என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95115"
- மணப்பாறை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
- இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பண்ணப்பட்டி கீழ ஈச்சம் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட சுப்பையா (வயது 40). இவரது மனைவிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சுப்பையா தனது மனைவியை அழைத்துக்கொண்டு மணப்பாறை அரசு மருத்துவ–மனைக்கு சென்றார். பின்னர் சில மணி நேரம் கழித்து மீண்டும் அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டுக்குள் பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகள், வெள்ளி நகை, எல்.இ.டி. டி.வி., உண்டியலில் இருந்த பணம் ஆகியவற்றை திருடி சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக வெங்கடு சுப்பையா புத்தாநத்தம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு மணப் பாறை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ராம–நாதன் நேரில் சென்று விசா–ரணை நடத்தினார். பட்டப் பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் தியாகி சிங்காரவேலர் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது32). இவர் துறையூரிலிருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் பெரியார் நகர் அருகே தியேட்டர் வைத்து நடத்தி வருகிறார். கடந்த ஒரு மாத காலமாக, தியேட்டரில் ஏற்பட்ட பழுதுதினை சரி செய்வதற்காக தியேட்டரினை மூடி வைத்துள்ளார். இந்நிலையில் தியேட்டரை திறந்து பார்வையிட சென்ற பொழுது தியேட்டரின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்த பொழுது தியேட்டரில் இருந்த 25 சேர் உள்ளிட்ட சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து பிரகாஷ் துறையூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெரியார் நகரை சேர்ந்த அஜித் (20) மற்றும் அதே தெருவை சேர்ந்த 3 சிறுவர்கள் திருடி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அஜித்தை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 3 சிறுவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.
முசிறி:
முசிறி அடுத்த வேளாகநத்தம் மேற்கு காலனியை சேர்ந்தவர் பழனிவேல் மனைவி மகாலட்சுமி(வயது39). இவரும் இவருடைய கணவரும் முசிறியில் பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்று விட்டு பணியை முடித்துவிட்டு மாங்கரைப்போட்டை அருகில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்ேபாது மகன் செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டில் கதவு, பீரோ உடைக்கப்பட்டு இருக்கின்றன என கூறினார். இதையடுத்து உடனே வீட்டிற்கு சென்று பார்த்த போது பீரோவிலிருந்த 7 முக்கால் பவுன் நகைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து மகாலட்சுமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் கருணாநிதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு திருடர்களை தேடி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் விருத்தாசலம் ெரயில் நிலையம் வந்தார்.
- தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அன்பரசன் அதிர்ச்சி அடைந்தார்.
கடலூர்
விருத்தாசலத்தை அடுத்த எம்.பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன். இவர் தனது நண்பரை ெரயிலில் வழி அனுப்பவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் விருத்தாசலம் ெரயில் நிலையம் வந்தார்ெயில் நிலையம் எதிரே இருந்த கடையின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, ெரயில் நிலையம் உள்ளே சென்றார். திரும்பி வந்து பார்க்கும் போது தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அன்பரசன் அதிர்ச்சி அடைந்தார்இது குறித்து விருத்தாசலம் போலீசில் அன்பரசன் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்று கொண்ட போலீசார் சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் காணாமல் போன இருசக்கர வாகனத்தை தேடி வருகின்றனர்.
- பயிற்சி டாக்டரிடம் பணப்பை திருட்டு போனது
- இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
விழுப்புரம் காமதேனு நகரை சேர்ந்தவர் தனவேல். இவரது மகள் கவிப்பிரியா (வயது 22). இவர் பயிற்சி டாக்டராக திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கவிப்பிரியா திருச்சி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள ஒரு கடையில் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மர்ம நபர் அவரது கைப்பையை திருடி சென்று விட்டார்.இதுகுறித்து கவிப்பிரியா திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் வழக்குப்பதிவு இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி துவாக்குடி வாழவந்தான் கோட்டை பர்மா காலனியை சேர்ந்த சேட்டு மகன் சலீம் (வயது 38) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பணப்பை பறிமுதல் செய்யப்பட்டது.இதே போல் திருச்சி கிராப்பட்டி அப்பாசாமி நகர் திருமலை நகரை சேர்ந்த கணேசன் மகன் சிவா. இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே டவுன் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது, பணத்தை பிக்பாக்கெட் அடித்துவிட்டனர். இது தொடர்பாக கொடுத்த புகாரின் பேரில், புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 48) என்பவரை கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கர்நாடகா மாநிலம் பெங்களூரு காவேரி நகரை சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (வயது 50). இவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு மேலாளராக பணியாற்றி வருகிறார்.
- அங்கு வைக்கப்பட்டிருந்த 50 கிலோ காப்பர் வயர்கள் திருட்டு போனது.
நெல்லை:
கர்நாடகா மாநிலம் பெங்களூரு காவேரி நகரை சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (வயது 50). இவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு மேலாளராக பணியாற்றி வருகிறார்.
