search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோரிக்கை."

    • ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கடந்த பொதுத் தேர்வில் 59 சதவீதம் மாணவர்களே தேர்ச்சி பெற்றனர்.
    • காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பினால், மாணவர்கள் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பிடிப்பார்கள்.

    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உரிகம் மலைக் கிராமம் உள்ளது. இக்கிராமத்தைச் சுற்றிலும் 30-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன.

    இக்கிராம மாணவர்கள் உரிகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். இக்கிராமப் பகுதியிலிருந்து இயக்கப்படும் ஒரே பேருந்தில் பயணிகளின் நெரிசலுக்கு இடையில் மாணவர்கள் பயணித்து பள்ளிக்கு வருகின்றனர்.

    ஆனால், பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லை. மேலும், 16 ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் 8 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இதனால், மாணவர்கள் கல்வி கேள்விக்குறியாகி வருகிறது.

    இது ஒருபக்கம் இருக்கப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை. உடற்கல்வி ஆசிரியர் இல்லாததால், விளையாட்டு மைதானத்தில் கரையான் புற்றுகள் வளர்ந்துள்ளன.

    பள்ளியில் சுற்றுச் சுவர் இல்லாததால், பள்ளி வளாகம் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது. மேலும், மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை கட்டிடம் இடிந்து பல ஆண்டுகளாகியும் புதிய கழிப்பறை கட்டாததால், திறந்த வெளியை அவசரத்துக்கு மாணவர்கள் பயன்படுத்தும் நிலையுள்ளது.

    இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் சிலர் கூறுகையில்:- ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியாத நிலையுள்ளது.

    வெளியூர்களுக்கு எங்கள் குழந்தைகளை அனுப்பிப் படிக்க வைக்கும் அளவுக்கு எங்களிடம் பொருளாதார வசதி இல்லை. எனவே, உரிகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், போதிய அடிப்படை வசதிகளைச் செய்து தரவும் வேண்டும் என கூறினர்.

    இதுதொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில் மலைக் கிராமம் என்பதால் ஆசிரியர்கள் இங்கு பணிக்கு வர தயங்கு கின்றனர்.

    ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கடந்த பொதுத் தேர்வில் 59 சதவீதம் மாணவர்களே தேர்ச்சி பெற்றனர்.

    காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பினால், மாணவர்கள் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பிடிப்பார்கள் என கூறினர்.

    கிராம பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தினாலும், இதுபோன்ற பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மாணவர்களின் கல்வியைப் பெரிதும் பாதிக்கும்.

    அடிப்படை வசதி மற்றும் பொருளாதார வசதியில் மிகவும் பின்தங்கியுள்ள மலைக் கிராம மாண வர்களுக்கு கல்வி புறக்கணிக்கப்படுவது, நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றத்தைத் தராது என்பதை உணர்ந்து இப்பள்ளிக்கு போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதே இப்பகுதி கல்வி யாளர்களின் கோரிக்கை யாக உள்ளது.

    • 1300-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்துத் தர வேண்டும்

     மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.இப்பள்ளியில் 1300-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த நிலையில் முஸ்லிம் முன்னணி கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பள்ளியில் சுகாதார சீர்கேடு மற்றும் பள்ளி மாணவர்களின் ஒழுங்கீன செயல்களை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். மாணவர்களுக்கு இடையே ஏற்படும் கோஷ்டி மோதலை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்கு தேவையான ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும். நிரந்தரமான தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்துத் தர வேண்டும் என கூறியிருந்தனர்.

    இந்த கோரிக்கை மனுவை முஸ்லிம் முன்னணி கழகத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் மஜீத் வழங்கினார். மாவட்ட பொருளாளர் மெகபூப் பாட்ஷா, மாவட்ட துணைத்தலைவர் ஹக்கீம், மாவட்ட மருத்துவ அணியைச் சேர்ந்த பாபு, தொழிற்சங்க மாவட்ட நிர்வாகி ரபீக், மங்கலம் ஒன்றிய தலைவர் இஸ்மாயில் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில் ,

    பள்ளி கழிப்பறையில் பயன்படுத்திய புகையிலை பாக்கெட்டுகளை காண முடிகிறது. பள்ளியின் வகுப்பறை சுவற்றிற்கு வெளியே ஆபாச வார்த்தைகளை எழுதியிருப்பதையும் காண முடிகிறது.

    ஆகவே பள்ளி நிர்வாகம் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.  

    • காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் மாணவ-மாணவிகள் அதிகமாக உள்ளனர்.
    • நோய் தடுப்பு பணிகளை தீவிர படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சாம்பவர் வடகரை:

    சாம்பவர் வடகரை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த 15 நாட்களாக குழந்தைகள், பெண்கள் சிறுவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் சாம்பவர் வடகரை மற்றும் தென்காசி அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் மாணவ-மாணவிகள் அதிகமாக உள்ளனர்.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் போது ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவு கண்டறியப்படுவதால் டெங்கு காய்ச்சலாக இருக்கும் என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். கொசுக்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது. சுகாதாரத் துறையினர் நோய் தடுப்பு பணிகளை தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேரூராட்சியில் இருந்து சாக்கடைகளை சுத்தம் செய்தும் குப்பைகளை அகற்றும் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • துவாக்குடி பகுதிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
    • திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து

    திருச்சி :

    திருச்சி மாவட்ட விமன் இந்தியா மூவ்மென்ட் செயற்குழு கூட்டம் பாலக்கரையில் நடைபெற்றது. மண்டல செயலாளர் மெஹராஜ் பானு, மாவட்ட தலைவர் மூமினா பேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷமினா பர்வின், செயலாளர் சூபேரியா பானு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் திருச்சி மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் பாதள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதற்காக தோண்டப்பட்ட குழிகளால் பொதுமக்கள் பெரும் துன்பத்திற்கும், சிரமத்திற்கும் ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே தெருக்கள் மற்றும் சாலைகளை உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்க வலியுறுத்தி கேட்டுக் கொள்வது,திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து துவாக்குடி வரை செல்லும் பேருந்து எண்-128 பேருந்துக்கு 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. ஆகவே குறுகிய கால இடைவெளியில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டர் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு மனு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    • நாமகிரிப்பேட்டையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
    • குடிநீர் பற்றாக்குறையை விரைவில் நிவர்த்தி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிபேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செய்ய பொறியாளர் உதவி பொறியாளர் மற்றும் திட்ட உதவி பொறியாளர் ஆகியோருடன் பேரூராட்சி தலைவர் சேரன், துணை தலைவர் அன்பழகன், பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் ஆய்வு கூட்டம் நடத்தினர்.

    ஆய்வுக் கூட்டத்தில் பேரூராட்சிக்கு வழங்கப்படும் குடிநீர் அளவினை உயர்த்தி வழங்க கோரியும், குடிநீர் பற்றாக்குறையை விரைவில் நிவர்த்தி செய்யக் கோரியும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    ×