search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94689"

    • சிற்றாறு-1 அணை பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை
    • முக்கடல் அணை நீர்மட்டம் 9.50 அடியாக சரிந்துள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் ஒருபுறம் அடித்துக் கொண்டிருக்க அணை பகுதிகளிலும் மலையோர பகுதி களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்று காலையில் மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் பேச்சிபாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப்பகுதிகளில் பரவலாக மழை பெய் தது. சிற்றாறு-1 அணை பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 34.62 அடியாக உள்ளது.அணைக்கு 420 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.அணையில் இருந்து 223 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 33.75 அடியாக உள்ளது. அணைக்கு 111 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 8 அடியாகவும், சிற்றாறு-2 நீர்மட்டம் 8.10 அடியாகவும், பொய்கை நீர்மட்டம் 14.70 அடியாகவும், மாம்பழத்துறையாறு நீர்மட் டம் 2.30 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 9.50 அடியாக சரிந்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிபாறை 17.2, பெருஞ்சாணி 6.6,

    சிற்றாறு 1-20, சிற்றார்2-7.4, சுருளோடு 2.6, பாலமோர் 5.2, கன்னிமார் 2.2, முக்கடல் 6.3 புத்தன் அணை 6.

    • அதிகபட்சமாக திருச்சி ஜங்ஷனில் 33 மில்லி மீட்டர் மழை பதிவு
    • புறநகர் பகுதியில் ஆலங்கட்டி மழை

    திருச்சி மாநகரில் கடந்த சில தினங்களாக வெப்ப தாக்குதல் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பெய்த திடீர் மழையின் காரணமாக கடந்த சில நாள்களாக நிலவிய வெப்பம் தணிந்து இதமான சீதோஷ்ண நிலவியது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருநாள்களுக்கு லேசான மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது. இதில் திருச்சி மாவட்டம் இடம் பெறவில்லை. இருப்பினும் எதிர்பாராத விதமாக நேற்று பெய்த மழை மாநகர வாசிகளுக்கு ஆறுதலாக அமைந்தது.

    பிற்பகலில் திடீரென கருமேகம் சூழ்ந்து வெயில் குறைந்து காணப்பட்டது. பின்னர் இரவு 7 மணி அளவில் திருச்சி மாநகரப் பகுதிகள் மட்டுமின்றி புறநகரப் பகுதிகளிலும் இந்த மழை ஆங்காங்கே பெய்தது.

    ஆலங்கட்டி மழை

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில், ஆலங்கட்டி மழை பெய்தது. சுமார் 15 முதல் 25 நிமிடம் வரையில் பெய்த இந்த மழையால் அப்பகுதியினர் ஆச்சர்யத்தில் மூழ்கினர். பலரும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவச்செய்தனர். நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் ஆலங்கட்டி மழை பெய்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. நேற்றைய மழையில் அதிகபட்சமாக திருச்சி ஜங்ஷன் பகுதியில் 33 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    மாவட்டத்தில் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு;-

    கல்லக்குடி- 4.2

    லால்குடி- 32

    தேவி மங்கலம் -7.2 சமயபுரம் -18

    வாத்தலை அணைக்கட்டு- 6.4

    மருங்காபுரி -4.2

    முசிறி -29

    தாபேட்டை -5

    நவலூர் கொட்டப்பட்டு- 6.8

    துவாக்குடி -3.2 துறையூர்-1 பொன்மலை -18.8 திருச்சி ஏர்போர்ட் -7.8 திருச்சி டவுன் -25.2 ஆகும்.

    மாவட்ட முழுவதும் மொத்தமாக 201.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    • வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
    • அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் 16.2 செ.மீ. மழை பதிவு

    கரூர்,

    குளித்தலை மற்றும் தோகைமலை சுற்று வட்டார பகுதிகளில், நேற்று திடீரென மழை பெய்தது. வளிமண்டல கீழடுக்கில், கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி, தமிழகத்தின் நிலப்பரப்புக்கு மேல் நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் கடந்த, 17ல் அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கரூர் மாவட் டத்தில் நேற்று மாலை, குளித்தலை, அய்யர்மலை, தோகைமலை, நச்சலுார், நங்கவரம், பொய்யாமணி, பணிக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. கரூர் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் மட்டும் மழைத்தூறல் இருந்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், நேற்று மாலை, திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கரூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில், அரவக்கு றிச்சி, 16.2 மி.மீ., அணைப்பாளையம், 9.4 மி.மீ., க.பரமத்தி, 1.8 மி.மீ., ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 2.28 மி.மீ., மழை பதிவானது.




