search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கிச்சூடு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்க அதிபர்கள் மற்றும் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் சுடப்படுவது இது முதல் முறை அல்ல.
    • வரலாறு நெடுகிலும் இதுவரை நடந்த துப்பாக்கிசூடு சம்பவங்களை மீளப் பார்க்கவேண்டி உள்ளது.

    முன்னாள் அமெரிக்க அதிபரும் தற்போதைய  அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் மீது நேற்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது உலக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. நேற்று பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த டிரம்ப் மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்ட நிலையில் அவரது வலது காதின் மேற்பகுதியை குண்டு துழைத்துச் சென்றது. நூலிழையில் டொனால்டு டிரம்ப் உயிர்தப்பியுள்ளார்.

    அமெரிக்க அதிபர்கள் மற்றும் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் சுடப்படுவது இது முதல் முறை அல்ல. கறுப்பின அடிமை முறையை ஒளித்து அமெரிக்காவின் சகாப்தத்தை மாற்றி எழுதிய ஆபிரகாம் லிங்கனே சுட்டுக்கொள்ளப்பட்டவர் தான். அந்த வகையில் வரலாறு நெடுகிலும் இதுவரை நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களை மீளப் பார்க்கவேண்டி உள்ளது.

     

    ஆபிரகாம் லிங்கன் 

    1865 இல் அமெரிக்க உள்நாட்டு போர் இறுதிக் கட்டத்தில் இருந்த சமயத்தில் தலைநகர் வாஷிங்டனில் உள்ள போர்ட் தியேட்டரில் நடந்த நாடகத்தை பார்த்துக்கொண்டிருந்த ஆபிரகாம் லிங்கன் ஜான் வில்கிஸ் பூத் என்பவரால் நெற்றியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

     

    வில்லியம் மெக்கின்லே

    1901 ஆம் ஆண்டில் அப்போதய அமெரிக்க அதிபர் மெக்கின்லே அரசமைப்பை விரும்பாத அனார்கிஸ்டான லியோன் ஷோல்கோஸ் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

     

    தியோடர் ரூஸ்வெல்ட்

    1912 ஆம் ஆண்டு முன்னாள் அதிபராக இருந்த ரூஸ்வெல்ட் மீண்டும் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கினார். பொதுக்கூட்டத்தில் பிரச்சாரத்தின்போது அவர் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. அவரது நெஞ்சை நோக்கி சுடப்பட்டு, அவரது பையில் 50 பக்கங்கள் கொண்ட பேசுவதற்காக எடுத்துவைத்த குறிப்புக்கள் அடங்கிய காகிதக் கட்டின்மீதும், இரும்பினால் ஆன கண் கண்ணாடி மீதும் பட்டு குண்டு வலுவிழந்ததால் அவர் உயிர்பிழைந்தார். துப்பாக்கியால் சுடப்பட்ட போதும் அவர் தனது உரையை தொடர்ந்தார்.

     

    பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்

    1933 ஆம் ஆண்டு நடந்த தாக்குதலில் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் உயிர்பிழைத்த நிலையில் மேயர் ஆன்டன் செர்மாக் மீது குண்டு பாய்ந்து அவர் உயிரிழக்க நேரிட்டது.

     

    ஜான் எப்.கென்னடி

    1963 ஆம் ஆண்டு அதிபராக இருந்த கென்னடி டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டாலாஸ் நகரில் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது லீ ஹார்வே ஆஸ்வேல்டு என்பவரால் குறிவைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். வியட்நாம் போர் பதற்றம் மற்றும் சமூக உரிமைப் போராட்டங்கள் அந்த காலகட்டத்தில் அமெரிக்காவை சூழ்ந்திருந்த சமயத்தில் கென்னடியின் படுகொலை அமெரிக்காவின் மிகவும் வன்முறையான காலகட்டமாக பார்க்கப்படுகிறது

     

    ராபர்ட் எப்.கென்னடி

    ஜான் கென்னடி சுட்டுக்கொள்ளப்பட்டபின் அதற்கு பிந்தைய காலகட்டத்தில் அவரின் சகோதரர் ராபர்ட் கென்னடி அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அந்த சமயத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அம்பாசிடர் ஹோட்டலில் வைத்து அவரும் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அமெரிக்க சமூக உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்ட அடுத்த இரண்டே மாதத்தில் ராபர்ட் கென்னடியின் கொலை அரங்கேறியது அப்போதய அமெரிக்க அரசியலில் பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தியது.

     

    ஜார்ஜ் வாலஸ்

    1972 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜார்ஜ் வாலஸ் மீது மேரிலாந்தில் உள்ள ஷாப்பிங் மாலில் வைத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த வால்ஸ்  தனது வாழ்நாள் முழுவதும் படுக்கையிலேயே கழித்தார்.

