search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆராய்ச்சி மையம்"

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.அறிக்கை
    • 15 ஏக்கர் இருபோக நஞ்சை நிலத்தை அதிகாரிகள் கன்னிப்பூ சாகுபடியில் தரிசாக போட்டுள்ளனர்.

    நாகர்கோவில் :

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டசபை தொகுதி உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் விவசாயிகள் நலனுக்காக திருப்பதிசாரம் அரசு நெல் ஆராய்ச்சி விதைப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி மையம் வாயிலாக நெல் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விவசாய பண்ணையின் கீழ் 40 ஏக்கர் பாசன நிலம் உள்ளது. இதில் நடப்பாணடில் 23 ஏக்கர் நிலத்தில் மட்டுமே விதைகள் உற்பத்தி செய்ய நெல் பயிரிடப்பட்டது. மீதமுள்ள 15 ஏக்கர் இருபோக நஞ்சை நிலத்தை அதிகாரிகள் கன்னிப்பூ சாகுபடியில் தரிசாக போட்டுள்ளனர்.

    இது அதிர்ச்சியையும், விவசாயிகளுக்கு இழப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் விதை நெல் வாங்க வருகின்ற விவசாயிகளுக்கு விதைகள் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    விவசாயிகள் விவசாயத்திற்கு தேவையான விதைகளை தாங்களே உற்பத்தி செய்யும்போது காப்பீடு பெறுவதற்கு தேவையான தர சான்றிதழ்கள் பெற காலதாமதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    மாதந்தோறும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் விவசாயிகளை அழைத்து கூட்டம் நடத்தி விவசாய நிலங்களை தரிசாக போடக்கூடாது என்றும், உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள். ஆலோசனைகள் வழங்குகின்ற அலுவலர்கள் தற்போது விவசாயிகளுக்கு விதைகள் வழங்க முடியாத அவலநிலையை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து விதை நெல் தட்டுப்பாடு ஏற்படாத நிலையை உருவாக்கி விவசாயிகளை பாதுகாக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
    • நிர்வாக அனுமதி பெறப்பட்டு கட்டிடம் கட்டுமான பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் பாவூர்சத்திரம் கால்நடை வளாகத்தில் ரூ. 72.55 லட்சம் மதிப்பில் நாட்டின நாய்கள் இன பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    பாதுகாப்பு-ஆராய்ச்சி மையம்

    தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய நாட்டின நாய்களான ராஜபாளையம், சிப்பிபாறை, கன்னி, கோம்பை ஆகியனவற்றை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் 2022-23-ம் நிதியாண்டில் ரூ. 72.55 லட்சம் மதிப்பில் தென்காசி மாவட்டத்தில் நாட்டின நாய்கள் இன பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவின் போது பாவூர்சத்திரம் கால்நடை மருந்தகம் வளாகத்தில் கட்டப்படும் நாட்டின நாய்கள் இன பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மைய கட்டிட கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    நிர்வாக அனுமதி

    அதனை தொடர்ந்து நிர்வாக அனுமதி பெறப்பட்டு கட்டிடம் கட்டுமான பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்பணி முடிக்கப்பட்டு நாட்டின நாய்களின் பாதுகாப்பு மையம் பயன்பாட்டிற்கு வரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழக உற்பத்தி கல்வி மைய இயக்குநர் மீனாட்சி சுந்தரம், நாட்டின் நாய்கள் ஆராய்ச்சி மைய தலைவர் ரவிமுருகன், கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, துணை சேர்மன் முத்துக்குமார், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சீனித்துரை, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராம உதயசூரியன், கீழப்பாவூர் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் தங்கரத்தினம், குமார்பாண்டியன், கீழப்பாவூர் பேரூராட்சி துணைத் தலைவர் ராஜசேகர், காங்கிரஸ் ஐ.என்.டி.யூ.சி. மாநில செயலாளர் வைகுண்டராஜா, குலசேகரபட்டி ஊராட்சி தலைவர் முத்துமாலை அம்மாள் மதிச்செல்வன், துணை தலைவர் திருவளர்ச்செல்வி சாமி ராஜா, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் நாட்டின நாய்கள் வளர்க்கும் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நாட்டுப்புற கலைகள் ஆராய்ச்சி மையம் திறப்பு நடந்தது.
    • ஏற்பாடுகளை கோடாங்கி கலைக்ககூட இயக்குனர் உமாராணி செய்திருந்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கோடாங்கி கலை கூடத்தின் நாட்டுப்புற கலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய திறப்பு விழா நடந்தது. அனைத்து கலைஞர்கள் வாழ்வாதார கூட்டமைப்பு இயக்குனர் பேராசிரியர் காளீஸ்வரன் தலைமை தாங்கினார். பயிற்சி கூடம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை கலெக்டர் ஜெயசீலன் திறந்து வைத்தார். அவர் பேசுகையில், 'நம் நாட்டில் சங்க காலம் தொட்டு கலைகள் செழித்து வளர்ந்துள்ளது. திருத்தங்கலில் சங்க கால மக்கள் கலைகளை வளர்த்தது குறித்த சான்றுகள் உள்ளது. கலைஞர்கள் சிறப்பாக செயல்பட்டு, நம் பண்பாட்டை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்கின்றனர். விருதுநகர் மாவட்டத் திற்கு என்று தனித்துவமாக பல்வேறு கலைகள் உள்ளது,' என்றார்.

