என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 327582"
- இரண்டு பயணிகள் ரெயில் என்பதால் 1000-க்கும் மேற்பட்டோர் காயம்
- விபத்து குறித்து உயர்மட்ட குழு விசாரணை நடத்தி வருகிறது
ஒடிசாவில் நிகழ்ந்த கோர ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. அவர்களது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். பலரது உடல்கள் சிதைந்துள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை வரை இன்னும் 101 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்று கிழக்கு மத்திய ரெயில்வே பிரிவு மானேஜர் ரிங்கேஷ் ராய் தெரிவித்துள்ளார்.
மேலும் காயம் அடைந்தவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரங்கள் குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
ஒடிசா ரெயில் விபத்தில் சுமார் 1100 பேர் காயம் அடைந்தனர். அதில் 900 பேர் முதல் உதவி உள்ளிட்ட லேசான சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இன்னும் 200 பயணிகள் பல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 278 பேர் உயிரிழந்துள்ளனர். 101 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இவ்வாறு தெரிவித்தார்.
புவனேஸ்வர் நகராட்சியின் கமிஷனர் விஜய் அம்ரித் குலாங்கே கூறியதாவது:-
193 உடல்கள் புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளது. அதில் 80 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 55 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் உதவி எண் 1929-க்கு வந்துள்ளன. உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களுடன் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு தெரிவித்தார்.
- இந்த விபத்தில் மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 275 பேர் உயிரிழந்துள்ளனர்.
- ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புவனேஷ்வர்:
ஒடிசாவில் கடந்த 2-ம் தேதி பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 1,175 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயில் விபத்து இந்திய வரலாற்றில் மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக பதிவாகி இருக்கிறது. நவீன தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில் இவ்வளவு பெரிய விபத்து நிகழ்ந்திருப்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
உடனடியாக உயர்மட்ட விசாரணைக்கு ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது. தென்கிழக்கு வட்டத்தின் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் சவுத்ரி தலைமையிலான குழுவினர் இந்த விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக கட்டாக் காவல் நிலையம் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் மீது ரெயில்வே சட்டம் 153, 154 மற்றும் 175 உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் 275 பேர் பலியானார்கள்.
- ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர்:
ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் 275 பேர் பலியானார்கள். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருவள்ளூர் அடுத்த மணவாளநகர், கபிலர் நகர் குடியிருப்போர் நலசங்கம் சார்பில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
- ரெயில்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு உபகரணங்களை அமைக்க வேண்டும்.
- ரெயில்வேயில் உள்ள காலி பணியிடங்கள் 9 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பது ஏன்?
புதுடெல்லி:
ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்திய வரலாற்றில் மிக மோசமான ரெயில் விபத்தாக பாலசோர் ரெயில் விபத்து உள்ளது. இந்திய ரெயில்வேயில் 4 சதவீத வழித்தடங்களில் மட்டுமே 'கவாச்' பாதுகாப்பு கருவி பொருத்தப்பட்டு இருப்பது ஏன்? ரெயில்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு உபகரணங்களை அமைக்க வேண்டும். ரெயில்வேயில் உள்ள காலி பணியிடங்கள் 9 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பது ஏன்?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, "ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் ரெயில் விபத்தை சதி எனக்கூறிய பிரதமர் மோடி இப்போது என்ன சொல்லப் போகிறார்" என்று கூறினார்.
- ரெயில் சேவையில் சில மாற்றங்களை செய்து தென்னக ரெயில்வே அறிவிக்கிறது.
- இன்று காலை 10 மணிக்கு புர்லியாவில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் செல்லும் வாரம் இருமுறை அதிவேக விரைவு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஷாலிமார்-சென்னை கோரமண்டல் விரைவு ரெயில், யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவேக விரைவு ரெயில் ஆகியவை கடந்த 2-ந் தேதியன்று ஒடிசா பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே விபத்தில் சிக்கின. எனவே ரெயில் சேவையில் சில மாற்றங்களை செய்து தென்னக ரெயில்வே அறிவிக்கிறது.
