search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கிச்சூடு"

    • பாராமுல்லா மாவட்டம் சக் தாப்பர் க்ரீரி பட்டான் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுடன் நடந்த மோதல் நடந்தது
    • வீட்டின் காம்பவுண்ட் சுவரின் அருகில் இருந்து பக்கத்தில் உள்ள மரங்களை நோக்கி பயங்கரவாதிகள் ஓடுகின்றனர்

    காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் உள்ள சத்ரூ பகுதியில் பயங்கரவாதிகள்-பாதுகாப்புப் படையினர் இடையே கடந்த சனிக்கிழமை அன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் காயமடைந்த 2 வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு ஒளிந்திருந்த பயங்கரவாதிகள் மீது துப்பாக்கியால் தாக்கினர். கதுவா பகுதியில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

    இதையடுத்து அன்றைய தினமே பாராமுல்லா மாவட்டம் சக் தாப்பர் க்ரீரி பட்டான் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பான பரபரப்பூட்டும் டிரோன் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

    அந்த வீடியோவில் வீட்டின் காம்பவுண்ட் சுவரின் அருகில் இருந்து பக்கத்தில் உள்ள மரங்களை நோக்கி பயங்கரவாதிகள் ஓடுவதும், ஒருவன் தரையில் விழுந்து தவழ்ந்து செல்லும்போது ராணுவ வீரர்களின் துப்பாக்கி குண்டுகள் கான்கிரீட் சுவரைத் துளைத்து அப்பகுதியை புழுதிப் புகை சூழ்வதும் பதிவாகியுள்ளது. இதனால் பயங்கரவாதிகள் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டு இறுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் குண்டடிபட்ட பயங்கரவாதி  உயிருக்கு போராடும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.

    • புளோரிடா மாகாணத்தில் உள்ள கோல்ப் கிளப்பில் விளையாட டிரம்ப் சென்றார்.
    • அங்கு காணப்பட்ட மர்ம நபரை நோக்கி அவரது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் களமிறங்கி உள்ளார். இதனால் அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இதற்கிடையே, புளோரிடா மாகாணத்தில் உள்ள கோல்ப் கிளப்பில் விளையாட டிரம்ப் சென்றார். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் காணப்பட்ட மர்ம நபரை நோக்கி அவரது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.

    இதையடுத்து, அதிகாரிகள் டிரம்பை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். அதிபர் வேட்பாளர் டிரம்ப் பாதுகாப்பாக உள்ளார் என அவரது கட்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

    இந்நிலையில், துப்பாக்கிச்சூடு குறித்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள செய்தியில், முன்னாள் அதிபர் டிரம்ப் மற்றும் புளோரிடாவில் உள்ள அவரது சொத்துக்களுக்கு அருகில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட செய்திகள் குறித்து எனக்கு விளக்கப்பட்டது. அவர் பாதுகாப்பாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்காவில் வன்முறைக்கு இடமில்லை என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • அதிபர் தேர்தலுக்காக டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    • கோல்ப் மைதானத்தில் திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் களமிறங்கி உள்ளார். இதையடுத்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், புளோரிடா கோல்ப் கிளப்பில் விளையாட டிரம்ப் சென்றார். அப்போது அங்கு திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதையடுத்து, அதிகாரிகள் டிரம்பை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

    மேலும், அதிபர் வேட்பாளர் டிரம்ப் பாதுகாப்பாக உள்ளார் என அவரது கட்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. ஏற்கனவே, பென்சில்வேனியாவில் நடந்த பிரசாரத்தில் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இரு மாதங்களில் டிரம்ப் மீது நடத்தப்பட்ட 2வது தாக்குதல் முயற்சி இது என்பதால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உயிரிழந்தவர்களில் 2 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
    • படுகாயம் அடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உயிரிழந்தவர்களில் 2 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் என அடையாளம் காணப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். போலீசார் விசாரணையில் 4 பேரை சுட்டுக்கொன்றவர் 14 வயது மாணவர் என்பது தெரியவந்துள்ளது.

    அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. இப்போது நடந்துள்ள சம்பவத்தில் சிறுவனே கொலைகாரனாக மாறி இருப்பது பெரும் வேதனை அளிப்பதாக, அந்நாட்டு கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • திருவாரூர் நீடாமங்கலம் அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி பிடிபட்டான்.
    • ரவுடி நிர்மல்ராஜை உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் சுட்டுப்பிடித்துள்ளார்.

    திருவாரூர் நீடாமங்கலம் அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

    காவலரை வெட்டிவிட்டு தப்பியோட முயன்றபோது ரவுடி நிர்மல்ராஜை உதவி ஆய்வாளர் சந்தோஷ் குமார் சுட்டுப்பிடித்துள்ளார்.

    போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் காலில் காயமடைந்த ரவுடி மனோ நிர்மல்ராஜ்க்கு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • செயின்ட் ஜோன் போர்டிங் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • துப்பாக்கியால் சுட்டதால் 10 வயது மாணவனின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

    தனது பையில் துப்பாக்கியை மறைத்து பள்ளிக்கு எடுத்துச்சென்ற 5 வயது மாணவன் 3ம் வகுப்பு மாணவனை சுட்ட சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள செயின்ட் ஜோன் போர்டிங் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    துப்பாக்கியால் சுட்டதால் 10 வயது மாணவனின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விவகாரம் தொடர்பாக தனியார் பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் துப்பாக்கியால் சுட்ட மாணவன் மற்றும் அவரது தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

    சிறுவன் கையில் துப்பாக்கி எப்படி வந்தது? என விசாரணை மேற்கொண்டு வருவதாக சுபால் மாவட்ட எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பைகளை சோதனையிட போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 

    • சம்பவ இடத்தில் இருந்து மர்ம நபர்கள் தப்பியோடிய நிலையில் போலீசார் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
    • நேற்று மாலை 6.20 மணியளவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்

    வன்முறைகளின் உற்பத்திக் களமாக அமெரிக்கா மாறி வருவதை நாளுக்கு நாள் அதிகமாக அரங்கேறி வரும் சம்பவங்கள் நிரூபிப்பதாக உள்ளது. பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் வாரத்திற்கு ஒன்று நடப்பதால் அந்நாட்டின் மக்களுக்கு வன்முறை என்பது நார்மலைஸ் ஆனதாக மாறி வருகிறது.

    அந்த வகையில், நியூயார்க் நகரில் உள்ள மேப்பில்வுட் பூங்காவில் நேற்று மாலை 6.20 மணியளவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பூங்காவில் இருந்தவர்களில் 6 பேர் குண்டடி பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சம்பவ இடத்தில் இருந்து மர்ம நபர்கள் தப்பியோடிய நிலையில் போலீசார் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அமெரிக்காவில் ஏறத்தாழ அனைவரும் சட்டப்பூர்வமாகத் துப்பாக்கி வைத்துள்ளனர். அதற்கான தோட்டாக்களை அவர்கள் மளிகைக் கடைகளில் உள்ள மெஷினில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதுபோல் எடுத்துக்கொள்ளும் வசதியும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மிசிசிப்பி மாகாணத்தில் இண்டியாநோலா தேவாலய தெருவில் உள்ள நைட் கிளப்பில் இந்த துப்பாக்கிச்சூடு அரங்கேறியுள்ளது.
    • துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை மிசிசிப்பி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள நைட் கிளப் ஒன்றில் மர்ம நண்பர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 16 பேர் குண்டடிபட்டுள்ளனர். சமீப காலமாக துப்பாக்கிச்சூடு சமபாவங்கள்  அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது.

    மிசிசிப்பி மாகாணத்தில் இண்டியாநோலா தேவாலய தெருவில் உள்ள நைட் கிளப்பில் நேற்று நள்ளிரவுக்கு மேல்  இந்த துப்பாக்கிச்சூடு அரங்கேறியுள்ளது. கிளப்பின் வாசலில் பலர் நின்றிருந்தபோது அவர்கள் மீது நடந்த இந்த துப்பாக்கிச்சூத்தில் 19 வயது இளைஞன் உட்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குண்டடி பட்ட  16 பெரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை மிசிசிப்பி போலீசார்  தீவிரமாக தேடி வருகின்றனர்.

    அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்பது சகஜமாக உள்ள நிலையில் மளிகைக் கடைகளில் ஏடிஎமில் பணம் எடுப்பது போன்று குண்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்ற அளவுக்கு வந்துள்ளது. அதை அந்நாட்டு மக்கள் வரவேற்றும் உள்ளனர். எனவே அங்கு வன்முறை சகஜமாகிவருவதாக நெட்டிசன்கள் அபிப்பிராயப்படுகின்றனர். 

    • துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
    • கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிறகு டிரம்ப் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கடந்த 14-ந் தேதி பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் நகரில் டிரம்ப் பிரசாரம் செய்தபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் அவரது வலது காதில் தோட்டா உரசி சென்றதில் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

    இந்த நிலையில் கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிறகு டிரம்ப் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். மிச்சிகன் மாகாணத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட அவர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறும்போது, நான் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் கடந்த வாரம் ஜனநாயகத்திற்காக ஒரு குண்டை உடலில் வாங்கினேன் என்றார்.

