search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94666"

    • பா.ஜ.க.வுடன் இணைந்து தேர்தலை சந்திக்க தே.மு.தி.க. தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டு விட்டதாம். ஆனால் டாக்டர் ராமதாஸ் தயங்குகிறாராம்.
    • தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாராம். ஆனால் தி.மு.க. தரப்பில் இருந்து பா.ம.க.வுக்கு இதுவரை எந்த உறுதிமொழியும் கொடுக்கப்படவில்லை.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மெகா கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. பா.ம.க., தே.மு.தி.மு.க., த.மா.கா. மற்றும் சில கட்சிகளை இழுக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

    பா.ஜ.க.வுடன் இணைந்து தேர்தலை சந்திக்க தே.மு.தி.க. தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டு விட்டதாம். ஆனால் டாக்டர் ராமதாஸ் தயங்குகிறாராம். தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாராம். ஆனால் தி.மு.க. தரப்பில் இருந்து பா.ம.க.வுக்கு இதுவரை எந்த உறுதிமொழியும் கொடுக்கப்படவில்லை.

    இதனால் டாக்டர் அய்யா முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

    தமிழக வனத்துறை அதிகாரிகளை தொடர்வண்டி பாதுகாப்புப் படையினர் சிறை பிடித்து அவமதித்ததை தமிழக அரசு விட்டுவிடக்கூடாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நவக்கரை பகுதியில் தொடர்வண்டி பாதையை கடக்க முயன்ற யானைகள் கூட்டத்தின் மீது வெள்ளிக்கிழமை இரவு கர்நாடகத்தின் மங்களூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த விரைவு தொடர்வண்டி மோதியதில் ஒரு தாய் யானை மற்றும் இரு குட்டிகள் என மொத்தம் 3 யானைகள் உயிரிழந்தன.

    அதிக வேகத்தில் தொடர்வண்டி வந்தது தான் விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தொடர்வண்டி ஓட்டுனர்கள் இருவரை கைது செய்த தமிழ்நாடு வனத்துறையினர், தொடர்வண்டி எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த வேகம் காட்டும் சிப்’பை பறிமுதல் செய்தனர். அதில் பதிவாகியிருந்த விபரங்களை அறிவதற்காக அவர்கள் பாலக்காடு தொடர்வண்டி நிலையத்திற்கு சென்றனர். ஆனால், அவர்களின் விசாரணைக்கு ஒத்துழைக்காத ஆர்.பி.எப் அதிகாரிகள், வனத்துறையினர் நால்வரை சிறைபிடித்து காவலில் வைத்துள்ளனர்.

    வனத்துறை அதிகாரிகளை விடுதலை செய்யும்படி தமிழக வனத்துறை உயரதிகாரிகள் கோரியும் அதை தொடர்வண்டி பாதுகாப்புப் படையினர் ஏற்கவில்லை. யானைகள் மீது தொடர்வண்டியை மோதியதற்காக கைது செய்யப்பட்ட இரு ஓட்டுனர்களை தமிழக வனத்துறையினர் விடுதலை செய்ததுடன், பறிமுதல் செய்யப்பட்ட சிப்பை ஒப்படைத்த பிறகு தான் வனத்துறை அதிகாரிகள் குழுவை ஆர்.பி.எப் விடுவித்திருக்கிறது.

    இந்த மோதலை வனத்துறையினருக்கும், தொடர்வண்டி பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலாக பார்க்க முடியாது. கைது செய்யப்பட்ட ஓட்டுனர்களும், தொடர்வண்டி பாதுகாப்புப் படையினரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். வனத்துறை அதிகாரிகள் குழுவில் இருந்த நால்வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். கேரளத்தைச் சேர்ந்த தொடர்வண்டி ஓட்டுனர்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் எவ்வாறு கைது செய்யலாம்? என்ற தன்முனைப்பு தான் இந்த மோதலுக்குக் காரணமாகும்.