    • கடந்த 2 நாட்களாக மதியத்துக்கு பிறகு சீதோசன நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு பரவலாக மழை
    • அணை பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் சுட்டரிக்கும் வெயில் அடித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கத்தின் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மதியத்துக்கு பிறகு சீதோசன நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் வழக்கம் போல் வெயில் அடித்து வந்த நிலையில் மாலையில் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    களியல், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை பெய்தது. அடையாமடை குருந்தன்கோடு, குழித்துறை பகுதியிலும் விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பெருஞ்சாணி அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளது. பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 35.04 அடியாக இருந்தது. அணைக்கு 353 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 531 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 33 அடியாக உள்ளது.அணைக்கு 170 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிபாறை 17.2, பெருஞ்சாணி 23, சிற்றாறு 1-10.6, சிற்றார் 2-7.4, களியல் 36, கன்னிமார் 4.6, புத்தன் அணை 22.4, பாலமோர் 12.4, திற்பரப்பு 36, அடையாமடை 5.2, முள்ளங்கினாவிளை 5.8, ஆணை கிடங்கு 1.

    மாவட்டம் முழுவதும் இன்று காலையில் வழக்கம் போல் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது.

    • தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
    • நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் பரவலாக மழை பெய்தது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    இந்நிலையில் நேற்றும் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பரவலாக மழை பெய்தது. தொடக்கத்தில் சாரலாக பெய்த மழை பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலமாக பெய்தது. மேலும் வேகமாக காற்றும் வீசியது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்த மழையின் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குண்டாறு, புளியரை, தெற்குமேடு, கற்குடி, தவணை, பண்பொழி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெப்பம் அதிகரித்து வந்தது.

    இந்நிலையில் நேற்று மாலை இடி-மின்னலுடன் திடீரென வானில் மேகங்கள் திரண்டன. சிறிது நேரத்தில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

    அதிகபட்சமாக குண்டாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 23.6 மில்லிமீட்டர் மழை பெய்தது. செங்கோட்டையில் 20 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக ஊத்து மற்றும் நாலுமுக்கு எஸ்டேட்டில் பலத்த மழை பெய்தது.

    அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட்டில் 10 மில்லிமீட்டரும், நாலுமுக்கு பகுதியில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்தது. காக்காச்சியில் 5 மில்லிமீட்டர் மழை பெய்தது. மணிமுத்தாறு அணை பகுதியில் 0.6 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மாவட்டத்தில் பகல்நேரங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் அணைகள் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. ஒரு சில அணைகள் வறண்டு விட்டது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் இன்றைய நிலவரப்படி 27.60 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

    அந்த அணையில் சுமார் 15 அடி வரை சகதி இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அணையில் அதிகபட்சமாக 10 அடி வரை மட்டுமே நீர் இருப்பதால் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோடை தொடங்குவதற்கு முன்பே மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    • தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் பகலில் கடுமையான வெயிலும் அதிகாலையில் குளிரும் நிலவி வருகிறது. வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதால் மக்கள் இப்போதே வாடி வதங்கும் நிலை உள்ளது.

    ஏப்ரல், மே மாதங்களில் வெயில் உச்சகட்டத்தை அடையும்போது மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்படக்கூடும்.

    இந்த நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று பரவலாக மழை பெய்தாலும் ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்தது.

    பெரம்பூர், மூலக்கடை, நுங்கம்பாக்கம், தி.நகர், அடையாறு, கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பகலில் திடீரென மழை பெய்தது. பெருங்குடி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர் பகுதியிலும் கோடை மழை வெளுத்து வாங்கியது. வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை கொட்டியது.

    தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. 20-ந் தேதி வரை பரவலாக மழை பெய்யக்கூடும் என்ற வானிலை அறிவிப்பை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது.