    • துப்பாக்கிச் சூட்டுக்கு பின் நேற்று[ஜூலை 18] நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் டிரம்ப் கட்சியினரிடையே மனம் திறந்துள்ளார்.
    • குடியரசுக் காட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் தங்களது காதில் டிரம்பைப் போல் கட்டு போட்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    அமரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கியுள்ளார் டிரம்ப். கடந்த வாரம் பென்சில்வேனியாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டது. தலையை சற்று அசைத்ததால் குண்டு அவரது வலது காதின் மேற்பகுதியை உரசிச் சென்றது. நூலிழையில் டிரம்ப் உயிர்தப்பிய நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய தாமஸ் க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டான். டிரம்புக்கு அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரி  கோரி காம்ப்ரேட்டோர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தார்.

     

     

    இந்நிலையில்  துப்பாக்கிச் சூட்டுக்கு பின் நேற்று[ஜூலை 18] நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் டிரம்ப் கட்சியினரிடையே மனம் திறந்துள்ளார். குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டபின் மாநாட்டில் பேசிய அவர், இன்றுதொட்டு நான்கு மாதத்தில் [அதிபர் தேர்தலில்] நம் மிகப்பெரிய வெற்றியை பெற உள்ளோம். நான் முழு அமெரிக்காவுக்கும் அதிபர், பாதி அமெரிக்காவுக்கு மட்டுமல்ல என்று தெரிவித்தார்.

    மேலும் துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து விவரித்த அவர், 'எல்லா இடங்களிலும் ரத்தம் சிந்திக்கொண்டிருந்தது, இருந்தபோதிலும் நான் மிகவும் பாதுகாப்பாகவே உணர்ந்தேன். கடவுள் என் பக்கம் இருக்கிறார். கடைசி நொடியில் நான் எனது தலையை அசைக்காமல் இருந்திருந்தால் தோட்டா குறிவைக்கப்பட்ட எனது நெற்றியில் பாய்ந்திருக்கும். இன்று உங்கள் முன்னாள் நான் இருந்திருக்க மாட்டேன்.

     

    நான் இங்கு இருந்திக்க வேண்டியவனே இல்லை. ஆனால் கடவுளின் கருணையால் இங்கு உங்கள் முன் நிற்கிறேன்' என்று தெரிவித்தார்.மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த பாதிகாப்பு வீரருக்கு  டிரம்ப் அஞ்சலி செலுத்தினார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற குடியரசுக் காட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களது காதில் டிரம்பைப் போல் கட்டு போட்டிருந்தது அனைவரின் கவனத்தையும்  ஈர்த்து வருகிறது. முன்னதாக   ஒடிசா மாநிலம் பூரியிலுள்ள கடவுள் ஜகந்நாதர்தான் டிரம்ப்பின் உயிரைக் காப்பாற்றினார் என்று கோவில் பூசாரி சொன்னது குறிப்பிடத்தக்கது.

    • எல்லைக்கோடு அருகே குறைந்தது 3-4 பயங்கரவாதிகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
    • ராணுவத்தால் முறியடிக்கப்பட்ட இரண்டாவது ஊடுருவல் முயற்சி இதுவாகும்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே இன்று (ஜூலை 18) பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

    தொடர்ந்து நடந்த நடவடிக்கையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள பகுதியில் குறைந்தது 3-4 பயங்கரவாதிகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

    ஒரு வாரத்திற்குள் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் ராணுவத்தால் முறியடிக்கப்பட்ட இரண்டாவது ஊடுருவல் முயற்சி இதுவாகும்.

    வடக்கு காஷ்மீர் மாவட்டத்தின் கெரான் செக்டரில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகில் என்கவுன்டர் தொடங்கியதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

    துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் மேற்கொண்டு தகவல்கள் இனி வெளிவரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஜம்மு பகுதியில் நடந்த இரண்டாவது பெரிய துப்பாக்கி சூடு இதுவாகும்.
    • ஜம்மு பகுதியில் கடந்த 32 மாதங்களில் 48 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    தோடாவின் தேசா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி, பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று இரவு அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். உடனே பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

    இருதரப்பினருக்கும் இடையே நேற்றிரவு முதல் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் ஒரு அதிகாரி உட்பட 4 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 5 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

    ஜம்மு பகுதியில் ஒரு வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும். கடந்த வாரம் கதுவாவில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, ஜம்மு பகுதியில் நடந்த இரண்டாவது பெரிய துப்பாக்கி சூடு இதுவாகும்.

    பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் தொடங்கிய பயங்கரவாத தாக்குதல்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பயங்கரவாதம் இல்லாத பகுதியான ஜம்மு முழுவதும் தற்போது பரவியுள்ளது.

    ஜம்மு பகுதியில் கடந்த 32 மாதங்களில் 48 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    ×