என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கிராம சபா கூட்டம்"
- கருப்பம்புலம் ஊராட்சியில்காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபா கூட்டம் நடந்தது.
- 30 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தின் மூலம் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா கருப்பம்புலம் ஊராட்சியில்காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் முருகையன் வரவேற்றார்.
வேதாரணியம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜு, பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகநாதன் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள், 100 நாள் திட்ட பணியாளர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தில் பணிகள் விரைந்து நடை பெற்று வருகிறது.
அடுத்த ஆண்டிற்குள் பணிகள் முடிக்கபட்டு தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தின் மூலம் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும்.
100 நாள் வேலைத்திட்ட பணியில்ஊதியம் வழங்குவதில் தேக்க நிலைஇருந்தது.
தற்போது அது சரி செய்யப்பட்டு அவரவர் வங்கி கணக்கில் ஊதியம் ஏற்றப்படும். மேலும் வீடு கட்டும் திட்டத்தில் வீடு பெற்றவர்கள் உடனடியாக பணியை முடிக்க வேண்டும் .
அப்படி முடித்தால் தான் மற்றவர்களுக்கு வீடு கிடைக்கும்.
எனவே விரைந்து வீடு கட்டும் பணியை முடிக்க வேண்டும் என்று ஊராட்சி ஒன்றிய ஆணையர்ராஜு பேசினார்.
கருப்பம்புலம் ஊராட்சியில் ஆதரவற்ற முதியோர்களுக்கு வீட்டு வரியை இனி ஊராட்சி மன்றமே செலுத்தும் என தீர்மானம் நிறைவே ற்றப்பட்டது.
சென்ற ஆண்டு கிராம சபா கூட்டத்தில் ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரி கிடையாது என்று அறிவிப்பு செய்து நடைமுறைப்படுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கூட்டம் முடிவில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் தியராஜன் நன்றி கூறினார்.
- அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆத்திரம்
- போலீசார் சமரசம் செய்தனர்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனுர் ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சி 3- வது வார்டு பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் அப்பகுதி மக்கள் சாலை மறியல்.
போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் டிஎஸ்பி சரவணன், உமராபாத் இன்ஸ்பெக்டர் யுவராணி சம்பவ இடத்தில் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
நேற்று காந்தி ஜெயந்தி என்பதால் ஊரக உள்ளாட்சித் துறை அதிகாரிகள் கிராமப்புறங்களில் கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதால் அவர்களுடன் பேசி தீர்வு காணுவதாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
- 265 கிராம ஊராட்சிகளிலும், காந்தி ஜெயந்தி தினமான 2.10.2023 அன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறும்.
- 2.10.2023 அன்று காலை 11 மணியளவில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 கிராம ஊராட்சிகளிலும், காந்தி ஜெயந்தி தினமான 2.10.2023 அன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறும்.
கிராம சபை கூட்டத்தில் கீழ்கண்ட பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும். கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்துவிவாதித்தல். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை , ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் , வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்),ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் ,2023-24-ம் ஆண்டுக்கான சமூக தணிக்கை செயல் திட்டத்தினை பொதுமக்களுக்கு அறிவித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல், இதர பொருட்கள்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்ப்பட்ட 265கிராம ஊராட்சிகளிலும் மேற்படி கூட்டப்பொருட்கள் குறித்து 2.10.2023 அன்று காலை 11 மணியளவில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. கிராம சபைக் கூட்டத்தை திறம்பட நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே, கிராம பொது மக்கள் மேற்படி கிராம சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்காணும் பொருள்கள் மற்றும் அந்தந்த ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக தெரிவிக்க விரும்பும் நல்ல ஆலோசனைகள் குறித்தும் விவாதித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- கிராம சபா கூட்டத்தில் வலியுறுத்தல்
- செறியூட்டப்பட்ட அரிசிகளை ரேசன் கடைகளில் தடை செய்ய வேண்டும்
கருங்கல் :
கருங்கல் பேரூராட்சி 13-வது வார்டு பகுதி சபா கூட்டம் ஊற்றுமுகம் பகுதியில் நடைபெற்றது. பேரூராட்சி உறுப்பினர் பிறேம்சிங் தலைமை தாங்கினார். பகுதி தலைவர் மோகன், பேரூராட்சி அலுவலர்கள் பேரூராட்சி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். ஊற்றுமுகம் பகுதியை சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
மாங்கன்றுவிளை அய்யா கோயில் முதல் ஊற்றுமுகம் பாலம் வரை மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும், ஊற்றுமுகம் பகுதியில் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும், மாமூட்டுகுளம் கரை கட்டி படித்துறை அமைக்க வேண்டும், ஊற்றுமுகம் பகுதியில் சானல் கரைகட்டி சாலை அமைக்க வேண்டும், செறியூட்டப்பட்ட அரிசிகளை ரேசன் கடைகளில் தடை செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
- பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் ஒன்றியம், பரசலூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கர் முன்னிலையில் வைத்தார்.