    கேரளத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தங்களின் தன்முனைப்புக்காக, விசாரணைக்காக சென்ற தமிழக வனத்துறை அதிகாரிகளை சிறைபிடித்து சட்ட விரோதக் காவலில் வைத்ததும், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் நியாயப்படுத்த முடியாதவை. இது தமிழக அரசின் தன்மானத்திற்கு விடுக்கப்பட்ட சவால் ஆகும்.

    தொடர்வண்டி பாதுகாப்புப் படையினரின் அத்துமீறலுக்கு பணிந்து தொடர்வண்டியின் ஓட்டுனர்கள் இருவரை வனத்துறை அதிகாரிகள் விடுவித்தது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் ஆகும். தமிழக வனத்துறை அதிகாரிகளை தொடர்வண்டி பாதுகாப்புப் படையினர் சிறை பிடித்து அவமதித்ததை தமிழக அரசு விட்டுவிடக்கூடாது.

    இதற்குக் காரணமான தொடர்வண்டி பாதுகாப்புப் படை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். தொடர்வண்டித்துறை நிர்வாகத்திடம் இது குறித்து புகார் செய்வது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதையும், பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் தலைமை நீதிபதியின் பேச்சு நம்பிக்கையளிக்கிறது என ராமதாஸ் கூறியுள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவிலுள்ள உயர்நீதி மன்றங்களில் உள்ளூர் மொழிகளின் பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் என்.வி.ரமணா கேட்டுக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் தலைமை நீதிபதியின் பேச்சு நம்பிக்கையளிக்கிறது.

    நீதி தேடும் ஏழை எளிய மக்களின் புகலிடமாக உயர்நீதிமன்றங்களை மாற்ற என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நீதித்துறையில் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் வலியுறுத்தி வந்தார்களோ, அவை அனைத்தையும் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி முன் மொழிந்திருக்கிறார்.

    அவற்றில் முதன்மையானது உயர் நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகள் அதிகம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். இது சென்னை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற உதவும்.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளாலும் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் வலியுறுத்தல் காரணமாக, தமிழை சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை அப்போதைய முதல்-அமைச்சர் கலைஞர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால், 15 ஆண்டுகள் ஆகியும் அந்தத் தீர்மானம் அனுப்பப்பட்ட நிலையிலேயே முடங்கிக் கிடக்கிறது. உயர்நீதிமன்றத்தில் தமிழுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.

    சட்டப்பேரவையின் தீர்மானத்திற்கு மத்திய அரசுகளிடமிருந்து கடந்த 15 ஆண்டுகளாக பதில் இல்லை.

    மத்திய அரசு

    எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி அவரின் பரிந்துரையை பெற்று குடியரசுத் தலைவர் மூலம் அறிவிக்கை வெளியிடச் செய்யுமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தேவைப்பட்டால் பேரவையில் புதிய தீர்மானத்தை இயற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்...தமிழகத்தில் பயங்கர பிரளயம் ஏற்படும்- பெண் சாமியார் பேட்டி

    ஈழத்தமிழர் உரிமைப் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை சாதகமானதாக மாற்றுவதே தமிழக மக்கள் முன்பாக உள்ள கடமை ஆகும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழீழ விடுதலைப் போரில் தமது இன்னுயிரை ஈந்த போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் மாவீரர் நாள் நவம்பர் 27-ல் நினைவு கூறப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் உயிர்த் தியாகம் செய்த முதல் போராளி லெப்டினன் சங்கர் வீரச்சாவடைந்த நாள் இதுவாகும்.

    மாவீரர் நாளில் உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் வீரத் தியாகிகளை நெஞ்சில் நிறுத்தி, மாவீரர் கனவை நனவாக்க உறுதியேற்கிறார்கள். தமிழீழம் என்கிற உயர்ந்த லட்சியத்துக்காக உலகிலுள்ள எல்லா தமிழர்களும் தத்தமது பங்கினை ஆற்ற உறுதியேற்கும் நாளாகவும் இந்த நாள் அமைகிறது.

