search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94447"

    • சிவகங்கை தீர்த்தத்திற்கு கிழக்கில் சக்கர தீர்த்தம் அமைந்துள்ளது.
    • ஈசான்ய லிங்கத்தை வழிபட்டால் மாபெரும் ஞானியாக விளங்குவார்கள்.

    அண்ணாமலையின் வடக்குத் திசையில் குபேர லிங்கமும், குபேர தீர்த்தமும் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் வறுமை எல்லாம் நீங்கி, சிவபிரான் திருவடியை அடையலாம். இந்த குபேர தீர்த்தத்திற்கு அருகே வசிட்ட முனிவரால் அமைக்கப்பட்ட வசிட்ட தீர்த்தம் உள்ளது.

    இதில் வசிட்டர், ஐப்பசி மாதத்தில் மூழ்கி, முனிவர்களுக்கு எல்லாம் முதன்மையாக இருக்கப் பெற்றார். அப்படிப்பட்ட தீர்த்தத்தில் நீராடியவர்களுக்கு வேதத்திற்கு அங்கமாய் இருக்கின்ற சாத்திரங்கள் எல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கும். அவர்கள் பாவக்கடலையும் கடப்பார்கள். அண்ணாமலையின் ஈசான்ய திசையில் ஈசான்ய லிங்கம் மற்றும் ஈசான்ய தீர்த்தம் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் மூழ்கி ஈசான்ய லிங்கத்தை வழிபட்டால் மாபெரும் ஞானியாக விளங்குவார்கள்.

    திருவிளையாடல்களைச் செய்யும் அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் சிவகங்கை தீர்த்தம் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தை தினமும் மனதில் நினைத்தாலே கங்கையில் நீராடிய பலன்கள் உண்டாகும். அநேக உருத்திரர்கள் இந்த தீர்த்தத்தில் மூழ்கித்தான் பெரும் பயன் அடைந்தார்கள்.

    இந்த சிவகங்கை தீர்த்தத்திற்கு கிழக்கில் சக்கர தீர்த்தம் அமைந்துள்ளது. திருமால் "வராக"அவதாரம் எடுத்த போது இந்த சக்கர தீர்த்தத்தில் தான் மூழ்கினார். எனவே இந்த தீர்த்தம் பெரும் சிறப்பாக விளங்கியது.

    இந்த தீர்த்தத்தை வலம் வருவோரும், இதில் மூழ்கியவர்களும், இந்த நீரை உட் கொண்டவர்களும் துன்பக்கடலில் இருந்து வெளியே வந்து சிவபிரானின் இரண்டு திருவடிகளையும் இடமாக பெருவார்கள். அருணாசலேஸ்வரர் எழுந்தருளி இருக்கின்ற இந்த கோவில் வளாகத்தில் அக்னி திசையில், தாமரையாகிய சிறந்த ஆலயத்தில் வசிக்கும் நான்முகனால் அமைக்கப்பட்ட பிரம்ம தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் மூழ்கினால் கடந்த பிறவிகளில் செய்த தீவினைகள் நீங்கும். இந்த தீர்த்தத்தில் மூழ்கி ஒரு அணு அளவு தங்கத்தை தானம் செய்பவர்கள் பெரும் பதவியை அடைவார்கள்.

    • சூரிய கிரணத்தையொட்டி கோவில் நடை சாத்தப்படவில்லை.
    • அஸ்திரதேவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து லெ்கிறார்கள்.

    அக்னி ஸ்தலமாக கோவில் விளங்குவதால் சூரிய கிரணத்தையொட்டி கோவில் நடை சாத்தப்படவில்லை. இதனால் நேற்று வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்ததால் கோவிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    வழக்கமாக இக்கோவிலில் சூரிய கிரகணம் தொடங்கும் போது கோவில் 4-ம் பிரகாரத்தில் உள்ள பிரம்மதீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று மாலை 5.17 முதல் 6.24 மணி வரை சூரிய கிரகணம் இருந்ததால் கிரகணம் தொடங்கும் முன்பு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக அருணாசலேஸ்வரரின் அம்சமான சூலரூபத்தில் உள்ள அஸ்திரதேவர், மங்கல வாத்தியங்கள் முழங்க பிரம்ம தீர்த்த குளக்கரையில் எழுந்தருளினார். பின்னர் பிரம்ம தீர்த்த குளக்கரையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து அஸ்திரதேவருக்கு பச்சரிசி மாவு, அபிஷேக பொடி, பால், தயிர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட அபிஷேக திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு பூஜை செய்த புனித கலச நீரை ஊற்றி சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பவளக்கால் சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது.
    • புஷ்கரணி தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.

    பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் உதயகருட சேவை நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு உதயகருட சேவை நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி பெருமாள் அலங்கரிக்கப் பட்டு கருட வாகனத்தில் எழுந்தருளி பவளக்கால் சப்பரத்தில் வீதிஉலா நடைபெற்றது.

    இதைதொடர்ந்து கோவிலின் எதிரே உள்ள புஷ்கரணி தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    இதில் கோவில் செயல் அலுவலர் பரமானந்தம், முன்னாள் அறங்காவல் குழு தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • திருப்பதி திருமலையில் ஏராளமான தீர்த்தங்கள் காணப்படுகின்றன.
    • தீர்த்தங்களைப் பற்றியும், அதில் நீராடுவதன் பலனையும் பார்க்கலாம்.

    சுவாமி புஷ்கரிணி: ஆதிவராக மூர்த்தி சன்னிதிக்கு அருகில் இந்த தீர்த்தம் உள்ளது. இதனை 'தீர்த்தங்களின் அரசி' என்று அழைக்கிறார்கள். இங்கு சரஸ்வதிதேவி தவம் இயற்றியதாக தல புராணம் சொல்கிறது. மிகவும் புனிதத் துவம் பெற்ற தீர்த்தம் இது. மார்கழி மாதம் வளர்பிறையில் துவாதசி நாளில் சூரிய உதயத்திற்கு 6 நாழிகை முன்பிருந்து, சூரிய உதயத்திற்கு பின்பான 6 நாழிகை வரை திருப்பதி மலையில் உள்ள அனைத்து தீர்த்தங்களும், இந்த தீர்த்தத்தில் கூடுகின்றன. எனவே அன்றைய தினம் இதில் நீராடி வழிபட்டால் இறைவனின் திருவடியை அடையலாம்.

    குமார தீர்த்தம்: மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் தினத்தன்று (மாசி பவுர்ணமி), சகல தீர்த்தங்களும் வந்து இந்த தீர்த்தத்தில் தீர்த்தமாடுகின்றன. மனதிற்கு உற்சாகமும், உடலுக்கு இளமையும் தரும் இத்தீர்த்தத்தில் நீராடுபவர்கள், ராஜசூய யாகம் செய்த பலனைப் பெறுவர்.

    தும்புரு தீர்த்தம்: இறைவனை தன்னுடைய நாம சங்கீர்த்தனத்தால் பாடும் தும்புரு முனிவர், திருப்பதி வெங்கடாஜலபதியை நினைத்து தவம் இருந்த இடத்தில் இருப்பதால் இதற்கு 'தும்புரு தீர்த்தம்' என்று பெயர். பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று (பங்குனி பவுர்ணமி), இதில் நீராடுவோருக்கு பரமபதம் உண்டு.

    ஆகாச கங்கை: தினந்தோறும் அதிகாலையில் இந்த தீர்த்தத்தாலேயே வேங்கடவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சகல பாபங்களையும் போக்கும் இத்தீர்த்தத்தின் அருகில் எண்ணற்ற ரிஷிகள் தவமிருந்தனர். அந்தக் காலத்திலேயே திருமலை நம்பிகள் தினமும் இந்த தீர்த்தத்தில் இருந்து ஒரு பெரிய குடத்தில் வேங்கடவனுக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்துக்கொண்டு நடந்தே வருவாராம். கோவிலில் இருந்து சுமார் 2 மைல் தூரம். எம்பெருமான் இவரது தீர்த்த கைங்கர்யத்தை மெச்சி காட்சி கொடுத்தார். சகல சித்திகளையும் அளிக்கும் இத்தீர்த்தத்தில் சித்திரைமாதம் பவுர்ணமியன்று நீராடுவது மிக விஷேசம்.

