search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94930"

    விஜயா, தேனா, பரோடா ஆகிய வங்கிகளை இணைக்கும் திட்டத்தை திரும்பபெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Thirumavalvan #BankofBaroda #DenaBank #VijayaBank

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து ஒரு சில பெரிய வங்கிகளாக உருவாக்கும் திட்டத்தைக் கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசு வெளிப்படுத்தி வந்தது. ஆனால், அப்படிச் செய்வது வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட நோக்கத்தை கெடுத்துவிடும்.

    கிராமபுறங்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் வங்கி சேவை கிடைப்பதை தடுத்துவிடும் எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் விஜயா வங்கி, தேனா வங்கி, பேங்க் ஆப் பரோடா ஆகியவற்றை ஒன்றிணைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது விஜய் மல்லையாவை தப்பிக்கவிட்ட பிரச்சனையிலிருந்து நாட்டு மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே இந்த அறிவிப்பு இப்போது செய்யப்பட்டிருப்பதாகக் கருத வேண்டியுள்ளது.

    தற்போது இணைக்கப்படும் மூன்று வங்கிகளில் இரண்டு வங்கிகள் கடுமையான நட்டத்தில் இயங்கி வருபவை. தேனா வங்கியின் வாராக் கடன் அளவு மிக அதிகமாக இருப்பதால் அது ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறது.

    அதை சற்றே லாபத்தில் இயங்கி வரும் பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் இணைப்பதால் அந்த வங்கியும் பின்னடைவுக்கு ஆளாகும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கனவே அதன் பங்குகளின் மதிப்பு சரியத் தொடங்கிவிட்டது.

    வங்கி ஊழியர்களின் விருப்பத்தைக் கேட்காமல் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த அறிவிப்பை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.#Thirumavalvan #BankofBaroda #DenaBank #VijayaBank

    காவல்துறையினரையும் உயர்நீதிமன்றத்தையும் பொதுமக்கள் முன்னிலையில் அநாகரீகமாக பேசிய எச். ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார். #thirumavalavan #hraja

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியதாவது:-

    பா.ஜனதா கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா அண்மை காலமாக வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருக்கிறார். மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கிறோம் என்கிற அகந்தை அவருடைய நடவடிக்கைகளில் மேலோங்கி நிற்கிறது.

    பெரியாரை, அண்ணாவை, கலைஞரை என திராவிட இயக்க தலைவர்களையும் இடதுசாரி உள்ளிட்ட ஜனநாயக சக்திகளையும் மிக கடுமையாக மூர்க்கமாக விமர்சித்து வருகிறார். தற்போது திருமயம் அருகே காவல்துறையினரையும் உயர்நீதிமன்றத்தையும் பொதுமக்கள் முன்னிலையில் அநாகரீகமாக பேசி இருக்கிறார்.

    சிறைத்துறைக்கும், காவல்துறைக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் சிறையில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை சொல்ல காவல் துறையினருக்கு வெட்கம் இல்லையா? என்று கேட்கிறார்.

    மனோகரன் என்கிற இந்து பெயர் கொண்ட அதிகாரியை கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களின் கைக்கூலி என்று பேசுகிறார்.

    உயர்நீதிமன்றம் கூட்டம் போட தடை விதித்து இருக்கிறது என்று சொன்ன போதும் உயர்நீதி மன்றத்தை கொச்சையாக தடை விதிக்கப்பட்ட இடத்திலேயே கூட்டம் நடத்துவேன் என்று ஆவேசமாக பேசியிருக்கிறார். என்ன பேசுகிறோம் என்று தெரியாத அளவிற்கு முகம் சுழிக்கும் வகையில் அவர் பேசியிருப்பது வேதனை அளிக்கிறது.

    மத்தியில் ஆட்சி நடத்துகிறோம் என்கிற மமதையும், தமிழக அரசு ஒரு கையாலாகாத அரசு என்கிற அலட்சியமும்தான் அவருடைய இந்த போக்கிற்கு காரணங்களாக உள்ளன.

    அவர் உயர் ரத்த அழுத்த சிக்களுக்கு ஆளானவராகவோ அல்லது மனநல சிக்களுக்கு ஆளானாவர்களாகவோ இருக்க வேண்டும் என்கிற சந்தேகம் வருகிறது.

    எனினும் அவர் மீது தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.


    உடனடியாக அவரை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். அரசு இனியும் மெத்தனம் காட்டினால் மதவாத சக்திகள் தமிழகத்தின் அமைதியை சீரர்குலைப்பார்கள் என்பதை தமிழக அரசுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக காங்கிரஸ் எஸ்.சி. துறை மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியதாவது:-

    பெரியார், அம்பேத்கார் போன்ற தலைவர்களை எச்.ராஜா இழிவுப்படுத்தி பேசி வருகிறார். இப்போது உச்சக்கட்டமாக பித்தம் தலைக்கு ஏறி நீதிமன்றத்தையும் கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்துள்ளார்.

    அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்படும் நீதிபதிகளை நம்பவில்லை என்றால் நீதிபதிக்கு மேல் பிரதமர் மோடி என்று அவர் நினைத்திருக்கிறார். இனியும் தாமதிக்காமல் எச்.ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #hraja 

    திருமாவளவன் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #VCK
    அரூர்:

    தருமபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோரை பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார்.

    தற்போது அந்த வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    அவதூறு பரப்பிய இளைஞரை கைது செய்யக்கோரி அரூர் கச்சேரிமேட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஜானகிராமன், சாக்கன்சர்மா, பாரதிராஜா, ராமச்சந்திரன், மூவேந்தன், சித்தார்த்தன், கேசவன் உள்பட பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவதூறு பரப்பிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமார் அரை மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #VCK #thirumavalavan
    ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக கவர்னர் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார். #RajivGandhiCase #Perarivalan
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரம் குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பி உள்ளது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு தொல்.திருமாவளவன் அளித்த பதில் வருமாறு:-

    7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக கவர்னர் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார். எனவே தமிழக அரசு மீண்டும் அமைச்சரவையை கூட்டி கவர்னருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அப்போது அவர் அதனை ஏற்று தான் ஆக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #RajivGandhiCase #Perarivalan
    ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் வழங்கிய மோசடி கடனாளிகள் பட்டியல் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த நரேந்திர மோடி பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார். #Thirumavalavan #PMModi
    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் மோசடி கடனாளிகளின் பட்டியலை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கச் சொல்லியும் நடவடிக்கை எடுக்காமல் அவர்களை நாட்டைவிட்டு தப்பிக்க அனுமதித்த பிரதமர் மோடி இதற்குப் பொறுப்பேற்றுப் பதவி விலக வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

    முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பாராளுமன்ற மதிப்பீடுக் குழு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் வாராக் கடன்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் சமர்பித்துள்ளார்.

    அதில் வாரா கடன்கள் உருவாவதற்கான காரணங்களை அவர் பட்டியலிட்டுள்ளார். மோசடியாக உள்நோக்கத்துடன் கடன் பெறுவது முக்கியமான காரணமாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    ‘மோசடி கடனாளிகளின் பட்டியலைப் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி ஒன்றிரண்டு பேர் மீதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நான் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருக்கும் போது வலியுறுத்தினேன். அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரியவில்லை. இது அவசரமாக கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு பிரச்சனையாகும்’ என்று அவர் கூறியுள்ளார்.

    ரகுராம் ராஜன் அளித்த பட்டியலில் நிரவ் மோடி, முகுல் சோக்சி ஆகியோரின் பெயர் உள்ளதாகவும் அவர்களை நாட்டைவிட்டு தப்பிச் செல்ல அனுமதித்தது எப்படி என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

    விவசாயிகளும், மாணவர்களும் வாங்குகிற சில ஆயிரம் ரூபாய் கடன்களுக்காக அவர்களை அவமானப்படுத்தி அடியாட்களை வைத்து மிரட்டி வங்கிகள் தரும் நெருக்கடியால் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


    ஆனால், லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை மோசடி செய்யும் கார்ப்ரேட்டுகளுக்கு பாதுகாப்பளித்து அவர்களை வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல மோடி அரசு உதவுகிறது.

    ரகுராம் ராஜன் பிரதமர் அலுவலகத்துக்கு அளித்த மோசடி கடனாளிகளின் பட்டியலை உடனே பகிரங்கமாக வெளியிட வேண்டும். இத்தனை காலமாக அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் மோசடி பேர்வழிகள் தப்பிச் செல்ல உதவியாக இருந்ததற்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி உடனடியாக பதவி விலக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Thirumavalavan #PMModi
    ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க கவர்னர் காலம் தாழ்த்த கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #RajivGandhimurdercase #Thirumavalavan

    புதுச்சேரி:

    நெய்வேலில் திருமணத்திற்கு செல்லும் வழியில் புதுவையில் தனியார் ஓட்டலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வதில் ஏற்கனவே காலதாமதமாகி விட்டதால் தமிழக கவர்னர் காலம் தாழ்த்தாமல் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்.