    முகலிவாக்கம், கோடம்பாக்கம், சென்னை விமான நிலையத்தில் தலா 7 செ.மீ., ஊத்துக்கோட்டையில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது.

    சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்தது. கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் 22-ந் தேதி வரை இடி மின்னலுடன் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

    • கோத்தகிரியில் மழை வெளுத்து வாங்கியது.
    • கடந்த இரு மாதங்களுக்கு மேலாக பனி பொழிவு காணப்பட்டது.

    கோத்தகிரி:

    தமிழகம் முழுவதும் தற்போது வெயில் சுட்டெரிக்கிறது. இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்னதாகவே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    இதேபோல மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் ஊட்டியிலும் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் தேயிலை செடிகள் கருகத் தொடங்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்திருந்தனர்.

    இந்தநிலையில் நேற்று ஊட்டி மற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கோத்தகிரியில் மழை வெளுத்து வாங்கியது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக அங்கு மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கோத்தகிரி மார்க்கெட்டுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்கு அதிகபட்சமாக 56 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று எடப்பள்ளியில் 25 மி.மீ, கோடநாட்டில் 23 மி.மீ, கேத்தியில் 24 மி.மீ. மழையும் பதிவாகி இருந்து.

    நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி இரு மாதங்கள் பெய்யும். அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். இம்முறை வட கிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் வரை பெய்தது. மழை குறைந்தவுடன் உறைப்பனி பொழிவு அதிகரித்து. கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஊட்டியில் உறைப்பனியின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. கடந்த இரு மாதங்களுக்கு மேலாக பனி பொழிவு காணப்பட்டது.

    ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பல நாட்கள் ஐந்து டிகிரி செல்சியசுக்கு குறைவாக வெப்பநிலை சென்றது. உறைபனி தாக்கம் மூன்று மாதமும் நீடித்த நிலையில், ஒரு சில பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் கருகின. இதனால், தேயிலை தொழில் பாதிக்கப்பட்டது. அதே போல் சில பகுதிகளில் காய்கறி தோட்டங்களும் பாதிக்கப்பட்டன. அதிகாலை நேரங்களில் குளிர் வாட்டியெடுத்த நிலையில், தேயிலை தோட்டம் மற்றும் காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். அதேபோல சுற்றுலா பயணிகளும் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் குளிரை தாக்குபிடிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.கடந்த ஒரு வாரமாக நீலகிரியில் பனியின் தாக்கம் குறைந்து இருந்தது. இந்தநிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பெய்த கோடை மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    • வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை கொட்டியது.
    • தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வெப்பத்தில் தவித்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    காலை 10 மணிக்கு பின்னர் வானில் கருமேகங்கள் திடீரென திரண்டு கனமழை கொட்டியது. எழும்பூர், புரசைவாக்கம், அம்பத்தூர், கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, திருவொற்றியூர், ராயபுரம், பெரம்பூர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. சில இடங்களில் மழை இடி மின்னலுடன் வெளுத்து வாங்கியது.

    வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை கொட்டியது. இந்த திடீர் மழையால் வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றனர்.

    இதற்கிடையே தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சியில் கிழக்கு திசை காற்றும் மேற்குதிசை காற்றும் சந்திக்கிறது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை நீடிக்கும். சென்னையில் 2 நாட்களுக்கு இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • அரிசி, சீனி மூடைகள் சேதம்
    • இடிமின்னலுடன் திடீர் கோடை மழை

    கன்னியாகுமரி:

    குலசேகரம், பேச்சிப் பாறை, திற்பரப்பு, திருநந்திக்கரை, திருவரம்பு, திருவட்டார், பொன்மனை, மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று மாலை இடிமின்னலுடன் திடீர் கோடை மழை பெய்தது.

    இந்த மழையின்போது சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. இதனால் கடும் வெயில் இருந்த நிலையில் சற்று வெப்பம் குறைந்தது. குலசேகரம்-திருவரம்பு சாலையில் நாகக்கோடு சந்திப்பு அருகிலுள்ள ஒரு ரேஷன் கடைக்குள் திடீரென்று தண்ணீர் புகுந்தது. அப்போது கடையில் பணியில் இருந்த பெண் ஊழியர் தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் தொடர்ந்து சாலையில் பாய்ந்த தண்ணீர் கடைக்குள் புகுந்த வண்ணம் இருந்தது.

