search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95115"

    • விஜயகுமார் காங்கயம் காவல் நிலையத்தில் புகாா் செய்தார்.
    • கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

    காங்கயம் :

    காங்கயம், பழையகோட்டை பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (25). இவா் அப்பகுதியில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்து வருகிறாா். இந்நிலையில், பழையகோட்டை சாலைப் பகுதியில் உள்ள தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை இரவு நிறுத்தியுள்ளாா். மறுநாள் காலை பாா்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் இது குறித்து காங்கயம் காவல் நிலையத்தில் புகாா் செய்தார்.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் பொருத்த ப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • பீரோல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • திருட்டு சம்பவங்கள் குறித்து திருவோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள செல்வநாதபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் கூலி விவசாயி செல்வராஜ் (வயது 45). இவர் மற்றும் குடும்பத்தினர் நேற்று வயலுக்குச் சென்று விவசாய பணி வேலை முடித்துவிட்டு மாலை வீடு திரும்பினர்.

    அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோதுபீரோவில் இருந்த இரண்டரை பவுன் நகை மற்றும் 25 ஆயிரம் பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் இதே போல் நேற்று மதியம் திருவோணம் மேல மேட்டுப்பட்டியை சேர்ந்த விவசாயி சதாசிவம் வீட்டில் பீரோல் உடைக்கப்பட்டு வெள்ளி கொலுசு திருடப்பட்டு இருந்ததை கண்ட அதிர்ச்சி அடைந்தனர்.

    இரு திருட்டு சம்பவங்கள் குறித்து திருவோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவோணம் பகுதிகளில் பட்ட பகலில் நடந்த இரண்டு திருட்டு சம்பவம் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • குடும்பத்துடன் அப்பகுதியில் நடந்த எருது விடும் விழாவை காண சென்றார்.
    • ரூ.1,10 ரொக்கப்பணம், 2 பவுன் தங்க நகை ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.

    கிருஷ் ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகேயுள்ள முதுகுறுக்கி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரா (வயது 50). இவர் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் நடந்த எருது விடும் விழாவை காண சென்றார்.

    அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

    வீட்டிற்குள் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.1,10 ரொக்கப்பணம், 2 பவுன் தங்க நகை ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு ராமச்சந்திராவுக்கு தெரிவித்தனர். அதன்பேரில் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம திருடர்களை தேடி வருகின்றனர்.

    • திட்டக்குடி அருகே ராமநத்தம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 54)நேற்று அவரது மோட்டார் சைக்கிளை நிறுத்திய இடத்தில் சென்று பார்த்தபோது காணவில்லை.
    • மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் 2 பேர் திருடி செல்லும் காட்சிசி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்தம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 54). இவர் நேற்று முன்தினம் அவரது மோட்டார் சைக்கிளை ராமநத்தம் கடைவீதியில் உள்ள மளிகை கடை முன் நிறுத்திவிட்டு வெளியில் சென்றுள்ளார். பின் நேற்று அவரது மோட்டார் சைக்கிளை நிறுத்திய இடத்தில் சென்று பார்த்தபோது காணவில்லை. இதுகுறித்து அந்தோணிசாமி ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது ராமநத்தத்தில் மளிகை கடை முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் 2 பேர் திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனையடுத்து ராமநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். நேற்று போலீசார் ராமநத்தம் மேம்பாலம் அடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்

    . அப்போது சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் ராமநத்தத்தை அடுத்துள்ள ம.புடையூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் (20), பெரம்பலூர் மாவட்டம் ரெட்டிகுடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (19) எனவும். இவர்கள் இருவரும் ராமநத்தத்தில் மளிகை கடை முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடியவர்கள் என தெரிய வந்தது. இதனையடுத்து ராமநத்தம் போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, கைது செய்து 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் மஞ்சக்குப்பம் பத்மாபதி நகரை சேர்ந்தவர் ரகமதுன்னிசா (55). இவரது கணவர் அப்துல் மஜீத் (60). சவுதி அரேபியா நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
    • மர்ம நபர்கள் 3 ேபர் கையில் பொருட்களுடன் வெளியில் வந்தனர். பின்னர் தங்களிடம் இருந்த கத்தியை காண்பித்து சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்,

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் பத்மாபதி நகரை சேர்ந்தவர் ரகமதுன்னிசா (55). இவரது கணவர் அப்துல் மஜீத் (60). சவுதி அரேபியா நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் மகன் அஸ்லாம் துபாய் நாட்டில் வேலை செய்து வருகிறார்.


