என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மணிப்பூர் சம்பவம்"
- மணிப்பூர் மாநிலத்தில் அபின் சாகுபடியை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கையை தடுக்கும் வகையில் கலவரமாக மாறி வன்முறை தொடர்கிறது.
- கோலாகல சீனிவாசனுக்கு சிந்தனையாளர் பிரிவு சார்பில் நினைவுபரிசாக செங்கோல் வழங்கப்பட்டது.
திருப்பூர்:
பா.ஜனதா கட்சி சிந்தனையாளர் பிரிவு சார்பாக பொதுசிவில் சட்டம், மணிப்பூர் விவகாரம் உண்மை நிலவரம் என்ன? என்பது குறித்த சிந்தனை கருத்தரங்கம் திருப்பூர் -காங்கயம் ரோட்டில் உள்ள காயத்ரி மகாலில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார்.
சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் குப்புராஜ் முன்னிலை வகித்தார். மூத்த பத்திரிகையாளர் கோலாகல சீனிவாசன் பங்கேற்று பேசும்போது, திருமணம், திருமண பதிவு, வயது, திருமண முறிவு, ஜீவனாம்சம், வாரிசு, தத்தெடுப்பு, காப்பாளர், சொத்துரிமை இவை அனைத்து சமயத்தினருக்கும் பொதுவான விதிமுறைகளை கொண்டதே பொதுசிவில் சட்டமாகும்.
மணிப்பூர் மாநிலத்தில் அபின் சாகுபடியை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கையை தடுக்கும் வகையில் கலவரமாக மாறி வன்முறை தொடர்கிறது. இந்த சம்பவத்துக்கு பிறகு காவல்துறையில் கூட இனப்பிரிவு ஏற்பட்டு இருக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களில் சீனாவின் ஊடுறுவலை தடுக்க பா.ஜனதா அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மணிப்பூர் சம்பவம் பாதிப்பை ஏற்படுத்தாது என்றார். பின்னர் கோலாகல சீனிவாசனுக்கு சிந்தனையாளர் பிரிவு சார்பில் நினைவுபரிசாக செங்கோல் வழங்கப்பட்டது.
- மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மணிப்பூர் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை தெற்கு மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜெயராமன், பிரபாகரன் முன்னிலை வகித்தனர்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் காமாட்சி, சரவணகுமார், பழனிகுமார், ராஜ்குமார், மகேந்திரன், நகர தலைவர் கரிசல்பட்டி சவுந்தரபாண்டி, வட்டாரத் தலைவர் முருகேசன், மாவட்ட மகளிர் அணி தலைவி பிரவீனா உள்பட பலர் கலந்து கொண்டனர். உசிலம்பட்டி, எழுமலை, கல்லுப்பட்டி, பேரையூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
- மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராஜபாளையம்
மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீதான தாக்கு தலை கண்டித்து ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாவட்ட தலைவர் ரெங்கசாமி, நகர தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான ஆர்.சங்கர்கணேஷ், பொன் சக்திமோகன், எஸ்.ஆர்.பீமராஜா, டைகர் சம்சுதீன், நகர்மன்ற உறுப்பினர் சங்கர் கணேஷ், வட்டார தலைவர்கள் கணேசன், கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சேத்தூரில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சேத்தூர் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. துணைத்தலைவர் அய்ய னார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பி னர் குமாரசாமிராஜா, விருதுநகர் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் செல்வ ராஜ், மாநில மனித உரிமை செயலாளர் ராம அழகு, மாநில தலைமைக்கழக பேச்சாளர் சிவகாசி மோகன், மாநில விவசாய பிரிவு செயலாளர்கள் மாங்குடி ராஜேந்திரன், தங்கவேல், செட்டியார்பட்டி முன்னாள் நகர தலை வர் மணிகண்டன், முன்னாள் வட்டார தலைவர் லட்சுமணன், எஸ்.சி. எஸ்.டி. பிரிவு மாவட்டத் தலைவர் ராமர், ராஜபாளையம் நகர துணைத்தலைவர் தனசேகரன், ராஜபாளையம் வட்டார மகிளா காங்கிரஸ் தலைவி மேரி, சேத்தூர் முன்னாள் தலைவர் வேல்சாமி, மற்றும் முனி யாண்டி வைரமுத்து கோபி கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மணிப்பூர் மாநில அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மாநில அரசு தாமாகவே முன்வந்து பதவி விலக வேண்டும் என வக்கீல்கள் கோஷமிட்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்க தவறிய ஒன்றிய அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வக்கீல்கள் சங்கத் தலைவர் ரவி தலைமை தாங்கி பேசினார். செயலாளர் ராமசாமி வரவேற்றார். இதில் மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமையை தடுக்க தவறிய ஒன்றிய அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசு தாமாகவே முன்வந்து பதவி விலக வேண்டும் என வக்கீல்கள் கோஷமிட்டனர். இதில் மூத்த வக்கீல்கள் பரம குரு, அன்பழகன், சரவணன், திருநாவுக்கரசு, வக்கீல்கள் பாலா, அண்ணாமலை, பிரபாகரன், சுரேஷ் பாபு, இள மாறன், பாரி, சத்தியமூர்த்தி, குமார், முகமது பாஷ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து பெண்கள் கண்டன பேரணி நடந்தது.
