என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புரட்டாசி"
- சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான்.
- சிவபெருமான், விஷ்ணு, அம்மன், விநாயகர் வழிபாடு புரட்டாசியில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான்.
இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது.
புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார்.
அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடு பலன்கள் குறைய காக்கும் கடவுளான பெருமாளை வணங்குவது வழக்கத்தில் வந்தது.
புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது.
சிவபெருமான், விஷ்ணு, அம்மன், விநாயகர் வழிபாடு புரட்டாசியில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
புரட்டாசியில் பெருமாளை வழிபட்டால் ஏழுமலையானிடம் இருந்து அதிக அருளையும், பலனையும் பெற முடியும் என்பது பக்தர்களிடம் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
குறிப்பாக புரட்டாசி என்றதுமே அனைவருக்கும் முதலில் திருப்பதி ஏழு மலையான் வழிபாடுதான் நினைவுக்கு வரும்.
அதனால் தான் புரட்டாசி மாதத்தை "பெருமாள் மாதம்" என்று சொல்கிறார்கள்.
புரட்டாசி மாதம் சனிக் கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது.
புண்ணியத்தை இரட்டிப்பாக்கி தர வல்லது.
எனவே பெருமாள் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடு செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
- தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு.
- ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரதநாட்கள் தான்.
தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு.
இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும்.
ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரதநாட்கள் தான்.
சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான்.
பெருமாளை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பு என்பார்கள்.
அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.
ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று.
புதனின் அதி தேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு.
எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.
பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி.
இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான்.
ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன.
புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான்.
அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத் தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.
ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது.
அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.
- ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயணம் தேவர்களுக்கு ராக் (இரவு) காலம்.
- இதை நல்ல வழியில் பயன்படுத்துவோருக்கு மேலும் மேலும் இறைவனின் அருள் கிடைக்கும்.
புரட்டாசி மாதத்தில் அன்னை, நவராத்திரியில் கொலுவிருந்து பத்தாவது நாள் விஜயதசமி அன்று மகிஷனை வதம் செய்து அதனால் எழுந்த கோபத்தினால் உக்கிரமாக இருந்தாள்.
பவுர்ணமி அன்று அம்பாளை பிரம்மன், விஷ்ணு, இந்திரன் முதலியோர் போற்றி துதித்ததன் விளைவாக குளிர்ச்சியான ஒளி பொருந்திய முகத்துடன் பவுர்ணமியில் சாந்த சொரூபிணியாக காட்சி அளித்தாள்.
நவராத்திரி விரதம் இருப்பவர்கள் புரட்டாசி மாத பவுர்ணமி அன்று விரதம் இருந்து மாலை சந்திர உதயத்தில் நிலவையும், அம்பாளையும் தரிசனம் செய்பவர்கள் தங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் எல்லா காரியங்களிலும் வெற்றியை பெறுவார்கள்.
ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயணம் தேவர்களுக்கு ராக் (இரவு) காலம்.
இதில் புரட்டாசி மாதம் என்பது தேவர்களின் இரவு காலத்தின் நடுநிசியாகும்.
நடுநிசியான புரட்டாசி மாதத்தின் பவுர்ணமி என்பது அம்பிகையின் பிரகாசம் ஆகும்.
இந்த கோடி சந்திர பிரகாசத்தை சவுந்தர்ய லகரியில் அம்பிகையின் சவுந்தரியத்தை "உன்னுடைய புன்முறுவல் அமுதம் போன்றது.
உன் முகமாகிய சந்திரனிடம் இருந்து பெருகும் அந்த அமுதம் போன்ற நிலவுக்கதிர்களை உண்ணும் சகோரப் பறவைகளுக்கு அந்த அமுதத்தின் தித்திப்பு திகட்டவே அவற்றின் அலகுகள் உணர்ச்சி இழந்ததாக ஆகிவிட்டன.
ஆகையால் அப்பறவைகள் ருசி மாற்றம் வேண்டி புளிப்பில் ஆசை கொண்டு குளிர்ந்த கதிர்கள் கொண்ட சந்திரனின் நிலவாகிய அமுதப் பெருக்கை புளித்த கஞ்சு என்று எண்ணி வேண்டிய மட்டும் இரவு தோறும் நிறைய பருகுகின்றன" என்று ஜகத்குரு ஆதிசங்கரர் கூறியிருப்பதாக தெய்வத்தின் குரலில் மகா பெரியவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சமயத்தில் தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளை பெறுவார்கள்.
பவுர்ணமி இரவின் நடுநிசியில் தியானம், ஜெபம், பூஜை, பிராணாயாமம், தவம் செய்தால் இறைசக்தி உடனே கிடைக்கும்.
இந்த நாளில் விரதம் இருப்பவர்கள் இரவில் குறைவான, எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய ஆகாரத்தை உண்ண வேண்டும்.
இவ்வாறு உண்டால் நள்ளிரவில் தியானம் செய்வதற்கும், பிராணாயாமம் செய்வதற்கும் ஏதுவாக இருக்கும்.