    மூத்த மகள் ஷப்பாவுக்கு திருமணமாகி தனது கணவருடன் துபாயில் வசித்து வருகிறார். அகமது நிஷா தனது இளைய மகள் அசினாவுடன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் துபாயில் இருக்கும் மூத்த மகள் ஷப்பாவின் பிரசவத்திற்காக இருவரும் நேற்று இரவு விமானம் மூலம துபாய் சென்றுள்ளனர்.இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று ஒரு அறையில் இருந்த பொருட்களை திருடி உள்ளனர். மேலும் மற்றொரு அறையில் இருந்த பூட்டை உடைக்கும் போது அதனுடைய சத்தம் வெளியில் கேட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தை சேர்ந்த 2 பெண்கள் ரகமதுன்னிசா வீட்டுக்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. இதில் முன்பக்க கதவு உடைத்து மர்ம நபர்கள் உள்ளே இருந்தது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் திருடன் திருடன் என கூச்சலிட்டனர். அப்போது உள்ளே இருந்த மர்ம நபர்கள் 3 ேபர் கையில் பொருட்களுடன் வெளியில் வந்தனர். பின்னர் தங்களிடம் இருந்த கத்தியை காண்பித்து சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் சத்தம் போடாமல் அமைதியாக இருந்தனர். இதனை தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் பொருட்களை திருடிக் கொண்டு எந்த வித பயமும் இன்றி ஹாயாக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டிலிருந்த அனைவரும் வெளிநாட்டில் உள்ளதால் திருடு போன பொருட்கள் எத்தனை லட்சம் மதிப்பிலானது, என்னென்ன பொருட்கள் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் கொள்ளைகள் நடைபெற்று வரும் நிலையில் இதற்கு என்னதான் தீர்வு என பொதுமக்கள் பீதியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இதற்கு நிரந்தரமாக தற்போது தீர்வு இல்லை என வெட்ட வெளிச்சமாக தெரிய வருகின்றது. மேலும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் வராமலும், வெளியூருக்கு செல்லும் பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாப்பான இடங்களில் வைத்து சென்றால் மட்டுமே கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் வாழ முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    முன்பெல்லாம் ஒரு பகுதியில் ஒரு திருட்டு ஏற்பட்டால் போலீசார் பழைய குற்றவாளி மற்றும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு குறைந்தபட்ச நாட்களில் குற்றவாளிகளை பிடித்து உரிய முறையில் விசாரணை நடத்தி குற்றங்களை தடுத்து நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். தற்போது குற்றவாளிகளை பிடித்தவுடன் விசாரணை செய்வதற்கு போதுமான கால அவகாசம் வழங்காமல் குற்றவாளிகளிடம் உரிய முறையில் விசாரணை நடத்த முடியாததால் போலீசாரால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கின்றனர். பின்னர் எப்படி குற்றவாளிகளை விசாரித்து பொருட்களை கைப்பற்றி இனி வருங்காலங்களில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் எப்படி தடுப்பது?மேலும் இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிந்தும் கண்டும் காணாமல் உள்ளதால் ஒவ்வொரு போலீசாரும் மிகுந்த அவதியுடன் இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கு போலீஸ் உயர் அதிகாரிகள் ஒத்துழைத்தால் மட்டுமே உரிய முறையில் குற்ற செயல்களை கட்டுப்படுத்த முடியும். இதனை உயர் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்றால் திருடர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் பெரும்பாலான வீடு, கடைகள், கோவில்கள் போன்றவற்றில் கொள்ளை சம்பவம் நடந்து அனைவரும் வீதியில் நிற்கக்கூடிய நிலை ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆகையால் போலீஸ் உயர் அதிகாரிகள் இதற்கு தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் நிம்மதியாக வெளியில் சென்று வருவதற்கும் தயக்கம் இன்றி வாழ்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சென்னையில் பதுங்கி இருந்த நிஜாமுதீன் என்பவரை தனிப்படை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.
    • திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி 4 ஏடிஎம்களை கியாஸ் வெல்டிங் மெஷின் மூலம் உடைத்து ரூ.73 லட்சத்தை மர்மகும்பல் கொள்ளையடித்தது.

    இதுதொடர்பாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 5 மாவட்ட எஸ்பிக்கள் கொண்ட 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கர்நாடகம், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு தப்பிய கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படையினர் முகாமிட்டனர்.

    இதில், கொள்ளை கும்பலின் மூளையாக செயல்பட்ட அரியானா மாநிலத்தை சேர்ந்த முகமது ஆரிப்(வயது 35), ஆஜாத்(37) ஆகிய 2 பேரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதேபோல் கர்நாடக மாநிலம் கோலாரில்(கேஜிஎப்), ஒரு லாட்ஜில் கொள்ைள கும்பல் தங்கியிருந்து கொள்ளைக்கு திட்டமிடவும், பண பறிமாற்றம் செய்யவும் உதவியாக இருந்த கொள்ளை கும்பலை சேர்ந்த கோலார் மகாலட்சுமி லேஅவுட் பகுதியை சேர்ந்த குர்தீஷ் பாஷா(43), அசாம் மாநிலம் லாலாப்பூரை சேர்ந்த அஷ்ரப் உசேன்(26) ஆகியோரையும் கைது செய்தனர்.

    போலீஸ் விசாரணையில் ரூ. 70 லட்சம் பதுக்கி வைத்திருக்கும் இடம் குறித்து தகவலை தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தனிப்படையினர் அரியானா மாநிலத்திற்கு விரைந்தனர். அங்கு பணம் பதுக்கி உள்ள நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக சென்னையில் பதுங்கி இருந்த நிஜாமுதீன் என்பவரை தனிப்படை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.