அதன்படி, சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து 5-ந் தேதி (இன்று) இரவு 7.20 மணிக்கு புறப்படும் ஹவுரா அதிவிரைவு மெயில் ரெயில் ரத்து செய்யப்படுகிறது. இன்று காலை 10 மணிக்கு புர்லியாவில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் செல்லும் வாரம் இருமுறை அதிவேக விரைவு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
அந்தவகையில் 123 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், 56 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்றும் ரெயில்வே துறை அறிவித்து உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒடிசா ரெயில் விபத்தில் 275 பேர் பலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 'வந்தே பாரத்' என்ற பெயர் நன்றாக இருக்கிறது.
கொல்கத்தா :
ஒடிசா ரெயில் விபத்தில் 275 பேர் பலியானதாகவும், 1,175 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒடிசா ரெயில் விபத்தில் 275 பேர் இறந்ததாக ரெயில்வே அமைச்சகம் கூறியுள்ளதை நம்ப முடியவில்லை.
மேற்கு வங்காளம் என்ற ஒரு மாநிலத்தை சேர்ந்தவர்களிலேயே 61 பேர் இறந்திருப்பதாகவும், 182 பேரை காணவில்லை என்றும் கூறும்போது, 275 பேர் பலி என்பதை எப்படி ஏற்பது? இந்த எண்ணிக்கை எப்படி நிற்கும்?
நான் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, 'துரந்தோ' எக்ஸ்பிரஸ் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கு முன்னுரிமை அளிப்பதை நிறுத்திவிட்டனர். 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரெயில்களின் என்ஜின் மட்டும் தரமாக இருக்கிறதா?
'வந்தே பாரத்' என்ற பெயர் நன்றாக இருக்கிறது. ஆனால், மரக்கிளை முறிந்து விழுந்தபோது அந்த ரெயிலுக்கு என்ன ஆனது?
நான், நிதிஷ்குமார், லாலுபிரசாத் யாதவ் ஆகியோர் ரெயில்வே மந்திரிகளாக இருந்தபோது, விபத்துகளில் ஏராளமானோர் பலியானதாக இப்போது சொல்கிறார்கள்.
அதனால், இந்த துயரமான நேரத்திலும் நான் இதை சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். புதிய சிக்னல் சாதனமும், ரெயில்கள் மோதலை தடுக்கும் சாதனமும் நான் ரெயில்வே மந்திரியாக இருந்தபோதுதான் அறிமுகப்படுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நமீபியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
- நமீபியா வாழ் இந்தியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார்.
வின்ட்ஹோக்:
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நமீபியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக நமீபியாவின் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.
நமீபியா வாழ் இந்தியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
ஒடிசாவில் நடந்த கோரமான ரெயில் விபத்தைத் தொடர்ந்து பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்திய அரசுக்கு தங்களது இரங்கலையும், ஆறுதலையும் வழங்கினர்.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கோரமான ரெயில் விபத்து சம்பவம் நிகழ்ந்த நிலையில், நமீபியாவின் வெளியுறவுத்துறை மந்திரி உள்பட உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்திய அரசுக்கு தங்கள் அனுதாபத்தையும், ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தினர்.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு மந்திரிகள் மற்றும் தலைவர்களிடம் இருந்து எனக்கும், பிரதமர் மோடிக்கும் பல குறுஞ்செய்திகள் வந்தன. இது உலகமயமாக்கலுக்கும், உலகம் எவ்வாறு இந்தியாவுடன் இணைந்துள்ளது என்பதற்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஒரு துயரம் ஏற்பட்ட சமயத்தில் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் பக்கம் நின்றன என தெரிவித்தார்
- ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.
- ஆங்கிலேயர்களின் தவறால் ரெயில் விபத்துக்கு உள்ளானது என காங்கிரஸ் சொல்லவில்லை என்றார்.
நியூயார்க்:
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில் விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நியூயார்க்கில் உள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நடந்த ரெயில் விபத்து எனக்கு நினைவிருக்கிறது. ஆங்கிலேயர்களின் தவறால் ரெயில் விபத்துக்கு உள்ளானது என்று காங்கிரஸ் எழுந்து சொல்லவில்லை.
காங்கிரஸ் மந்திரி, "இது என் பொறுப்பு, நான் ராஜினாமா செய்கிறேன்" என்று கூறினார். எனவே இதுவே எங்கள் வீட்டில் உள்ள பிரச்சனை, நாங்கள் சாக்குப்போக்குகளை கூறுகிறோம் , யதார்த்தத்தை ஏற்கவில்லை.
