search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலகக் கோப்பை 2024"

    • இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத பாகிஸ்தானுக்கு சூப்பர் 8 சுற்று வாய்ப்பு கணிசமாக குறைந்துள்ளது.
    • பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோற்றது.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூயார்க்கில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு அரங்கேறும் 22-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, கனடாவை (ஏ பிரிவு) சந்திக்கிறது.

    பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோற்றது. இந்தியாவுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் 120 ரன் இலக்கை கூட எடுக்க முடியாமல் தோல்வியடைந்தது.

    இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத பாகிஸ்தானுக்கு சூப்பர் 8 சுற்று வாய்ப்பு கணிசமாக குறைந்துள்ளது. முதலில் பாகிஸ்தான் எஞ்சிய இரு ஆட்டங்களிலும் கட்டாயம் வென்றாக வேண்டும். இன்னொரு பக்கம் அமெரிக்கா தனது கடைசி இரு லீக்கில் (இந்தியா மற்றும் அயர்லாந்துக்கு எதிராக) தோற்க வேண்டும். இவ்வாறு நடந்து ரன்ரேட்டிலும் உயர்ந்த நிலையில் இருந்தால் மட்டுமே பாகிஸ்தானுக்கு சூப்பர்8 கதவு திறக்கும்.

    சாத் பின் ஜாபர் தலைமையிலான கனடாவை சாதாரணமாக எடுத்து விட முடியாது. அமெரிக்காவுக்கு எதிராக 194 ரன்கள் குவித்து தோல்வி அடைந்த கனடா, அயர்லாந்துக்கு எதிராக 12 ரன்னில் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. எனவே பாகிஸ்தானுக்கு கடும் சோதனை அளிக்க கனடா வீரர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.

    • 23-வது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
    • இலங்கை அணி விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளது.

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரில் நாளை அதிகாலை நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள இலங்கை மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

    நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளது. அதேசமயம் நேபாள் அணியும் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் இவ்விரு அணிகளுக்கும் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பானது கேள்விகுறியாக மாறியுள்ள நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் இப்போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் தசுன் ஷனகா பங்கேற்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 100-வது போட்டியை விளையாடவுள்ளார். இதன்மூலம் இலங்கை அணிக்காக 100 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடும் முதல் வீரர் எனும் சாதனையையும் தசுன் ஷனகா படைக்க உள்ளார். இதற்கு முன் வேறெந்த இலங்கை வீரரும் 100 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியதில்லை.

    இலங்கை அணிக்காக கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகமான தசுன் ஷனகா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 99 போட்டிகளில் விளையாடி உள்ளார். 5 அரைசதங்களுடன் 1456 ரன்களைக் குவித்துள்ளார். பந்துவீச்சில் 32 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

    • வங்காளதேசத்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • இதனையடுத்து களமிறங்கிய வங்காளதேசம் 109 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா- வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டி நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைத்தில் நடைபெற்றது.

    இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் தன்ஸிம் ஹசன் ஷாகிப் 3 விக்கெட்டுகளையும், தஸ்கின் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

    இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி பல சாதனைகளை பதிவுசெய்துள்ளது. அந்தவகையில் டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் மிக குறைந்த இலக்கை கட்டுப்படுத்திய அணி எனும் சாதனையை பதிவுசெய்துள்ளது. முன்னதாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராகவும், இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிராகவும் 120 ரன்களைக் கட்டுப்படுத்தியதே சாதனையாக இருந்தது அதனை தற்போது தென் ஆப்பிரிக்கா முறியடித்துள்ளது.

    மேலும் டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் தென் ஆப்பிரிக்க அணி 5-வது முறையாக 5 ரன்களுக்கு கீழ் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. வேறெந்த அணியும் இரண்டு முறைக்கு மேல் டி20 உலகக்கோப்பை தொடரில் 5 ரன்களுக்கு கீழ் வெற்றியைப் பதிவுசெய்ததில்லை. மேற்கொண்டு தென் ஆப்பிரிக்க அணி வங்கதேசத்திற்கு எதிராக 9-வது முறையாக தொடர்ச்சியான வெற்றிகளைப் பதிவுசெதுள்ளது.

    • கிளாசன் 44 பந்துகளில் 46 ரன்களுடன், டேவிட் மில்லர் 38 பந்துகளில் 29 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
    • வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சாகிப் 3 விக்கெட்டும் தம்சிம் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    வாஷிங்டன்:

    டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வங்காளதேசம் மோதுகிறது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக ஹென்ட்ரிக்ஸ்- டி காக் களமிறங்கினர். ஹென்ட்ரிக்ஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் டிகாக் 18 ரன்னிலும் மார்க்ரம் 4, ஸ்டெப்ஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 23 ரன்னில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். 44 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த நிலையில் கிளாசன் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த சிறிது நேரத்தில் டேவிட் மில்லர் 38 பந்துகளில் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதனால் இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சாகிப் 3 விக்கெட்டும் தம்சிம் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    • பவுலர்களை ரோகித் புத்திசாலித்தனமாக பயன்படுத்தி ஆட்டத்தை மாற்றினார்.
    • மறுபுறம் இந்தியாவின் அந்த துல்லியமான பந்து வீச்சை எதிர்கொள்ள பாகிஸ்தானின் பேட்டிங் திணறியது.