     

    ஜார்ஜ் போர்ட்

    1975 இல் அதிபராக இருந்த போர்ட் மீது 17 நாட்களில் இரண்டு முறை பெண்கள் இருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ஆனால் இரண்டு முறையும் போர்ட் காயங்களின்றி உயிர்தப்பினார்.

     

    ரொனால்டு ரீகன்

    1981 ஆம் ஆண்டு அதிபராக இருந்த ரீகன் மீது வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் வைத்து நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்தார்.

    • வடக்கு காகஸ் பகுதியில் உள்ள தாகெஸ்தான் பிராந்தியத்தில் இந்த வெறிச்செயல்கள் அரேங்கேற்றியுள்ளது.
    • இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயகராவதிகளில் 5 பேரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

    ரஷ்யாவில் வார இறுதி நாளான [ஞாயிற்றுக்கிழமை] நேற்று [ஜூன் 23] யூத வழிபாட்டுத் தளங்கள் மீதும் போலீஸ் நிலையம் மீதும் துப்பாக்கி ஏந்திய மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் 1 மதகுரு, 14 போலீசார் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். வடக்கு காகஸ் பகுதியில் உள்ள தாகெஸ்தான் பிராந்தியத்தில் இந்த வெறிச்செயல்கள் அரேங்கேற்றியுள்ளது.

     

    நேற்று அப்பகுதியில் உள்ள சர்ச்களுக்குள்ளும் Synagogue எனப்படும் யூத வழிபாட்டுத் தளங்களுக்குள்ளும் திடீரென துப்பாக்கிகளுடன் நுழைந்த அந்த கும்பல் வழிபாட்டுக்காக கூடியிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர்.

    தாக்குதலினால் மகாச்காலா பகுதியில் உள்ள சர்ச் உட்பட இரண்டு சர்ச்கள் தீப்பற்றி எறிந்தன. சம்பவங்களின்போது அங்கு கூடியிருந்த மக்கள் உயிர்பிழைத்த நிலையில் மதகுரு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    மேலும் தப்பிச் செல்லும்போது போலீஸ் போஸ்ட் மீதும் அந்த கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இந்த மொத்த தாக்குதல்களிலும் இதுவரை 14 போலீசார் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் உடனடியாக நடந்த்து இல்லை என்றும் பயங்கரவாதிகளால் திட்டமிட்டு ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

    இதுவரை இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயகராவதிகளில் 5 பேரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் தப்பியோடியவர்களை தேடும் பனி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 மாதத்துக்கு முன்னாள் ரஸ்ய தலைநகர் மாஸ்க்கோவில் உள்ள கிரோகஸ் சிட்டி ஹாலில் ஐஎஸ்ஐஎஸ்  தீவிரவாதிகலால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 133 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது இந்த வெறிச்செயல் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு வாரத்துக்குள் அடுத்த தீவிரவாத தாக்குதல் நேற்று நடந்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
    • துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிக்கும்போது அருகில் இருந்த கிராமத்தில் வீடு வீடாக சென்று தண்ணீர் கேட்டுள்ளனர்.

    ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டம் தோடா பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியதில் இரண்டு ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொள்ளப்பட்டான். தப்பிய மற்றோரு பயங்கரவாதியை தேடும் பணிகள் டிரோன்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

     

    கடந்த ஜூன் 9 ஆம் தேதி காஸ்மீரின் ரைசி பகுதியில் பக்தர்கள் சென்ற பயணிகள் பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். ஒரு வாரத்துக்குள் அடுத்த பயங்கரவாத தாக்குதல் நேற்று நடந்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து ராணுவம் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று முகாம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிக்கும்போது அருகில் இருந்த கிராமத்தில் வீடு வீடாக சென்று தண்ணீர் கேட்டுள்ளனர். ஆனால் சுதாரித்துக்கொண்ட கிராம மக்கள் வீட்டின் கதவுகளை அடைத்துக்கொண்டு உள்ளேயே இருந்துகொண்டனர்.

    ராணுவம் பின்னாலயே துரத்தி வரும் நிலையில் விரக்தியிலும் கோபத்திலும் இருந்த அவர்கள் கண்மூடித்தனமாக வானத்தை நோக்கிச் சுட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற கிராமவாசி ஒருவரையும் சுட்டுள்ளனர். அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • யுவராஜூக்கு எந்த குற்றப் பின்னணியும் இல்லாத நிலையில் இந்த கொலை எதற்கு நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது
    • இந்த கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒன்று என்று தெரியவந்துள்ளது.

    கனடாவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்திய இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. பஞ்சாப் மாநிலம் லூதியானவை சேர்ந்த 28 வயதாகும் யுவராஜ் கோயல் கடந்த 2019 ஆம் ஆண்டு மேற்படிப்புக்காகக் கனடா சென்றார். படிப்பு முடிந்து அங்கேயே சேல்ஸ் எக்சிகியூடிவ் வேலையில் சேர்ந்த அவர் சமீபத்தில்தான் குடியுரிமை பெற்று கனடாவிலேயே செட்டில் ஆனார்.

    இந்நிலையில் கடந்த ஜூன் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அவரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

    நேற்று முன் தினம் [ஜூன் 8] 3 இந்தியர்கள் மற்றும் ஒரு கனேடியர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது. யுவராஜூக்கு எந்த ஒரு குற்றப் பின்னணியும் இல்லாத நிலையில் இந்த கொலை எதற்கு நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது. போலீசார் நடத்தி வரும் விசாரணையில் இந்த கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒன்று என்று தெரியவந்துள்ளது.

     

    ஏற்கனவே இந்தியா மற்றும் கனடாவுக்கிடையில் பஞ்சாபில் தனி நாடு கோரும் காலிஸ்தான் கிளர்ச்சியாளர்களை முன்வைத்து பிரச்சனை நிலவி வருகிறது. சமீபத்தில் கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர் கொல்லப்பட்டதில் இந்திய அரசுக்குத் தொடர்புள்ளது என்று கனடா குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஷிவ்கோடா கோவிலில் இருந்து கத்ராவுக்கு பேருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது தாக்குதல்.
    • தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசியில், புனித தலத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.

    இதில், 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    ஷிவ்கோடா கோவிலில் இருந்து கத்ராவுக்கு பேருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர்.

    இந்த தாக்குதலை நடத்தியது ரஜோரி, பூஞ்ச் மற்றும் ரியாசியின் மேற்பகுதியில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதக் குழு என தெரியவந்துள்ளது.  

    • உத்தரப் பிரதேசத்தில் மகன்களின் கண் முன்னேயே தந்தை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • அர்ஷத் துப்பகையால் சுடப்பட்ட காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் மகன்களின் கண் முன்னேயே தந்தை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் துணி வியாபாரம் செய்து வருபவர் அர்ஷத் (32). இவர் தனது குடும்பத்துடன் நீச்சல் குளத்துக்கு குளிக்கச் சென்றுள்ளார்.

    அப்போது அங்கு ஏற்பட்ட சிறிய பிரச்சனை கைகலப்பாக மாறி துப்பாக்கிச்சூடு வரை சென்றுள்ளது. பேசிக்கொண்டிருந்த போதே அர்ஷத் மீது இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட்டத்தில் சம்பவ இடத்திலேயே அர்ஷத் உயிரிழந்தார்.

    அப்போது அவரது மகன்கள் உடன் இருந்தும் அவரை காப்பாற்ற முடியாமல் போனது .சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அங்கு நடத்த பிரச்சனைக்கு என்ன காரணம் என்று தெரியவராத நிலையில் நீச்சல் குளத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள அர்ஷத் துப்பகையால் சுடப்பட்ட காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

    • கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சாபோய்ங் மாலில் இருந்து வெளியே வரும்போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
    • ஜன நடமாட்டம் நிறைந்த பொது சாலையில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சமபவம் சர்ச்சையாகியுள்ளது .

     மெக்சிகோவில் புதிய அதிபர் பதியேற்ற ஒரு நாளுக்குள் பெண் மேயர் நடுரோட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லத்தீன் அமெரிக்காவிலேயே முதல் முறையாக பெண் ஒருவர் அதிபராக மெக்சிகோவில் தேர்வாகியுள்ளார்.

     

    இந்நிலையில் இடதுசாரி அரசியல்வாதியும் முன்னாள் மேயருமான கிலவ்டியா செயின்பவும் மெக்சிகோ அதிபாராக தேர்வான 24 மணி நேரத்துக்குள் கோட்டிஜா நகர பெண் மேயரான யோலாண்டோ சான்செஸ்  ஜன நடமாட்டம் நிறைந்த பொது சாலையில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சமபவம் சர்ச்சையாகியுள்ளது .

     

    கடந்த 2021 மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற சான்செஸ் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சாபோய்ங் மாலில் இருந்து வெளியே வரும்போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். 3 நாட்கள் கழித்து அவர் மீட்கப்பட்டதாக மெக்சிகோ அரசாங்கம் தெரிவித்தது. இந்நிலையில் நேற்று (ஜூன் 4) அவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இதற்கிடையில் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருவதாக அரசு தரிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பிரபலமான சுற்றுலா இடத்தை குறிவைத்து துப்பாக்கிச்சூடு
    • பலி எண்ணிக்கை, உயிரிழந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

    மத்திய ஆப்கானிஸ்தானில் உள்ள பாமியான் மாகாணத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஆறுபேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் ஸ்பெயின் நாட்டைச் சேரந்தவர்கள். துப்பாக்கிச்சூடு பிரபலமான சுற்றுலா பகுதியில் நடைபெற்றது.

