search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரோன்கள்"

    • தலைமை செயலக பகுதி சிவப்பு மண்டல பகுதியாக அறிவிப்பு.
    • டிரோன்கள், சிறிய ரக விமானங்கள், பெரிய பலூன்கள் பறப்பதற்கு தடை.

    சென்னை:

    சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை தலைமை செயலக பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144ன் கீழ் ஆழ்வார் பேட்டையில் உள்ள முதல்-அமைச்சர் வீடு இருக்கும் பகுதியில் இருந்து தலைமை செயலகம் வரையிலும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    சென்னை போலீஸ் கமிஷனர் அருண் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மேற்கண்ட பகுதிகளில் டிரோன்கள், சிறிய ரக விமானங்கள், பெரிய பலூன்கள் உள்ளிட்டவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களும் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். இதையொட்டி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சுதந்திர தினத்தன்று ராஜாஜி சாலையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அனைவரையும் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கவும் போலீசார் முடிவு செய் துள்ளனர்.

    சென்னையில் உள்ள அனைத்து லாட்ஜூகள், தங்கும் விடுதிகளிலும் போலீசார் விடிய விடிய சோதனை நடத்தி வரு கிறார்கள். இந்த சோத னையை இன்று இரவில் இருந்து வருகிற 15-ந் தேதி வரையில் மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.

    சென்னை மாநகரில் அனைத்து இடங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்து சந்தேக நபர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கடலோர காவல் குழும போலீசார் ரோந்து பணி களை தீவிரப்படுத்தி உள்ள னர். சென்னை மாநகரம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    • தோண்ட தோண்ட மனித உடல்கள் கண்டெடுக்கப்படுகிறது.
    • வீடுகள் இருந்த பகுதி தடம் தெரியாமல் மாறி விட்டது.

    திருவனந்தபுரம்:

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி இருக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் தோண்ட தோண்ட மனித உடல்கள் கண்டெடுக்கப்படுகிறது.

    கடும் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் வீடுகள் இருந்த பகுதி தடம் தெரியாமல் மாறி விட்டது. எங்கு பார்த்தாலும் பெரிய பாறைகள், மரங்கள் என மலை போன்று குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை அகற்றி பலியானவர்களின் உடல்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.

    கடும் சவால்களுக்கு மத்தியில் ராணுவ வீரர்களும், பேரிடர் மீட்புப்படையினரும் மீட்புப்பணியில் ஈடுபடுகின்றனர்.

    நிலச்சரிவில் முழுமையாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நடந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள பாறைகள் மற்றும் இடிந்து கிடக்கும் கட்டிடங்களை அகற்றுவதற்காக ஜே.சி.பி. எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. அவை நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு செல்ல ராணுவ வீரர்கள் பாலம் அமைத்தனர்.

    அதன் வழியாக ஜே.சி.பி. எந்திரங்கள் வீடுகள் புதைந் திருக்கும் பகுதிக்கு சென்றன. வீடுகள் இருந்த பகுதிகளை அவை தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அப்போதும் பலரது உடல் மீட்கப்படுகிறது. 300-க்கும் மேற்பட்டவர்கள் பலியான நிலையில் நூற்றுக்கும் அதிக மானவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

    அவர்களை கண்டுபிடிக்க மீட்புப்படையினர் இன்று டிரோன்களை பயன்படுத்தினர். டிரோன்களை நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் மற்றும் ஆற்றுப்பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பறக்கச் செய்து மாயமான யாரேனும் இருக்கிறார்களா? என்று பார்த்தனர்.

    நிலச்சரிவில் மாயமானவர்களை கண்டுபிடிக்க மனித ரத்தத்தில் பயிற்சி பெற்ற போலீஸ் மோப்ப நாயும் பயன்படுத்தப்படுகின்றன. அவை நிலச்சரிவு ஏற்பட்டு புதைந்து கிடக்கும் கட்டிடங்களுக்குள் சென்று ஆட்களை கண்டுபிடித்து வருகின்றன.

    இடிபாடு களுக்குள் அடியில் கிடக்கும் மனித உடல்களை கண்டறி யவதில் நிபுணத்துவம் பெற்ற அந்த மோப்ப நாய்கள் நேற்று வரை 10-க்கும் மேற்பட்ட உடல்களை கண்டுபிடித்துள்ளன.