    “இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்” என்று தமது கடைசி (2008) மாவீரர் நாள் உரையில் மாவீரன் பிரபாகரன் தெரிவித்தார்.

    ஈழத்தமிழர் உரிமைப் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை சாதகமானதாக மாற்றுவதே தமிழக மக்கள் முன்பாக உள்ள கடமை ஆகும். போராட்ட வடிவங்கள் மாறலாம். போராட்டக் களங்கள் மாறலாம்; ஆனால், தனித் தமிழீழம் மட்டும்தான் ஒரே தீர்வு. தமிழீழம் மலரும் நாள் விரைவில் அமைய பாடுபடுவோம்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

    இதையும் படியுங்கள்... சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடைமழையிலும் ஆவின் பால் தடையின்றி வினியோகம்

    34 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகும் வீரப்பனின் சகோதரரை விடுதலை செய்ய தமிழக அரசு முன் வராதது எந்த வகையிலும் நியாயமல்ல என ராமதாஸ் கூறியுள்ளார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதில்வில் கூறி இருப்பதாவது:-

    அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வாழ்நாள் தண்டனை கைதிகள் 700 பேரை தமிழக அரசு விடுதலை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், 34 ஆண்டுகளாக சிறையில் வாடும் வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் விடுதலை செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

    மாதையன் எந்த குற்றமும் இழைக்கவில்லை. அவர் பொய்வழக்கில் தான் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், 34 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகும் அவரை விடுதலை செய்ய தமிழக அரசு முன் வராதது எந்த வகையிலும் நியாயமல்ல!.

    மாதையன் - வீரப்பன்

    74 வயதான மாதையன் கடந்த பல ஆண்டுகளாகவே நோய்வாய்ப்பட்டிருக்கிறார். அவரது விடுதலையை பரிசீலிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு மாதையனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதையும் படியுங்கள்...நீலகிரி மாவட்ட புதிய கலெக்டராக எஸ்.பி.அம்ரித் பொறுப்பேற்றார்

    கொரோனா காலத்தில் நடமாடும் காய்கறி கடைகள் உருவாக்கப்பட்டதைப் போல இப்போதும் உருவாக்கி மலிவு விலையில் காய்கறி மற்றும் தக்காளியை விற்பனை செய்யலாம் என்று ராமதாஸ் கூறி உள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் ஒரு நாள் தக்காளித் தேவை 5 ஆயிரம் டன் ஆகும். சென்னையின் ஒரு நாள் தக்காளித் தேவை மட்டும் சுமார் 1000 டன் ஆகும். ஆனால், தமிழகத்தின் மொத்தத் தேவையில் ஐநூற்றில் ஒரு பங்கை மட்டும் தான் கூட்டுறவு கடைகள் மூலம் அரசு விற்கவுள்ளது. அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

    நியாயவிலைக் கடைகளைப் போலவே பண்ணை பசுமை கடைகளும் விலைக்கட்டுப்பாட்டுக்கான அற்புதமான தத்துவம் ஆகும். வெளிச்சந்தையில் பதுக்கல் காரணமாக விலைகள் உயரும்போது, பண்ணை பசுமைக் கடைகளில் மலிவு விலையில் காய்கறிகள் விற்கப்பட்டால், அதனால் வெளிச் சந்தையில் ஏற்படும் தாக்கத்தால், பதுக்கப்பட்ட பொருட்கள் வெளியில் கொண்டுவரப்படும். அதனால் விலைகள் குறையும் என்பது தான் அரசு நிறுவனங்கள் மலிவு விலையில் பொருட்களை விற்பதற்கான காரணம். சந்தையில் சமநிலையை ஏற்படுத்துவது தான் இந்தத் தத்துவத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

    தக்காளி

    ஆனால், இப்போது பதுக்கல் காரணமாக விலை அதிகரிக்கவில்லை. மாறாக, பெருமழையால் தக்காளி மற்றும் காய்கறிச் செடிகள் அழிந்ததால், தேவைக்கும் வரத்துக்கும் இடைவெளி அதிகரித்தது தான் விலை உயர்வுக்கு காரணம் ஆகும். இத்தகைய சூழலில் மிகக்குறைந்த அளவில் காய்கறிகளையும், தக்காளியையும் விற்பனை செய்வதால் விலையைக் கட்டுப்படுத்த முடியாது.

