search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கிச்சூடு"

    • துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • துப்பாக்கிச் சூடு தொடர்பாக தகவல் தருபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும்.

    அமெரிக்காவில் உள்ள மிசவுரி கன்சாஸ் நகரின் டவுன்டவுனில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் போலீசார் விரைந்தனர். அங்கு, துப்பாக்கிச்சூடு காயங்களுடன் 8 பேர் கிடந்தனர். இதில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்றும் துப்பாக்கிச் சூடு தொடர்பாக தகவல் தருபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • 8 மாத கர்ப்பிணி பெண் தனது 2 வயது மகனால் தற்செயலாக சுடப்பட்டார்.
    • படுகாயத்துடன் கிடந்த லாராவை மீட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் லாரா இல்க் (31). 8 மாத கர்ப்பிணியும் கூட.

    இந்நிலையில், லாரா இல்க் திடீரென தொலைபேசியில் போலீசாரை அழைத்து தனது 2 வயது மகனால் சுடப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அதிகாரிகள் லாராவின் வீட்டிற்கு சென்று பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்றனர். மகனை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு கேட்டுக்கொண்ட லாரா, சிறுவன் தற்செயலாக சுட்டு விட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    படுகாயத்துடன் கிடந்த லாராவை மீட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும், 8 மாத கருவும் பரிதாபமாக இறந்தது.

    விசாரணையில், லாரா வீட்டு வேலைகளில் மும்முரமாக இருந்தபோது பெற்றோரின் படுக்கையறைக்குச் சென்ற சிறுவன் துப்பாக்கியை எடுத்து விளையாடும்போது துரதிர்ஷ்டவசமாக இச்சம்பவம் நடந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூட்டத்தில் இருந்தவர் திடீரென துப்பாக்கியால் சுடத்தொடங்கினார்
    • இதன்காரணமாக 2-வது நாள் இசைவிழா ரத்து செய்யப்பட்டது

    வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ் என்ற இடத்தில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் திறந்தவெளி கலையரங்கம் உள்ளது. இங்கு இரண்டு நாட்கள் கொண்ட இசைவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

    அதன்படி அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு முதல்நாள் இசைவிழா நடைபெற்று கொண்டிருக்கும்போது, அரங்கத்திற்கு வெளியே உள்ள மைதானத்தில் பலர் கூடியிருந்தனர்.

    போலீசார் பாதுகாப்புக்கு நின்றிருந்த போதிலும், ஒரு நபர் துப்பாக்கியால் சுடத்தொடங்கினார். இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியபின், அந்த நபர் கூட்டத்தை பயன்படுத்தி தப்பி ஓட முயன்றார்.

    ஆனால், போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் காயம் அடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    துப்பாக்கிச்சூடு நடைபெற்ற போதிலும் இசைவிழா தொடர்ந்து நடைபெற்றது. மைதானத்தில் இருப்பவர்கள், அந்த இடத்தைவிட்டு வெளியேறுமாறு அதிகாரிகளால் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதன்பின் எந்த அச்சுறுத்தலும் இல்லை என விழா ஒருங்கிணைப்காளர்கள் தெரிவித்தனர்.

    ஆனால், ஞாயிற்றுக்கிழமை இசைவிழா ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

    • சிறுவனை கைது செய்த போலீசார் லூகாவாக் காவல் துறையின் வளாகத்தில் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளான்.
    • ஆசிரியருக்கு கழுத்து அருகே துப்பாக்கிச் சூடு காயம் ஏற்பட்டுள்ளது.

    தென்கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள போஸ்னியா என்கிற நாட்டின் நகரமான லூகாவாக்கில் இயங்கி வரும் ஒரு தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியரை 13 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னாள் மாணவரான சிறுவன் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், பள்ளியின் துணை முதல்வரும், ஆங்கிலப் பாட ஆசிரியராக பணிபுரிந்து வந்தவரை சிறுவன் துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதையடுத்து, சிறுவனை கைது செய்த போலீசார் லூகாவாக் காவல் துறையின் வளாகத்தில் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளான்.

    மேலும், சிறுவனிடம் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் விசாரணை முடியும் வரை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் கூறுகையில், " ஆசிரியருக்கு கழுத்து அருகே துப்பாக்கிச் சூடு காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருடைய உடல்நிலை சீராக உள்ளது" என கூறப்பட்டுள்ளது.

    • உணவகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
    • சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்கா, மிசோரி மாகாணம், கன்சஸ் நகரில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    நேற்று இரவு 9 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கிச்சூடு சம்பவங்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. 

    • கத்திக்குத்து தாக்குதலில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை சந்தித்தார் பிரான்ஸ் அதிபர்.

    பூங்காவில் குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் கையில் கத்தியுடன் பூங்காவிற்குள் நுழைந்தான்.