    • வனப்பகுதிகளை கண்காணிக்கும் வகையில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
    • 2 டிரோன்களை அதிகாரிகளிடம் மாவட்ட கலெக்டர் ரேணுராஜ் ஒப்படைத்தார்.

     கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பொதுமக்கள் காட்டு விலங்குகளால் தாக்கப்படுவதை தடுக்கும் விதமாக வனப்பகுதிகளை கண்காணிக்கும் வகையில் டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    "வயநாடு முன்முயற்சி" என்ற திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட 2 டிரோன்களை வனத்துறை அதிகாரிகளிடம் மாவட்ட கலெக்டர் ரேணுராஜ் ஒப்படைத்தார். அப்போது அவர் புதிய டிரோன்களை பறக்கவிட்டார்.

    • பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • ரோடு ஷோ நடக்க உள்ள ஆர்.எஸ்.புரம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    கோவை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சியினரும் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

    பிரதமர் மோடி பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரமாண்ட பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களில் பங்கேற்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்திலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பல்லடம், தூத்துக்குடி, நெல்லை, சென்னை போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

    இந்த நிலையில் இன்று மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    இதனை தொடர்ந்து பிரதமர் மோடி வருகிற 18-ந்தேதி மீண்டும் தமிழகத்திற்கு வருகிறார். அன்றைய தினம் கோவை மாவட்டத்திற்கு வருகை தரும் அவர், கோவையில் நடக்கும் பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்று மக்களை சந்திக்க உள்ளார்.

    பிரதமர் மோடி பங்கேற்கும் ரோடு ஷோ கோவை கவுண்டம்பாளையத்தில் இருந்து ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் வரை 3.5 கி.மீட்டர் தூரத்திற்கு நடத்தப்பட உள்ளது.

    பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் நின்றபடி, மக்களை பார்த்து கையை அசைத்து பேச உள்ளார். குறிப்பிட்ட சில இடங்களில் மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதுதவிர கோவையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாகவும், அதிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த கூட்டத்தின் போது, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ரோடு ஷோ நடக்க உள்ள ஆர்.எஸ்.புரம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் பாதுகாப்பு, மக்கள் கூட்டம் வந்தால் எப்படி சமாளிப்பது, எந்த இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். உயர்ந்த கட்டிடங்கள், மரங்கள் நிறைந்த பகுதி, போக்குவரத்து உள்ள பகுதி, பதற்றமான பகுதிகள் என பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    17-ந்தேதி முதல் கோவை மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    வெளிமாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். கோவையில் நேற்று முதலே வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் அந்த வழியாக வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி கோவை கவுண்டம்பாளையம், ஆர்.எஸ்புரம், வடகோவை, சாய்பாபா காலனி, துடியலூர் பகுதிகளில் ரெட்சோன் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று முதல் வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை 5 நாட்கள் டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    • குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
    • டெல்லி வான்பரப்பில் அனைத்து பறக்கும் பொருட்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    குடியரசு தினவிழா வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக டெல்லி போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு தினவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு கருதி டெல்லி வான்பரப்பில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள், பாரா கிளைடர்கள், வெப்பக்காற்று பலூன்கள், குவாட்காப்டர்கள் உள்ளிட்ட அனைத்து பறக்கும் பொருட்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

    இந்த உத்தரவு பிப்ரவரி 15-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
    • சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை தொல்லியல் துறை நிர்வாகம் விதித்துள்ளது.

    உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாமல்லபுரம் திகழ்ந்து வருகிறது. இங்கு பல்லவ மன்னர்கள் உருவாக்கிய சிற்பங்களை பார்க்க இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

    மாமல்லபுரத்தில் பாறைகளை குடைந்து அழகாக உருவாக்கப்பட்ட கடற்கரை கோவில், அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதம் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கிறார்கள். மேலும் சுற்றுலா பயணிகள் கேமரா, டிரோன் ஆகியவை மூலம் புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுக்கிறார்கள்.புதிதாக திருமணமான தம்பதிகள், திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடிகள் கடற்கரை கோவில் வளாகத்தில் போட்டோ ஷூட் நடத்துகிறார்கள். மேலும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள் வாகனங்களில் கூட்டமாக வந்து புல்தரைகளில் அமர்ந்து அத்துமீறும் சம்பவங்கள் சமீபகாலமாக நடந்து வருகிறது.