    தமிழ்நாட்டில் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா, மகாராஷ்டிரா வரை இதே நிலை தான் என்பதால் சந்தைச் சமநிலை மூலம் காய்கறிகள் - தக்காளியின் விலையை கட்டுப்படுத்த முடியாது என்பதை அரசு உணர வேண்டும்.

    மானிய விலையில் அரசே தக்காளி மற்றும் காய்கறிகளை விற்பதன் மூலம் மக்களின் சுமையை குறைப்பது தான் இன்றைய தேவை ஆகும். அதைக் கருத்தில் கொண்டு தமிழ் நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தக்காளி மற்றும் காய்கறிகளை மலிவு விலையில் விற்பனை செய்ய வேண்டும்.

    கொரோனா காலத்தில் நடமாடும் காய்கறி கடைகள் உருவாக்கப்பட்டதைப் போல இப்போதும் உருவாக்கி மலிவு விலையில் காய்கறி மற்றும் தக்காளியை விற்பனை செய்யலாம். இவற்றை அரசு நேரடியாக உழவர்களிடம் இருந்து கொள்முதல் செய்தால் அவர்களுக்கும் நல்ல விலை கிடைக்கும். இதற்காக விலைக்கட்டுப்பாட்டு நிதியம் ஒன்றை தமிழக அரசு நிரந்தரமாக ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கொசு மருந்து தெளித்தல், ப்ளீச்சிங் பவுடர் அடித்தல் உள்ளிட்ட நோய்த்தடுப்புப் பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற போர்க்கால வேகத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இறந்து கிடக்கும் விலங்குகளை பாதுகாப்பாக ஆழமாக பள்ளம் தோண்டி புதைக்க வேண்டும்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கொசு மருந்து தெளித்தல், ப்ளீச்சிங் பவுடர் அடித்தல் உள்ளிட்ட நோய்த்தடுப்புப் பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களையும் நடத்த வேண்டும். இவற்றின் மூலம் கடலூர் மாவட்ட மக்களை நோய்ப் பரவலில் இருந்து அரசு காப்பாற்ற வேண்டும்.

    கடலூர் மாவட்டத்தில் மட்டுமின்றி, விழுப்புரம், ஒருங்கிணைந்த வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, காவிரி பாசன மாவட்டங்கள், திருப்பூர், கன்னியாகுமரி, நெல்லை உட்பட தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்கள் மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.

    மழையால் சேதம் அடைந்த நெற்பயிர்களுக்கு மட்டும் தான் பற்றாக்குறையான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு குறைந்தது ரூ.5,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் தமிழக அரசிடமிருந்து பதில் எதுவுமில்லை.

    அண்டை மாநிலமான புதுச்சேரியில், தமிழகத்தை ஒப்பிடும் போது, மழை வெள்ள பாதிப்பு குறைவு தான். ஆனால், அந்த மாநிலத்தில் மஞ்சள் குடும்ப அட்டை, சிவப்பு குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு, அதாவது அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று புதுவை அரசு அறிவித்திருக்கிறது. அதேபோல், தமிழ்நாட்டிலும் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதையும் படியுங்கள்... தமிழகத்தில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

    வருகின்ற தேர்தலில் புதுச்சேரியில் பா.ம.க. தனித்து போட்டியிட வேண்டும். ஆதரவு அளிக்கும் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியை பிடிப்போம் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
    காலாப்பட்டு:

    புதுச்சேரி மாநில பா.ம.க. செயற்குழு கூட்டம் கோரிமேட்டில் உள்ள சங்கமித்ரா கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுச்சேரியின் பிராந்தியமான காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளுக்கு சென்று கட்சியை வளர்த்தேன். ஆனால் யார் யாரோ வளர்ந்து ஆளாகின்றனர். அவர்களை நான் குறை கூறவில்லை. தனியாக நின்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாதது வருத்தம் அளிக்கிறது.

