search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94468"

    சமையலுக்கு தினசரி பயன்படுத்தி வரும் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை பெரிதும் கவலை அடைய செய்துள்ளது.
    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டிற்கு இன்று 54 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது.

    மழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதன் காரணமாக அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று கோயம்பேடு மார்கெட்டில் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கும் விற்கப்பட்டு வருகிறது.

    அதேபோல் வெளி மார்கெட் மற்றும் காய்கறி, மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்கப்படுகிறது.

    இதேபோல் மழையால் பச்சை காய்கறிகளின் வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளது. இன்று மொத்த விற்பனையில் குடை மிளகாய் ஒரு கிலோ ரூ.120-க்கும், ஊட்டி கேரட் ஒரு கிலோ ரூ.60-க்கும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.45-க்கும், பஜ்ஜி மிளகாய் ஒரு கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

    சமையலுக்கு தினசரி பயன்படுத்தி வரும் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை பெரிதும் கவலை அடைய செய்துள்ளது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, “தக்காளி உற்பத்தி நடைபெற்று வரும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி செடிகள் பெரும்பாலும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் வரத்து குறைந்து தக்காளி விலை அதிகரித்துள்ளது” என்றனர்.

    மொத்த விற்பனையில் இன்று ஒரு கிலோ கேரட் ரூ.90-க்கும் சில்லரை கடைகளில் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    போரூர்:

    கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது.

    தினசரி 60-க்கும் மேற்பட்ட லாரிகளில் வந்து கொண்டிருந்த தக்காளியின் வரத்து தொடர் கனமழை காரணமாக குறைந்துள்ளது. இன்று 43 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது.

    கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ30-க்கு விற்று வந்த தக்காளி கடந்த 2 நாட்களாகவே திடீரென விலை 2 மடங்காக அதிகரித்து உள்ளது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் மழையால் ஊட்டியில் இருந்து வரும் கேரட் வரத்து பாதியாக குறைந்துள்ளதால் அதன் விலையும் அதிகரித்து உள்ளது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ கேரட் ரூ.90-க்கும் சில்லரை கடைகளில் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காய்கறி உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
    போரூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்பட்டது. நள்ளிரவு முதல் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் வருகை அதிகரித்து வழக்கம் போல காய்கறி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று 300 லாரிகளில் மட்டுமே காய்கறி வந்துள்ளது.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காய்கறி உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு பயிரிடப்பட்டிருந்த காய்கறி செடிகள் பெரும்பாலும் மழையால் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரும் சின்ன வெங்காயம், தக்காளி, கேரட், முருங்கைக்காய், குடை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளது.

    கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.32-க்கு விற்ற தக்காளி மீண்டும் 2 மடங்காக விலை அதிகரித்து கிலோ ரூ.65-க்கும் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.75 முதல் 80 வரையிலும் விற்கப்பட்டு வருகிறது.

    அதேபோல் மொத்த விற்பனையில் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.40-க்கு விற்ற ஊட்டி கேரட் இன்று ரூ.60-க்கும், ஒரு கிலோ ரூ.40-க்கு விற்ற சின்ன வெங்காயம் ரூ.50-க்கும், ரூ.22-க்கு விற்ற உருளைக்கிழங்கு ரூ.30-க்கும், ரூ.15-க்கு விற்ற கோவக்காய் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இன்றைய காய்கறிகளின் மொத்த விற்பனை விலை விபரம் வருமாறு:-

    தக்காளிரூ.65, நாசிக் வெங்காயம் ரூ.38, ஆந்திரா வெங்காயம் ரூ.22, சின்ன வெங்காயம் ரூ.50, ஆக்ரா உருளைக்கிழங்கு ரூ.25, கோலார் உருளைக் கிழங்கு ரூ.30, உஜாலா கத்தரிக்காய் ரூ.25, வரி கத்தரிக்காய் ரூ.20, வெண்டைக்காய் ரூ.25, அவரைக்காய் ரூ.40, பீன்ஸ் ரூ.40, ஊட்டி கேரட் ரூ.60, ஊட்டி பீட்ரூட் ரூ.40, கோவக்காய் ரூ.40, பன்னீர் பாகற்காய் ரூ.30, புடலங்காய் ரூ.10, வெள்ளரிக்காய் ரூ.8, மலபார் வெள்ளரிக்காய் ரூ.10, முருங்கைக்காய் ரூ.70, முட்டை கோஸ் ரூ.12, முள்ளங்கி ரூ.30, சவ்சவ் ரூ.10, பட்டை கொத்தவரங்காய் ரூ.20, பீர்கங்காய் ரூ.40, காலி பிளவர் ஒன்று ரூ.20, குடை மிளகாய் ரூ.100, பஜ்ஜி மிளகாய் ரூ.40, இஞ்சி ரூ.45 பச்சை மிளகாய் ரூ.20.
    கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து விட்டது. இதனால் தக்காளி விலையும் அதிகரித்து உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டுக்கு தாளவாடி மற்றும் கிருஷ்ணகிரி, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    கடந்த வாரம் 14 கிலோ கொண்ட சிறிய தக்காளி பெட்டி ரூ.600-க்கு விற்பனையானது. 25 கிலோ கொண்ட பெரிய பெட்டி ரூ.850-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் சில்லரை விலையில் தக்காளி கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனையானது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஈரோடு காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து விட்டது. இதனால் தக்காளி விலையும் அதிகரித்து உள்ளது.