நீங்கள் அவர்களிடம் (பாஜக) எதையும் கேளுங்கள், அவர்கள் திரும்பிப் பார்த்து பழியைக் கடந்து செல்வார்கள். ரயில் விபத்து (ஒடிசா) எப்படி நடந்தது என்று கேளுங்கள், 50 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் என்ன செய்தது என்று பேசுவார்கள் என தெரிவித்தார்.
- ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகின.
- விபத்து நடந்து 51 மணி நேரம் ஆனநிலையில் சீரமைப்பு பணிகள் முடிந்து ரெயில் சேவை தொடங்கியது.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் 17 ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 275 ஆக அதிகரித்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒடிசா ரெயில் விபத்து நடந்த இடத்தில் உள்ள ரெயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. தண்டவாளத்தில் கிடந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள், சரக்கு ரெயில் பெட்டிகள் என அனைத்து ரெயில் பெட்டிகளும் அகற்றப்பட்டது. தண்டவாளங்கள் மற்றும் மின் இணைப்புகள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்து நடந்து 51 மணி நேரம் ஆனநிலையில் சீரமைப்பு பணிகள் முடிந்து ரெயில் சேவை தொடங்கியது.
சீரமைக்கப்பட்ட பாதையில் சென்ற சரக்கு ரெயிலை, அங்கிருந்த மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உற்சாகமாக வழியனுப்பி வைத்தார்.
- ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
- விபத்தில் பலியானோருக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நியூயார்க்:
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில் விபத்தில் பலியானோருக்கு உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.
- ஒடிசா ரெயில் விபத்தில் இதுவரை 275 பேர் பலியாகி உள்ளனர்.
- மனித தவறு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஒடிசாவில் நிகழ்ந்த ரெயில் விபத்து நாட்டையே உலுக்கி உள்ளது. பாலசோர் மாவட்டம் பஹனகா ரெயில் நிலையம் அருகே மெயின் லைனில் வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லூப் லைனில் திடீரென சென்று சரக்கு ரெயில் மீது மோத, எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் உள்ள மற்றொரு மெயின் லைனில் விழுந்துள்ளன. அந்த சமயத்தில் வந்த பெங்களூரு- ஹவுரா அதிவிரைவு ரெயில், தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது பயங்கரமாக மோதியது.
ஒடிசா ரெயில் விபத்தில் இதுவரை 275 பேர் பலியாகி உள்ளனர். 1175 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 793 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் உள்ளவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறு இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மனித தவறு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஒடிசா ரெயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதற்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது. நிர்வாகத்திற்கு கிடைத்த தகவல்கள் மற்றும் பிற கேள்விகளையும் கருத்தில் கொண்டு, இந்த விபத்து தொடர்பாக மேல் விசாரணை செய்வதற்காக, முழு வழக்கையும் விசாரிக்கும்படி சிபிஐக்கு ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்திருப்பதாக ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
- மருத்துவமனைகளில் உள்ளவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- சேதமடைந்த தண்டவாளங்கள் சரி செய்யப்பட்டு ரெயில்களை இயக்குவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.
புதுடெல்லி:
ஒடிசா ரெயில் விபத்தில் இதுவரை 275 பேர் பலியாகி உள்ளனர். 1175 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 793 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் உள்ளவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இரவு பகலாக நடந்த மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்களின் குறுக்கே கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. சேதமடைந்த தண்டவாளங்களும் சரி செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து ரெயில்களை இயக்குவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.
இந்நிலையில், ஒடிசா ரெயில் விபத்தில் பெற்றோர்களை இழந்த பிள்ளைகளின் படிப்பு செலவை ஏற்பதாக அதானி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதானி நிறுவன தலைவர் கவுதம் அதானி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஒடிசா ரெயில் விபத்தால் நாம் அனைவரும் மிகவும் வேதனை அடைந்துள்ளோம். இந்த விபத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் பள்ளிக் கல்விக்கான செலவை அதானி குழுமம் ஏற்றுக் கொள்வது என முடிவு செய்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஆதரவளிப்பதும், அவர்களின் குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதும் நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு" என குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்