search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலகக் கோப்பை"

    • என்னுடைய வாழ்நாள் முழுவதும் இனிமேல் அந்த பிட்ச் மற்றும் மைதானத்தை மறக்க மாட்டேன்.
    • எனவே அதனுடைய சிறிய பகுதியை எடுத்துச் செல்ல விரும்பினேன்.

    பார்படாஸ்:

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று முடிந்த 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுகள் கழித்து டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் பார்படாஸ் மைதானத்தின் மண்னை ரோகித் சாப்பிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்நிலையில் அந்த பிட்ச்தான் எங்களுக்கு இந்த வெற்றியை கொடுத்தது என இதற்கான காரணம் குறித்து ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அது போன்ற விஷயங்களை என்னால் விவரிக்க முடியாது என்று நினைக்கிறேன். ஏனெனில் அது கதையாக எழுதப்பட்டது கிடையாது. அவை அனைத்தும் உள்ளுணர்வில் இருந்து வருவதாகும். அந்த தருணத்தில் பிட்ச் அருகே சென்று அதை நான் உணர்ந்தேன். ஏனெனில் அந்த பிட்ச்தான் எங்களுக்கு இந்த வெற்றியை கொடுத்தது. அதில் விளையாடி நாங்கள் வென்றோம்.

    என்னுடைய வாழ்நாள் முழுவதும் இனிமேல் அந்த பிட்ச் மற்றும் மைதானத்தை மறக்க மாட்டேன். எனவே அதனுடைய சிறிய பகுதியை எடுத்துச் செல்ல விரும்பினேன். அந்தத் தருணம் மிகவும் ஸ்பெஷலானது. அந்த இடத்தில்தான் எங்களுடைய கனவு நிஜமானது. எனவே அதை கொஞ்சம் நான் வைத்துக் கொள்ள விரும்பினேன். உலகக்கோப்பையை வென்றது உண்மையில் அற்புதமான உணர்வு. அது இன்னும் மூழ்கவில்லை என்று நான் சொல்வேன்.

    என்று ரோகித் கூறினார்.

    • இதுவரை நடந்த டி20 உலகக் கோப்பையை விட 2024 -ம் ஆண்டில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளது.
    • ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு வீரர் அதிக சிக்சர் அடித்தது இந்த உலகக் கோப்பையில் தான்.

    2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 1- ந் தேதி தொடங்கி ஜூலை 29-ந் தேதி முடிவடைந்தது. இதில் இறுதிபோட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதியது. இந்த பரபரப்பான போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

    இந்த 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் பல சாதனைகள் படைக்கப்பட்டது. நியூசிலாந்து வீரர் பெர்குசன் 4 ஓவர்களையும் மெய்டன் ஓவர்களாக வீசினார். இந்த உலகக் கோப்பை அதிக பவுண்டரிகள் விளாசப்பட்டது. ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு வீரர் அதிக சிக்சர் அடித்தது இந்த உலகக் கோப்பையில் தான். அதிக சிக்சர் விளாசிய கிறிஸ் கெய்ல் சாதனையை அந்த அணி வீரரான பூரன் முறியடித்தார்.

    அந்த வகையில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இதுவரை இல்லாத அளவாக 44 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளன. 2007-ல் தொடங்கப்பட்ட டி20 உலக கோப்பை தொடர் முதல், 2024 ஆண்டு வரை 152 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளன.

    2024-ம் ஆண்டு அதிகபட்சமாக 44 மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக 2012-ம் ஆண்டில் 21 மெய்டன்கள் வீசப்பட்டது. 2009-ம் ஆண்டில் வெறும் 5 மெய்டன்களே வீச்சப்பட்டது.