    இந்த கோடங்கி கலைக்கூடத்தில் தப்பாட்டம், ஒயிலாட்டம், சாட்டை குச்சி, 8 வகையான கரகம், மான் கொம்பு, சிலம்பம், பொய்க்கால் குதிரை, காவடி, தெருக்கூத்து நாடகம் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலைகள் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் கலை இலக்கிய மாணவர்களுடன் இணைந்து நாட்டுப்புற கலைகள் குறித்து ஆராய்ச்சி யும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோடாங்கி கலைக்ககூட இயக்குனர் உமாராணி செய்திருந்தார். 

    • ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்றனர்.
    • ராமநாதபுரம் கலெக்டர் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்க ளிடையே அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் உடையவர்களை கண்டறிந்து மாவட்ட அளவில் நடத்தப்பட்ட அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்று அதில் தேர்வான 4 மாணவ-மாணவிகள் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெற்று வந்துள்ளனர். அவர்களுக்கு அறிவியல் பேரவையின் சார்பில் "வானவில் அறிவியல்" விருதினையும் தொடர்ந்து ஆராய்ச்சியில் கவனம் செலுத்தி சாதனை படைத்திட வேண்டும் எனவும், மாணவ-மாணவிகளின் பெற்றோர்களையும் பாராட்டி அவர்களுக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தார்.

    அப்போது சத்திரக்குடி வாசன் மெட்ரிக் பள்ளி தாளாளர் வாசன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • சிவகாசியில் பட்டாசு ஆராய்ச்சி மைய கட்டிட பூமிபூஜை மார்ச் மாதத்தில் பணிகள் முடியும்.
    • இது குறித்த செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலைமலரில் வெளியானது.

    சிவகாசி

    நாட்டின் பட்டாசு உற்பத்தி மையமாக விளங்கும் சிவகாசி பட்டாசு ஆராய்ச்சி மையம் அமைக்கவேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி விரைவில் பட்டாசு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது.

    இந்த நிைலயில் சிவகாசியில் பட்டாசு ஆராய்ச்சி மையம் அமைப்பதன் அவசியம் குறித்த செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலைமலரில் வெளியானது. இதன் எதிரொலியாக சிவகாசி அருகே உள்ள ஆனை கூட்டம் கிராமத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பின் கீழ் இயங்குகி வரும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி கழகம் (நீரி)சார்பில் ரூ. 15 கோடியில் பட்டாசு வேதிப்பொருள் ஆய்வு மையம் கட்டிடத்திற்கான பூமி பூஜை பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

    மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை துறை இயக்குனர் வேட் பிரகாஷ் மிஸ்ரா, நீரி இயக்குனர் அடுல் வைத்தியா ஆகியோர் காணொலி காட்சி மூலமாக கலந்து கொண்டு பூமிபூஜையை தொடங்கி ைவத்தார் .

    இதில் விஞ்ஞானி சாதனா ராயலு, பட்டாசு மற்றும் கேப் வெடி சங்கத் தலைவர் கணேசன், துணைத் தலைவர்கள் ராஜரத்தினம், அபி ரூபன், பொதுச் செய லாளர் பாலாஜி, பாபநாசம், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் விஞ்ஞானி சாதனா ராயலு நிருபர்களிடம் கூறுகையில், ஆனை கூட்டம் கிராமத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ள இந்த ஆராய்ச்சி மையத்தில் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்டு சான்று வழங்கப்படும். விருதுநகர் மாவட்டத்தில் 900-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் நீரில் பதிவு செய்து சான்று பெற்றுள்ளனர். கட்டுமான பணி இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கட்டிட பணி நிறைவு பெறும் என்றார்.

    • சிவகாசியில் கிடப்பில் போடப்பட்ட பட்டாசு ஆராய்ச்சி மையத்தை உடனே அமைக்க வேண்டும்.
    • பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. பட்டாசு ஆலைகள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    நாட்டில் 90 சதவீத பட்டாசு உற்பத்தி சிவகாசியில் தயாரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

    பட்டாசு தொழிலை மேம்படுத்துவதற்காக மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன் பேரில் கடந்த ஆண்டு தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகளின் ஆலோசனைக்கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை விஞ்ஞானி சாதனா ராயலு, விஞ்ஞானி சரவணன் உள்பட ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் சிவகாசியில் பட்டாசு ஆலை வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலையூரணி கிராமத்தில் பட்டாசு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அறிவிப்பு செய்யப்பட்டு ஒரு வருடம் ஆகியும் பட்டாசு ஆராய்ச்சி மையம் அமைவதற்கான எவ்வித பணியும் தொடங்கப்படாமல் உள்ளது.

    பட்டாசு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டால் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்றுகளை பயன்படுத்தி வேதிப்பொருட்கள் இந்தியா முழுவதும் உள்ள கெமிக்கல் ஆலை மற்றும் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்த அனுப்பி வைக்கலாம்.

    மேலும் இந்த மையத்தின் மூலம் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரம் பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத, தரமான வேதிப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்க முடியும். எனவே சிவகாசியில் பட்டாசு ஆராய்ச்சி மையத்தை உடனடியாக தொடங்குவதற்கு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×