    பாண்டு தீர்த்தம்: வைகாசி மாதம் சுக்கிலபட்ச துவாதசியுடன் கூடிய செவ்வாய்க்கிழமையில் பல தீர்த்தங்கள் இதில் கூடுவதால், அப்போது இதில் நீராடுவோர் சகல பாவங்களில் இருந்தும் விடுபடுகின்றனர்.

    பாபவிநாசன தீர்த்தம்: இத்தீர்த்தம் இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் அமைந்துள்ளது. மிக சுவையுடன் விளங்கும் தீர்த்தங்களில் இதுவும் ஒன்று. ஐப்பசி மாதம் வளர்பிறை சப்தமி திதியும் உத்திராட நட்சத்திரமும் கூடிய ஞாயிற்றுக்கிழமையில் இதில் சில தீர்த்தங்கள் கூடுகின்றன. அன்றைய தினத்தில் இதில் நீராடுவோர் பெறுவதற்கரிய ஞானம் பெறுகின்றனர். பாவங்களினின்றும் விடுபடுகின்றனர்.

    • ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ளே 22 தீர்த்தக்கிணறுகள் அமைந்துள்ளன.
    • தெப்பக்குளம் படிக்கட்டுகளில் பாசிபிடித்து அலங்கோலமாக காட்சி அளிக்கிறது.

    அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ளே 22 தீர்த்தக்கிணறுகள் அமைந்துள்ளன. இவை தவிர ராமேசுவரம் கோவிலோடு சேர்ந்த ராமேசுவரம், பாம்பன் தங்கச்சிமடம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு ஊர்களில் சுமார் 108 தீர்த்த கிணறுகள் மற்றும் தெப்பக்குளங்கள் அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

    இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலோடு சேர்ந்த நகர் காவல் நிலையம் எதிரே உள்ள ராமர் தீர்த்த தெப்பக்குளம் ஒன்றும் அமைந்துள்ளது. இந்த ராமர்தீர்த்தம் தெப்பக்குளம் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் மிகவும் அசுத்தமான நிலையில் காட்சியளித்து வருகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் பாட்டில், குப்பை உள்ளிட்டவைகள் தீர்த்த குளத்தில் மிதந்தபடி அலங்கோலமாக காட்சி அளித்து வருகிறது.

    மேலும் தெப்பக்குளத்தின் மையப்பகுதியில் உள்ள மண்டபமும் வர்ணங்கள் பொலிவிழந்தும் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள சுற்றுச்சூவர், படிக்கட்டுகளில் பாசிபிடித்தும் அலங்கோலமாக காட்சி அளித்து வருகிறது. பல மாநிலங்கள் மற்றும் பல ஊர்களில் இருந்து ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வரும் பக்தர்கள் ராமர் தீர்த்த தெப்பக்குளம் வந்து அந்த தண்ணீரை தலையில் தெளித்து விட்டு செல்கின்றனர். ஆனால் தற்போது தெப்பக்குளம் குப்பைகளாகவும் பாசிப்படர்ந்தும் அலங்கோலமாக காட்சி அளித்து வருவதால் தெப்பக் குளத்தை காணவரும் பக்தர்கள் முகம்சுளித்தபடி மிகுந்த மன வேதனையுடன் பார்த்து செல்கின்றனர்.

    எனவே இதுகுறித்து ராமேசுவரம் திருக்கோவில் நிர்வாக அதிகாரிகள் ராமேசுவரம் கோவிலோடு சேர்ந்த நகர் காவல் நிலையம் எதிரே உள்ள ராமர் தீர்த்த தெப்பக்குளத்தில் உள்ள குப்பைகளை அகற்றி தெப்பக்குளத்தை சுத்தம் செய்வதற்கும் மற்றும் மைய மண்டபம் சுற்றுச்சுவர் படிக்கட்டுகள் புதிய வர்ணம் அடித்து புதுப்பொலிவு பெற செய்யவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்களும் ராமேசுவரத்தை சேர்ந்த பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருப்பதி திருமலையில் ஏராளமான தீர்த்தங்கள் காணப்படுகின்றன.
    • தீர்த்தங்களைப் பற்றியும், அதில் நீராடுவதன் பலனையும் பார்க்கலாம்.