அந்நிறுவன வளாகத்தில் ஏராளமான காப்பர் வயர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த 50 கிலோ காப்பர் வயர்கள் திருட்டு போனது. இதுதொடர்பாக பாலகிருஷ்ணன் கங்கை கொண்டான் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பர் வயர்களை திருடிய மர்மநபர்களை தேடி வரு கின்றனர்.
- சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
- ஒரே நாளில் 3 இடங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
உடுமலை:
உடுமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாந்தா (வயது 65) .இவர் காந்தி சவுக் பகுதியில் தளி ரோடு மேம்பாலத்திற்கு அருகில் பேன்சி கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய் 2 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதே போல் இந்த பகுதியில் உள்ள ஏசா (48) என்பவர் கடையின் பூட்டை உடைத்து ரூ. 500 சில்லறை காசுகளை மர்ம நபர்கள்திருடி சென்றனர். மேலும் இதே பகுதியில் உள்ள பாலமுருகன் (58) என்பவர் வீடு புகுந்து மர்மநபர்கள் திருடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நாளில் 3 இடங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- கார் பதிவு எண்ணை கைப்பற்றி விடிய, விடிய சோதனை
- ஏற்கனவே ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களின் பட்டியலை எடுத்தும் போலீசார் விசாரணை
நாகர்கோவில்:
திருவண்ணாமலையில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம்.களில் ரூ.72 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இதில் ஈடுபட்ட நபர்கள் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு தீ வைத்து விட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.இதில் கொள்ளையர்கள் சிவப்பு நிற காரில் தப்பி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.
போலீசார் அந்த காரின் எண்ணை சோதனை செய்தபோது குமரி மாவட்ட பதிவு எண்ணை கொண்ட கார் என்பது தெரியவந்தது.இதையடுத்து திருவண்ணாமலை போலீசார் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து நேற்று இரவு மாவட்டம் முழுவதும் போலீசாரின் சோதனை தீவிர படுத்தப்பட்டது. திருவண்ணாமலை போலீசார் தெரிவித்த காரின் அடையாளங்கள் மற்றும் காரின் எண்ணை குறிப்பிட்டு வாகன சோதனை நடந்தது.
நாகர்கோவில், கன்னியா குமரி, தக்கலை, குளச்சல் சப் டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனை மேற்கொண்டனர்.அனைத்து கார்களையும் தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினார்கள்.
நாகர்கோவிலில் வடசேரி, கலெக்டர் அலுவலக சந்திப்பு, பார்வதிபுரம், கோட்டார் பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டது. கார்களில் சந்தேகப்படும்படியாக நபர்கள் உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் சோதனை செய்தனர்.
மேலும் மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டது. அஞ்சு கிராமம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
மாவட்டம் முழுவதும் நேற்று இரவு இரண்டு ஷிப்டுகளாக போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.ஆனால் யாரும் சிக்கவில்லை. இன்று காலையிலும் சோதனை நீடித்தது. மாவட்டத்திலுள்ள லாட்ஜ்களிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.கன்னியாகுமரி, நாகர் கோவில், மார்த்தாண்டம் பகுதியில் உள்ள அனைத்து லாட்ஜ்களிலும் சோதனை நடத்தப்பட்டது. திருவண்ணாமலை போலீசார் தெரிவித்த காரின் பதிவு எண் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த காரின் எண் உண்மையான பதிவு எண்ணா? போலி பதிவு எண்ணை பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி தப்பி வந்தார்களா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்கள். மேலும் குமரி மாவட்டத்தில் ஏற்கனவே ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட கொள்ளையர்களின் பட்டியலை எடுத்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.ஏற்கனவே கைது செய் யப்பட்ட கொள்ளையர்கள் தற்பொழுது எங்கு உள்ளார்கள் என்பது குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கேரள வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரெயில் நிலையம் பிளாட்பாரம் முழுவதும் சோதனை செய்து திருடனை தேடினர்.
கோவை,
நெல்லையை சேர்ந்தவர் பால சுப்பிரமணி (வயது 50). இவர் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படித்து வருகிறார்.
சம்பவத்தன்று அவர் நெல்லை செல்வதற்காக தனது நண்பர் கோவை சேர்ந்த விஜய் (45) என்பவருடன் ரெயில் நிலையம் வந்தார். நெல்லை செல்வதற்காக நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ெரயில் ஏறினார். அப்போது தான் கொண்டு வந்த லேப் -டாப் பேக்கை ரெயில் இருக்கையில் வைத்தார்.
பின்னர் கீழே இறங்கி வழி அனுப்ப வந்த நண்பர் விஜயையுடன் பேசி கொண்டு இருந்தார். ரெயில் புறப்படும் நேரமானதும் இருக்கைக்கு சென்றார். அப்போது தான் வைத்த லேப்-டாப் பேக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம் பக்கத்தில் தேடி பார்த்து கிடைக்காததால் அவர் விஜயிடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க கூறி புறப்பட்டு சென்றார். பின்னர் இதுகுறித்து விஜய் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரமேஷ், மகாராஜன், மாரிமுத்து ஆகியோர் உடனே ரெயில் நிலையம் பிளாட்பாரம் முழுவதும் சோதனை செய்து திருடனை தேடினர்.
அப்போது 5-வது பிளாட் பாரத்தில் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தார். போலீசார் அவரை படித்து விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பாலக்காட்டை சேர்ந்த சியாஸ் (வயது 20) என்பதும், அவர் ரெயிலில் பாலசுப்பிரமணியின் லேப்-டாப் மற்றும் ரூ.4000 திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லேப்-டாப் மற்றும் ரூ.4000 பறிமுதல் செய்து சியாசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புகார் வந்த சில மணி நேரங்களில் திருடனை கையும் களவுமாக பிடித்த போலீசாரை பொதுமக்கள், உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
- கொள்ளிடம் அருகே ஓடும் பஸ்ஸில் ஆசிரியையின் 5 பவுன் நகை திருட்டு போனது
- இதுகுறித்து போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி லால்குடி அகிலாண்டபுரம் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி இவரது மனைவி பிரியா (வயது 28) இவர் உத்தமர் கோவிலில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆண்டு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.இதனால் மாலையில் வீடு திரும்ப தாமதமாகும் எனக் கருதிய பிரியா பாதுகாப்பு கருதி வீட்டில் இருந்து ஐந்து பவுன் நகைகளை கைப்பையில் வைத்துக்கொண்டு பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றார். அகிலாண்டபுரத்தில் இருந்து ஒரு தனியார் பஸ்ஸில் நம்பர் ஒன் டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். பின்னர் மீண்டும் ஒரு டவுன் பஸ்ஸில் அங்கிருந்து உத்தமர் கோவில் பகுதிக்குச் சென்றார். அந்த பஸ்ஸில் இருந்து இறங்கி தனது கை பையை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த ஐந்து பவுன் நகைகளை காணாமல் திடுக்கிட்டார்.மர்ம நபர்கள் ஓடும் பஸ்ஸில் அவரது கைப்பையை திறந்து நகைகளை திருடி சென்று விட்டனர் இது தொடர்பாக பிரியா கொள்ளிடம் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டை பூட்டி விட்டு ஆரணியில் உள்ள உறவினர் திருமணத்திற்கு சென்றுள்ளார்கள்.
- வீட்டின் வலது பக்க ஜன்னல் உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கடலூர்:
வடலூர் மாருதி நகர் கோட்டக்கரை பகுதியை சேர்ந்த தேவநாதன் இவரது மனைவி சுமித்ரா (வயது 43). இவர்கள் கடந்த 9-ம்தேதி காலையில் வீட்டை பூட்டி விட்டு ஆரணியில் உள்ள உறவினர் திருமணத்திற்கு சென்றுள்ளார்கள். தொடர்ந்து திருமணம் முடிந்து நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வந்தனர். வீட்டின் வலது பக்க ஜன்னல் உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் வீட்டின் உள்ளே சென்று கதவை திறந்து பார்த்தபோது பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 4 கிராம் கம்மல், 1 கிராம் மூக்குத்தி, 100 கிராம் வெள்ளி கொலுசு ஆகியவற்றை கொள்ளை யர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- இவர் நெய்வேலி சாலையில் மோட்டார் சைக்கிள் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார்.
- கடைக்கு வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைந்து இருப்பதைக் கண்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூர் மாருதி நகர் பழ முதிர்ச்சோலை தெருவில் வசிக்கும் சதீஷ் (வயது 45). இவர் நெய்வேலி சாலையில் மோட்டார் சைக்கிள் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார்கடந்த 11-ந்தேதி இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை 7 மணி அளவில் கடைக்கு வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைந்து இருப்பதைக் கண்டார். கடையின் உள்ளே சென்று பார்த்த போது பித்தளை குத்து விளக்கு 2, காமாட்சி அம்மன் விளக்கு 2, தாம்பூலத் தட்டு 2 போன்றவைகளை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றது தெரியவந்ததுஇது குறித்து உடனடியாக வடலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராக் களை ஆய்வு செய்தனர். அதில் ஒரு வாலிபர் உள்ளிட்ட 2 சிறுவர்கள் இச்சம்பவத்தில் ஈடு பட்டது போலீசாருக்கு தெரியவந்ததுதொடர்ந்து வடலூர் சர்வோதயா நகர் காளி கோயில் தெரு நடரானஜ் மகன் பார்த்திபன் (வயது 18), மாருதி நகர் சுப்பிரமணி மகன் சந்தோஷ் (17), புதுநகர் சக்திவேல் மகன் சுரேந்தர் (எ)சூர்யா (15) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் 18 வயதிற்கும் குறைவாக இருந்த 2 சிறுவர்களை அரசு காப்பகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்