    ரகுராம் ராஜனின் அறிக்கை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரூ.12 லட்சம் கோடி வாரக்கடன் பட்டியலை பிரதமருக்கு அனுப்பியுள்ளதாக ரகுராம்ராஜன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ரகுராம்ராஜன் அறிக்கையை பிரதமர் அலுவலகம் ஏன் இதுவரை மறைத்து வைத்துள்ளது.

     


    மோசடி பேர்வழிகளை காப்பற்றும் அரசாக உள்ளது என்பது ரகுராம்ராஜனின் அறிக்கை சான்றாக உள்ளது. இதற்கு பொறுப்பேற்று பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும்.

    கவுரி லங்கேஷ் கொலையாளிகளின் பட்டியலில் ரவிக்குமார் பெயரும் உள்ளதை கருத்தில் கொண்டு புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பாதுகாப்பு கொடுத்துள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழக பகுதிக்கும் ரவிக்குமார் சென்று அரசியல் பணியாற்ற இருப்பதால் அங்கும் பாதுகாப்பை நீடிக்க வேண்டும். தமிழக அரசும் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம். தேவைப்பட்டால் மீண்டும் தமிழக அரசுக்கு கடிதம் அளிக்கப்படும்.

    தமிழகத்தை போல் புதுவையிலும் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளவர்களை நன்னடத்தையின் கீழ் விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார்.#RajivGandhimurdercase #Thirumavalavan

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்த நாளையொட்டி தாய்மண் விளையாட்டு கழகம் சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடத்தப்படுகிறது. #Thirumavalavan #Kabaddi

    சென்னை:

    சென்னை சாலிகிராமம் ஆவிச்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று மாலை 6 மணிக்கு கபடி போட்டி தொடங்குகிறது.

    இதில் தமிழகம் முழுவதும் இருந்து 40 அணிகள் பங்கேற் கின்றன. கபடி போட்டி தொடக்க விழாவிற்கு தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வி.கோ.ஆதவன் தலைமை தாங்குகிறார். தயாளன், பனையூர் பாபு ஆகியோர் போட்டியை தொடங்கி வைக்கிறார்கள்.

    போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் பண முடிப்பும், அம்பேத்கர் நினைவு கோப்பையும், 2-வது பரிசாக ரூ.40 ஆயிரம் பணமுடிப்பும் காமராஜர் நினைவு கோப்பையும் வழங்கப்படுகிறது.

    3-வது பரிசாக ரூ.30 ஆயிரம் பணமுடிப்பும் மற்றும் தொல்காப்பியர் நினைவு கோப்பையும், 4-வது பரிசாக ரூ.20 ஆயிரம் பணமுடிப்பும், தன்ராஜ் பாளையம்மாள் நினைவு கோப்பையும் வழங் கப்படுகிறது.

    நாளை (ஞாயிற்றுக் கிழமை) மாலை இறுதி போட்டி நடத்தப்பட்டு இரவு பரிசளிப்பு விழா நடக்கிறது. விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பணமுடிப்பை வழங்குகிறார்.

    நிகழ்ச்சியில் வி.கோ.ஆதவன், விருகை தொகுதி செயலாளர் கரிகால் வளவன், ராஜசேகரன், தி.மு.க. வக்கீல் எம்.ஸ்ரீதர், ஏ.எம்.கணேஷ், கோ.ராம லிங்கம், வி.என்.கண்ணன், ஜெ.செந்தில்குமார், வி.என். ஜெயகாந்தன், அப்துல் அஜீஸ், திலீப், மாவட்ட செயலாளர்கள் ரவிசங்கர், இரா.செல்வம், நா.செல்லத் துரை, அம்பேத்வளவன், அன்புசெழியன், சூ.க.ஆத வன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமாவளவன் 2 நாட்கள் சிகிச்சை முடிந்து இன்று மாலை வீடு திரும்புகிறார். #VCK #Thirumavalavan
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கார் மூலம் சென்ற அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்து கலந்து கொண்டார்.

    மேலும் பயணத்தின் போது சாப்பிட்ட உணவும் ஏற்றுக் கொள்ளாமல் வயிறு கோளாறு ஏற்பட்டது. ஆனாலும் அவர் தொடர்ந்து தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று கோவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

    மலை உச்சியில் இருந்த அந்த கோவிலுக்கு 80 படிக்கட்டுகளில் திருமாவளவன் ஏறிச் சென்றார். அப்போது தலைச் சுற்றல் ஏற்பட்டு மயங்கினார். உடனடியாக அங்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

    ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருந்ததால் உடல் சோர்வுடன் காணப்பட்டார். உடனடியாக ‘குளுக்கோஸ்’ ஏற்றப்பட்டது.

    பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் குடல் புண்ணாக இருந்தது. இதனால் அவருக்கு நேற்று வரை லேசான வயிறு வலியும் இருந்தது.

    ஆனால் தொடர்ந்து மருத்துவர்கள் அளித்த சிகிச்சைக்கு பிறகு இன்று அவரது உடல் நிலை தேறி வருகிறது. திருமாவளவனை டாக்டர்கள் நன்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்கள்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருமாவளவனிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்கள்.


    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று திருமாவளவனை பார்த்தார்.

    திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். மருத்துவமனைக்குள் தொண்டர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஒரு சில மாநில நிர்வாகிகள் மட்டும் அவர் சிகிச்சை பெறும் பகுதியில் நின்றனர்.

    டாக்டர்களின் ஆலோசனைப்படி திருமாவளவன் இன்று மாலை வீடு திரும்புகிறார். வேளச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஓய்வு எடுக்க இருப்பதால் தொண்டர்கள் யாரும் தன்னை சந்திக்க வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். #VCK #Thirumavalavan
    நீட் தேர்வு போராட்டத்தினால் மாணவர்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்று திருச்சியில் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். #thirumavalavan #neet
    திருச்சி:

    திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீட் தேர்வுக்கு எதிராக தன்னுடைய உயிரை மாய்த்த மாணவி அனிதாவின் ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவாக, அவரின் சொந்த ஊரான குழுமூரில் நினைவு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்திறப்பு விழா இன்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெறுகிறது.

    விழாவில் ஏராளமான ஜனநாயக சக்திகள் கலந்து கொள்கின்றன. அனிதாவின் நினைவாக அறக்கட்டளையும் தொடங்கப்படுகிறது. நீட்தேர்வினை தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வு மத்திய அரசின் ஆதிக்கத்தையும், மாநில அரசின் கல்வி அதிகாரத்தை பறிக்கும் விதமாக உள்ளது. எனவே நீட் தேர்வை உனடடியாக ரத்து செய்ய வேண்டும். பொதுவாக போட்டி தேர்வுகள் என்றால் மாணவர்கள் அதனை எதிர்கொள்ள தயாராகின்றனர். ஆனால் நீட் தேர்வு போராட்டத்தினால் மாணவர்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள், தமிழ்தேசிய அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களினால் இந்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் பலன் பிற்காலங்களில் தெரியும்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது ஆலையினை திறக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஆலை நிர்வாகம் செய்த மேல்முறையீட்டில், சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழர் அல்லாத ஒரு நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். 

    தமிழகத்தில் உள்ள நீதிபதியையோ அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியையோ நியமனம் செய்திருக்கலாம். இந்த விஷயத்தில் தமிழக அரசின் அழுத்தம் எந்த அளவில் உள்ளது என்பது தெரியவில்லை. ஸ்டெர்லைட் ஆலையினை மீண்டும் திறக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. தேசிய பசுமை தீர்ப்பாயமும் இதற்கு ஆதரவாக செயல்படுகிறது.

    முக்கொம்பு மேலணையில் ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதற்கிடையே கொள்ளிடம் அணை இடிந்துள்ளது. இது குறித்து அரசு, முக்கொம்பு அணையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், மதகுகள் உடைந்ததற்கான காரணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஆற்றில் மணல் அள்ளியதே அணை இடிந்ததற்கான காரணம் என சுற்றுச்சூல் வல்லுணர்கள் கூறுகின்றனர்.
     
    இந்த தொடர் மணல் கொள்ளையினால் கல்லணையும் இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் நடக்கும் மணல் கொள்ளைகளை முற்றிலுமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி 100 சதவீதம் அரசியல் ஈடுபாடு உள்ளவர். அவரின் இரங்கல் கூட்டத்தில் அரசியல் கருத்து மரபுகள் நடந்திருப்பது இயல்பானது. கலைஞர் அனைத்து இடங்களிலும் அரசியல் தாக்கத்தினை பதிவு செய்தவர். 

    நெல்லையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், வி.சி.க. சார்பில் மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

    தற்போது நடைபெற்ற தேசிய அளவிலான அரசியல் கட்சிகள் பங்கேற்ற கூட்டத்திலும் அதே கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீண்டும் பூரண குணமடைந்து அரசியல் பணியில் முழு ஈடுபாடுடன் செயல்பட வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #neet
    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு ஏதுவான சூழலை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கி தருகிறார்கள் என்று திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். #VCK #Thirumavalavan #Sterlite
    தூத்துக்குடி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

    மீனாட்சிபுரம் மதமாற்றம் குறித்து முறையாக ஆய்வு செய்ததன் அடிப்படையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் எனக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என்று சொல்கிற கருத்துக்கும், என்னுடைய ஆய்வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

    கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.15 லட்சத்துகான காசோலையை திருவனந்தபுரத்தில் முதல்மந்திரி பினராயி விஜயனை சந்தித்து வழங்கியுள்ளோம். மேலும் ரூ.15 லட்சம் நிவாரண பொருட்கள் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் வழங்க உள்ளோம்.


    ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்வதற்காக தமிழர் அல்லாத ஒரு நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தின் விருப்பப்படி தமிழர் அல்லாத நீதிபதியை நியமித்து இருப்பது, எந்த அளவுக்கு கோர்ட்டும், ஆட்சியாளர்களும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு துணை போகிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

    இவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு ஏதுவான சூழலை உருவாக்கி தருகிறார்கள் என்று மத்திய, மாநில அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனத்தை தெரிவிக்கிறது. தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட்டு, தமிழர் ஒருவரை இந்த குழுவுக்கு தலைவராக நியமிக்க மனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #VCK #Thirumavalavan #Sterlite
    தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்று நெய்வேலியில் விடுதலை சிறுத்தைகட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார். #VCK #Thirumavalavan
    நெய்வேலி:

    நெய்வேலி புதுநகர் 27-வது வட்டம் என்.எல்.சி. திருமண மண்டபத்தில் நெய்வேலி சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தை கட்சியின் துணை செயலாளர் ராஜாமணி- கனிமொழி திருமணம் இன்றுகாலை நடைபெற்றது.

    இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-


    கேள்வி: ரஜினிகாந்த் ஜாதி ரீதியாகவும், தனி அமைப்பு ரீதியாகவும் உள்ளவர்களுக்கு எனது கட்சியில் இடம் இல்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து தங்கள் கருத்து என்ன?

    பதில்: அமைப்பு ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் இல்லாத ஜனநாயக அரசியலை முழுமையாக வரவேற்கிறேன். இதை ரஜினிகாந்த் இறுதியாக செயல்படுத்தினால் நான் மகிழ்ச்சி அடைவேன்.

    கேள்வி: நடிகர் விஷால் புதிய அமைப்பு தொடங்கியது குறித்து உங்கள் கருத்து என்ன?

    பதில்: தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகு அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பலரும் நினைத்துக் கொண்டு உள்ளனர். தன்னால்தான் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும் என ஒவ்வொருவரும் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இதன் முடிவு மக்கள் கையில்தான் உள்ளது. தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #VCK #Thirumavalavan
    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினார். #TNCM #EdappadiPalaniswami #Thirumavalavan
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய இல்லத்தில் சந்தித்தார்.

    அப்போது முதல்-அமைச்சரிடம் 3 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தார். மனு குறித்து தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விடுதலை சிறுத்தைகள் கட்சி பொது செயலாளர் ரவிகுமாருக்கு கொலை மிரட்டல் உள்ளது. பெங்களூரில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூலம் ரவிகுமாரும் கொலை பட்டியலில் இருப்பதாக மத்திய உளவுத்துறை மாநில உளவுத்துறைக்கு தெரிவித்துள்ளது. எனவே, ரவிகுமாருக்கு மாநில அரசு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று முதல்- அமைச்சரிடம் கேட்டுக்கொண்டேன்.

    எஸ்.சி.எஸ்.டி. மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கிவந்த கல்வி உதவித் தொகையை நிறுத்தி உள்ளது. இதற்கு 40 சதவீதம் தொகையும், மத்திய அரசு 60 சதவீத தொகையும் வழங்கினார்கள்.


    இதற்காக மத்திய அரசு ரூ.1500 கோடி வழங்கியது. இந்த தொகை நிறுத்தப்படுவதால் உயர்கல்வி பயிலும் எஸ்.சி.எஸ்.டி. மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது. எனவே மாநில அரசு இந்த மாணவர்களுக்கு முழு உதவித் தொகையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

    தமிழ்நாட்டின் இயற்கை வளத்தை காக்க எனது பிறந்தநாளையொட்டி வனப்பகுதியில் பனை விதை நடும் இயக்கத்தை தொடங்கினேன். இதன் மூலம் 1 லட்சம் பனைவிதைகளை நட திட்டமிட்டோம். தற்போது 5 லட்சம் பனை விதைகள் நடப்பட்டுள்ளன.

    தமிழக அரசு 1 கோடி பனைவிதைகளை நட ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழகத்தின் பாரம்பரிய மரமான பனைமரம் வளர்ப்பதன் மூலம் இயற்கை வளத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் முதல்- அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார். #TNCM #EdappadiPalaniswami #Thirumavalavan
    ×