    சுவாமி புஷ்கரிணி: ஆதிவராக மூர்த்தி சன்னிதிக்கு அருகில் இந்த தீர்த்தம் உள்ளது. இதனை 'தீர்த்தங்களின் அரசி' என்று அழைக்கிறார்கள். இங்கு சரஸ்வதிதேவி தவம் இயற்றியதாக தல புராணம் சொல்கிறது. மிகவும் புனிதத் துவம் பெற்ற தீர்த்தம் இது. மார்கழி மாதம் வளர்பிறையில் துவாதசி நாளில் சூரிய உதயத்திற்கு 6 நாழிகை முன்பிருந்து, சூரிய உதயத்திற்கு பின்பான 6 நாழிகை வரை திருப்பதி மலையில் உள்ள அனைத்து தீர்த்தங்களும், இந்த தீர்த்தத்தில் கூடுகின்றன. எனவே அன்றைய தினம் இதில் நீராடி வழிபட்டால் இறைவனின் திருவடியை அடையலாம்.

    குமார தீர்த்தம்: மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் தினத்தன்று (மாசி பவுர்ணமி), சகல தீர்த்தங்களும் வந்து இந்த தீர்த்தத்தில் தீர்த்தமாடுகின்றன. மனதிற்கு உற்சாகமும், உடலுக்கு இளமையும் தரும் இத்தீர்த்தத்தில் நீராடுபவர்கள், ராஜசூய யாகம் செய்த பலனைப் பெறுவர்.

    தும்புரு தீர்த்தம்: இறைவனை தன்னுடைய நாம சங்கீர்த்தனத்தால் பாடும் தும்புரு முனிவர், திருப்பதி வெங்கடாஜலபதியை நினைத்து தவம் இருந்த இடத்தில் இருப்பதால் இதற்கு 'தும்புரு தீர்த்தம்' என்று பெயர். பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று (பங்குனி பவுர்ணமி), இதில் நீராடுவோருக்கு பரமபதம் உண்டு.

    ஆகாச கங்கை: தினந்தோறும் அதிகாலையில் இந்த தீர்த்தத்தாலேயே வேங்கடவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சகல பாபங்களையும் போக்கும் இத்தீர்த்தத்தின் அருகில் எண்ணற்ற ரிஷிகள் தவமிருந்தனர். அந்தக் காலத்திலேயே திருமலை நம்பிகள் தினமும் இந்த தீர்த்தத்தில் இருந்து ஒரு பெரிய குடத்தில் வேங்கடவனுக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்துக்கொண்டு நடந்தே வருவாராம். கோவிலில் இருந்து சுமார் 2 மைல் தூரம். எம்பெருமான் இவரது தீர்த்த கைங்கர்யத்தை மெச்சி காட்சி கொடுத்தார். சகல சித்திகளையும் அளிக்கும் இத்தீர்த்தத்தில் சித்திரைமாதம் பவுர்ணமியன்று நீராடுவது மிக விஷேசம்.

    பாண்டு தீர்த்தம்: வைகாசி மாதம் சுக்கிலபட்ச துவாதசியுடன் கூடிய செவ்வாய்க்கிழமையில் பல தீர்த்தங்கள் இதில் கூடுவதால், அப்போது இதில் நீராடுவோர் சகல பாவங்களில் இருந்தும் விடுபடுகின்றனர்.

    பாபவிநாசன தீர்த்தம்: இத்தீர்த்தம் இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் அமைந்துள்ளது. மிக சுவையுடன் விளங்கும் தீர்த்தங்களில் இதுவும் ஒன்று. ஐப்பசி மாதம் வளர்பிறை சப்தமி திதியும் உத்திராட நட்சத்திரமும் கூடிய ஞாயிற்றுக்கிழமையில் இதில் சில தீர்த்தங்கள் கூடுகின்றன. அன்றைய தினத்தில் இதில் நீராடுவோர் பெறுவதற்கரிய ஞானம் பெறுகின்றனர். பாவங்களினின்றும் விடுபடுகின்றனர்.

    • வைகாசி விசாக விழா சென்னிமலை முருகன் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்.
    • இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழுவினர் செய்திருந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று மாலை வைகாசி விசாக விழா நடந்தது. முருக பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத்தன்று முகப்பெருமானை வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    66 வது வருட வைகாசி விசாக பெரு விழாவினை முன்னிட்டு ஊஞ்சலூர் அருகே காவிரியில் தீர்த்தம் எடுத்து கொண்டு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க காவிரி திருமஞ்சன தீர்த்தம் ஊர்வலமாக புறப்பட்டு மலை கோவிலை சென்று அடைந்தது.

