட முயன்றுள்ளார். இதைப்பார்த்த அவர் வீட்டில் வளர்த்து வந்த சிப்பிப்பாறை நாய், வாலிபர் மேல் ஆக்ரோஷத்துடன் பாய்ந்தது. பயத்தில் கதறியபடி நடுங்கிப் போன அந்த வாலிபர், ஆடாமல் அசையாமல் அங்கேயே அமர்ந்து விட்டார்.

    அவரை நகர விடாமல் நாயும் அதே இடத்தில் அமர்ந்து அவரை கண்காணித்தபடி இருந்தது. இப்படியே, 2 மணி நேரம் ஆடாமல் அசையாமல் வாலிபர் உட்கார்ந்திருக்க, நாயும் அவரை பார்த்தபடியே இருந்தது. காலை வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்த கோபால், தனது வளர்ப்பு நாய் மர்ம நபர் ஒருவரை பிடித்து வைத்திருந்ததை பார்த்து பல்லடம் காவல் நிலையத்துக்கு அழைத்து இது குறித்து தகவல் அளித்தார். அந்த நபரை போலீசிடம் ஒப்படைத்தார். அங்கு வந்த காவல் துறையினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், வாலிபர் வட மாநிலத்தை சேர்ந்தவர். திருடும் நோக்கில் வீட்டில் குதித்த அவரை நாயிடம் சிக்கி கடிபட்டதால் காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளதாக கூறினர்.

    திரைப்படத்தில் வருவது போல் சிப்பிபாறை ரக நாய் திருட வந்த நபரை 2 மணி நேரம் லாக் செய்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.

    • சிறுவனின் பெற்றோர் சம்பந்தப்பட்ட பெண் மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
    • வலியால் துடித்த சிறுவனை கண்டுக்கொள்ளாமல் இருந்த பெண்ணை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் உள்ள ராஜ்நகர் விரிவாக்கத்தில் வீட்டு வசதி வாரிய கட்டிடம் அமைந்துள்ளது. இங்கு, குடியிருக்கும் பெண் ஒருவர் தனது வளர்ப்பு நாயை லிஃப்டில் அழைத்து சென்றுள்ளார். அந்த லிஃப்டில் ஏற்கனவே சிறுவன் ஒருவன் இருந்துள்ளான்.

    அந்த சிறுவன் தனது இறங்கும் தளம் வருவதை அடுத்து, லிஃப்டின் கதவு அருகே வந்தான். அப்போது, அங்கிருந்த நாய் சீறிப்பாய்ந்து சிறுவனின் காலை கடித்துவிட்டது. இதனால் சிறுவன் வலியால் துடி துடித்து காலை உதறி கத்தினான். நாயை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்ட அந்த பெண், சிறுவன் வலியில் கதறுவதை பொருட்படுத்தாமல் மனிதாபிமானமின்றி இருந்தார். இந்த வீடியோ டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

    இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் சம்பந்தப்பட்ட பெண் மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வலியால் துடித்துக் கொண்டிருந்த சிறுவனை கண்டுகொள்ளாமல் இருந்த பெண்ணை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.



    ×