    இன்று 14 கிலோ கொண்ட சிறிய தக்காளி பெட்டி ரூ.850 முதல் ரூ. 900 வரை விற்பனையானது. மேலும் 25 கிலோ கொண்ட பெரிய பெட்டி ரூ.1500 முதல் ரூ.1600 வரை விற்பனையானது. இதனால் சில்லரை வியாபாரத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ. 80-க்கு விற்பனையானது.

    காய்கறி மொத்த மார்க்கெட்டிலேயே தக்காளி சில்லரை விலையில் ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுவதால் மற்ற இடங்களில் மேலும் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
    சேலம் மார்க்கெட்களில் கடந்த வாரம் 40 ரூபாய்க்கு விற்ற தக்காளியின் விலை கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து தற்போது 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் ஓமலூர், மேச்சேரி, காடையாம்பட்டி பகுதிகளில் அதிக அளவில் தக்காளி பயிரிடப்படுகிறது. இந்த தக்காளி சேலம் மார்க்கெட்களுக்கு அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

    சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தாலும் ஓமலூர், மேச்சேரி பகுதிகளில் குறிப்பிடும் அளவுக்கு இதுவரை மழை பெய்யவில்லை. இதனால் அந்த பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி செடிகள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. இதனால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் சேலம் மார்க்கெட்களுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.

    கடந்த வாரம் சேலம் மார்க்கெட்களில் 40 ரூபாய்க்கு விற்ற தக்காளியின் விலை கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து தற்போது 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. விலையை கேட்டு அதிர்ச்சி அடையும் பொது மக்கள் தக்காளியை குறைந்த அளவே வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது.

    இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து சேலத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக வாய்ப்புள்ளது என்றார்.
    பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிக அளவில் காய்கறிகள் வருகிறது. இதில் சிறுகிழங்கு, தக்காளி, முருங்கைக்காய், மாங்காய் விலை சற்று அதிகமாக உள்ளது. #Pongal #KoyambeduMarket
    சென்னை:

    பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிக அளவில் காய்கறிகள் வருகிறது.

    ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தினமும் 400 லாரிகளில் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது.

    வழக்கமாக கிடைக்கும் கத்தரிக்காய், தக்காளி, முட்டை கோஸ், உருளைக்கிழங்கு வகைகளுடன் பொங்கல் பண்டிகைக்காக கிடைக்கும் சிறுகிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, காரகருணை, பிடிகருணை என பல்வேறு வகை கிழங்குகள், மஞ்சள் குலைகள், வாழைத்தார்கள், கரும்புகள் லாரி லாரியாக மார்க்கெட்டுக்கு வந்துள்ளது.

    இதில் சிறுகிழங்கு, தக்காளி, முருங்கைக்காய், மாங்காய் விலை சற்று அதிகமாக உள்ளது.

    கோயம்பேட்டில் ஒரு கிலோ சிறுகிழங்கு ரூ.50-க்கு விற்கப்படுகிறது. சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டில் ரு.55-க்கும் அயனாவரம் கடைகளில் ரூ.80-க்கும் சிறுகிழங்கு விற்கப்படுகிறது.

    உருளைக்கிழங்கு கோயம்பேட்டில் ரூ.25-க்கு கிடைக்கிறது. சிந்தாதிரிப்பேட்டை, அயனாவரத்தில் ரூ.35-க்கும் விற்கப்படுகிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கு ரூ.30-க்கும், கத்தரிக்காய்- தக்காளி கிலோ ரூ.50-க்கும், மாங்காய் ரூ.130-க்கும், பிடிகருணை- கார கருணை ரூ.60-க்கும் விற்கப்படுகிறது. ஒரு கரும்பு ரூ.40-க்கு கிடைக்கிறது.