    தொடர்ந்து நேற்று மதியம் கணபதி ேஹாமத்துடன் விழா தொடங்கி கலசஸ்தாபனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பஞ்சாமிருதம், தேன், பழங்கள், பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. இதை யடுத்து முருகன் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

    அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காங்கேயம் அருகே உள்ள வரதப்பம்பாளையம் கிராம மக்கள் காவடி, தீர்த்த குடங்கள் எடுத்து வந்து முருகப்பெருமான வழிபட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழுவினர் செய்திருந்தனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா தொடங்கியது.
    • நாளை கோதண்டராமர் கோவிலில் விபீஷ்ணருக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை தொடங்கியது. இதனை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றது.

    இன்று மாலை ராமேசுவரம் துர்க்கை அம்மன் கோவில் அருகே ராவண சம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து நாளை தனுஷ்கோடி பகுதியில் அமைந்துள்ள கோதண்டராமர் கோவிலில் விபீஷ்ணருக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    இதில் கலந்து கொள்வதற்காக ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், ராமர், சீதை, லட்சுமணர் உள்பட பஞ்சமூர்த்தி சுவாமிகள் நாளை காலை 7 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு கோதண்டராமர் கோவிலை சென்றடைகிறது.

    பட்டாபிஷேக நிகழ்ச்சி முடிந்து மாலை 4 மணிக்கு கோதண்டராமர் கோவிலில் இருந்து சுவாமிகள் புறப்பட்டு திருக்கோவிலை வந்தடைகிறது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை சுவாமிகள் கோதண்டராமர் கோவிலில் இருக்கும் என்பதால் ராமநாதசுவாமி கோவில் நடைகள் நாளை சாத்தப்படும். இதனால் பக்தர்கள் நாளை சாமி தரிசனம் செய்யவும், 22 தீர்த்தங்களில் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆகாச கங்கை பூங்காவுக்கு செல்லும் பாதையில் பக்தர்கள் மழை, வெயிலில் சிரமப்படாமல் இருக்க மேற்கூரை அமைக்கப்படும். அந்தப் பாதையில் ஓரமாக பக்தர்களின் ஓய்வறைகளும் அமைக்கப்படும்.
    திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி பேசியதாவது:-

    அஞ்சனாதேவிக்கும் வாயு பகவானுக்கும் பிறந்தவர் ஆஞ்சநேயர். பக்தர்கள் அனுமன் என்றும் அழைப்பர். அனுமனின் பிறப்பிடம் திருமலையில் உள்ள ஆகாச கங்கை தீர்த்தம் அருகில் ஆகும். அனுமன் பாலகனாக இருந்தபோதே சூரிய பகவானிடம் அனைத்து வேத உபதேசங்களையும் கற்று, கிஷ்கிந்தா ராஜ்ஜியத்தில் சுக்ரீவனின் அமைச்சரவையில் மந்திரியாகப் பணியாற்றினார்.

    அனுமன் பிறந்த இடமான திருமலையில் உள்ள ஆகாச கங்கை தீர்த்தம் அருகில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு பூங்கா அமைக்கப்பட உள்ளது. அதில் நவீன தொழில்நுட்பத்துடன் அனுமன் பிறந்த கதையை, வரலாற்றை இன்றைய இளைஞர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் எழுதி பேசி ஒலி (ஆடியோ) வடிவில் ஒலிப்பரப்ப ஏற்பாடு செய்யப்படும். பூங்கா அருகில் தியான மண்டபமும் கட்டப்படும்.

