என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மலர்கள்"
- தேர்பவனி விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- அலங்கரிக்கப்பட்ட தேரின் மீது மலர்தூவி மெழுகுவர்த்தி ஏற்றி வேண்டுதலை நிறைவேற்றினர்.
சுவாமிமலை:
கும்பகோணத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர்பவனி விழா கடந்த 4-ந் தேதி மறைமாவட்ட முதன்மை குரு இருதய ஆண்டவர் மருத்துவமனை இயக்குனர் தேவதாஸ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து, தினமும் அருட்தந்தையர்களால் செபமாலை, நவநாள் செபம், கூட்டு திருப்பலி ஆகியவை நடைபெற்றன.
முன்னதாக ஆயர் அந்தோ ணிசாமி தலைமையில் காலை திருப்பலி மற்றும் மறையுரை அருள் செபஸ்தியார் மற்றும் மாலை ஜெபமாலை நவநாள் திருப்பலி மற்றும் மறையுரை பங்கு தந்தைகள் நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அந்தோணியார், எழுந்தருள ஆயர் அந்தோணிசாமி வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, வாணவேடிக்கையுடன் தேர்பவனி சிறப்பாக நடைபெற்றது.
தேர் பவனியின் போது, ஒவ்வொரு கிறிஸ்துவ குடும்பத்தினர் உப்பு, மிளகு ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட தேரின் மீது தூவி மெழுகுவர்த்தி ஏற்றி வேண்டுதலை நிறை வேற்றினர்.
நிகழ்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
- கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
- வண்ண மலர்களால் சிவன்- அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் அந்தணப்பேட்டை ஊராட்சி கருவேலி பகுதியில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த விசாலாட்சி அம்பிகை சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இவ் கோவிலில் மகா கும்பாபிஷேகம் 120 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது.
கடந்த 22 ஆம் கணபதி ஹோமத்துடன் தொடங்கிய யாகசாலை நான்கு காலங்கள் நடைபெற்றது நான்காம் கால யாகசாலை பூஜைக்கு நேற்று காலை கோவிலில் நான்கு பிரகாரங்கள் வழியாக மல்லாரி இசை முழங்க புனித கடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிவன், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், உள்ளிட்ட கோபுர கலசங்களுக்குபுனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடை பெற்றது.
அதனைத் தொடர்ந்து சிவன் மற்றும் அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில்சூரியனார் கோயில் ஆதீனம் தவத்திரு சிவக்கர தேசிக சுவாமிகள்அறநிலை துறை உதவி ஆணையர் இராணிமற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு சிவவாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
- காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
- மலர்களால் ஜொலித்த கோவிலில் நின்று பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
தென்காசி:
தென்காசியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற உலகம்மன் சமேத காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டிற்கான மாசி மக பெருந்திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தின் சார்பில் மண்டகப்படி திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.
நேற்று தேவர் சமுதாயம் சார்பில் நடந்த 7-வது நாள் திருவிழாவில் காசி விஸ்வநாதர் கோவில் முகப்பு பகுதியில் இருந்து கோவிலின் உள்ளே இருக்கும் கொடிமரம் வரையிலும் வண்ண வண்ண மலர்களால் கோலமிட்டு இருந்தனர்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் மலர்களால் ஜொலித்த கோவிலில் நின்று தங்களின் செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். திருவிழாவின் 9-ம் திருநாளான நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலையில் சுவாமி மற்றும் அம்பாள் தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட உள்ளது. மேலும் திருவிழா நிறைவு நிகழ்ச்சியாக வருகிற 6-ந்தேதி தீர்த்த வாரி நிகழ்ச்சியும், சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.
- இளநீர், பால், தயிர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம்.
- வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு கிராமத்தில் அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள் பாலித்து வரும் வள்ளி தெய்வானை சமேத ஒரு முகம் ஆறு கரங்களை கொண்ட அமிர்தகர சுப்பிரமணிய சுவாமிக்கு தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பல்வேறு திரவியங்கள் பழச்சார் பஞ்சாமிர்தம் தேன் பன்னீர் இளநீர் பால் தயிர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்பு சுவாமி விபூதி அலங்காரம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தீபாரதனை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணியரை வழிபட்டனர்.