    பொங்கல் வரை காய்கறி விலை அதிகமாக இருக்கும் என்றும் அதன்பிறகு விலை குறைந்துவிடும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். #Pongal #KoyambeduMarket
    நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்பட்ட தக்காளி, வெள்ளம் காரணமாக கேரளாவுக்கு அதிகளவு கொண்டு செல்லாததால் கிலோ ஒன்றுக்கு ரூ. 1 முதல் 2 வரை விற்பனையானது.
    பாவூர்சத்திரம்:

    நெல்லை மாவட்டத்தில் கீழப்பாவூர், குறும்பலாப்பேரி, பெத்தநாடார்பட்டி, வெய்க்காலிப்பட்டி, கல்லூரணி, மகிழ்வண்ணநாதபுரம், சுந்தர பாண்டியபுரம், சுரண்டை, மேலப்பாவூர், வெள்ளகால், ராஜபாண்டி, கருமடையூர், மூலக்கரையூர், சாலைப்புதூர், அருணாப் பேரி, ஆவுடையானூர், அரியப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பல்லாரி, மிளகாய், தக்காளி, வெண்டை, சோளம் மற்றும் பல்வேறு வகை காய்கறிகள் பயிரிட்டுள்ளன.

    தக்காளி மட்டும் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் தக்காளிகள் பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விவசாயிகள் விற்கின்றனர். அப்படி விற்கப்படும் தக்காளிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா மற்றும் ஆந்திரா மாநிலத்திற்கும் கொண்டு செல்லப்படுகிறது.

    நாற்றுப்பாவி 20 நாட்கள் கழித்து வயல்களில் நடவு நட்டு 60 நாட்கள் கழித்து தக்காளிகள் ஓரளவு விளைச்சல் இருக்கும். ஆனால் தற்போது தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீசுவதாலும், ஒவ்வொரு நாள் வெயில் மற்றும் சீதோஷ்ண நிலை மாறி வருவதால் கீழப்பாவூர் ஒன்றிய பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி செடியில் இலை கருகல் மற்றும் மொட்டை நோய் ஏற்பட்டு செடிகள் பட்டுப்போய் காணப்பட்டது.

    நோயை கட்டுப்படுத்த விவசாயிகள் பல மருந்துகள் தெளித்து கஷ்டப்பட்டு தக்காளியை விளைவித்தனர். இதனால் தக்காளி மகசூல் தற்போது மிகவும் அதிகளவில் காணப்படுகிறது. ஆனால் மகசூலுக்கு தகுந்தாற்போல் மார்க்கெட்டில் விலை ஒரே நிலையில் இல்லாமல் விற்கப்படுகிறது.

    தற்போது தக்காளி வரத்து அதிகமாக உள்ளது. வழக்கமாக கேரளாவுக்கு அதிகமாக காய்கறிகள் கொண்டு செல்லப்படும். ஆனால் மழை வெள்ளம் காரணமாக கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் அங்கு வாகனங்கள் செல்ல முடியவில்லை. மேலும் அங்கு இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்படவில்லை.

    இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு மிக குறைவான அளவிலேயே காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அதில் தக்காளியும் அடங்கும். பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்பட்ட தக்காளிகள் கேரளாவிற்கு அனுப்பபடாததால் அவை நெல்லை மார்க்கெட்டுகளில் தேக்கமடைந்துள்ளன. கடந்த வாரம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.10 முதல் 15-க்கும் அதிகமாக விற்பனையானது. இந்த விலை விவசாயிகளுக்கு நஷ்டம் இல்லாமல் இருந்தது. நேற்று முன்தினம் 20 கிலோ கொண்ட ஒரு டப்பா தக்காளி ரூ. 30 முதல் ரூ. 40-க்கு விற்பனையானது.

    இந்த விலை இறக்கத்தால் கீழப்பாவூர் வட்டார விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டனர். இதனால் தக்காளிகள் கனிந்து நிலங்களில் விழுந்து அழுகி பாழாகி போகிறது. இதைத் தொடர்ந்து நேற்று தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ. 1 முதல் 2 வரை விற்கப்பட்டது.