    அவரை திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது.
    • ரூ. 50,000 மதிப்பிலான மின் வயர்கள்திருடப்பட்டிருந்தது தெரியவந்தது

    பல்லடம் :

    பல்லடம் பனப்பாளையம் பகுதியில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இதனை பல்லடம் அருகே உள்ள கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ரத்தினசாமி(வயது 60) என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று காலை கடையை வழக்கம் போல் திறந்து உள்ளார். உள்ளே சென்று பார்த்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பொருள்கள் சிதறி கிடந்தன. இதில் அங்கிருந்த சுமார் ரூ. 50,ஆயிரம் மதிப்பிலான மின் வயர்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரத்தினசாமி பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அக்கம் - பக்கம் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தா.பேட்டை அரசு பள்ளியில் பூட்டை உடைத்து கம்ப்யூட்டர் திருட்டு போனது
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள கம்யூட்டரை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

    தா.பேட்டை,:

    தா.பேட்டை அடுத்த துலையாநத்தம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் தலைமையாசிரியர் முருகேசன் (வயது54) வழக்கம்போல் பள்ளியை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை பள்ளியை திறக்க வந்த போது கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பள்ளியில் இருந்த கம்ப்யூட்டர், பிரிண்டர் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து தலைமை ஆசிரியர் முருகேசன் இதுகுறித்து ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள கம்யூட்டரை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அரசு பள்ளியில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கம்ப்யூட்டரை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    • ரூ.32 ஆயிரம் மதிப்பிலான துணிகள் திருடி தப்பிச் சென்றனர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்

    கோவை,

    கோவை பீளமேட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது41). இவர் புது சித்தாபுதூர் ஆவாரம்பாளையம் ரோட்டில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 25 -ந் தேதி இரவு பாலகிருஷ்ணன் வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் ஞயிற்றுக்கிழமை என்பதால் அவர் கடையை திறக்க வில்லை. அன்று இரவு அவரது கடையின் மேலே உள்ள ஆஸ்பெட்டாஸ் சீட் மேற்கூரையை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கடையில் இருந்த பேண்ட், சட்டை உள்ளிட்ட ரூ.32 ஆயிரம் மதிப்பிலான துணிகள் திருடி தப்பிச் சென்றனர். இது குறித்து பாலகிருஷ்ணன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தி போலீசார் விசாரணை செய்தனர்.
    • 21 மோட்டார் சைக்கிள்களை திருடி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் பலபகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருட்டு போனது.

    இது குறித்து போலீசாருக்கு புகார் வந்தது.

    இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தனிப்படை அமைக்கப்பட்டு அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

    இந்நிலையில் கால் டாக்ஸி பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் இளைய ராஜா தலைமையில் போலீசார்கள் நரசிம்ம பாரதி. ரமேஷ்குமார்.

    அசோக் குமார் செந்தில்குமார் கார்த்திக் விஜயகுமார் உட்பட தனி பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மயிலாடுதுறை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர் கீழையூர் சதீஷ்குமார் (வயது 28) என்பதும், மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுப்பட்டதும் தெரிய வந்தது.

    மேலும் விசாரணையில் 21 மோட்டார் சைக்கிள்கள் சுமார் 20 லட்சத்திற்கு மதிப்புடைய திருடி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • பெரம்பலுாரில் பள்ளி சமையல் பாத்திரங்கள் திருட்டு போனது
    • புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பாத்திரம் திருடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர், வேப்பூர் ஒன்றியம், திருமாந்துறை கிராமத்தில் டி.ஈ.எல்.சி. மான்ய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 35- மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு மதிய உணவு அளிப்பதற்கான சத்துணவு கூடம் உள்ளது. அங்கு இப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக சிவசங்கரி (வயது 39 ) என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 24-ம் தேதி அன்று சமையலறையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

    சனி,ஞாயிறு விடுமுறைக்கு பின்னர் திங்கள் கிழமை நேற்று காலை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது சமையலறை பூட்டு உடைக்கப்பட்டு சமையல் செய்யும் பெரிய பாத்திரங்கள் மற்றும் பொருட்கள். திருடு போய் இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக மங்களமேடு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பாத்திரம் திருடியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அப்பள்ளியில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு, வாடகை பாத்திரத்தில் உணவு சமைக்கப்பட்டு வருகிறது.

    • மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையில் இருந்த கேமிரா மற்றும் ஹார்டிஸ்க்குகளை மர்மநபர்கள் யாரோ திருடியுள்ளனர்
    • சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அடுத்த கோவிலாம்பூண்டி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (50). இவர் வண்டிகேட் அருகே ஸ்டூடியோ நடத்தி வருகிறார். கடந்த 23-ந்தேதி இரவு கடையை பூட்டிச் சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையில் இருந்த கேமிரா மற்றும் ஹார்டிஸ்க்குகளை மர்மநபர்கள் யாரோ திருடியுள்ளனர். இதனையடுத்து சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் சிசிடிவி கேமிரா மற்றும் கைரேகை தடயவியல் நிபுணர்களை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×