    புதுச்சேரி சிறிய மாநிலம், ஆனால் ஏன் 4 அல்லது 5 தொகுதிகளில் நின்று வெற்றிபெறும் அளவிற்கு வேலை செய்யவில்லை. கடந்த கால புதுச்சேரி வரலாற்றை பார்க்கும் போது அவ்வளவு கஷ்டப்பட்டேன்.

    புதுச்சேரியை அப்படியே விட்டு விட்டீர்களே என தொலைபேசியில் சிலர் தொடர்பு கொண்டு கேட்பார்கள். கூட்டணியில் இருந்தாலும் கூட நலினமாக தி.மு.க.வை விமர்சனம் செய்வேன். அதற்கு கலைஞர் தைலாபுரத்தில் இருந்து தைலம் வருகிறது என பதில் சொல்வார்.

    பாமக

    அதேபோல் புதுச்சேரிக்கு அதிக அளவில் தைலம் அனுப்பினேன். அதனால் பயனில்லை. புதுச்சேரியில் என்னை கொலை செய்ய முயற்சி செய்தார்கள். ஆனால் பாதுகாவலர்களால் தப்பித்தேன்.

    நிர்வாகிகளை கேட்டுக்கொள்வதெல்லாம் பா.ம.க. புத்துயிர் பெற்று புதுவையில் 3, காரைக்காலில் 2 என 5 சட்டமன்ற உறுப்பினர்களை பெற வேண்டும். இதற்காக வீடு வீடாக சென்றும், சமூக ஊடகத்தின் மூலமாகவும் பிரசாரம் செய்ய வேண்டும். 10 நபர்களாக சென்று பிரசாரம் செய்யுங்கள். வருகின்ற தேர்தலில் புதுச்சேரியில் பா.ம.க. தனித்து போட்டியிட வேண்டும். ஆதரவு அளிக்கும் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியை பிடிப்போம்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

    கூட்டத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களை சேர்ந்த பா.ம.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


    கரூர் மாணவியின் தற்கொலைக்கு காரணமான குற்றவாளி மிருகம் யாராக இருந்தாலும் அவரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று ராமதாஸ் கூறி உள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கரூர் மாவட்டம் வெண்ணெய்மலையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்த மாணவி, தமக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் வேதனையளிக்கின்றன.

    மாணவியின் தற்கொலை கடிதத்தில் உள்ள ஒவ்வொரு வாசகமும் தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியை உலுக்குபவை ஆகும். ‘‘பாலியல் வன்கொடுமையால சாகுர கடைசி பொண்ணு நானாக தான் இருக்கனும். என்னை யார் இந்த முடிவு எடுக்க வெச்சான்னு நான் சொல்ல பயமா இருக்கு. இந்த பூமியில் வாழரதுக்கு ஆசைப்பட்டேன். ஆனா, இப்போ பாதியிலேயே போறேன்.