    கடந்த வருடம் நாற்று பாவி, நடுவை நட, களை எடுக்க, மருந்து தெளிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவானது. ஆனால் இந்த வருடம் தக்காளி பயிரிடப்பட்ட வயல்களில் இலை கருகல் நோயை கட்டுப்படுத்த பல மருந்துகள் தெளித்ததால் இந்த வருடம் ஒரு ஏக்கருக்கு ரூ.60 ஆயிரத்திற்கு மேல் செலவாகி விட்டது. இவ்வளவு பணம் செலவழித்தும் மார்க்கெட்டில் தக்காளிக்கு விலை இல்லாத காரணத்தினால் செலவழித்த தொகையை எடுக்க முடியுமா என அச்சத்தில் உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தக்காளி உடலில் உள்ள நோய்க்கிருமிகளை முற்றிலும் அடித்து விரட்டுகிறது. அதனால் தான் உலகம் முழுவதும் விரும்பிப் பருகப்படும் பானங்களுள் தக்காளிச் சாறும் ஒன்றாய் இருக்கிறது.

    பழுத்த தக்காளி பழத்தில் நோய்த்தடுப்பு வைட்டமின் ‘சி’ அதிகமாய் இருக்கிறது. சிறுநீர் எரிச்சல், மேக நோய், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு, குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் முதலிய நோய் உள்ளவர்கள் 5, 6 பழங்களைச் சிறிது தண்ணீர் விட்டு சாறாக்கி அருந்தினால் நோய் குணமாகும். நாக்கு வறட்சியும் அகலும்; உடலும் மினுமினுப்பாய் மாறும். உடல் பருமன் குறையும்!

    பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘ஏ’ முதலியவை அதிக அளவில் உள்ளன. இதனால் உடலுக்குச் சத்துணவும் கிடைப்பதுடன்100 கிராம் தக்காளிப் பழத்தில் கிடைக்கும். கலோரி 20 என்பதால் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் பருமன் அதிகரிக்காது.

    உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்கள் தொடர்ந்து ஓரிரு மாதங்கள் காலைப் பலகாரமாய் பழுத்த இரு தக்காளிப் பழங்களைச் சாப்பிட்டால் கொழுத்த சரீரம் கட்டுப்படும். எடை கூடாது. காரணம், அதில் மாவுச்சத்து குறைவாய் இருப்பதுதான். அத்துடன் உடலுக்கு மேற்கண்ட தாது உப்புகளும், வைட்டமின்களும் கிடைத்துவிடுகின்றன.

    தக்காளி உடலில் உள்ள நோய்க்கிருமிகளை முற்றிலும் அடித்து விரட்டுகிறது. அதனால்தான் உலகம் முழுவதும் விரும்பிப் பருகப்படும் பானங்களுள் தக்காளிச் சாறும் ஒன்றாய் இருக்கிறது.

    தக்காளிச்சாறு நீரிழிவுக்காரர்களின் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுபடுத்துகிறது. இரவு நேரத்தில் பார்வை சரியாகத் தெரியாதவர்கள் தக்காளிச்சாறு சாப்பிடவேண்டும். அப்போதுதான் பறித்த தக்காளிச் செடியின் இலைகளை 15 நிமிடங்கள் சுடுதண்ணீரில் வைக்கவும். பிறகு, வடிகட்டி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மட்டும் சாப்பிடவும்.செடியின் தண்டை அரைத்து, அதில் வினிகரையும் கலந்து மார்புகளின்மீது வைத்துக் கட்ட வேண்டும். இதனால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

    காலையில் எழுந்ததும் ஏற்படும் காய்ச்சல், பித்த வாந்தி, கல்லீரல் ஆகியன தொடர்பாக ஏற்படும் மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், உணவு செரியாமை, வாயுத்தொந்தரவு, நெஞ்செரிச்சல் முதலியவை குணமாக ஒரு டம்ளர் தக்காளிச்சாறு போதும். காலையில் வெறும் வயிற்றில் தலா ஒரு சிட்டிகை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இந்தச் சாற்றை அருந்த வேண்டும்.காச நோய், நுரையீரல் நோய், ஆஸ்துமா போன்ற மூச்சுக் குழல் நோய்களும் இச்சாறால் குணமாகின்றன.

    பூண்டு, இஞ்சி, சீரகம், மிளகு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நல்லெண்ணெயில் தக்காளி சூப்பாகவும் அருந்தலாம். இந்த முறையும் உடலுக்கு நல்லதே. நோயின் போது ஏற்படும் நாக்கு வறட்சிக்கு இப்படித் தக்காளி சூப் மிகவும் நல்லது. தக்காளியில் உள்ள இரும்புச்சத்து எளிதில் ஜீரணமாகிறது. அத்துடன் முழுமையாக உடலில் கலந்துவிடுகிறது. இதனால் இரத்த சோகை நோயாளிகள் விரைந்து குணமாகிறார்கள். இவர்கள் தக்காளிச்சாறு இரண்டு அல்லது மூன்று தினமும் அருந்த வேண்டம்.
    ×