    இது தொடர்பாக ஏழு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும். பொறுப்பேற்கவில்லை.

    உயிரிழந்த வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தகவல் வெளியிடாத நிலையில், ஸ்பெயின் வெளியுறவுத்துறை அமைச்சகம், தங்கள் நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காயம் அடைந்துள்ளார் எனத் தெரிவித்துள்ளது.

    காயம் அடைந்தவர் காபுல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

    தலிபான் அரசுக்கு எதிரான குழுக்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவர்கள் பள்ளிகள், மருத்துவமனைகள், மசூதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறியது.

    • நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
    • ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

    மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் இன்று சி-60 கமாண்டோக்களுடன் நடந்த என்கவுன்டரில் இரண்டு பெண்கள் உட்பட 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பெரிமிலி தாலம் என்ற பெயரில் நக்சலைட்டுகள் ஆயும் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மகராஷ்டிராவில் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள கட்டரங்கட்டா கிராமத்தின் அருகே நக்சலைட்டுகள் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், கட்சிரோலி காவல்துறையின் சிறப்புப் போர்ப் பிரிவான சி-60 கமாண்டோக்களின் இரண்டு பிரிவுகள் உடனடியாக அப்பகுதியில் தேடுதலுக்காக அனுப்பப்பட்டன.

    பிரவுகள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோது, நக்சலைட்டுகள் கண்மூடித்தனமாக அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு சி -60 வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

    துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்டதை அடுத்து, அந்த இடத்தில் இருந்து ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

    கொல்லப்பட்ட நக்சல்களில் ஒருவரான பெரிமிலி தாலத்தின் பிரதேசக் குழு உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர் கம்மாண்டர் வாசு கோர்ச்சா ஆவர்.

    அந்த இடத்தில் ஏகே 47 ரக துப்பாக்கி, கார்பைன், இன்சாஸ் துப்பாக்கி, நக்சல் புத்தகம் மற்றும் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன.

    • என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் ஏற்கனவே சுட்டு கொல்லப்பட்டனர்.
    • பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சூடு.

    ஜம்மு மற்றும் காஷ்மீரின் தெற்கே குல்காம் மாவட்டத்தில் ரெட்வானி பயீன் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது.

    இதில், பயங்கரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். கடந்த செவ்வாய் கிழமை இதே பகுதியில் நடந்த என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் ஏற்கனவே சுட்டு கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், நேற்று நடந்த சண்டையில் 3-வது பயங்கரவாதி கொல்லப்பட்டு உள்ளார்.

    பயங்கரவாதியை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

    இதனை தொடர்ந்து, காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டது.

    • சிறுவன் கத்தியுடன் போலீசாரை நோக்கி வந்தான்.
    • சிறுவன் தொடர்ந்து தாக்குதல் நடத்த முயன்றதால் அவனை போலீசார் சுட்டனர்.

    ஆஸ்திரேலியாவின் பெர்த்தின் புறநகர் பகுதியான வில்லெட்டனில் 16 வயது சிறுவன் ஒருவன் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டான். பொதுமக்களை கத்தியால் குத்தி தாக்கினான். இதையறிந்ததும் போலீசார் அங்கு விரைந்தனர்.

    அப்போது அந்த சிறுவன் கத்தியுடன் போலீசாரை நோக்கி வந்தான். அவனை கத்தியைக் கீழே போடுமாறும், சரண் அடையும்படியும் போலீசார் தெரிவித்தனர்.

    ஆனால் அதற்கு மறுத்த சிறுவன் தொடர்ந்து தாக்குதல் நடத்த முயன்றதால் அவனை போலீசார் சுட்டனர். பின்னர் அவனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்தான். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இந்திய விமானப்படை வீரர்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் மீது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்
    • காயமடைந்த வீரர்கள் உயர் சிகிச்சைக்காக உத்தம்பூரில் உள்ள கமாண்டோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், இந்திய விமானப்படை வீரர்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் மீது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 இந்திய விமானப்படை வீரர்கள் காயம் அடைந்தனர். அதில், 2 பேரில் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று சொல்லப்படுகிறது.

    காயமடைந்த வீரர்கள் உயர் சிகிச்சைக்காக உத்தம்பூரில் உள்ள கமாண்டோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    சம்பவம் நடந்த பகுதியில் ராணுவம் சோதனை மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

    ×