    பெரிதாகி நிறைய பேருக்கு உதவி பன்ன ஆசை. ஆனா முடியாதில்ல’’ என்ற அந்த மாணவியின் இறுதி வாசகங்களைப் படிக்கும்போது, அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எந்த அளவுக்கு மன உளைச்சலையும், அச்சத்தையும் அனுபவித்திருப்பார் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

    கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது நிகழ்வு ஆகும். கடந்த 12-ந்தேதி கோவை தனியார் பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இப்போது கரூர் மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

    அவரது தற்கொலைக்கு காரணமான குற்றவாளி மிருகம் யாராக இருந்தாலும் அவரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

    ஒரு மாணவியின் தற்கொலையால் ஏற்பட்ட துயரம் தீருவதற்கு முன்பே, அடுத்த மாணவியையும் தற்கொலைக்கு தூண்டுகிறார்கள் என்றால் அந்த பாவிகளுக்கு சட்டத்தின் மீதும், அதை செயல்படுத்தும் அமைப்புகள் மீதும் பயமில்லை என்று தான் பொருள். இது மாணவிகளின் பாதுகாப்புக்கு நல்லதல்ல.

    மற்றொருபுறம் பாலியல் சீண்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகும் மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தவறு. இது இத்தகைய குற்றங்களைத் தடுக்க உதவாது. மாறாக, பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் அதை செய்வதற்கான துணிச்சலையே தரும்.

    பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அம்பலப்படுத்தி, தண்டனை பெற்றுத் தருவதற்கான துணிச்சலை மாணவிகள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு அரசு துணை நிற்க வேண்டும்.

    இனிவரும் காலங்களில் பள்ளிகள், கல்லூரிகள், பணியிடங்கள் ஆகியவற்றில் பெண்களுக்கு பாலியல் தொல்லை வழங்கப்படுவதை தடுத்தல், பாலியல் கொடுமைகளுக்கு ஆளான பெண்களுக்கு, அதிலிருந்து மீண்டு வருவதற்கான உளவியல் ஆலோசனைகளை வழங்குதல், குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர சட்ட உதவிகளைப் பெறுதல் உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய விரிவான செயல்திட்டத்தை அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். இதற்காக வல்லுனர் குழுவை அரசு அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


    அடுத்த சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. ஆட்சி அமைக்க வேண்டும். அன்புமணிக்கு என்ன குறை உள்ளது. அவர் திறமையானவர் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
    திண்டிவனம்:

    திண்டிவனம், வானூர், செஞ்சி, மயிலம் ஆகிய தொகுதி பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டிவனத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு கூறியதாவது:-

    தேர்தலில் தனியாக நிற்க வேண்டாம், நம்மிடம் சக்தி இல்லை, சக்தி இழந்து கிடக்கிறோம், ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என நீங்கள் வற்புறுத்தினீர்கள். இதனால் மாறி, மாறி கட்சிகளுடன் கூட்டணி வைத்து 20 எம்.எல்.ஏ.க்கள், 25 எம்.எல்.ஏ.க்கள், 18 எம்.எல்.ஏ.க்கள், 6 எம்.பி.க்கள், 10 ஆண்டு காலம் 2 மத்திய அமைச்சர்கள் என பா.ம.க.வின் பலம் செல்வாக்கு உயர்ந்தது. அப்போது நீங்கள் சொன்னீர்கள் தனியாக நிற்க வேண்டாம் என நாங்கள் சொன்னது சரிதான் என்று.

    தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதிகளில் 5 தொகுதியில் தான் வெற்றி பெற்றுள்ளோம்.

    உள்ளூர் புரிதலுக்கு விட்டுக்கொடுப்பது என தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் வேலை செய்து நம்முடைய கட்சிக்காரர்களே பா.ம.க.வுக்கு குழி பறித்தனர். இதனால் 2 தொகுதிகளை இழந்தோம். அந்த தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தால் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்து இருக்கும். அந்த வியாதி உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்ந்தது. இது தொடராமல் தடுப்பதற்கு ஒரே வழி திண்ணை பிரசாரம், சோசியல் மீடியா (செல்போன்) மூலமாக பிரசாரம் செய்வது தான்.

    கட்சியில் ஒரு சில பகுதிகளில் வேட்பாளரை நிறுத்துவதற்கு கூட ஆள் இல்லை. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் பலம் இழந்து விடுவோம். நம்முடைய பகுதியை மட்டும் சொல்லவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள நிலையைத்தான் சொல்கிறேன்.