    ஒவ்வொரு டி20 உலகக் கோப்பை தொடரில் வீசப்பட்ட மெய்டன் ஓவர்கள் விவரம்:-

    15 - 2007

    05 - 2009

    11 - 2010

    21 - 2012

    13 - 2014

    09 - 2016

    17 - 2021

    17 - 2022

    44 - 2024

    • கடந்த 2 நாட்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையம் இன்று மாலை மீண்டும் திறக்கப்பட உள்ளது.
    • வெற்றிக்கோப்பையுடன் நாடு திரும்பும் வீரர்களை வரவேற்க நாடே ஆவலாக உள்ளது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 29-ந் தேதி நடந்தது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.

    இந்த நிலையில் அட் லாண்டிக் பெருங்கடலில் உருவான 'பெரில்' புயல் தீவிரமடைந்தது. 'பிரிவு-5' வகையை சேர்ந்த புயல் என்பதால், மணிக்கு 260 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் தீவிர புயல் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், பிரிட்ஜ்டவுன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.

     

    பலத்த மழை பெய்து வருவதால், சாலையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த புயலால் இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. வீரர்கள் பிரிட்ஜ்டவுனில் உள்ள ஹில்டன் ஓட்டலில் முடங்கி உள்ளனர். இந்திய வீரர்கள், அவரது குடும்பத்தினர், பயிற்சி குழுவினர், அதிகாரிகள் என 70 பேர் அங்கு சிக்கி தவித்தனர்  இந்திய வீரர்கள் ஹில்டன் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர். பெரில் புயல் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு பார்படாஸ் கரையை கடந்தது.

     

     

    இதனால் கடந்த 2 நாட்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையம் இன்று மாலை மீண்டும் திறக்கப்பட உள்ளது. எனவே இன்று மாலை 6 மணிக்கு பார்படாஸிலிருந்து விமானம் மூலம் இந்திய அணி கிளம்ப உள்ளது.

    இன்று [ஜூன் 2] ஒரு இரவு பயணத்தின்பின் நாளை [ஜூன் 3] காலை 7.45 மணியளவில் இந்திய அணி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு வந்து இறங்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

    வெற்றிக்கோப்பையுடன் நாடு திரும்பும் வீரர்களை வரவேற்க நாடே ஆவலாக உள்ளது. எனவே டெல்லி விமான நிலையத்தில் நாளை கொண்டாட்டத்துக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது. 

    • ஜபல்பூரில் தீபக் தாக்கூர் என்ற 5 வயது சிறுவன் பட்டாசு மீது டம்ளரை வைத்து வெடித்துள்ளார்.
    • மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதை கொண்டாடிய சிறுவன், பட்டாசு வெடித்தபோது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தீபக் தாக்கூர் என்ற 5 வயது சிறுவன் பட்டாசு மீது டம்ளரை வைத்து வெடித்துள்ளார். அப்போது டம்ளர் வெடித்து சிதறியதில், அதன் துகள்கள் சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்த சிறுவனின் வயிற்றில் குத்தியது.

    இதைத் தொடர்ந்து அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கோஹல்பூர் காவல் நிலைய அதிகாரி பிரதிக்ஷா மார்கோ தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவம் தொடர்பாக அப்பகுதி சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    2024 டி20 உலகக்கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றதை குழந்தைகள் கொண்டாடிக் கொண்டிருந்தபோது இந்த சோகமான விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

    • சச்சினின் தீவிர ரசிகரான சுதிர்குமார் உலகக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
    • இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

    உடல் முழுவதும் இந்திய அணியில் மூவர்ண கொடியின் பெயிண்டை அடித்து கொண்டு நெஞ்சில் சச்சின் டெண்டுல்கர் என்று எழுதி கொண்டு, தேசிய கொடியை எந்தி செல்லும் சச்சினின் அதி தீவிர ரசிகர் சுதிர் குமார்.

    இவர் தொடக்கத்தில் நண்பர்களிடம் கடனை வாங்கியாவது கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்றுவிடுவார். சில சமயம், காசு இல்லை என்றால் நடந்தோ, இல்லை யாரிடமாவது லிப்ட் கேட்டோ, மைதானத்துக்கு சென்று விடுவார்.

    தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் ஒரே மாதிரி தோற்றத்துடன் வந்ததை அடுத்து கிரிக்கெட் வீரர்களிடமும், ரசிகர்களிடமும் பிரபலம் ஆனார். மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள், இவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்றால் காசு கொடுக்க வேண்டும். இப்படி தான் வாழ்க்கையை ஓட்டினார்.

    சுதிர் குமார் சௌத்ரியின் அன்பை பார்த்த சச்சின் டெண்டுல்கரே, அவருக்கான டிக்கெட் செலவு மற்றும் போக்குவரத்து செலவை ஏற்று கொண்டார். பின்னர் அவரின் குடும்பத்துக்கும் உதவித் தொகையும் சச்சின் வழங்குகிறார். சச்சின் ஓய்வு பெற்ற பிறகும் அணி நிர்வாகமே இவருக்கான டிக்கெட்டை வழங்கி வருகிறது. வீரர்கள் உடை மாற்றும் அறைக்கு சென்று அங்குள்ள வீரர்களிடம் பேசும் அளவுக்கு இந்திய அணியில் செல்லப் பிள்ளையாக மாறினார் சுதிர்குமார் சௌத்ரி.

     

    இந்த நிலையில் சுதிர்குமார் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டியை பார்க்க சென்றார். இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு ரோகித் சர்மா அங்குள்ள கடற்கரையில் போட்டோஷீட் நடத்தினார். அப்போது உலகக் கோப்பையுடன் சுதிர்குமார் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவருடன் ரோகித் சர்மாவும் இருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
    • திரைப்பிரபிலங்களில் இருந்து அரசியல் பிரபலங்கள் வரை இந்திய அணியை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றன.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு ஐசிசி உலகக் கோப்பையை வென்றுள்ளது.

    இந்த வரலாற்று வெற்றியை கொண்டாட திரைப்பிரபிலங்களில் இருந்து அரசியல் பிரபலங்கள் வரை இந்திய அணியை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றன. இந்திய அணியை பாராட்டும் வகையில் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் அவரது ஒரு பாடலை பரிசாக வழங்கியுள்ளார்.

    டீம் இந்தியா ஹை ஹும் என்ற தலைப்பிடப்பட்ட அந்தப் பாடல், சமீபத்தில் வெளியான மைதான் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலாகும்.

    இதுக் குறித்து ஏ.ஆர் ரகுமான் அவரது எக்ஸ் பக்கத்தில் இந்தியா அணிக்கு வாழ்த்து தெரிவித்து இந்த பாடலின் யூடியூப் லிங்கை அதில் பதிவு செய்துள்ளார். இப்பாடலின் காட்சிகள் தற்பொழுது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்திய அணிக்காக கோப்பையை வென்ற ரோகித் சர்மா ஐ.சி.சி.-இன் கனவு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • 6 இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

    துபாய்:

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்து கனவு அணியை அறிவித்துள்ளது.

    இந்திய அணிக்காக கோப்பையை வென்ற ரோகித் சர்மா ஐ.சி.சி.-இன் கனவு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் 6 இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

    ஐ.சி.சி.-இன் கனவு அணி

    ரோகித் (கேப்டன்), குர்பாஸ், நிக்கோலஸ் பூரன், சூர்யகுமார் யாதவ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ரஷீத் கான், பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் பரூக்கி. நோர்ஜே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.



    • இந்திய அணி 17 ஆண்டுக்குப் பிறகு 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
    • உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    17 ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இதற்கிடையே, உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்தார் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா.

    இந்நிலையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் பாய்ந்து பிடித்த கேட்சை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக இர்பான் பதான் கூறுகையில், என் கடைசி மூச்சு உள்ள வரை சூர்யகுமார் யாதவின் கேட்சை மறக்கமாட்டேன்.

    இந்த கண்ணீர் நான் சோகமாக இருப்பதாலோ அல்லது என் வாழ்க்கையில் நடந்த விஷயங்களினாலோ அல்ல. இவை மகிழ்ச்சியான கண்ணீர் என தெரிவித்தார்.