- ஊராட்சி மன்ற தலைவர் ரூபி தலைமையில் நடந்தது.
பசும்பொன்
கமுதி அருகே பேரையூர் ஊராட்சியில் மணிப்பூர் சம்பவம் மற்றும் அங்கு பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றை கண்டித்து கண்டன பேரணி நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் ரூபி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணி அங்குள்ள கண்மாய்க்கரை பஸ் நிறுத்தத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக இருளப்ப சுவாமி கோவில் அருகே நிறைவு பெற்றது.
இதில் பெண்களுக்கு எதிரான சம்பவங்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
- அவலத்தை கண்டித்து கண்டன ஆர்ப் பாட்டம் கம்மாபுரத்தில் நடைபெற்றது.
- குற்றவாளிகளுக்கு உடனடி யாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும். கு
கடலூர்:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மணிப் பூரில் பெண்களுக்கு ஏற்பட்ட அவலத்தை கண்டித்து கண்டன ஆர்ப் பாட்டம் கம்மாபுரத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்திற்கு ஒன்றிய பொரு ளாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட செயலாளர் பால.அறவாழி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் நிர்வாகிகள் குரு, நீதி வள்ளல், தன்ராஜ், ஜோதி பாசு, கண்ணன், வெங்கட், ராஜி, குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் பெண்களை நிர்வாணப்படுத்தி பாலி யல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு உடனடி யாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும். குற்ற செயலை தடுக்க இயலாத மணிப்பூர் அரசை உட னடியாக டிஸ்மிஸ் செய்து, முதலமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.
- கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மணிப்பூர் மாநில அரசுகளைக் கண்டித்து, கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.
கடலூர்:
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் இனக் கலவரத்தில், 2 பழங்குடியின சமுதாயப் பெண்களை நிர்வாண மாக்கி, கற்பழித்ததை கண்டித்தும், கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளைக் கண்டித்தும், மணிப்பூர் மாநில அரசை உடனடியாக கலைத்திட வேண்டுமென வலியுறுத்தியும், மங்கலம்பேட்டை நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைப்பில், அனைத்துக் கட்சிகள் சார்பில், மங்கலம்பேட்டை தேரடி வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கடசி நகர செயலாளர் அம்பேத் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில், இந்திய குடியரசு கட்சியின் மாநில முன்னாள் இணைப் பொதுச்செயலாளர் மங்காபிள்ளை,விடுதலை சிறுத்தைகள் சமூக ஊடக மாநில துணைச் செயலாளர் ராஜ்குமார், தி.மு.க.நகர அவைத் தலைவர் முஹம்மது யூசுப், மாவட்ட தி.மு.க.பிரதிநிதி குழந்தை சுதந்திரன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாச்சலம், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் இக்பால், விடுதலை சிறுத்தைகள் கட்சி ந கர துணைச் செயலாளர் தனக்குமார், ம.தி.மு.க.பிரமுகர் விக்னேஷ், விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் அறிவழகன், மக்கள் அதிகாரம் அமைப்பு பிரமுகர் மணிவாசகன், காங்கிரஸ் கட்சி பிரமுகர் மணிகண்டன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சிவக்குமார், வக்கீல் கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டு, மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளைக் கண்டித்து, கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.
- சம்பவம் தொடர்பாக மணிப்பூரை சேர்ந்த ஹுய்ரெம் மொய்தே என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மணிப்பூர் சம்பவத்தில் கைதான வாலிபரின் உருவபொம்மையை தூக்கிலிட்டு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் போராட்டம் நடத்திய போது எடுத்தபடம்.***நெல்லை, ஜூலை.22-
மணிப்பூரில் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக கலவரம் நடந்து வருகிறது.
இதையடுத்து அங்கு ஆளும் பா.ஜனதா அரசை கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் அங்கு குகி பழங்குடி யினத்தை சேர்ந்த 2 பெண் களை நிர்வாணமாக்கி, ஊர்வலமாக அழைத்து சென்று பாலியல் வன்கொ டுமை செய்யப்பட்டது போன்ற வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மணிப்பூரை சேர்ந்த ஹுய்ரெம் மொய்தே என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மத்திய அரசு மணிப்பூர் வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும். கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று திட்டமிடப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக திடீரென மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையிலான காங்கிரசார் மணிப்பூர் பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் கைதான ஹுய்ரெம் மொய்தேவின் உருவ பொம்மையை எடுத்து வந்தனர்.
பின்னர் அந்த உருவ பொம்மையை நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மேற்கூரை பகுதிக்கு சென்று தூக்கிலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகி கள் கவிபாண்டியன், பரணி இசக்கி, கெங்கராஜ், பிவிடி.ராஜேந்திரன், ரசூல் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
- மணிப்பூர் மாநிலத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
- கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி, காங்கிரஸ், ம.தி.மு.க. ,விடுதலை சிறுத்தை கட்சி, ஒருங்கிணைந்த கிறிஸ்துவ கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கொடைக்கானல்:
மணிப்பூர் மாநிலத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி, காங்கிரஸ், ம.தி.மு.க. ,விடுதலை சிறுத்தை கட்சி, ஒருங்கிணைந்த கிறிஸ்துவ கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத மத்திய, மணிப்பூர் மாநில அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர் .
கலவரத்தை தூண்டும் வகையில் பெண்களை இழிவு படுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்