ஊராட்சி செயலர் நாகராஜன் அனைவரையும் வரவேற்றார்.
அப்போது சிறப்பு (பற்றாளர்) அழைப்பாளராக ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கீதா கலந்து கொண்டு பேசினார்.
தண்ணியை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் தண்ணீரை தேவை இல்லாமல் வீணடிக்க கூடாது.
சுகாதாரமாக இருக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நடைபெற்று வரும் பல்வேறு அரசு நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருவதையும் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை எடுத்து கூறுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி பொதுமக்கள் வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் சங்கீதா நாராயணன் நன்றி கூறினார்.
- அதிகாரிகள் வரவில்லை என குற்றச்சாட்டு
- குறைகளை கேட்காமல் எப்படி தீர்ப்பார்கள் என ஆவேசம்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா உமாபதி தலைமையில் நடைபெற்றது.
மேலும் வேப்பங்குப்பம் ஊராட்சிக்கு நிரந்தரமான ஊராட்சி மன்ற செயலாளர் தேவை எனவும் கடந்த 6 மாதமாக நடைப்பெற்ற கிராம சபா கூட்டத்தில் நிரந்தரமான செயலாளர் இல்லை எனவும் மக்கள் வேதனை தெரிவித்தனர்.
இதனால் ஊராட்சியில் நடைபெறும் அனைத்து பணிகளும் தோய்வில் உள்ளதாகவும், இதனை ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பேற்று பார்த்து வருவதாகவும், மேலும் இதனால் பணிகள் முழுதுமாக பூர்த்தி செய்ய முடியவில்லை என பொதுமக்கள் கூறினர்.
எனவே இந்த மாதத்திற்க்குள் வேப்பங்குப்பம் ஊராட்சிக்கு நிரந்தரமான ஊராட்சி மன்ற செயலாளர் அமைக்க வேண்டும் எனவும், அவ்வாறு இல்லை எணில் வருகின்ற மே மாதம் நடைபெறும் கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்க போவதாக ஊர் பொது மக்கள் தெரிவித்தனர்.
மேலும் அதே ஊராட்சியில் பணியாற்றி வரும் வருவாய்துறை அதிகாரிகள் மற்ற அதிகாரிகள் என யாரும் கிராம சபா கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இதனால் நாங்கள் என்ன தீர்மானம் வைக்க போறோம் என்பதை தெரியாமல் எங்கள் குறைகளை எப்படி தீர்ப்பார்கள் என ஆவேசமாக ஊர் பொதுமக்கள் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- கிராம சபா கூட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.
- அடிப்படை வசதிகளை முறையாக செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
பாப்பிரெட்டிபட்டி,
கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 7 மற்றும் 8-வது வார்டு பகுதியில் பகுதி கிராம சபா கூட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் துணைத் தலைவர் வினோத், 8-வது வார்டு கவுன்சிலர் சபியுல்லா, 7-வது வார்டு கவுன்சிலர் சின்னபொண்ணு, மற்றும் கவுன்சிலர்கள் காமாட்சி, சரவணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ரவீந்திரன், கணேசன், நகர துணை செயலாளர் பூ முருகன்,அம்பேத், ஜாதா, உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
அவர்கள் தங்களது குடியிருப்பு பகுதிகளில் குடிதண்ணீர், தெரு விளக்கு, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்