search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94484"

    • துப்புரவு பணியாளர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை சம்பளம் கொடுக்கப்படவில்லை.
    • போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் தங்களுக்கு சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 200-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தினந்தோறும் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணிகளை பார்த்து வந்தனர்.

    அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் கடந்த மாதம் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த துப்புரவு பணியாளர்களுக்கு, கடந்த ஏப்ரல் மாதத்தில் 23 நாட்கள் சம்பள பணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் துப்புரவு பணியாளர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை சம்பளம் கொடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனை கண்டித்தும் சம்பள பணத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணிகளில் ஈடுபடாமல் ஓசூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் தங்களுக்கு சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். நீண்ட நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    • ஓய்வூதியர்கள் அனைவருக்கும் குறைந்த பட்சம் பஞ்சப்படியுடன் ரூபாய் 9 ஆயிரம் வழங்க வேண்டும்.
    • இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.

    ஓசூர்,

    சென்னை ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் ஓசூர் கிளை சார்பில் இபிஎப் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு தபால் கார்டு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. ஓசூர் எம்.ஜி ரோட்டில் உள்ள தபால் நிலையத்தின் முன்பு சங்க தலைவர் பன்னீர்செல்வம் தலைமையிலும் செயலாளர் சுகுமாரன் முன்னிலையிலும் நடைப்பெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், இபிஎப் பென்ஷன் பெறும் ஓய்வூதியர்கள் அனைவருக்கும் குறைந்த பட்சம் பஞ்சப்படியுடன் ரூபாய் 9 ஆயிரம் வழங்க வேண்டும். அதுவரை இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் இபிஎப் பென்ஷன் பெறும் ஓய்வூதியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இஎஸ்ஐ திட்டத்தை செயல் படுத்த வேண்டும்.

    மூத்த குடிமக்களுக்கு 40 சதவீத ரயில் கட்டண திரும்ப சலுகையை வழங்க வேண்டும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி முழு ஊதியத்திற்கான ஒய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு தபால்கார்டு அனுப்பப்பட்டது.

    .இந்த ஆர்பாட்டாத்தில் தனியார் நிறுவனங்களின் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • நகராட்சி நிர்வாகம் எங்களிடம் ஒரு பத்திரதாளில் கையெழுத்து கேட்டு வருகிறது.
    • அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாது.

    குனியமுத்தூர்,

    மதுக்கரை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கும் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 2-வது நாளாக தொடருகிறது.

    இது குறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், நகராட்சி சார்பில் வேலை பார்த்து வந்த எங்களை திருப்பூர் தனியார் நிறுவனத்தின்கீழ் ஒப்படைத்து விட்டனர்.

    இந்த நிலையில் மதுக்கரை நகராட்சி நிர்வாகம் எங்களிடம் ஒரு பத்திரதாளில் கையெழுத்து கேட்டு வற்புறுத்தி வருகிறது.

    அந்தப் பத்திரத்தில் பணியாளர்கள் ஒன்றுசேர்ந்து சங்கம் அமைக்க கூடாது. முன்னறிவிப்பு இன்றி விடுமுறை எடுக்கக் கூடாது. இ. எஸ்.ஐ, பி.எப் காப்பீடு வழங்கப்படாது, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடாது. வேலை பார்க்கும்போது கையாளும் உபகரணங்களில் ஏதாவது பழுது ஏற்பட்டால் அதற்கு நாங்களே பொறுப்பு. பணியின் போதுவாடிக்கை யாளர்கள் புகார் செய்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்பவை உள்பட 22 நிபந்தனைகள் இடம்பெற்று உள்ளன. எனவே நாங்கள் அந்த பத்திரத்தில் கையெழுத்து போட மறுத்து வருகிறோம். இதுகுறித்து மதுக்கரை நகராட்சி நிர்வாகம், மற்றும் தலைவர் ஆகியோர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது
    • அடிப்படை வசதிகள் கேட்டு போராட்டம் நடைபெற்றது

    கரூர்,

    கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 10-வது வார்டில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் அருகே நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஆழ்துளை கிணறு மற்றும் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ள இடம் தனி நபருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.தற்போது அவர் ஆழ்துளை கிணறு தன்னுடைய இடத்தில் உள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் இங்கு தண்ணீர் பிடிக்க வரக்கூடாது என்று கூறுகிறார். இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த கங்கைகொண்ட சோழபுரம் 10-வது வார்டு பகுதி மக்களும், மகாத்மா காந்தி நகர் பகுதி மக்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் தேவி நாகராஜன் தலைமையில் கங்கைகொண்ட சோழபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலை அருகே ஒன்றிய செயலாளர் பலவேசம் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ பொன்னுபாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

    விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நகராட்சிகள், பேரூராட்சிகள் ஊராட்சிகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் திட்டத்தை முறையாக செயல்படுத்தாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதே போல் பொது சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, அனைத்து பகுதிகளிலும் ஆண்கள் பெண்களுக்கு தனி தனியாக சுகாதார வளாகங்கள் அமைத்து, கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

    • கந்தர்வகோட்டையில் பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது
    • கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் முழுவதும் அரசு புறம்போக்கு இடங்களில் பல ஆண்டு காலமாக வீடு கட்டி குடியிருந்து வரும் அனைவருக்கும் பட்டா வழங்க கோரியும். ஒரே வீட்டுக்குள் கூட்டு குடும்பமாக குடியிருந்து வரும் அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்க கோரியும், அரசு புறம்போக்கு நிலங்களில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு நில பட்டா வழங்க கோரியும் 'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டாட்சியரிடம் பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் எம்.எல்.ஏ. சின்னத்துரை தலைமையில் நடைபெற்றது.

    முன்னதாக கந்தர்வகோட்டை வெள்ளை முனியன் கோவில் திடலில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துறை தலைமையில் ஊர்வலமாக வந்து வட்டாட்சியர் காமராஜிடம் பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ரத்தினவேல், பன்னீர்செல்வம், மாவட்ட குழு உறுப்பினர்கள் ராமையன், சங்கர், மாதர் சங்க தலைவர் சாந்தி கார்த்திகேயன் ,இளையராஜா மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



    • பென்சனை உயர்த்தவேண்டும் என கூறி இ.பி.எப் பென்சன்தாரர்கள் நலசங்கம் சார்பாக கூட்டம் நடைபெற்றது.
    • ஜி.என்.மில்ஸ் தபால் நிலையம் அருகே 100க்கும் அதிகமானோர் தபால் அனுப்பினர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் பஞ்சாலை மற்றும் என்ஜினியரிங் கம்பெனிகளில் வேலை பார்த்து சுமார் 3 லட்சத்திற்கு மேற்பட்ட பென்சன்தார்கள்கள் உள்ளனர். அவர்கள் இதுவரை ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக பென்சன் பெற்று வருகின்றனர்.

    இதனை உயர்த்தவேண்டும் என கூறி இ.பி.எப் பென்சன்தாரர்கள் நலசங்கம் சார்பாக சென்னையில் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரலில் மணியோசை எழுப்பும் போராட்டம் நடந்தது.

    தொடர்ந்து மேலும் தமிழகம் முழுவதும் கடந்த 25-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை பிரதமருக்கு தபால்கார்டு அனுப்பும் போராட்டம் நடந்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக இன்று கோவை ஜி.என்.மில்ஸ் தபால் நிலையம் அருகே 100க்கும் அதிகமான இ.பி.எப் பென்சன்தாரர்கள் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். அனைவரையும் உறுப்பினர் தேவேந்திரன் வரவேற்றார். சங்க உறுப்பினர் மவுனசாமி சிறப்புரை–யாற்றினார்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பென்சனை உயர்த்துவதுடன் குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும். இடைகாலமாக மாதம் ரூ.3 ஆயிரம் பஞ்சப்படியுடன் வழங்கவேண்டும். இ.பி.எப் பென்சன்தாரர்களுக்கு இ.எஸ்.ஐ திட்டத்தை அமுல்படுத்தவேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தகுதியுள்ள அனைவருக்கும், உயர் பென்சன் வழங்க வேண்டும்.

    மூத்த குடிமக்களுக்கு பறிக்கப்பட்ட ரயில் கட்டண சலுகையை மீண்டும் அமுல்படுத்தவேண்டும் என கோசங்களை எழுப்பினர். தொடர்ந்து தபால் பெட்டியில் தபால்கார்டுகளை போட்டு அனுப்பினர்.