    திடீரென அவன் அங்கிருந்த சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை சரமாரியாக கத்தியால் குத்த தொடங்கினான். இதில் கத்திக்குத்து விழுந்த குழந்தைகள் வலி பொறுக்க முடியாமல் அலறி துடித்தனர்.

    இந்த தாக்குதலில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 22 மாத குழந்தை, 5 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்கள், 2 பெரியவர்கள் அடங்குவார்கள். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து மர்மநபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரை பிரானஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது மனைவி பிரிஜிட் உடல் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினர்.

    • அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கவுரவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர்.
    • நிலத்தகராறு காரணமாக தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தகவல்.

    ராஜஸ்தான் மாநிலம் பரான் மாவட்டத்தில் டெல் ஃபேக்டரி பகுதியைச் சேர்ந்த காஸ்கிரஸின் பரான் நகரப் பிரிவுத் தலைவர் கவுரவ் சர்மா (43) தலவாரா சாலையில் வீட்டு மனை காண சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ராஜூ என்கிற ராஜேந்திர மீனா என்பவர் கவுரவ் சர்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

    இருவருக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை சண்டையாக மாறியது. அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கவுரவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த கவுரவ் சுருண்டு விழுந்தார்.

    பின்னர், கவுரவை மீட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், நிலத்தகராறு காரணமாக தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    • நிஷாவின் இடது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
    • துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சரண் மாவட்டத்தை சேர்ந்த பாடகி நிஷா உபாத்யாய். போஜ்புரி பாடகியான இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மேடைகளில் பாடி வருகிறார்.

    இந்நிலையில், பாட்னாவில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட நிஷா மேடையில் ஆடலுடன் பாடிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் மீது திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில், நிஷாவின் இடது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டு விழுந்தார்.

    இதையடுத்து நிஷாவை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு, நிஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக நிஷா இதுவரை எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை என்றாலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • மெக்சிகோவின் சென் வென்சிட்டி பகுதியில் கார் பந்தயம் நடைபெற்றது.
    • அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.

    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் பஜா கலிபோர்னியா மாகாணம் என்செண்டா நகரில் உள்ள சென் வென்சிட்டி பகுதியில் நேற்று கார் பந்தயம் நடைபெற்றது. இதில் 50க்கு மேற்பட்ட கார் பந்தய வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியை காண நூற்றுக்கணக்கானோர் குவிந்திருந்தனர்.

    இந்நிலையில், கார் பந்தயத்தின் போது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. வேனில் வந்த ஒரு கும்பல் கார் பந்தய வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் கார் பந்தய வீரர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கோர்ட்டு வளாகத்தில் இருந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இருவரையும் சுட்டனர்.
    • துப்பாக்கி சூட்டில் மிதிலேஷ் கிரி, சூர்யபிரகாஷ் ராய் இருவரும் காயமடைந்தனர்

    ஜான்பூர்:

    உத்தரபிரதேசத்தின் ஜான்பூரை சேர்ந்த மிதிலேஷ் கிரி, சூர்யபிரகாஷ் ராய் ஆகிய இருவரும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் ஜான்பூரில் உள்ள தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

    அப்போது கோர்ட்டு வளாகத்தில் இருந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இருவரையும் சுட்டனர். இதில் மிதிலேஷ் கிரி, சூர்யபிரகாஷ் ராய் இருவரும் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்களில் ஒருவரை கோர்ட்டு வளாகத்தில் நின்றிருந்த வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.

    இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைத்தொடர்ந்து கோர்ட்டு வளாகத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீஸ்காரர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் உத்தரவிட்டுள்ளார்.

    • துருக்கியில் டீக்கடையில் ஒரு தரப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
    • இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அங்காரா:

    துருக்கி நாட்டின் இஸ்மிர் மாகாணம் மென்டெரெஸ் பகுதியில் உள்ள டீக்கடையில் சிலர் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்ற இரு தரப்பினர் கடன் கொடுக்கல் வாங்கல் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். இதில் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர் திடீரென துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தனர். இதனால் அங்கிருந்தோர் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    டீக்கடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • இரு தரப்பினரும் ஆயுதங்களால் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.
    • துப்பாக்கிச்சூட்டில் லேசான காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    மத்தியப்பிரதேச மாநிலம் மொரீனா மாவட்டத்தில் நிலப்பிரச்சனை தொடர்பாக தீர் சிங் மற்றும் கஜேந்திர சிங் குடும்பத்தினருக்கு இடையே இன்று கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஆயுதங்களால் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.

    மோதலில் கஜேந்திர சிங் குடும்பத்தை சேர்ந்த 6 பேரை துப்பாக்கியால் மற்றொரு தரப்பு சுட்டுக்கொன்றது. துப்பாக்கிச்சூட்டில் லேசான காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலத்தகராறு மோதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான பதற வைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×