    இது குறித்து குலசேகரம் பேரூராட்சி தலைவி ஜெயந்தி ஜேம்ஸூக்கு தகவல் கொடுத்தார். அவர் உடனடியாக பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களை அந்த ரேஷன் கடைக்கு அனுப்பி வைத்து, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் ஒத்து ழைப்புடன் கடையிலிருந்த ரேஷன் மற்றும் சர்க்கரை அரசி மூடைகள் அங்கிருந்து அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டது.

    இந்த ரேசன் கடையில் சுமார் 160 மூடைகள் சர்க்கரை, அரிசி மூடைகள் இருந்த நிலையில் அவற்றில் சில மூடைகள், கடையில் தண்ணீர் புகுந்த காரணத்தால் நனைந்து சேதமடைந்தன. தற்போது குலசேகரம்-திருவரம்பு சாலையில் சாலை விரிவாக்கப்பணிகள் நடப்பதால் சாலையில் பாய்ந்த தண்ணீர் ரேஷன் கடைக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ரேஷன் கடைக்குள் தண்ணீர் புகுந்து அரிசி மூடைகள் சேதமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.இனிமேல் வரும் நாட்களில் இது போன்ற சம்பவங்கள் ஏற்படாத வகையில் உணவுப் பொருள் வழங்கல் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டு மென்று அந்த பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • அடுத்த 3 நாட்களில் ஆந்திர மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
    • மணிக்கு 40 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை அதிகாரிகள் கணித்துள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதன் காரணமாக வருகிற 19-ந்தேதி விசாகபட்டினத்தில் நடைபெற உள்ள இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2-வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அடுத்த 3 நாட்களில் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் மணிக்கு 40 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை அதிகாரிகள் கணித்துள்ளனர்.

    நாளை கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் கனமழை பெய்யும். அடுத்த 3 நாட்களில் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

    மாநில முழுவதும் பரவலாக அல்லது ஓரளவு பரவலாக மழை பெய்யும். ஆந்திராவின் ஊட்டி என்றழைக்கப்படும் அரக்கு பள்ளத்தாக்கில் நேற்று மாலை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

    • சாந்தா குரூஸ் நகரில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
    • கனமழை காரணமாக 34 மாவட்டங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    கலிபோர்னியா:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சில நாட்களாக அடுத்தடுத்து உருவான புயல்கள் காரணமாக கனமழை கொட்டியது.

    ஆறுகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. ஏராளமான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீடுகள் மற்றும் கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இந்த நிலையில் சாந்தா குரூஸ் நகரில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்கு வசித்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

    அவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அந்த பகுதியில் மீட்பு பணிகளும் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.

    கனமழை காரணமாக 34 மாவட்டங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பலத்த காற்று வீசுவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பல இடங்களில் மக்கள் இருளில் தவிக்கிறார்கள்.

    மத்திய பகுதியில் அமைந்துள்ள துலே நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அதன் கரை பகுதியில் வசித்த 1000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து கலிபோர்னியா மாகாணத்துக்கு பேரிடர் கால உதவி வழங்க அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டுள்ளார்.

    • பிரதான அணையான பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது.
    • காலை முதல் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள அணைப்பகுதிகளில் இன்று காலை வரையிலும் மழை விட்டு விட்டு பெய்தது.

    பிரதான அணையான பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணைக்கு தற்போது 367 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் தற்போது 45.90 அடி நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறு அணையில் 59 அடி நீர் உள்ளது. மாஞ்சோலை வனப்பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாலுமுக்கு எஸ்டேட்டில் 26 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 19 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, கொடுமுடியாறு, நம்பியாறு, பாபநாசம், பாளை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இன்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    கொடுமுடியாறு அணை பகுதியில் 10 மில்லிமீட்டரும், நம்பியாறில் 7 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மிதமான மழை பெய்தாலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளுக்கு போதிய நீர்வரத்து இல்லாமல் அருவிகள் அனைத்தும் பாறைகளாகவே காட்சியளிக்கின்றன.

    ×