    • புதுக்கோட்டையில் தனியார் பஸ் சிறைபிடிக்கப்பட்டது
    • புது பேருந்து நிலையத்திற்குள் வராததால் பொதுமக்கள் ஆத்திரம்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டையில் இருந்து விராலிமலை வழியாக மணப்பாறைக்கு தினசரி அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கி வருகின்றன. அவ்வாறு செல்லும் பஸ்கள் அனைத்தும் விராலிமலை புதிய பஸ் நிலையத்திற்கு சென்று விட்டு அதன் பிறகு மணப்பாறைக்கு செல்லும். ஆனால் ஒரு சில பஸ்களை தவிர மற்ற பஸ்கள் அனைத்தும் புதிய பஸ் நிலையத்திற்குள் செல்லாமல் விராலிமலை சோதனைச்சாவடி வழியாகவே சென்று விடுகின்றன. இதனால் அவ்வப்போது பயணிகளுக்கும், பஸ் டிரைவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை வழியாக மணப்பாறைக்கு வந்த ஒரு தனியார் பஸ்சில் புதுக்கோட்டையிலிருந்து விராலிமலைக்கு பயணித்த பயணிகளில் ஒருவர் புதிய பஸ் நிலையத்திற்கு கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். ஆனால் அந்த பயணியிடம் கண்டக்டர் புதிய பஸ் நிலையம் செல்லாது, வேண்டுமென்றால் விராலிமலை சோதனைச்சாவடி நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பஸ்சானது விராலிமலை சோதனைச்சாவடி நிறுத்தத்தை வந்தடைந்தது. இதனையடுத்து அங்கு இறங்கிய அவர், டிரைவரிடம் சென்று ஏன் புதிய பஸ் நிலையத்திற்கு செல்லாது என வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது டிரைவர் சரிவர பதில் கூறாமல் பஸ்சை இயக்கியதை கண்ட சக பயணிகள் மற்றும் அங்கிருந்தவர்கள் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பஸ்சை சிறைபிடித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் நிலைமையை புரிந்து கொண்ட டிரைவர் மற்றும் கண்டக்டர் இனிமேல் புதிய பஸ் நிலையம் சென்று விட்டு அதன் பிறகு மணப்பாறைக்கு செல்கிறோம் என கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் அந்த தனியார் பஸ் புதிய பஸ் நிலையம் சென்று விட்டு மணப்பாறைக்கு சென்றது.

    • திருப்பூா் மாவட்ட நிா்வாகம் 2021 அக்டோபா் மாதம் இப்பணிக்கான ஆணை வழங்கி நிதி ஒதுக்கீடும் செய்தது.
    • சாலைப் பகுதியை அகலப்படுத்தி தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

    அவினாசி :

    அவிநாசி அருகே உமையஞ்செட்டிபாளையம் பகுதியில் தாா் சாலை அமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.இது குறித்து அக்கட்சியினா் அவிநாசி ஒன்றிய அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட மங்கலம் சாலை பிரிவு உமையஞ்செட்டிபாளையம் எல்லை வரை உள்ள சாலையை புதுப்பிக்க வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் 2021 அக்டோபா் மாதம் இப்பணிக்கான ஆணை வழங்கி நிதி ஒதுக்கீடும் செய்தது.

    ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணி நடைபெறாமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். ஆகவே, உடனடியாக சாலைப் பணிகளை தொடங்க வேண்டும். மேலும் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகி உள்ள பாலத்தின் வலதுபுற சாலைப் பகுதியை அகலப்படுத்தி தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.மனுவை பெற்றுக் கொண்ட ஒன்றிய நிா்வாகத்தினா் 10 நாள்களில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா். ஒரு வார காலத்துக்குள் பணிகள் தொடராவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தெரிவித்தனா். இதில் கட்சி நிா்வாகிகள் ஈஸ்வரமூா்த்தி, ராஜன், வெங்கடாசலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்

    • மணப்பாறையில் வாலிபரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மறியல் போராட்டம்
    • மணப்பாறை அரசு மருத்துவமனை முன்பு போராட்டம்

    மணப்பாறை,

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு அங்கு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை ஆயிரக்கணக்கானோர் வேடிக்கை பார்த்தனர். அப்போது ஆனையூரை சேர்ந்த யோகேஷ்வரன் (வயது 22) என்ற வாலிபர் ஒலி பெருக்கி அருகே நின்று ரசித்துக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு சென்ற 2 போலீசார் யோகேஷ்வரனை திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வாலிபருக்கு முகத்தில் காயம் ஏற்படவே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வாலிபரின் உறவினர்கள் உள்ளிட்டோர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் திரண்டனர்.மேலும் வாலிபரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மருத்துவமனை முன்பு மணப்பாறை - விராலிமலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மணப்பாறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    • அரியலூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்

    அரியலூர்,

    அரியலூர் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 25 பேரை மே 27ம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து, நகராட்சி அலுவலகம் முன்பு நிரந்தரம் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர் தரப்பு மற்றும் ஏஐடியுசி தொழிலாளர் சங்க மாவட்டப் பொதுச் செயலர் டி.தண்டபாணி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 25 பேர் பணியில் சேர்ப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.

    • சக பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியதால் போராட்டம்.
    • திடீர் போராட்டத்தால் மருத்துவமனை வளாகத்தில பதற்றமான சூழல் உருவாகியது.

    சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    சக பயிற்சி மருத்துவர் மீது தாக்கப்பட்டதை தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

    மருத்துவர்களின் இந்த திடீர் போராட்டத்தால் மருத்துவமனை வளாகத்தில பதற்றமான சூழல் உருவாகியது.

    ×