    டி20 உலகக் கோப்பையின் நேற்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் விளையாடிய இந்தியா 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்நிலையில் பும்ரா போன்ற பவுலர்களை சரியான நேரத்தில் அறிவுப்பூர்வமாக பயன்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா வெற்றியை தலைகீழாக மாற்றியதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பாகிஸ்தானுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை கொண்ட போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றுள்ளது. ரோகித் சர்மாவின் வியூகம் நிறைந்த மாஸ்டர் கிளாஸ் சிறப்பாக உள்ளது. பவுலர்களை அவர் புத்திசாலித்தனமாக பயன்படுத்தி ஆட்டத்தை மாற்றினார். மறுபுறம் இந்தியாவின் அந்த துல்லியமான பந்து வீச்சை எதிர்கொள்ள பாகிஸ்தானின் பேட்டிங் திணறியது.

    இந்த வெற்றிக்கு இந்திய அணி மிகவும் தகுதியானது. ரிஷப் பண்ட் நன்றாக விளையாடினார். ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் நன்றாக பந்து வீசினர்.

    இவ்வாறு யுவராஜ் கூறினார்.

    • பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.
    • 2014-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    9-வது டி20 உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

    கடந்த 2007-ம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் சீசனில் டோனி தலைமையிலான இந்திய அணியானது டிராபியை கைப்பற்றியது. இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ராபின் உத்தப்பா அதிக ரன்கள் குவித்தார். அவர் 39 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்தப் போட்டி டிராவில் முடிந்த நிலையில் பவுல் அவுட் முறையில் இந்தியா வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் கௌதம் காம்பீர் 54 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2012-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி 61 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதே போன்று 2014-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 2016-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடந்த 2022 -ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி 53 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த நிலையில் தான் 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 4 ரன்களில் ஆட்டமிழக்கவே, ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 31 பந்துகளில் 6 பவுண்டரி உள்பட 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலமாக பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 5 ஆண்டுகளாக விராட் கோலி படைத்து வந்த சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.

    • ரிஷப் பண்ட் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.
    • அறுவை சிகிச்சை முடிந்ததும் கடினமான விக்கெட் கீப்பிங்கை இவ்வளவு வேகமாக செய்வது உங்களுடைய கடின உழைப்புக்கான பரிசாகும்.

    டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 119 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 43, அக்சர் படேல் 20 ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 113 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

    ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்கும் இந்திய பீல்டருக்கு பி.சி.சி.ஐ. விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் சிறந்த பீல்டர் விருதை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தட்டிச்சென்றார். அந்த ஸ்பெஷல் விருதை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவருக்கு வழங்கினார்.

    இந்நிலையில் ரிஷப் பண்ட் விபத்து செய்தியை கேட்டு கண் கலங்கியதாக ரவி சாஸ்திரி உருக்கத்துடன் கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரிஷப் பண்ட் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். அவருடைய விபத்து செய்தியை கேட்ட போது கண் கலங்கினேன். அவரை மருத்துவமனையில் பார்த்த போது நிலைமையும் மேலும் மோசமானது. இருப்பினும் அங்கிருந்து கம்பேக் கொடுத்த அவர் இன்று இந்தியா -பாகிஸ்தான் என்ற மிகப்பெரிய போட்டியில் விளையாடியது இதயத்தை தொடுகிறது.

    அவருடைய பேட்டிங் பற்றி அனைவருக்கும் தெரியும். அவரிடம் துருப்பச்சீட்டு இருக்கிறது. ஆனால் அறுவை சிகிச்சை முடிந்ததும் கடினமான விக்கெட் கீப்பிங்கை இவ்வளவு வேகமாக செய்வது உங்களுடைய கடின உழைப்புக்கான பரிசாகும். இது உங்களுக்கு மட்டுமல்லாமல் உலக அளவில் இருக்கும் லட்சக்கணக்கானவர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கக்கூடியது. இந்த வேலையை தொடருங்கள்.

    என்று ரவி சாஸ்திரி கூறினார். 

    • ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்கும் இந்திய பீல்டருக்கு பி.சி.சி.ஐ. விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
    • இந்தியாவின் சிறந்த பீல்டர் விருதை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தட்டிச்சென்றார்.