இந்த சக்தியை நல்ல வழியில் பயன்படுத்துவோருக்கு மேலும் மேலும் இறைவனின் அருள் கிடைக்கும்.
இப்படிப்பட்டவர்களுக்கு நல்ல தேஜசும், நடக்க இருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் சக்தியும் கிடைக்கும்.
இவர்களோ அல்லது இவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களோ எந்த காரியத்தை தொடங்கினாலும் வெற்றி கிடைக்கும்.
எதிரிகள் நண்பர்களாக மாறிவிடுவார்கள்.
- இந்நாளில் உடல் உள்ள சுத்தியோடு விரதமிருந்து பிள்ளையாரை வழிபட காரிய சித்தி உண்டாகும்.
- நன்கு வெண்மை படர்ந்த அறுகம் புற்களைக்கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும்.
சித்தி விநாயக விரதம்!
புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்து செய்யப்படும் விரதம் இது.
தேவகுரு பிருகஸ்பதியால் உபதேசிக்கப்பட்டது.
இந்நாளில் உடல் உள்ள சுத்தியோடு விரதமிருந்து பிள்ளையாரை வழிபட காரிய சித்தி உண்டாகும்.
இன்று பிள்ளையாருக்கு அறுகம்புல்லால் அர்ச்சனை செய்து, மோதகமும் சர்க்கரைப் பொங்கலும் நைவேத்தியம் செய்து கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள்.
இதனால், காரியத் தடங்கல்களும் வறுமையும் நீங்கும். புத்திர சம்பத்து உண்டாகும்.
கடன் பிரச்னைகள் விலகி, தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
தூர்வாஷ்டமி விரதம்!
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் இது.
இந்த விரத நாளில், வடக்கு நோக்கிப் படர்ந்திருந்து, நன்கு வெண்மை படர்ந்த அறுகம் புற்களைக்கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும்.
இதனால் குடும்பம் செழிக்கும்.
- ஒரு சமயம் சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க அவரிடம் அனுமதி கேட்டார்.
- அன்றிலிருந்து ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை.
கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனி பகவானின் பிடியிலிருந்து காப்பாற்றுவார்.
இதற்குப் புராணத்தில் ஒரு கதை உண்டு.
ஒரு சமயம் சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க அவரிடம் அனுமதி கேட்டார்.
சனி பகவானின் நச்சரிப்புத் தாங்காமல் ஆஞ்சநேயர், என் தலைமீது அமர்ந்து கொள் என்று சொன்னதும், ஆஞ்சநேயர் தலையில், சனி பகவான் அமர்ந்தார்.
இதுதான் சமயம் என்று அங்கிருந்த பெரிய பாறாங்கல்லை தன் வாலில் எடுத்துத் தன் தலை மீது அமர்ந்திருக்கும் சனி பகவானின் தலைமீது வைத்தார்.
பாறாங்கல்லின் பாரம் தாங்காமல் மூச்சு வாங்கிய சனி பகவான், தன்னை விடுவிக்கும்படி ஆஞ்சநேயரிடம் மன்றாடவே, என்னையும் என்னை வணங்கும் பக்தர்களுக்கும் இனி தொந்தரவு கொடுக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடு என்று சொல்லவே, ஆஞ்சநேயரின் கட்டளைக்கு அடிபணிந்தார் சனி பகவான்.
அன்றிலிருந்து ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை.
- புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது திருப்பதி ஏழு மலையானுக்கு மிகவும் உகந்தது.
- தசாவதாரத்தில் எந்த அவதாரத்திலும் சேராதது ஸ்ரீ வேங்கடேசன் அவதாரம்.
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது திருப்பதி ஏழு மலையானுக்கு மிகவும் உகந்தது.
தசாவதாரத்தில் எந்த அவதாரத்திலும் சேராதது ஸ்ரீ வேங்கடேசன் அவதாரம்.
பக்தர்களின் நலனுக்காக அவர் திருமலையில் எழுந்தருளி இருக்கிறார்.
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும்.
பின்னர் அலமேலு மங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும்.
இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.
பூஜைக்குரியவற்றை சேகரித்து வைத்து ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும்.
சர்க்கரைப்பொங்கல், வடை எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.
புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக் கிழமையன்றும் மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும்.
அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம்போல் செய்து மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்தி போல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.
அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்ட வேண்டும்.
பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம்.
துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.
புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.
செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும்.
- பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
சேலம்:
சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில் இன்று காலை சிறப்பு அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. அதன்பின்னர் அழகிரிநாதர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள பட்டை கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவில், பெரமனூர் வெங்கடேச பெருமாள் கோவில், ஜாகீர் அம்மாபாளையம் வரபிரசாத ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.