    ஏன் இந்த பின்னடைவு, பா.ம.க. தொண்டர்களின் வீரம், மானம் எங்கே போனது? பா.ம.க.வின் தொண்டனாக எப்போதும் இருப்பேன். உயிரே போனாலும் காசு வாங்க மாட்டேன் என்று இருப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

    அன்புமணி ராமதாஸ்

    அடுத்த சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. ஆட்சி அமைக்க வேண்டும். அன்புமணிக்கு என்ன குறை உள்ளது. அவர் திறமையானவர். அவரது தலைமையில் பா.ம.க.வின் ஆட்சி அமைய வேண்டும்.

    ஊர் ஊராகச் சென்று திண்ணை பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். சோசியல் மீடியா கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டும்.

    நமது கட்சியை அனைவரும் ஆதரிக்க வேண்டும். எந்த கட்சிக்கும் சொந்தமில்லை, பந்தமில்லை. ஆனால் பா.ம.க.வுக்கு சொந்த பந்தம் உண்டு. அனைவரும் அன்புமணியின் தம்பிகள், தங்கைகள் என அவர் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். வருங்காலம் நமதாக இருக்க வேண்டும். தமிழகத்திற்கு விடிவுகாலமாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ரெயில்களை தனியார்மயமாக்கும் முயற்சி தோற்றதாகவே இருக்கட்டும் என்றும் மீண்டும் அந்த முயற்சியை மத்திய அரசு தொடங்கக் கூடாது என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தென்னக ரெயில்வே சார்பில் தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டிலிருந்தும் இயக்கப்படும் 13 எக்ஸ்பிரஸ் ரெயில்களை தனியார் மயமாக்கும் முயற்சிகள் வெற்றிபெறவில்லை. இதன் மூலம் ரெயில் சேவையை ஏழை மற்றும் நடுத்தர மக்களிடமிருந்து தட்டிப் பறிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது.

    அகில இந்திய அளவில் கூட தில்லியிலும், மும்பையிலும் சில ரெயில்களை மட்டும் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. தனியார்மயமாக்கப்படவிருந்த ரெயில்களில் 95 சதவீதத்துக்கும் கூடுதலானவற்றை ஏலம் எடுக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை.

    உண்மையில், ரெயில்களை தனியார் மயமாக்க நினைத்த மத்திய அரசுக்கு இது பெரும் ஏமாற்றமாக இருக்கலாம். ஆனால், நீண்ட தொலைவு பயணத்திற்கு ரெயில்களையே நம்பியிருக்கும் மக்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தி தான். ரெயில்கள் தனியார்மயமாகி விடக்கூடாது என்பது தான் பெரும்பான்மையினரின் விருப்பம்.

    ரெயில்களை தனியார் மயமாக்கும் முயற்சி தோல்வியடைந்திருந்தாலும் அது தற்காலிகமானது தான். ரெயில்கள் தனியார்மயமாக்கப்படும் வாய்ப்புகள் இன்னும் முழுமையாக விலகவில்லை என்பது தான் உண்மை. வருவாய் பகிர்வு நிபந்தனையை மத்திய அரசு தளர்த்தினாலோ, பெரும்பான்மை ரெயில்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முன்வந்தாலோ நிலைமை தலைகீழாக மாறிவிடும்.

    அதன்பின்னர் தனியார் நிறுவனங்கள் வைத்தது தான் சட்டம் என்பதால், ரெயில்வே துறை தனியார் பெரு நிறுவனங்களின் லாப வேட்டைக்காடாகிவிடும். அவற்றின் ஆதிக்கத்தை யாராலும் தடுக்க முடியாது.