    • 16.48 மில்லியன் லைக்குகளுடன் கோலியின் பதிவு இச்சாதனையை படைத்துள்ளது.
    • நடிகை கியராவின் திருமண பதிவு 16.26M லைக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில், டி20 உலக கோப்பை வெற்றி தொடர்பான கோலியின் பதிவு, இன்ஸ்டாவில் அதிகம் லைக் செய்யப்பட்ட இந்தியரின் பதிவு என்ற சாதனையை படைத்துள்ளது. 16.48 மில்லியன் லைக்குகளுடன் கோலியின் பதிவு இச்சாதனையை படைத்துள்ளது.

    இதற்கு முன்பு, இந்தியாவில் இன்ஸ்டாகிராம் பதிவில் அதிகம் லைக் செய்யப்பட்ட போஸ்ட் என்ற பெருமையை கியாரா, சித்தார்த்தின் திருமணப் பதிவு பெற்றிருந்தது.

    தற்போது நடிகை கியராவின் திருமண பதிவு 16.26 மில்லியன் லைக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

    ஆலியா பட்டின் திருமணப் பதிவு 13.19 மில்லியன் லைக்குகளுடனும் கேத்ரினா கைஃபின் திருமணப் பதிவு 12.6 மில்லியன் லைக்குகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.

    • 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.
    • உலகக்கோப்பையை வென்றதும் மைதானத்தின் புற்களை ரோகித் சுவைத்து பார்ப்பார்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி ஸ்டைலில் டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா வாங்குவார். இது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    இந்நிலையில் மெஸ்ஸி ஸ்டைலில் ரோகித் சர்மா உலகக்கோப்பை வாங்கும் புகைப்படத்தை FIFA உலகக்கோப்பை அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    பிபாவை தொடர்ந்து பிரபல டென்னிஸ் போட்டியான விம்பிள்டன் தனது இன்ஸ்டகிராம் பக்கமும் ரோகித் - நோவக் ஜோகோவிச் படத்தை பகிர்ந்துள்ளது.

    உலகக்கோப்பையை வென்றதும் மைதானத்தின் புற்களை ரோகித் சுவைத்து பார்ப்பார். அந்த புகைப்படத்துடன் டென்னிஸ் மைதானத்தின் புற்களை நோவக் ஜோகோவிச் சுவைக்கும் படத்தோடு இணைத்து விம்பிள்டன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த புகைப்பாம் தற்போது வைரலாகி வருகிறது.

    • இந்திய கிரிக்கெட் அணியை வாழ்த்துகிறேன்.
    • இருவரும் நீண்ட காலமாக இந்திய கிரிக்கெட்டின் வெற்றிக்கு பங்களித்துள்ளனர்.

    இமாச்சல பிரதேச மாநிலம் ஹமிர்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக எம்பி அனுராக் தாக்கூர் கூறுகையில்,

    பொதுமக்கள் எதிர்க்கட்சிகளை தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்கள். ஆனால் அவர்கள் பாராளுமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்துகின்றன. எதிர்க்கட்சிகள் ஓடுவதை விட விவாதத்தில் பங்கேற்க வேண்டும்.

    டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது குறித்து அவர் கூறுகையில், இந்திய கிரிக்கெட் அணியை வாழ்த்துகிறேன். இந்திய அணி இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டது. இரண்டு சிறந்த கிரிக்கெட் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் நீண்ட காலமாக இந்திய கிரிக்கெட்டின் வெற்றிக்கு பங்களித்துள்ளனர் என்று கூறினார்.


    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
    • 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி ஸ்டைலில் டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா வாங்குவார். இது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    இந்நிலையில் மெஸ்ஸி ஸ்டைலில் ரோகித் சர்மா உலகக்கோப்பை வாங்கும் புகைப்படத்தை FIFA உலகக்கோப்பை அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    ×