குரங்குசாவடி பகுதியில் உள்ள நகரமலையில் பெருமாள் சாமியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஆனந்தா இறக்கம் அருகே உள்ள லட்சுமி நாராயணசாமி கோவில், செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், அயோத்தியாப்பட்டணம் ராமர் கோவில், சின்னத் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில், அழகாபுரம் வெங்கடேசுவரா பாலாஜி டிரஸ்ட் கோவில், உடையாப்பட்டி சென்றாய பெருமாள் கோவில், கடைவீதி வேணுகோபாலசுவாமி கோவில், நாமமலை பெருமாள் கோவில், நெத்திமேடு கரியபெருமாள் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
- சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
- திரளாள பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை வட்டம், திருபுவனம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள சின்ன சீரங்கம் எனப்படும் அருள்மிகு ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளாள பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்து இருந்தனர்.
- புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக உள்ளதால், பக்தர்கள் விரதம் கடைபிடித்து வருகின்றனர்.
- நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி திருமருகல் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக உள்ளதால், பக்தர்கள் விரதம் கடைபிடித்து வருகின்றனர். குறிப்பாக சனிக்கிழமை சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம். புரட்டாசி மாத சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
திருமருகலில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு பஞ்சாமிர்தம்,பால், இளநீர், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வண்ண மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- சுந்தரராஜபெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
- விழாவையொட்டி சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் வழிபாடு நடந்தது.
செங்கோட்டை:
புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு நேற்று செங்கோட்டை அழகிய மனவாள பெருமாள் கோவில், அறம்வளர்த்த நாயகி அம்மன் கோவிலில்களில் கருட சேவை மற்றும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. செங்கோட்டை சுந்தரராஜபெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, மாலையில் கொட்டும் மழையிலும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதைமுன்னிட்டு கோவிலின் வீற்றிருக்கும் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் வழிபாடு நடந்தது. தொடர்ந்து மாலையில் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன.
இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். மாலை அலங்காரம், தீபாராதனை பிரார்த்தனை, பஜனை நடைபெற்றது. பிரானுர் பார்டர்ஆஞ்சநேயர், செங்கோட்டை சிவன் கோவில், இலத்தூர் சனிஸ்வரர் கோவில் உள்பட பல கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
- திரளான பெண் பக்தர்கள் தரிசனம்
- காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும், நிவேத்திய பூஜையும் நடந்தது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி விழா கோலாகலமாக கொண்டா டப்பட்டது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடந்தது. அதைத்தொடர்ந்து 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும் 6 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. பின்னர் காலை 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும், நிவேத்திய பூஜையும் நடந்தது.
அதன்பிறகு 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், நெய் பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு அம்மனுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் காணிக்கையாக வழங்கிய தங்கக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடந்தது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு சாயராட்சை தீபாராதனை நடக்கிறது.
அதைத்தொடர்ந்து அம்மனுக்கு முல்லை, பிச்சி, ரோஜா, மல்லிகை, துளசி, தெத்தி, தாமரை, உள்பட பல வகையான மலர்களால் அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச்செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் அம்மனை வெள்ளி சிம்மா சனத்தில் அமரச்செய்து தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.
- நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
- இன்று புரட்டாசி சனிக்கிழமை
நாகர்கோவில் :
புரட்டாசி சனிக்கிழமை களில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி ஆனந்தம் கிடைக்கும், நினைத்த காரியம் கைக்கூடும் என்பது ஐதீகம். இதனால் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.
புரட்டாசி முதல் சனிக் கிழமையான இன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. வடி வீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவிலில் நடை திறக்கப் பட்டது முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பக்தர்கள் நீண்ட வரிசை யில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். கோவி லில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்க ளுக்கு பிரசாதமும் வழங்கப் பட்டது. திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோவிலி லும் இன்று அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
காலை முதலே பக்தர்கள் வந்து பெருமாளை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
திருப்பதிசாரம் திரு வாழ்மார்பன் கோவிலில் காலையில் பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. கன்னியாகுமரி விவே கானந்தபுரம் விவேகானந்த கேந்திர கடற்கரை வளா கத்தில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடா ஜலபதி கோவிலில் இன்று காலை 6 மணிக்கு சுப்ரபாத தரிசனமும், அதைத் தொடர்ந்து விசேஷ பூஜை களும், சிறப்பு வழிபாடுகளும் தீபாராதனை யும் நடந்தது.
இதில் திரளான பக்தர் கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை 5 மணிக்கு தோ மாலை சேவையும், அதைத்தொடர்ந்து சுவாமி பள்ளியறை எழுந்தருளும் நிகழ்ச்சியும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.
பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், சுசீந்தி ரம் துவாரகா கிருஷ்ணன் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள கிருஷ்ண சாமி கோவில், கோட்டார் வாகையடி தெருவில் உள்ள ஏழாகரம் பெருமாள் கோவில், வட்டவிளை தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், ஆஸ்ராமம் திருவேங்கட விண்ணகப் பெருமாள் கோவில், மகாதானபுரம் நவநீத சந்தான கோபால கிருஷ்ண சாமி கோவில், கன்னியா குமரி பால கிருஷ்ண சாமி கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
கோவிலில் பெருமாளை தரிசிப்பதற்கு காலை முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாத மும் வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்