    நியூயார்க்:

    20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நியூயார்க்கில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 119 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரீத் பும்ரா 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    இந்நிலையில் ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்கும் இந்திய பீல்டருக்கு பி.சி.சி.ஐ. விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் சிறந்த பீல்டர் விருதை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தட்டிச்சென்றார்.

    இதையடுத்து அந்த விருதை இந்திய முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி ரிஷப் பண்டுக்கு அணிவித்தார். இது தொடர்பான வீடியோவை பி.சி.சி.ஐ தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    • ஈரமான அவுட்பீல்டு காரணமாக டாஸ் தாமதம் ஏற்பட்டது.
    • இதைத் தொடர்ந்து அரைமணி நேர தாமதத்திற்கு பிறகு டாஸ் போடப்பட்டது.

    இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே ஈரமான அவுட்பீல்டு காரணமாக டாஸ் தாமதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அரைமணி நேர தாமதத்திற்கு பிறகு டாஸ் போடப்பட்டது.

    அப்போது காயின் எங்க என்று கேட்ட ரோகித் சர்மா, டாஸ் காயினை பேண்ட் பாக்கெட்டிற்குள் போட்டு அதனை மறந்து காணாமல் தேடியுள்ளார். அப்போது பாபர் அசாம் பாக்கெட்டில் இருக்கிறது என்று சிரித்து கொண்டார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பவுலிங் தேர்வு செய்தார்.

    இதேபோன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பிறகு பந்து வீச்சா அல்லது பேட்டிங்கா என்பது குறித்து அந்த நேரத்தில் மறந்து விட்டார். பின்பு சிறிது நேரம் யோசித்து பதில் அளித்து இது தொடர்பான வீடியோ அந்த சமயத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் அணி குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது.
    • யாரும் நாட்டைப் பற்றி நினைப்பதில்லை. சில வீரர்களின் கேரியரில் நீங்கள் விளையாடினால் இதுவே நடக்கும்.

    டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

    இந்த தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தங்களுடைய முதல் போட்டியிலேயே அமெரிக்காவிடம் தோற்றது.

    இந்நிலையில் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சுமாராக செயல்படும் பாபர் அசாம் இந்திய வீரர் விராட் கோலியின் காலணிகளுக்கு கூட நெருங்க முடியாது என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    பாபர் அசாம் சதமடித்ததும் அடுத்த நாள் அவரை விராட் கோலியுடன் ஒப்பிடுவதை உங்களால் பார்க்க முடியும். ஆனால் அவரால் விராட் கோலியின் காலணிகளை கூட நெருங்க முடியாது. அமெரிக்க பவுலர்கள் அவரை சிக்க வைத்தனர். அவர்களுக்கு எதிராக பாபர் அசாம் விளையாட முடியாமல் திணறினார். 40+ ரன்களில் அவுட்டான அவர் கடைசி வரை நின்று வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அது பாகிஸ்தான் ஒரு தலைப்பட்சமாக வெல்ல வேண்டிய போட்டியாகும். இந்தியாவை தோற்கடிக்கும் திறமை அவர்களிடம் இல்லை.

    உலகக் கோப்பை வரும் போதெல்லாம் அவர்கள் தங்களுடைய பவுலிங் பற்றி பாராட்டுகின்றனர். ஆனால் அது தான் முதல் போட்டியில் அவர்களுடைய தோல்விக்கு காரணமாகும். அவர்களுடைய ஈகோ எப்போதும் முடிவடைவதில்லை. பாகிஸ்தான் அணி குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது. யாரும் நாட்டைப் பற்றி நினைப்பதில்லை. சில வீரர்களின் கேரியரில் நீங்கள் விளையாடினால் இதுவே நடக்கும்.

    இவ்வாறு கனேரியா கூறினார்.

    • இந்த தொடரில் அமெரிக்காவிடம் தோற்று பாகிஸ்தான் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
    • இதனால் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் 19-வது லீக் போட்டி இன்று நியூயார்க்கில் நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யபடவில்லை.

    இந்த தொடரில் அமெரிக்காவிடம் தோற்று பாகிஸ்தான் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் சூப்பர் 8 சுற்றுக்கு பாகிஸ்தான் முன்னேற வேண்டுமானால், இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


    • வெஸ்ட் இண்டீஸ் அணியானது 134 ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டா அணியை வீழ்த்தியது.
    • இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய அகீல் ஹொசைன் 4 ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் உகாண்டா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களைக் குவித்தது.

    இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய உகாண்டா அணியானது வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சீட்டுக்கட்டுப்போல் சரிந்தது. இதன் காரணமாக உகாண்டா அணி 12 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 39 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 134 ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டா அணியை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய அகீல் ஹொசைன் 4 ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    இந்நிலையில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியதன் மூலம், டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் எனும் சாதனையை தனதாக்கியுள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக எந்த ஒரு வீரரும் டி20 உலகக்கோப்பை தொடரில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றாதது குறிப்பிடத்தக்கது. 

    ×