    ரெயில்களை இயக்க தனியார் நிறுவனங்கள் முன்வராததைக் காரணம் காட்டி, வருவாய் பகிர்வு நிபந்தனையை ரத்து செய்யவும், அதிக எண்ணிக்கையிலான ரெயில்களை தனியார் மயமாக்கவும் மத்திய அரசு முன்வரக்கூடும். அது மக்களுக்கோ, மத்திய அரசுக்கோ நன்மையளிப்பதாக இருக்காது.

    மாறாக, தனியார் நிறுவனங்கள் இந்திய மக்களையும், ரெயில்வே துறையின் கட்டமைப்புகளையும் சுரண்டுவதற்கே வழிவகுக்கும். எனவே, ரெயில்களை தனியார்மயமாக்கும் முயற்சி தோற்றதாகவே இருக்கட்டும்; மீண்டும் அந்த முயற்சியை மத்திய அரசு தொடங்கக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    மிதிவண்டிகளில் பயணிப்பதால் நமக்கும் சமூகத்திற்கும் ஏராளமான பயன்கள் கிடைப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலக ஊழியர்கள் நேற்று மிதிவண்டியில் அல்லது பொதுப்போக்குவரத்து மூலம் அலுவலகம் வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை மதித்து வாரியத்தின் தலைவர் உதயன் நேற்று தமது இல்லத்திலிருந்து அலுவலகத்திற்கு மிதிவண்டியில் பயணம் செய்திருக்கிறார்.

    பெரும்பான்மையான ஊழியர்கள் மிதிவண்டிகள் மூலமாகவும், வெகுதொலைவிலிருந்து வரும் பணியாளர்கள் பொதுப்போக்குவரத்து மூலமும் அலுவலகம் சென்றுள்ளனர். இந்த சிறிய முயற்சி மூலம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் காற்று  மாசு 20 சதவீதம் குறைந்திருக்கிறது.

    மிதிவண்டிகளில் பயணிப்பதால் நமக்கும் சமூகத்திற்கும் ஏராளமான பயன்கள் கிடைக்கின்றன. இந்திய அளவில் செய்யப்பட்டுள்ள ஆய்வுகளின்படி இருசக்கர மற்றும் நான்கு சக்கர ஊர்திகளை பயன்படுத்துவோரில் 50 விழுக்காட்டினர் குறைந்த தூர பயணத்திற்கு மிதிவண்டிகளை பயன்படுத்தத் தொடங்கினால் ஆண்டுக்கு ரூ.2,700 கோடி எரிபொருள் செலவை மிச்சப்படுத்த முடியும்.

    அதுமட்டுமின்றி, இப்போது மகிழுந்துகள், இரு சக்கர ஊர்திகளை பயன்படுத்துவோர் 8 கி.மீ.க்கும் குறைவான தூரத்துக்கு பயணிக்க, ஆண்டுக்கு 240 நாட்கள் மிதிவண்டிகளை பயன்படுத்துவதால் 10 ஆண்டுகளில் கிடைக்கும் மருத்துவப் பயன்களின் மதிப்பு மட்டும் ரூ.4.76 லட்சம் கோடி (ஆண்டுக்கு ரூ.47,670 கோடி), காற்று மாசு தடுக்கப்படுவதால் கிடைக்கும் பயன்கள் ரூ.24,100 கோடி ஆகும்.

    மிதிவண்டிகள் ஏழைகளுக்கும் நன்மை தருகின்றன. ஏழை மக்கள் 3.5 கி.மீ தொலைவு வரை நடப்பதற்கு பதிலாக மிதிவண்டியில் பயணிப்பதால் மிச்சமாகும் உழைப்பு நேரத்தின் மதிப்பு ரூ.11,200 கோடி என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

    இந்த புள்ளிவிவரங்களின் படி பார்த்தால் மிதிவண்டி புரட்சி செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.85,670 கோடியை மிச்சப்படுத்த முடியும்.

    இவை அனைத்துக்கும் மேலாக நமது சந்ததிகள் இந்த பூமியில் வாழ்வதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் மிதிவண்டி அவசியம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ×