search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95115"

    • போலீஸ்காரர் வீட்டில் நகை-பணம் திருடப்பட்டது.
    • கருப்பாயூரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை

    திருமங்கலம் அருகே உள்ள சிக்கம்பட்டி நடராஜ் நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது43). இவர் மதுரை மத்திய சிறையில் போலீஸ்காரராக உள்ளார். இவரது மனைவி மதுரை ஆவினில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார்.

    கணவன்-மனைவி வழக்கம்போல் வேலைக்கு சென்றனர். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப் பட்டிருந்தது. பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகை, ரூ. 2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின்பேரில் செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கருப்பாயூரணி கங்கைபுரம் 2-வது தெருவை சேர்ந்த போஸ் மகன் காவேரி (41). இவர் குடும்பத்துடன் சொந்த ஊரான திருப்புவனத்துக்கு சென்றார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப் பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அவர் கருப்பா யூரணி வீட்டிற்கு விரைந்து வந்தார்.

    அப்போது பீரோவில் இருந்த ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்தையும், வெள்ளி நகைகளையும் மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கருப்பா யூரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருச்சி அருகே துவாக்குடியில் செல்லாண்டி அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை திருட்டு போனது
    • நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவிலின் கேட் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த செயினை திருடி சென்று விட்டனர்.

    திருச்சி:

    திருச்சியை அடுத்த துவாக்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிடாரி செல்லாண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூசாரி ரவிக்குமார் அந்திக்கால பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றார். மறுநாள் காலையில் கோவில் நடை திறக்க வந்த போது முன்பக்க கேட் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 4 கிராம் செயின் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

    நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவிலின் கேட் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த செயினை திருடி சென்று விட்டனர்.இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை திருவெறும்பூர் ஆய்வாளர் பானுமதி துவாக்குடி போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால் கைரேகை எதுவும் புதிதாக பதிவாகவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகையை திருடி சென்ற சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து லில்லியை கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 49) தொழிலாளி.

    சம்பவத்தன்று ரமேஷ் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்திலிருந்து வெளியூர் செல்வதற்காக பஸ்சில் ஏறினார்.

    அப்போது அவருடைய சட்டைப் பையிலிருந்த பர்சை ஒரு பெண் திருட முயன்றார்.

    உடனே அருகில் நின்றவர்கள் உதவியுடன் அந்த பெண்ணை பிடித்து பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    பின்னர் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஆந்திர மாநிலம் நகரி மாவட்டத்தை சேர்ந்த முனியசாமி மனைவி லில்லி (45) என்பதும், அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து லில்லியை கைது செய்தனர்.

    • ெபாதுமக்கள் உக்கடம் முதல் டவுன்ஹால் வரை சி.சி.டி.வி காமிரா அமைக்க வேண்டும் என்றனர்.
    • இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

    குனியமுத்தூர்.

    கோவை சுந்தராபுரத்தை 32 வயது வாலிபர். இவர் நேற்று பொள்ளாச்சி செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் உக்கடம் பஸ் நிலையம் வந்தார். பின்னர் பஸ் நிலையம் அருகே உள்ள உக்கடம் போலீஸ் நிலையம் காம்பவுண்ட் சுவரின் அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு பொள்ளாச்சி சென்றார்.

    அங்கு தனது வேலைகளை முடித்து விட்டு மீண்டும் உக்கடம் வந்து, மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றார். பின்னர் வாகனத்தை எடுத்து இயக்க முயற்சித்த போது அவரால் முடியவில்லை.

    இதையடுத்து அவர் மோட்டார் சைக்கிளை பார்த்தார். அப்போது பெட்ரோல் டேங்க் திறந்து கிடந்தது. உள்ளே பார்த்த போது பெட்ரோல் சுத்தமாக இல்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால் காலையில் தான் அவர் 3 லிட்டர் பெட்ரோல் நிரப்பி கொண்டு வந்துள்ளார்.

    ஆனால் முற்றிலும் பெட்ரோல் இல்லாமல் துடைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதனால் யாரோ பெட்ரோலை திருடி இருந்தது தெரியவந்தது. பின்னர் அவர் சிறிது தூரம் மோட்டார் சைக்கிளை உருட்டி சென்று அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பி கொண்டு மீண்டும் சென்றார்.

    கோவையில் அண்மை காலங்களாக மோட்டார் சைக்கிள் உள்பட பல வாகனங்களிலும் பெட்ரோல் திருடப்படுவது அதிகரித்துள்ளது.இதுகுறித்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கூறியதாவது:-

    உக்கடம் பஸ் நிலையத்தையொட்டிய பகுதி 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். உக்கடம் பஸ் நிலையத்திலிருந்து டவுன்ஹால் வரை கடைகள் அடர்த்தியாக நெருக்கமாக இருக்கும். கடைகளுக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் கூட அந்த இடத்தில் நின்று விட்டு பேசிக் கொண்டிருப்பார்கள்.

    அப்படி இருந்தும் இப்பகுதியில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் தொடர் பெட்ரோல் திருட்டு நடப்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

    சிலர் வெளியில் சொல்கிறார்கள். பலர் அதனை வெளியே சொல்ல முடியாமல் மவுனமாக சென்று விடுகின்றனர். பெரிய திருட்டு நடந்தால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கலாம். ஆனால் இந்த பெட்ரோல் விஷயத்துக்காக புகார் கொடுப்பதா என்று பலரும் ஏமாற்றத்துடன் இருசக்கர வாகனத்தை உருட்டிக் கொண்டு செல்வதை காண முடிகிறது.

    எனவே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும் உக்கடம் முதல் டவுன்ஹால் வரை சி.சி.டி.வி காமிரா அமைக்க வேண்டும். அவ்வாறு பல்வேறு விழிப்புணர்வுடன் செயல்பட்டால் பெட்ரோல் திருட்டு தடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • கார்களில் இருந்து பணம்-பொருட்கள் திருடி சென்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்களில் திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பைபாஸ் ரோடு சாலினி தெருவை சேர்ந்தவர் ஆதித்ய விக்னேஷ்வர் (31). இவர் இரவு காரில் அண்ணா நகருக்கு சென்றார். அவர் பெட்ரோல் பங்க் அருகே காரை நிறுத்திவிட்டு சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கார் கதவை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த ஒரு பேக் மற்றும் 8 சாவிகளை திருடி சென்றனர். மதுரை முனிச்சாலை, இஸ்மாயில்புரத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத் (30). இவர் காரில் கே.கே.நகருக்கு வந்தார். அப்போது மில்லினியம் மால் அருகே காரை நிறுத்திவிட்டு சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் காரின் பின்பக்க கதவை உடைத்து ஏ.டி.எம். கார்டு, 2 செல்போன்கள் மற்றும் ரூ.6 ஆயிரத்து 700 ரொக்கத்தை திருடி சென்று விட்டனர். இது தொடர்பாக ஆதித்ய விக்னேஷ்வர் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்களில் திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் மர்மநபர் ஒருவர் செல்போன், பர்ஸ் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளார்.
    • வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவிலில் தேவார பாடல் பெற்ற வைத்தியநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது.

    நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமான இங்கு செவ்வாய்க்கிழமை தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சிறப்பு வழிபாடு செய்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில் கடந்த சில வாரங்களாக செவ்வாய்க்கிழமை அன்று கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் மர்ம நபர் ஒருவர் செல்போன் பர்ஸ் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளார்.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கோவிலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.

    நேற்று செவ்வாய்க்கிழமை ஆனதால் எப்படியும் அந்த மர்ம நபரை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கோவிலில் உள்ள சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிகளில் ஒரு வாலிபர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்தார்.

    உடனே வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் திருச்சி உறையூரை சேர்ந்த ஆனந்தன் (வயது 35).

    என்பதும் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    அதை அடுத்து போலீசார் ஆனந்தனை கோர்ட்டில் ஆஜர் படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.

    • வீட்டில் இருந்த பித்தளை பொருட்கள் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
    • சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஆர்.சி. சர்ச் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 51). சம்பவத்தன்று இவரது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பித்தளை பொருட்கள், கியாஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றனர். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காமிரா வில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் திருட்டில் ஈடு பட்டவர்கள் ஆலங்குளம் அருகே புதுப்பட்டியை சேர்ந்த முத்துராஜ்(31), பிள்ளையார்குளத்தை சேர்ந்த ராம் கார்த்திக்(30), ஆலங்குளம் காந்திநகரை சேர்ந்த பிரபாகரன்(33) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    • கடை முன்பு தனது மொபட்டை நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.
    • பல்லடம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சின்னிகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தமிழ்மணி என்பவரது மகன் ஞானப்பிரகாசம் (வயது 30).இவர் சம்பவத்த ன்று பல்லடத்தில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சா லையில் ஒரு கடை முன்பு தனது மொபட்டை நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.திரும்பி வந்து பார்த்தபோது அவ ரது மொபட்டை காணவி ல்லை.

    இது குறித்து பல்லடம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சி.சி.டி.வி. கேமராவில் அபிராமி சுற்றித்திரியும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
    • பாபநாசம் மேலவழுதூரை சேர்ந்த சிவானந்தம் என்பவரிடம் ரூ.50 ஆயிரத்தையும் அபிராமி திருடினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மேலத்தெரு மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முத்து . இவரது மனைவி அபிராமி (வயது 34).

    இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்கு உள்ளது.

    மேலும் இவர் தஞ்சை பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம், ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவற்றை திருடி செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

    இந்த நிலையில் தஞ்சை கீழவண்டிக்கார தெருவை சேர்ந்த வீரமணி என்பவரிடம் அவரது கவனத்தை திசை திருப்பி ரூ.35 ஆயிரத்தை திருடி கொண்டு அபிராமி தப்பினார்.

    இதேப்போல் ரெட்டிபாளையத்தை சேர்ந்த கவிதாவிடம் ரூ.25 ஆயிரம், பாபநாசம் மேலவழுதூரை சேர்ந்த சிவானந்தம் என்பவரிடம் ரூ.50 ஆயிரத்தையும் அபிராமி திருடினார்.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின்படி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மேற்பார்வையில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிராமியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சி.சி.டி.வி. கேமராவில் அபிராமி சுற்றி திரியும் காட்சி பதிவாகி இருந்தது.

    அதனை தொடர்ந்து போலீசார் சுற்றி வளைத்து அபிராமியை பிடித்து கைது செய்தனர்.

    அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

    • மோட்டார் சைக்களில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம், வங்கி பாஸ்புக் மற்றும் காசோலையை மர்ம நபர்கள் திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவில் அடங்கிய காட்டூர் பஜாரில் வசிப்பவர் நாகன் (வயது 68). இவர் வங்கியில் ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்து தனது மோட்டார் சைக்கிளில் வைத்தார். பின்னர் சிறிது தூரம் இருசக்கர வாகனத்தில் சென்று மற்றொரு வங்கிக்கு சென்று விட்டு திரும்பி வந்தார். அப்போது வெளியே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்களில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம், வங்கி பாஸ்புக் மற்றும் காசோலையை மர்ம நபர்கள் திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து நாதன் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலராமன் (வயது 65). விவசாயி. இவர் ரூ.90 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு திருக்கனூரில் இருந்து திருக்கோவிலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.90 ஆயிரம் பணம் காணமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    விழுப்புரம்: 

    புதுவை மாநிலம் திருக்கனூர் அடுத்த சோரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பலராமன் (வயது 65). விவசாயி. இவர் ரூ.90 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு திருக்கனூரில் இருந்து திருக்கோவிலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது திருமங்கலம் சுடுகாடு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கால் கழுவ சென்றுள்ளார்.சிறிது நேரம் கழித்து மோட்டார் சைக்கிளை எடுக்கச் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.90 ஆயிரம் பணம் காணமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து கண்டமங்கலம் போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்தார்

    .புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, புதுவை மாநிலம் வில்லியனூரை அடுத்த முத்துப்பிள்ளையப்பாளையம் ராஜேந்திரன் மகன் ராஜா (18) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் ராஜாவும், அவரது நண்பர் விழுப்புரம் முருகன் என்பவரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.  இதையடுத்து ராஜாவை கைது செய்த கண்டமங்கலம் போலீசார், தலைமறைவாகியுள்ள முருகனை தேடி வருகின்றனர்.

    • சிறிது நேரத்தில் மொய்தீனின் வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம்.கார்டு மூலம் ரூ.89 ஆயிரத்து 865 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.
    • டிப்-டாப் வாலிபர் பணம் எடுக்க உதவி செய்வது போல் நடித்து ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து பணத்தை சுருட்டி இருப்பது தெரிந்தது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த குன்னமஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மொய்தீன்(58). பொன்னேரியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார்.

    இவர் பொன்னேரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது அருகில் நின்று கொண்டி ருந்த டிப்-டாப் வாலிபரிடம் தனது ஏ.டி.எம்.கார்டை கொடுத்து பணம் எடுத்து தரும்படி கூறினார்.

    அந்த வாலிபரும் உதவி செய்வதாக கூறி ஏ.டி.எம்.கார்டை வாங்கினார். மேலும் மொய்தீனிடம் ரகசிய எண்ணையும் கேட்டு தெரிந்து கொண்டார்.

    பின்னர் ஏ.டி.எம்.எந்திரத்தில் பணத்தை எடுக்க முயன்றபோது பணம் வரவில்லை என்று கூறி ஏ.டி.எம்.கார்டை மொய்தீனிடம் கொடுத்து விட்டு டிப்-டாப் வாலிபர் அங்கிருந்து சென்றுவிட்டார். மொய்தீனும் அந்த வாலிபர் கொடுத்த ஏ.டி.எம். கார்டுடன் வீட்டுக்கு வந்தார்.

    சிறிது நேரத்தில் மொய்தீனின் வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம்.கார்டு மூலம் ரூ.89 ஆயிரத்து 865 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மொய்தீன் வங்கிக்கு சென்று விசாரித்த போதுதான் டிப்-டாப் வாலிபர் பணம் எடுக்க உதவி செய்வது போல் நடித்து ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து பணத்தை சுருட்டி இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண் காணிப்பு காமிரா காட்சியை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×