    சில காதல் ஜோடிகள் கடற்கரை கோவிலில் அத்துமீறி ஏறி, தங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்களை எழுதி அலங்கோலப்படுத்தும் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.

    இதையடுத்து மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை தொல்லியல் துறை நிர்வாகம் விதித்துள்ளது. அதன்படி மாமல்லபுரத்தில் வணிக நோக்கங்களுக்காக புகைப்படம் எடுத்தல், திருமணத்துக்கு முன் போட்டோ ஷூட் எடுத்தல், விஐபி, விவிஐபி வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.

    மேலும் வியாபாரிகள் வியாபாரம் செய்வது, காதலர்கள் சிற்பங்களின் மீது ஏறுவது, பிடித்தவர்களின் பெயர்களை எழுதுவது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்வது, பொதுக்கூட்டம் நடத்துவது, பொது விளம்பரம் செய்வது ஆகிய செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டிரோன் கேமரா பறக்க விடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான நோட்டீஸ் கடற்கரை கோவில் நுழைவு தூணில் ஒட்டப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

    • போலீஸ் அதிகாரிகள் காரில் சென்று ஜனாபதி செல்லும் வழிகளில் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
    • நோயாளிகளுக்கான மருத்துவ அட்டை பதிவு முன்கூட்டி காலை 7 மணி முதல் தொடங்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை (திங்கட்கிழமை) சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி வருகிறார். நாளை ஜிப்மரில் ரூ.17 கோடியில் அமைக்கப்பட்டுள்ள லைனியர் ஆக்சி லேட்டர் என்று உயர்தர கதிரியக்க சிகிச்சை கருவியின் செயல்பாட்டை தொடங்கி வைக்கிறார். மாலை 4 மணியளவில் மணக்குள விநாயகர் கோவிலில் தரிசனம் செய்கிறார்.

    அதைத்தொடர்ந்து கைவினை கிராமத்துக்கு சென்று பார்வையிடுகிறார். பின்னர் திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்கிறார். இரவில் நீதிபதிகள் விருந்தினர் இல்லத்தில் தங்குகிறார்.

    நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று பார்வையிடுகிறார். அதன்பின் ஆரோவில்லில் நடக்கும் அரவிந்தர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் மாலை 4 மணிக்கு புதுவை விமான நிலையத்துக்கு வந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    இதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாகி இறங்கியுள்ளனர். 1500 போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் போலீஸ் அதிகாரிகள் காரில் சென்று ஜனாபதி செல்லும் வழிகளில் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

    மேலும் புதுவை வான்பகுதியில் 2 நாட்கள் டிரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை கலெக்டர் வல்லவன் பிறப்பித்துள்ளார்.

    மேலும் சாலைகளில் உள்ள பேனர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன் படி ஜனாதிபதி செல்லும் வழியெங்கும் உள்ள பேனர்கள், ஆக்கிரமிப்பு கடைகளை பொதுப்பணி, உள்ளாட்சித்துறையினர் அகற்றி வருகின்றனர்.

    புதுவை ஜிப்மருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கான மருத்துவ அட்டை பதிவு முன்கூட்டி காலை 7 மணி முதல் தொடங்கப்படுகிறது.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை நாளை திங்கட்கிழமை தருமபுரி மாவட்டத்தில் தொடங்கி வைக்க உள்ளார்கள்.
    • சேலம் மாவட்டத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை நாளை திங்கட்கிழமை தருமபுரி மாவட்டத்தில் தொடங்கி வைக்க உள்ளார்கள்.

    இதற்காக, நாளை காலை சென்னையில் இருந்து விமா னம் மூலம் சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையம் வருகைபுரிந்து, அங்கிருந்து சாலை வழியாக தருமபுரி மாவட்டத்தில் நிகழ்ச்சி நடைபெறும் தொப்பூருக்குச் சென்று, நிகழ்ச்சி முடிந்து மீண்டும் சாலை வழியாக சேலம் மாவட்டம்,காமலாபுரம் விமான நிலையம் வருகைதந்து, விமானம் மூலம் சென்னை செல்ல உள்ளார்கள். இதனையொட்டி, சேலம் மாவட்டத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட அவர் தெரிவித்துள்ளார்.

    • மற்றொரு ஏவுகணை தாக்குதல், மனித குலத்திற்கு எதிரான மற்றொரு குற்றம்.
    • ஒரு தீய அரசு மட்டுமே ஆஸ்பத்திரிகள் மீது தாக்குதல் நடத்த முடியும்.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷிய படைகளின் போர் தாக்குதல் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் கிழக்கு உக்ரைன் நகரமான டினிப்ரோவில் உள்ள ஆஸ்பத்திரி மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அக்கட்டிடம் இடிந்து தீப்பிடித்து எரிந்தது. 3 மாடி கொண்ட அந்த கட்டிடத்தின் மேல்தளம் முற்றிலும் சேதம் அடைந்தது. இந்த தாக்குதலில் 2 பேர் பலியானார்கள். 23 பேர் காயம் அடைந்தனர்.

    இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி டுவிட்டரில் கூறும்போது, "மற்றொரு ஏவுகணை தாக்குதல், மனித குலத்திற்கு எதிரான மற்றொரு குற்றம். ஒரு தீய அரசு மட்டுமே ஆஸ்பத்திரிகள் மீது தாக்குதல் நடத்த முடியும். இதில் ராணுவ நோக்கம் இருக்க முடியாது. இது தூய ரஷிய பயங்கரவாதம்" என்று கூறியுள்ளார்.

    இதற்கிடையே தலைநகர் கிவ், டினிப்ரோ மற்றும் கிழக்கு பகுதிகள் மீது ரஷியா தாக்குதல் நடத்திய போது அதன் 10 ஏவுகணைகள், 20-க்கும் மேற்பட்ட டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    • சென்னையில் ஜி 20 மாநாடு கருத்தரங்கம் நடைபெறுகிறது.
    • இதையொட்டி வரும் 25ம் தேதி வரை டிரோன்கள் பறக்க போலீசார் தடை விதித்தனர்.

    சென்னை:

    இந்தியாவில் ஜி 20 மாநாடு வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.

    சென்னையில் 2-வது கட்ட கருத்தரங்கு நிகழ்ச்சி வரும் வெள்ளி, சனிக்கிழமை ஆகிய 2 நாட்கள் கிண்டியில் உள்ள ஐ.டி.சி.கிராண்ட் சோழா ஓட்டலில் நடைபெற உள்ளது. இதில் 29 வெளிநாடுகள், 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

    கருத்தரங்கு நடைபெறும் ஓட்டல், ரமடா பிளாசா, ஓட்டல் ஹப்ளீஸ், ஓட்டல் பார்க் ஹையாத் ஆகிய ஓட்டல்களில் தங்குகின்றனர். இவர்கள் தங்கியுள்ள ஓட்டல்கள், கருத்தரங்கு நடைபெறும் ஓட்டல் மற்றும் இவர்கள் செல்லும் வழித்தடங்களை சிவப்பு மண்டலமாக சென்னை போலீசார் அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில், வரும் 25-ம் தேதி வரை இப்பகுதிகளில் டிரோன்கள், இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

    • வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டாக எல்லை தொடர்பாக மோதல் பிரச்சினை நீடித்து வருகிறது.
    • தென்கொரியா, அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது.

    சியோல்:

    கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை தொடர்பாக மோதல் பிரச்சினை நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், வடகொரியாவின் 5 ஆளில்லா டிரோன் விமானங்கள் இன்று தென்கொரிய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளன. இந்த டிரோன்களில் ஒன்று தென்கொரியாவின் தலைநகரான சியோலின் தெற்கு பகுதி எல்லைக்குள் மிகவும் உள்ளே வந்துள்ளது.

    வடகொரிய டிரோன்கள் நுழைந்ததையடுத்து தென்கொரிய விமானப்படை உஷார்படுத்தப்பட்டது. போர் விமானங்கள், உளவு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உடனடியாக விரைந்தன. வடகொரிய டிரோன்களை எச்சரிக்கும் வகையில் துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் டிரோன்கள் வீழ்த்தப்பட்டனவா? என்ற தகவல் வெளியாகவில்லை.

    ×