- பஞ்சமூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
- சூரிய பகவானுக்கு தீர்த்தவாரி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி திருக்கோலக்காவில் ஓசை நாயகி அம்மன் உடனாகிய தாளபுரீஸ்வரர் சாமி கோவில் உள்ளது.
பிரசித்தி பெற்ற இக்கோவில் தீர்த்த குளத்தில் நீராடி சூரிய பகவான் சுவாமியுடன் எழுந்தருளும் நிகழ்வு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் இரண்டாவது ஞாயிறு சூரிய புஷ்கரணி விழாவாக நடைபெற்று வருகிறது.
அதன்படி நிகழாண்டு சூரிய புஷ்கரணி விழாவையொட்டி விநாயகர், தாளபுரீஸ்வரர் சுவாமி, ஓசை நாயகி அம்மன், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
பின்னர் பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு மலர்கள் அலங்காரத்தில் மூஞ்சூர், காமதேனு, ரிஷப, மயில் வாகனங்களில் சூரிய புஸ்கரணிக்கு எழுந்தருளினர்.
அங்கு சூரிய பகவானுக்கு தீர்த்தவாரி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டது.
- தேர்பவனியின் போது கூடியிருந்த பக்தர்கள் மரியே வாழ்க என்று முழக்கங்களை எழுப்பி வணங்கினர்.
பூதலூர்:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ளது பூண்டி மாதா பேராலயம்..பூலோகம் போற்றும் புதுமை மாதா என்று பக்தர்களால் போற்றி புகழப்படும் பூண்டி மாதா பேராலயத்தில் மாதாவின் பிறப்பு பெருவிழா கடந்த மாதம் 30-ம் தேதி கொடியே ற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தினை தொடர்ந்து நவ நாட்கள் எனப்படும் விழா நாட்களில் மாலை பூண்டி மாதாவின் சிறிய சுரூபம் அலங்காரம் செய்யப்பட்டு சிறிய சப்பரத்தில் வைக்கப்பட்டு பக்தர்கள் சுமந்து வந்து பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
மாதாவின் பிறப்பு பெருவிழா நாளான நேற்று மாலை பேராலயத்தின் எதிரில் இருந்த கலையரங்கத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோனிசாமி அடிகளார் தலைமையில் மரியாள்-எளிமையின் எடுத்துக்காட்டு என்ற பொருளில் நடைபெற்ற திருப்பலியில் மறைமாவட்ட முதன்மை குரு அமிர்த சாமி, மறைமாவட்ட பொருளாளர் சிங்கராயர், பேராலயஅதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட், மறைவட்ட முதன்மை குரு இன்னசென்ட், லால்குடி மறைவட்டமுதன்மை குரு பீட்டர் ஆரோக்கியதாஸ், பேராலயஉதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தையர்கள் அருளானந்தம், ஜோசப் மற்றும் பல்வேறு ஆலயங்களில் இருந்து வந்திருந்த அருட் தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பலி நிறைவடைந்ததும் பூண்டி பேராலய முகப்பில் சிறப்பு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதும், மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டது.
அன்னையின் சொரூபம் வைக்கப்பட்ட தும் தேர்ப வனியை கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி அடிகளார் புனிதம் செய்து தொடங்கி வைத்தார்.
அப்போது ஆலயமணிகள் முழங்கின. வாணவேடிக்கை நடைபெற்றது.
தேர்பவ னியின் போது கூடியிருந்த பக்தர்கள் மரியே வாழ்க என்று முழக்கங்களை எழுப்பி வணங்கினர். கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மாதாவை வழிபட்டனர்.
பேராலய வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.
தேர் பவனி நிறைவ டைந்ததும் இன்று (வெள்ளி) மரியாள் தாய்மை யின் தலைப்பேறு என்ற பொருளில் பிஷப் அந்தோனிசாமி அடிகளார் திருப்பலி நிறைவேற்றினார். அதனை தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு பூண்டி பேராலயத்தில் மாதா பெருவிழா நிறைவு பெற்றது.
ஏற்பாடுகளை பேராலய அதிபர் சாம்சன் தலைமையில் உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள், ஆன்மீக தந்தையர்கள், பங்கு மக்கள் செய்து இருந்தனர்.
தேர்பவனியின் போது திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் தலைமையில் திருக்காட்டுப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்