    ஆகாச கங்கை பூங்காவுக்கு செல்லும் பாதையில் பக்தர்கள் மழை, வெயிலில் சிரமப்படாமல் இருக்க மேற்கூரை அமைக்கப்படும். அந்தப் பாதையில் ஓரமாக பக்தர்களின் ஓய்வறைகளும் அமைக்கப்படும். அதற்கான பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி. தர்மாரெட்டி, திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரிகள் சதாபார்கவி, வீரபிரம்மய்யா, பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரி கோபிநாத்ஜாட்டி, தேவஸ்தான கட்டிடவியல் துறை பொறியாளர் நாகேஸ்வரராவ், அன்னமாச்சாரியார் திட்ட இயக்குனர் அகெல்லா விபீஷணசர்மா, கலை இயக்குனர் ஆனந்தசாய் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கார்த்திகை மாத பவுா்ணமி நாளான நேற்று மகா சமுத்திர ஆரத்தி நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர்
    கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கார்த்திகை மாத பவுா்ணமி நாளான நேற்று மகா சமுத்திர ஆரத்தி நடந்தது. இதையொட்டி மாலை 5 மணிக்கு கடற்கரையில் அமைந்துள்ள பரசு ராம விநாயகா் கோவில் முன்பு பக்தா்கள் சங்கமித்தல், மாலை 5.15 மணிக்கு பஞ்ச சங்குநாதம், 6 மணிக்கு 27 சுமங்கலிகள் அகல் தீபத்துடன் நெய்தீபம் ஏற்றுதல், இரவு 7 மணிக்கு சமுத்திர அபிஷேகம், 7.30 மணிக்கு தூபம் ஆரத்தி போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர். காந்தி, வெள்ளிமலை சைதானந்த மகராஜ் சுவாமிகள், நாகர்கோவில் நகர்மன்ற முன்னாள் தலைவி மீனாதேவ், மாவட்ட நிர்வாகிகள் சொக்கலிங்கம், ஜெகன்நாதன், தேவ், சுபாஷ், பக்தர்கள் சங்க பொருளாளர் முருகன், தம்பி தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட இந்து திருத்தொண்டா் பேரவை தலைவா் ராஜகோபால், பொதுச்செயலாளா் சிவசுப்பிரமணியபிள்ளை, பொருளாளா் காமராஜ், ஒருங்கிணைப்பாளா் கனகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.
    கோவை மண்ணை குளிர செய்த வரலாற்று சிறப்புபெற்ற இந்த நொய்யல் அன்னைக்கு தன்னார்வலர்கள் சார்பில், மலர்த்தூவி நன்றி கூறும் நிகழ்ச்சி பேரூர் அருகே நொய்யல் படித்துறையில் நேற்று நடந்தது.
    கோவையின் ஜீவநதியாக நொய்யல் ஆறு விளங்குகிறது. நொய்யல் ஆறு கோவையில் இருந்து பல 100 கிலோ மீட்டர் பயணித்து, திருப்பூர் சென்று, அங்கிருந்து ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள காவேரி ஆற்றில் கலக்கிறது. இவ்வாறு நீண்ட தூரம் பயணிக்கும் நொய்யல் ஆறு, கோவையின் நீர் ஆதாரமாக விளங்கும் 25 குளங்களை நிரப்புகிறது.

    கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குளங்கள் புறநகர் பகுதி குளங்கள் என மொத்தம் 25 குளங்களில் நிரப்பப்படும் தண்ணீர், கோவை மாவட்டத்தின் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கும், கோவை புறநகர் பகுதி விவசாய பாசனத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில், கோவை மண்ணை குளிர செய்த வரலாற்று சிறப்புபெற்ற இந்த நொய்யல் அன்னைக்கு தன்னார்வலர்கள் சார்பில், மலர்த்தூவி நன்றி கூறும் நிகழ்ச்சி பேரூர் அருகே நொய்யல் படித்துறையில் நேற்று நடந்தது.

    இதில், அனிச்சம், ஆம்பல், வெட்சி, கரந்தை. நொச்சி, வாகை, தும்பை, துளசி, தென்னம்பூ, வாழைப்பூ, கோரை, தேமாம்பூ, செம்மணி, ஊமத்தை, பூவரசு உள்ளிட்ட 218 வகையான மலர்களை கொண்டு, செந்தமிழில் வாழ்த்து பாடி மங்கள வாத்தியங்கள் இசைக்க, நொய்யல் அன்னைக்கு நன்றி தெரிவித்தும், ஆற்று நீருக்கு வரவேற்பு அளிக்கும் விதமாகவும் இந்த நிகழ்வு நடந்தது. இதில், திரளான தன்னார்வலர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு, நொய்யல் அன்னையை மலர்தூவி வணங்கி மகிழ்ந்தனர்.
    ×